திங்கள், 23 நவம்பர், 2009

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வி இலவசமாக, அனைவருக்கும் இலவசப் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி, படித்த, படிக்காத இளைஞர்கள் மற்றும் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப நிச்சயமான வேலைவாய்ப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், நியாய விலையில் அனைத்துக் கடைகளிலும் சாமான்கள், அனைவருக்கும் சுத்தமான குடிநீர், தூய்மையான சுற்றுப்புறச் சூழல், அனைவருக்கும் குறைந்த செலவில் மற்றும் இலவசமாக அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் தரமான மருத்துவ சிகிச்சை, நேர்மையான அரசியல், முறையான வரி வசூல், மேடு பள்ளங்களற்ற சீரான பாதைகள், குறைந்த கட்டணத்தில் போக்கு வரத்து வசதி, இவையும் இத்தகைய பிற அத்தியாவசியத் தேவைகள் அனைவருக்கும் நிறைவேறும் நல்ல காலம் நம் நாட்டுக்கு என்று வருமோ என்று ஏங்கும் உள்ளங்களுக்கு நம்பிக்கையூட்ட இதோ ஒரு மணியான பாடல்.

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

உன்னால் முடியும் தம்பி
இயக்கியவர்: கே. பாலச்சந்தர்
நடிகர்கள்: ஜெமினி கணேசன், கமலஹாசன், சீதா, ஜனகராஜ், மீசை முருகேஷ், நாசர், வி.கே. ராமசாமி
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: முத்துலிங்கம் புலமைப்பித்தன்

தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா தானா
தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே - சனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதெக்
கேக்க யாரும் இல்லே தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா? இதெக்
கேக்க யாரும் இல்லே தோழா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு வாழும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது?
தானாகப் பாதை கண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதெக்
கேக்க யாரும் இல்லே தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதெக்
கேக்க யாரும் இல்லே தோழா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக