உலகிலே உயிர் வாழ்க்கை நிலைபெறக் காரணம் பெண். அனைவரும் இன்பமாய் வாழ உறுதுணையாய் இருப்பவள் பெண். ஒருவருக்குக் குழந்தைப் பருவத்தில் தாயாகவும், வளர்கையில் சகோதரி, மற்றும் தோழியாகவும், பருவமடைகையில் கனவு காண வைக்கும் காதலியாகவும், மணமானதும் மனம் கவர்ந்த மனைவியாகவும், மகளாகவும், பேத்தியாகவும் வந்தமைந்து வாழ்வில் வளம் பொங்கச் செய்பவள் பெண்.
பெண்ணின் இத்தனை அவதாரங்களிலும் காதலி அவதாரமே வாலிபர் வாழ்வுக்குச் சிறந்த ஆதாரம்.
கண்ணில் காதலியர் கடைக்கண் காட்டி விட்டால்; மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்’ - என்று பாரதிதாசன் சொன்னதுபோல் ஆண்களின் மனதில் உற்சாகம் பொங்கச் செய்வது காதலியரின் கண் பேசும் மௌன வார்த்தைகளே. அவ்வாறு காதலியின் கண்ணடி பட்டுத் தவிக்கும் ஒரு இளைஞனின் மன நிலையை விளக்கும் மெய்ம்மறக்க வைக்கும் இனிய பாடல்:
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
பாடியவர்: P.B. ஸ்ரீனிவாஸ்
இயற்றியவர்: T.N. ராமையாதாஸ்
இசை: P. ஆதிநாராயண ராவ்
திரைப்படம்: அடுத்த வீட்டுப் பெண்
அஹாஹஹாஹா ஹாஹஹஹா
அஹஹாஹா ஆஹாஹஹஹஹா
ஹஹாஹஹா ஹஹாஹஹா
அஹஹாஹா ஹஹஹஹஹா ஹஹஹஹஹா
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
பாசமீறி சித்ரதாளம் போடுதே - உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கமறியாமல் ஓடுதே - என்
அன்னமே உன் சின்ன ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
பதுமை போலக் காணும் உன்தன் அழகிலே - நான்
படகு போலத் தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்திக் கொந்தளிக்கும் மலரிலே - என்
மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே
அஹாஹஹாஹ ஹஹஹஹா
அஹஹாஹா ஆஹஹஹா ஹஹாஹஹா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக