வெள்ளி, 13 நவம்பர், 2009

ஆட வேண்டும் மயிலே

முருகு என்றால் அழகு என்று பொருள். மயில் ஆடுவது அழகு, அதனுடன் சேர்ந்து "அழகென்ற சொல்லுக்கு முருகா" என்றும் "முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும்" என்றும் பக்தர்கள் போற்றும் முருகனும் ஆடினால் அழகோ அழகு.
முருகன் என்றதுமே அனைவர் மனதிலும் தோன்றுவது ஒரு குழந்தையின் வடிவமே. முருகனை அவன் அடியவர் யாவரும் தம் குழந்தையாகப் பாவித்தே வழிபடுகின்றனர். "முருகா எனக்கொரு வரம் வேண்டும் என் பேரனாக நீ வந்து பிறந்திட வேண்டும்" என்று தன்னைப் பாட்டியாக பாவித்துப் பாடுவாள் ஒரு பெண் பக்தை.

அதல சேடனாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள மவையாட

மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானுளோராட மதியாட
வனச மாமியாராட நெடிய மாமனாராட
மயிலு மாடி நீயாடி வரவேணும்

கதைவிடாத தோள்வீம னெதிர்கொள் வாளியால்நீடு
கருதலார்கள் மாசேனை பொடியாகக்
கதறுகாலி போய்மீள விஜயனேறு தேர்மீது
கனக வேத கேர்டுதி அலைமோதும்

உ ததி மீதிலேசாயு முலக மூடு சீர்பாத
உ வண மூர்தி மாமாயன் மருகோனே
உ தய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமுமாட வாழ்தேவர் பெருமாளே.

என்று பாடிய அருணகிரிநாதர், அவ்வாறு மயிலுடன் ஆடும் முருகனுடன் சேர்ந்து தானுமாட வேண்டுமென்று விரும்புவதாக அமைந்த அருமையானதொரு பாடல்:

ஆட வேண்டும் மயிலே

அருணகிரிநாதர்
டி.எம். சௌந்தரராஜன்
எஸ். ஜானகி

தீம் திணதோம் ததீம் கிணதோம் தததஜம் தத்தணம்
தத்ததும் ததிகிணதோம் தகதஜம் தகதணம் தகததும்
ததிகிணதோம் தத்தஜம் ததிகிணதோம் தா
தகதஜம் ததிகிணதோம் தா தகதஜம் ததிகிணதோம் தா

ஆட வேண்டும் மயிலே நான் ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து
ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து
ஆட வேண்டும் மயிலே

இளமை இருக்கும் புது எழிலிருக்கும் ஆ..ஆ..
இளமை இருக்கும் புது எழிலிருக்கும்
என்னை இழுக்கும் இரு விழியிருக்கும்
இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும்
இன்பம் பெருக்கும் இன்னல் துடைக்கும்
அவனோடு உறவாடி அன்போடு நான் சேர்ந்து

ஆட வேண்டும் மயிலே

சிறு நகையும் சிங்கார நடையழகும்
கருங்குழலும் காணாத பேரழகும்
சிறு நகையும் சிங்கார நடையழகும்
கருங்குழலும் காணாத பேரழகும்
விரிமார்பும் வித்தார சொல்லழகும்
விரிமார்பும் வித்தார சொல்லழகும்
முழுமதியும் முத்தாரப் பல்லழகும்
முழுமதியும் முத்தாரப் பல்லழகும்
கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும்
கவிதை சுரக்கும் கனி மொழி சிறக்கும்
கருணை பிறக்கும் தனி உடலமைப்பும்
கண்டதும் மனமெலாமழகிலே
மலர்ந்துடல் சுகம் பெற
குலவிட ஜோதியாய் வீசிடும் நாதனுடன்
தாம் ததீம் ததீம் ததீம் தகிடவென

ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து
ஆட வேண்டும் மயிலே

வடிவேலும் மயிலும் துணை

அம்பிகாபதி கதை கற்பனையேயல்லாது உண்மையல்ல என்று சிலர் ஆராய்ச்சி செய்து கண்டதாகக் கூறுகிறார்கள். கதையோ, கற்பனையோ எவ்வாறிருப்பினும் அதிலுள்ள இலக்கியச் சுவையை அனுபவித்தல் இனிது.
கம்பர் குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவர்களுள் ஒருவராக இருந்ததாகக் கதை கூறுகிறது. அதே சபையில் ஒட்டக்கூத்தர் தலைமைப் புலவராக வீற்றிருந்ததாகவும் கூறுகிறது. ஒட்டக்கூத்தரின் இயல்பு பிற புலவர்களின் கவிதையில் குறை கூறுவதாகும். அவ்வாறிருக்க கம்பரின் மகன் அம்பிகாபதி மன்னன் மகள் அமராவதியைக் காதலிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்களது காதலை மன்னன் அறிய வைக்கப் பலவாறாக முயற்சித்தார். ஒரு முறை கம்பரும் அம்பிகாபதியும் ஒட்டக்கூத்தர் மற்றும் குலோத்துங்கனுடன் உரையாடிக்கொண்டிருக்கையில் அமராவதி அவர்களுக்குப் பருக பானங்களை ஒரு தட்டில் சுமந்து வருகிறாள். அவளது அழகில் மெய்ம்மறந்த அம்பிகாபதி தன்னை மறந்து காதல்ரசம் ததும்பும் பாடலொன்றைப் பாடத் துவங்கி,

இட்டவடி நோவ எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கசைய

என்று இரு வரிகள் பாடிய நிலையி்ல், ஏற்படவிருக்கும் அபாயத்தை உணர்ந்த கம்பர்

- கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில்
வழங்கோசை வையம் பெரும்

என்று இறுதி அடிகளைப் பாடிப் பாடலை நிறைவு செய்வதாகக் கதையில் வருகிறது. "கொட்டிக் கிழங்கென்று நாங்கள் யாரும் கேள்விப்பட்டதில்லையே" என ஒட்டக்கூத்தர் சமயத்தில் அவர்களை இக்கட்டில் மாட்டிட முயலுகையில் கம்பர் கலைவாணியை மனதில் தியானிக்க, கலைவாணி ஒரு மூதாட்டி உருவில் அரண்மனை வாசலில் வந்து நின்று, "கொட்டிக் கிழங்கோ கிழங்கு" என்று கூவுகிறாள். அக்கிழவியை உள்ளே அழைத்து அவளது கூடையில் இருந்த கொட்டிக்கிழங்குகளை மன்னனும் ஒட்டக்கூத்தரும் கண்டதால் நிகழவிருந்த விபரீதத்திலிருந்து கம்பரும் அம்பிகாபதியும் தப்பிக்கின்றனர்.

அதன் பின்னர் அம்பிகாபதி அமராவதி காதல் விவகாரம் மன்னன் காதுக்கு எட்டவே விசாரணைக்கு உத்தரவிடுகிறான் மன்னன். விசாரணையின் போது இரு தரப்பு நியாயங்களையும் கேட்ட பின் மன்னன் ஒட்டக்கூத்தரிடம் பொறுப்பை ஒப்படைக்க, அவர் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதன்படி அம்பிகாபதி நூறு பாடல்களை ஓரே சமயத்தில் இயற்றி சபையில் தொடர்ந்து பாட வேண்டும், அவற்றுள் காதல் ரசமுள்ள பாடல் ஒன்றும் இருக்கக் கூடாது. அவ்வாறு பாடி அவன் தன் புலமையை நிரூபித்தால் அவன் அமராவதியை மணக்கலாம், தவறினால் மரண தண்டனை எனத் தீர்ப்பளிக்கிறார்.

அவ்வாறே அம்பிகாபதி பாட, அரசரும், ஒட்டக்கூத்தர் உள்ளிட்ட பிறரும் சபையில் அமர்ந்து கேட்கையில், திரைமறைவில் அமர்ந்து இதைக் கேட்கும் அமராவதி நூறு பாடல்களை நூறு மலர்களை ஒரு தட்டிலிருந்து இன்னொரு தட்டில் போட்டவாறு எண்ணுகிறாள். நூறாவது பாடல் முடிந்ததும் அவள் ஆவல் மிகுதியால் திரையை விலக்கி அம்பிகாபதியை நோக்கி வர, அவளைக் கண்ட மாத்திரத்தில் அம்பிகாபதி தன்னை மறந்து,

சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்
துற்றேயசையக் குழையூசலாடத் துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே

எனக் காதல் ரசம் சொட்டும் பாடலொன்றைப் பாடிவிடுகிறான். அவன் பாடிய நூறு பாடல்களுள் முதலாவது காப்புச் செய்யுளாதலால் அது கணக்கிலெடுத்துக் கொள்ளப் பட மாட்டாது எனக் கூறி ஒட்டக்கூத்தர் அவனுக்கு மரண தண்டனை வழங்குகிறார்.

ஒட்டக்கூத்தராக நடிக்கும் எம்.என். நம்பியார் வெளுத்துக்கட்டும் இக்காட்சியில் சிவாஜி கணேசனான அம்பிகாபதி பாடும் பாடல்:

வடிவேலும் மயிலும் துணை

திரைப்படம்: அம்பிகாபதி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை: ஜி. ராமநாதன்

வடிவேலும் மயிலும் துணை
வடிவேலும் மயிலும் துணை - சொல்
வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
வடிவேலும் மயிலும் துணை

நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
நடராஜன் அருள்பாலன் நான்மறை தொழும் சீலன்
தடமேவும் பொழில் சூழும் தணிகைவாழும் பரமஞான குருபரன்
வடிவேலும் மயிலும் துணை

தமிழ்மாலை தனைச் சூடுவான்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்

தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாவுன்
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாவுன்
தாளையளித்திட வேணுமெனத் துதிபாடருணக்கிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த

தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்

சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட
சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே யசையக் குழையூசலாட துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிழுக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம் புறப்பட்டதே

வாடா மலரே தமிழ்த் தேனே

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று சொன்ன பாரதி அடுத்து யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்கிறார். தாமறிந்த புலவர்கள் அனைவரிலும் கம்பனை முதல் இடத்தில் வைக்கிறார். "கவிச் சக்கரவர்த்தி" என்பர் கம்பனை தமிழறிந்தோர்.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்றார்கள் தமிழறிஞர்கள். அவ்வாறிருக்க அவரது மகன் அம்பிகாபதி எனில் கேட்க வேண்டுமா? ஒரு முறை வயல் வெளியில் உலாவச் சென்ற கம்பர் அங்கொரு ஏற்றமிறைப்பவன் இசையுடன், "மூங்கிலிலை மேலே" எனும் இரு வார்த்தைகளை மட்டுமே நெடுநேரம் திரும்பத் திரும்பப் பாடுவதைக் கேட்டார். அவன் அடுத்து வேறு வார்த்தைகளைப் பாடவே இல்லை. வீடு வந்ததும் அம்பிகாபதியிடம் இதைக் கூறியதும் அவன் உடனே, "தூங்கு பனி நீரே" என்று அடுத்த வார்த்தைகளைச் சொல்லவே, "ஏத்தக்காரன் பாட்டுக்கெதிர் பாட்டில்லை, என் அம்பிகாபதிக்கு நிகர் யாருமில்லை" என்று அகமிக மகிழ்ந்தார்.

http://www.nilacharal.com/tamil/specials/tamil_kadhal_195.html

அம்பிகாபதியின் தமிழ்ப் புலமை கண்டு அவன் மேல் காதல் கொண்டாள் அமராவதி. அவளும் தமிழில் புலமை உடையவளே. அவளது அன்பும் அறிவும் கண்டு அம்பிகாபதியும் அவள் மேல் தீராத காதல் கொண்டான்.

காவியமாகிய அக்காதலர்கள் இணைந்து பாடுவதாக அமைந்த பாடல்:

வாடா மலரே தமிழ்த் தேனே

படம்: அம்பிகாபதி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. பானுமதி
இசை: ஜி. ராமநாதன்

வாடா மலரே தமிழ்த் தேனே வாடா மலரே தமிழ்த் தேனே
என் வாழ்வின் சுவையே ஒளிவீசும் முழுநிலவே
வாடா மலரே தமிழ்த் தேனே
ஆராவமுதே எனதன்பே ஆராவமுதே எனதன்பே
எனை ஆளும் அழகே தமிழாகும் கடலில் வந்த
ஆராவமுதே எனதன்பே

தாரணி வணங்கும் மன்னன் தனிப்பெருந்தேரே
தாரணி வணங்கும் மன்னன் தனிப்பெருந்தேரே
தவிக்குமோ என்னுயிர் உனைப் பிரிந்தால்
தவிக்குமோ என்னுயிர் உனைப் பிரிந்தால்
வானும் கடலும் திசை நாலும் மாறினும்
நாம் என்னாளும் பிரியோம்
வானும் கடலும் திசை நாலும் மாறினும்
நாம் என்னாளும் பிரியோம்

காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய்
காதல் வாழ்வில் சுடர் வீசும் ஜோதியாய்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்
காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி
காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி
கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்
கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்

என்றும் ஆராவமுதே எனதன்பே
எனை ஆளும் அழகே தமிழாகும் கடலில் வந்த
ஆராவமுதே எனதன்பே

கொடுத்ததெல்லாங் கொடுத்தான்

அன்பு நண்பர்களே,
இறைவன் உலகத்தைப் படைத்தான் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. அவ்வாறு படைத்தவன் அதிலுள்ள இயற்கை வளங்களை அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவிலேயே படைத்ததாகவும் மதங்கள் கூறுகின்றன. மதங்கள் ஏற்பட்டதன் காரணம் மனிதன் அனைத்து ஜீவராசிகள் மேலும் சக மனிதர்கள் மேலும் அன்பு செலுத்தி வேற்றுமை நீக்கி ஒற்றுமையாக, ஏற்றத் தாழ்வு பாராமல் எல்லோரையும் சமமாகக் கருதி வாழ்ந்து வாழ்வில் இன்பத்தையே பெரும்பாலும் அனுபவிக்க வேண்டும் என்பதும் துன்பத்துக்குக் காரணமான சுயநலம், பொறாமை, கோபம், பேராசை, லோபம் முதலிய இழிகுணங்களை விட்டொழிக்க வேண்டும் என்பதுமே.

இவ்வுலகில் பாப காரியங்கள் பெரும்பாலும் நிகழ்வது இன, மொழி, மத உணர்வுகளாலேயே ஆகும். அத்துடன் உலகிலுள்ள வளங்களையெல்லாம் தானும் தன்னைச் சேர்ந்தவர்கள் சிலரும் மட்டுமே ஆளுமை புரிய வேண்டும் எனும் பேராசையால் தூண்டப்பட்ட சில சுயநலவாதிகளாலேயே ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமை உலகில் நிலவுகிறது. உழைப்பவனுக்கு ஏற்ற ஊதியம் அளிக்கப்படாததால் அவ்வாறு பாதிக்கப்பட்டவருள் ஒரு பகுதியினர் நேர்மைப் பாதையிலிருந்து மாறிப் பிறர் பொருளை அபகரித்து வாழும் சமூகவிரோதிகளாக ஆகின்றனர்.

அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வு நல்கி நியாயம் செய்யும் கடமையை அரசுகள் செய்யாமல் சில சுயநலவாதிகளின் ஆதிக்கத்தால் அவை பொது மக்களுக்கு அநீதி இழைப்பதுடன், உலகிலுள்ள இயற்கை வளங்களையும் பாதுகாக்கத் தவறி, "குரங்கு தான் கெட்டதுமல்லாது வனத்தையும் அழித்ததாம்" எனும் கூற்றுக்கேற்ப அனைவரின் அழிவுக்கு வழிவகுத்து, சொர்க்கலோகமாக விளங்க வேண்டிய உலகை நரகமாக மாற்றி வருகின்றன.

"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்." இந்நிலை என்று வருமோ?

கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்

படகோட்டி வாலி மஹாதேவன் சௌந்தரராஜன்

கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா?
மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா?
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சந் தர மறுத்திடுமா?
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார்
இல்லையெனபோர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லையென்பார்
மடி நிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருளிருக்கும்
எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

கொடுத்ததெல்லாங் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

பட்டணந்தான் போகலாமடி பொம்பளே

நமது பாரத நாடு அடிப்படையில் விவசாயத்தை நம்பியுள்ள நாடு. விவசாயம் செய்ய எல்லா வளங்களும் இயற்கையிலேயே அமையப் பெற்ற வளமான பூமி. இத்தகைய இயற்கை செல்வத்தைக் கையில் வைத்துக் கொண்டு பலர் அதனை முறையாகப் பயன்படுத்தாமல் கிராமத்தையும் அதன் இயற்கை எழில் கொழிக்கும் இனிமையான சூழலையும் விட்டு நகரங்களுக்கு வந்து வாழ்வை வீணாக்கி மடிகின்றனர்.
திருமணமான ஆண்கள் மாமனாரின் உதவியை நாடுதல் உலக இயற்கை. மாமனாரிடம் உதவி பெற்று டாம்பீகமான வாழ்க்கை வாழ வழிதேடி, கெட்டும் பட்டணஞ்சேர் எனும் பழமொழிப்படி பட்டணம் சென்று பிழைக்கலாம் என எண்ணும் விவசாயி ஒருவனுக்கு அவனது மனைவி, பட்டணத்து வாழ்வில் உள்ள தீமைகளை விளக்கி அறிவுரை கூறுகிறாள்.

கிராமத்தை விட்டுப் பட்டணம் சென்று சீர்கெட்டு மடியாமல் கிராமத்திலேயே விவசாயம் செய்து சிறப்பாக வாழலாம் என்று மனைவி சொல்லும் அறிவுரையை செவிமடுத்து, பட்டணம் போகும் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறான் கணவன்.

இச்சம்பவத்தை ஒரு நாட்டிய நாடக வடிவில் படமாக்கியுள்ளனர் எங்கள் வீட்டு மஹாலட்சுமி திரைப்படத்தில்.

பொருள் புதைந்த இந்தப் பாடல்:

பட்டணந்தான் போகலாமடி பொம்பளே

எங்கள் வீட்டு மஹாலட்சுமி
சீர்காழி கோவிந்தராஜன், ஜமுனா ராணி

ஹ்ஹ்ம் மூட்டயக் கட்டிக்க.. எதுக்கு?
பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி - நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணாடி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா
கெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால
கெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால
பட்டிக்காட்ட விட்டுப்போட்டுப் பல பேரும் போவதால
கட்டிச் சோத்தக் கட்டிக் கொள்ளடி பொம்பளே
தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி - நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க - அங்கே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க
காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதான் பிஏ படிப்பு பென்சு தொடைக்குதாம்
ஆளை ஏச்சு ஆளு பொழைக்குதாம் அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
மேலே போறது நூத்துல ஒண்ணு மிச்சமுள்ளது லாற்றியடிக்குதாம்
எப்படி?
ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே மாப்பிள்ளே
ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே
உன்னாலே என்னாகும் எண்ணமே போனா பின்னாலே கேடு மாமா
ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
அம்மா ஒதுங்கு ஒதுங்கு
ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
ட்ராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன் ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
வேத்துப் புடுங்கினா பீச்சுக்குப் போவேன் மீந்தப் பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையில குடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்
மேல
இதுக்கு மேல சொல்ல மாட்டேண்டி பொம்பள இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி - நான்
இப்போதே போவணும் உங்கொப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி
பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி - அந்தக்
கட்டாணி முத்தே என் கண்ணாடி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா
மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யற வேலை
மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யுற வேலை
கழுத்துக்கு மீறி பணம் வந்த போது மனுஷன சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்வே துணிஞ்சு
இரவு ராணிகள் வலையில விழுந்து ஏமாந்து போவே இன்னும் கேளு
அப்புறம்..
போலீசு புலி புடிக்கும் மாமா புர்ராவ பேத்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா பொஞ்சாதி பேச்சக் கேளு
அப்படியா ஆஹா .. -
நீ
ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி - நீ
ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாகத் தோணுது
பட்டணந்தான் போக மாட்டேண்டி உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணத் தொறந்தவ நீ தான் பொண்டாட்டி தாயே
என்னைத் தனியா விடவே மாட்டேன்னு என் தலைமேல் அடிச்சு சத்யம் பண்ணு
எங்கப்பனான சத்தியம் சத்தியம் சத்தியம்
ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு - நம்ம
ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்
ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு - நம்ம
ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்

ஓரு நாள் போதுமா

அன்பு நண்பர்களே,
இசைக்கு அசையாத உயிர்களே இல்லை, அதனாலேயே இசைகேட்டால் புவி அசைந்தாடும் என்றார் கவிஞர். இசையைக் கேட்டுப் பயிர்களும் செழிப்பாக வளருகின்றன என விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தறிந்துள்ளனர். இசையைப் பல ராகங்களாகவும் தாள லயங்களாகவும் வகைப்படுத்தி மனதின் வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தக்கதாக அமைததுள்ளனர் நம் முன்னோர். இத்தகைய இசையை முறையாகப் பயின்று இசைத் துறையில் சிறந்து விளங்கும் மேதைகளுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை.

ராகங்கள் பலவற்றை ஓரே பாடலில் இசைத்து ராகமாலிகையாகப் பாடுவது ஒரு சிறப்பு. இத்தகைய திறமை ஒரு சிலருக்கே முழுமைபாக அமையும். அத்தகைய மேதைகளுள் முன்னோடியானவர் ஒருவர் பாட உலகமே அவரது இசையால் அசைந்தது ஒரு நாள். மனதை மயக்கி உயிரை வளர்க்கும் இவரது மேன்மையான இசையை ரசித்து மகிழ ஒரு நாள் போதாது.

கேட்டு மகிழ: ஓரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா?

திரைப்படம்: திருவிளையாடல்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம். பாலமுரளிகிருஷ்ணா

ஆ...ஆ...
ஓரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொரு நாள் போதுமா?
நாதமா கீதமா - அதை
நான் பாட இன்றொரு நாள் போதுமா?
புதுநாதமா சங்கீதமா - அதை
நான் பாட இன்றொரு நாள் போதுமா?

ராகமா சுகராகமா கானமா தேவகானமா?
ராகமா சுகராகமா கானமா தேவகானமா? - என்
கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா? - என்
கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா?
நாதமா கீதமா அதை
நான் பாட இன்றொரு நாள் போதுமா?

குழலென்றும் பததபம மபபமக கமமகரி ரிககரிஸ
காக்ரீஸ் நீதபமக
யாழென்றறும் பா பம பததப பமப ததப பம
பததபபம பததபபம பத மபமத பதமப
கமகப மபகம ரிகரிம கமரிக
ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா
ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா

குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவான் - என்
குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவான் - என்
குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
அழியாத கலையென்று எனைப் பாடுவார் ஆ..
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் - எனை
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் - எனை
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?
எழுந்தோடி வருவாரன்றோ?
எழுந்தோடி தோடி..
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ?
தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில்...
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ?

கலையாத மோகனச் சுவை நானன்றோ?
மோகனச் சுவை நானன்றோ? மோகனம் ஆ...
கலையாத மோகனச் சுவை நானன்றோ?

கானடா.. ஆ.. என் பாட்டு தேனடா இசை தெய்வம் நான

கேட்டு மகிழ: எஸ்.பி.பி. பாடிய "ஒரு நாள் போதுமா"

ஆத்திலே தண்ணி வர

அன்பு நண்பர்களே,
இவ்வுலகில் எல்லோருடைய அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதிய வளங்கள் நிறைந்திருந்தும் பலர் உயிர் வாழவே திண்டாடும் நிலை நிலவுகிறது. கண்கவரும் பல அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டித்தரும் கட்டடத் தொழிலாளி தெருவோரக் குடிசைகளிலும் நடைபாதைகளிலும் வசிக்க வேண்டியுள்ளது. அனைத்து மக்களும் அணிந்து மகிழ வண்ண வண்ண ஆடைகளை அனுதினமும் நெய்துதரும் நெசவுத் தொழிலாளி தான் உடுக்கக் கந்தையே கிடைக்கின்றது.

காதலொருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து இன்பமாய் வாழக் கனவு காணும் மங்கையரின் ஆசை நிராசையாகி மனதுக்குப் பிடிக்காத கணவருடன் வாழும் துர்பாக்கிய நிலை வந்தெய்துகிறது.

இன்னும் இவைபோல எத்தனையோ துன்பங்களை அன்றாடம் அனுபவித்து வாழ்வை நடைபிணங்களாக வாழ்பவர் பலர். இத்தகைய இழிநிலைக்குக் காரணம் என்ன?

இக்கேள்விக்கு விடை தருகிறது இப்பாடல்:

கேட்டு மகிழ: ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க

படம்: வண்ணக்கிளி
இயற்றியவர்: மருதகாசி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

ஆ......ஆ...ஆஅ... ஓ..ஓ..
ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்?
ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்? கண்ணம்மா
கண்ணம்மா அதைப் பாத்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன்
பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன் கண்ணம்மா
கண்ணம்மா கலப்பை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா
கலப்பை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா

நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே
நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே

பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமா நூல்நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா - இங்கு
கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா
பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமா நூல்நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா - இங்கு
கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா ஆ..
காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்துமாலை போடுவதேன்
காத்திருக்கும் அத்தை மகன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்துமாலை போடுவதேன்
கண்ணம்மா கண்ணம்மா அவள்
நேத்திரத்தைப் பறிப்பதும் ஏன் சொல்லம்மா

நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே
நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே

ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா - இதை
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா

ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்? கண்ணம்மா
கண்ணம்மா அதைப் பாத்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே
கண்ணம்மா.. சொல்லம்மா.. கண்ணம்மா சொல்லம்மா
(நன்னானே நானே நானே நானேனன்னானே
நன்னானே நன்னானே நானேனன்னானே)

சின்னப் பயலே சின்னப் பயலே

அன்பு நண்பர்களே,
ஒரு மனிதனுக்கு தைரியமே முதல் துணை. தைரியம் இல்லாத ஒருவன் தன் கடமைகளில் எவ்வித முடிவையும் எடுக்கத் திராணியின்றித் தவறு செய்து அல்லலுறுவான். தைரியம் இல்லையேல் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பது இயலாது.

ஆகவே எதனை இழந்தாலும் தைரியத்தை இழககலாகாது. வேறு எதனை இழந்தாலும் தைரியம் இருந்தால் இழந்த பொருளைத் திரும்ப அடைதல் சாத்தியமே, ஆனால் தைரியத்தை இழந்தால் எதனையும் மீட்பது சாத்தியமாகாது.

நாம் குழந்தைகளுக்கு முதலில் தைரியத்தை ஊட்டி வளர்க்க வேண்டும், அவ்வாறு தன் தாயாரால் தைரியமென்னும் ஞானப்பால் ஊட்டப்பட்டு வளர்ந்த மராட்டிய மன்னன் சிவாஜியின் சரித்திரம் உலகப் பிரசித்தமானது.

தைரியம் நிறைந்திருந்ததாலேயே நம் முன்னோர்கள் பலரும் ஒன்று கூடி உயிரைத் துச்சமென மதித்துப் போராடி, வெள்ளையர்களை நம் நாட்டிலிருந்து விரட்டி, சுதந்திரம் எனும் பயிரைக் காக்க முடிந்தது.

தைரியத்தின் துணையுடனேயே மனிதன் சந்திரனில் காலடி வைக்க முடிந்தது. இன்னும் இவை போல் பல எடுத்துக்காட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கடுக்காகக் கூறிக்கொண்டே போகலாம். முடிவே இல்லாத சாதனைகளின் பட்டியல் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை நம் அனைவரின் உடைமையடா!

கேட்டு மகிழ: சின்னப் பயலே சின்னப் பயலே

படம்: அரசிளங்குமரி
பாடியவ்: சௌந்தரராஜன்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா நான்
சொல்லப் போற வார்த்தையை நன்றாய் எண்ணிப் பாரடா - நீ எண்ணிப் பாரடா
சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா - தம்பி மனதில் வையடா
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா - தம்பி மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா - நீ வலது கையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா - நீ வலது கையடா
தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா
தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா - எல்லாம் பழைய பொய்யடா

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா

வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உன்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே - நீ வெம்பிவிடாதே

சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேள

இரவும் நிலவும் வளரட்டுமே

அன்பு நண்பர்களே,
காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட நிலையே வாழ்வில் இன்பம் எனபதை நம் முன்னோர்கள் கவிதைகள் வாயிலாகவும் காவியங்கள் வாயிலாகவும் தெளிவாக விளக்கியுள்ளனர். இருமனம் ஒருமனமாக இணைந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வளரும் இப்புது உறவு திருமணம் முடிந்து கணவன் மனைவியாக இணையும் நிலையை அடைந்து ஒன்று சேர்கையில் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவரையொருவர் பிரியாமல் ஒன்றுசேர்ந்து வாழும் பாக்கியத்தைப் பெறுவர்.

காதலின்பத்தைத் துய்க்க அமுதைப் பொழியும் நிலவு மிளிரும் இரவுப் பொழுதைப் போல் இனிய நேரம் வேறுண்டோ?

கேட்டு மகிழ: இரவும் நிலவும் வளரட்டுமே

திரைப்படம்: கர்ணன்
பாடல் இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே - அங்கு
மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே - நெஞ்சில்
இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே - அங்கு
அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே - அதில்
நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

காவிரிப் பெண்ணே வாழ்க

அன்பு நண்பர்களே,
கற்புக்கரசி என்றும் மாதர் குல மாணிக்கம் என்றும் பலவிதமாகப் பெண்களைப் புகழ்ந்து பேசும் மானுடர்கள் கண்ணகியையும், நளாயினியையும் உதாரணமாகக் காட்டி அவர்களது கணவன்மார்கள் ஒழுக்கம் தவறியவர்களாகச் சித்தரித்தது ஆணாதிக்க மனோபாவத்தைக் காட்டுவதுபோலவே நமக்குத் தெரிகிறது.

கற்பு நெறியென்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்

என்று இத்தகைய மாந்தரின் மனங்களிலே ஆழத் தைக்குமாறு கவியிருப்பாணி கொண்டு அறைந்தார் அமரகவி பாரதி.

மலரும் கொடியும் பெண்ணென்பார்
மதியும் நதியும் பெண்ணென்பார்

என்பது போல் ஆடவர் இவ்வுலகில் உள்ள இன்பம் தரும் பொருள்களெல்லாம் பெண்களுக்கொப்பானவையாகக் கூறுவது பெண்களை வெறும் போகப் பொருளாகவே கருதும் மனப்பான்மையைக் காட்டுவதாகத் தோன்ற இடமளிக்கிறது.

சிலப்பதிகாரத்தில் நடனமாதான மாதவி தனது நாட்டியத்தைக் காண வரும் ஆண்களிடையே வீசிய மாலை அவ்வமயம் அங்கிருந்த கோவலனின் கழுத்தில் விழவும் அதனால் அவள் தன் குல வழக்கப்படி கோவலனுடன் கூடி மகிழ்வதாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு மகிழ்ந்திருக்கும் கோவனும் மாதவியும் காவிரி நதியினை வாழ்த்திப் பாடுகையில் அதில் ஆடவரின் மேற்குறிப்பிட்ட குறைபாட்டை மாதவி சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ள ஒரு இனிய பாடல்:

கேட்டு மகிழ: காவிரிப் பெண்ணே வாழ்க

திரைப்படம்: பூம்புஹார்
பாடியவர்கள்: சௌந்தரராஜன், சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
திரைக்கதை வசனம்: கலைஞர் மு. கருணாநிதி

காவிரிப் பெண்ணே வாழ்க காவிரிப் பெண்ணே வாழ்க - உன்தன்
காதலன் சோழ வேந்தனும் வாழ்க
காவிரிப் பெண்ணே வாழ்க - உன்தன்
காதலன் சோழ வேந்தனும் வாழ்க
காவிரிப் பெண்ணே வாழ்க நீ வாழ்க பெண்ணே வாழ்க

தென்குலப் பெண்ணரைத்த மஞ்சளில் குளித்தாய்
திரும்பிய திசையெல்லாம் பொன்மணி குவித்தாய்

நடையினில் பரத கலையினை வடித்தாய்
நடையினில் பரத கலையினை வடித்தாய்
நடையினில் பரத கலையினை வடித்தாய்
நறுமலர் உடையால் மேனியை மறைத்தாய்

காவிரிப் பெண்ணே வாழ்க நீ வாழ்க பெண்ணே வாழ்க

உன்னரும் கணவன் கங்கையை அணைத்து
கன்னி குமரியையும் தன்னுடன் இணைத்தான்
உன்னரும் கணவன் கங்கையை அணைத்து
கன்னி குமரியையும் தன்னுடன் இணைத்தான்

ஆயினும் உன் நெஞ்சில் பகையேதும் இல்லை
அதுவே மங்கையரின் கற்புக்கோர் எல்லை

ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்
அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்
ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்
அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

அன்பு நண்பர்களே,
"கெட்டும் பட்டணம் சேர்" என்று ஒரு வழக்கு உண்டு. கிராமங்களில் வாழ்பவர்கள் வருவாய் குறைந்து வாழ்க்கை வாழத் தேவையான அடிப்படை வசதிகளையும் பெற முடியாத நிலையடைகையில் நகரங்களில் குடியேறி வாழ வழி தேடிக் கொள்வது ஆண்டாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

அத்தகைய பட்டணங்களில் வாழும் மக்கள் பலர் மக்கட்பண்பைக் கடைபிடிக்காமல் தவறான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதால் அனைவருக்கும் துன்பம் நேர்கிறது. அளவுக்கு அதிகமான மக்கட்தொகையினாலும் விலைவாசி நாளுக்கு நாள் விஷம் போல் ஏறுவதாலும் அவ்வாறு பட்டணங்களில் பிழைப்புத் தேடி வருவோரில் பலர் உழைத்தும் போதிய ஊதியம் கிடைக்காத நிலையில் தெருவோரங்களிலும் பிற ஒதுக்குப்புறங்களிலும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகின்றனர்.

"சென்னை மாநகரம் முன்னாளில் மெட்ராஸ் என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னரும் சென்னை நகரை மெட்ராஸ் என்றும் தமிழ்நாட்டை மெட்ராஸ் மாகாணம் என்றும் பல்லாண்டு காலம் அழைத்து வந்துள்ளனர் நம் அரசுகளும் பிற மக்களும்.

அத்தகைய மெட்ராஸ் நகருக்கு எதேச்சையாக வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு வாலிபர் சென்னை நகரின் வாழ்க்கை முறையைத் தன் கண்ணோட்டத்தில் வேடிக்கையாக எடுத்துரைக்கும் விதமாக அமைந்த பாடல் ஒன்று:

கேட்டு மகிழ: மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

திரைப்படம்: அனுபவி ராஜா அனுபவி -
நடித்தவர்கள்: முத்துராமன், ராஜஸ்ரீ, நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன்
பாடியவர்கள்: T.M. சௌந்தரராஜன்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே
சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி இருக்காக
வீட்டக் கட்டி இருந்தாலும் சிலர் ரோட்டு மேலே படுக்காக
பட்டணத்துத் தெருக்களிலே ஆளு நிக்க ஒரு நிழலில்லையே
வெட்டவெளி நிலமில்லையே நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே
அடி சக்கே

வைக்கேலாலே கன்னுக் குட்டி மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சாக் கத்தலையே என்னது
ரொக்கத்துக்கு மதிப்பில்லையே - இங்கு
வெக்கத்துக்கு விலையில்லையே

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

ஊரு கெட்டுப் போனதுக்கு மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு மெட்ராஸு நாகரிகம் அடையாளம்

தேராட்டம் காரினிலே ரொம்பத் திமிரோடு போறவரே - எங்க
ஏரோட்டம் நின்னு போனா உங்க காரு ஓட்டம் என்னவாகும்?
ஹேஹே

காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே
கெட்டுப்போன புள்ளிகளா வாழப் பட்டணத்தில் வந்தீகளா?

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடியோ

ஆனாக்கா அந்த மடம்

அன்பு நண்பர்களே,
பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்று சொல்கிறார்கள்.

இவ்வுலகில் வாழ எவ்வளவு பொருள் தேவை என எண்ணிப் பார்க்கையில் அவ்வளவு நபருக்கு நபர் மாறுபடுவதை உணர்கிறோம். இது ஒருவர் வாழ்வில் எத்தகைய வசதிகளைப் பெற விரும்புகிறார் என்பதைப் பொருத்து நிர்ணயிக்கப் படுகிறது. சுகபோக வாழ்வை அனுபவிக்கும் ஆசை மிக்க ஒருவன் அடைய விரும்பும் வசதிகளுக்கு ஒரு அளவே இல்லை, எத்துணை பொருள் அவனிடம் இருப்பினும் அவன் அவற்றைக் கொண்டு திருப்த்தியடையாமால் மேலும் மேலும் பொருளை ஈட்டி உலகிலுள்ள பிற அனைவருள்ளும் தான் மிகவும் அதிக வசதி படைத்தவனாக ஆக வேண்டும் எனும் பேராசையால் வாழ்நாளில் பெரும் பகுதியைப் பொருளீட்டுவதிலேயே செலவிட்டு அவற்றால் துய்க்கத்தக்க இன்பங்களில் ஒரு சிறு பகுதியையும் முழுமையாக அனுபவிக்காமல் மடிவதைப் போல் மடமை வேறொன்றுமில்லை.

அளவோடு ஆசைப்பட்டு அதற்கேற்ற பொருளை மட்டுமே ஈட்டி, அதிலும் பிறருக்குத் தன்னாலியன்றதைத் தந்துதவி உலகிலுள்ளோருடன் கலந்து உறவாடி மகிழும் ஒருவனே இவ்வுலக வாழ்வை முழுமையாக வாழ்பவன் ஆகிறான்.

இம்மாபெரும் தத்துவத்தை ஒரு பிச்சைக்காரி வாயிலாக சென்னை செந்தமிழில் எடுத்தரைக்கும் இனியதோர் பாடல்:

கேட்டு மகிழ: ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்

திரைப்படம்: ஆயிரம் ரூபாய்
P. சுசீலா

ஒயுங்கே தவறாமே ஊரை எத்தி வாயாமே
பொயுதே வீணாக்காமே புவாவைத் தேடிக்கணும்

ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
அதுவுங்கூட இல்லாக்காட்டி பாட்டுப் பாட சொந்த எடம்
அதுவுங்கூட இல்லாக்காட்டி பாட்டுப் பாட சொந்த எடம்
ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்

மச்சுலே இருந்தாத்தான் மவுசு இன்னு எண்ணாதே
குச்சுலே குடியிருந்தா கொறச்சலுன்னு கொள்ளாதே
மச்சு குச்சு எல்லாமே மனசுலே தானிருக்கு
மனசு நெறஞ்சிருந்தா மத்ததும் நெறஞ்சிருக்கும்

கெடச்சா கஞ்சித் தண்ணி கெடைகாட்டா கொயாத்தண்ணி
கெடச்சா கஞ்சித் தண்ணி கெடைகாட்டா கொயாத்தண்ணி
இருக்கவே இருக்கையிலே இன்னாத்துக்கு கவலக் கண்ணி
இருக்கவே இருக்கையிலே இன்னாத்துக்கு கவலக் கண்ணி
மரத்தேப் படைச்சவன்தான் மனுசாளப் படச்சிருக்கான்
வாரத ஏத்துக்கத்தான் மனசே கொடுத்திருக்கான்

ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
அதுவுங்கூட இல்லாக்காட்டி பாட்டுப் பாட சொந்த எடம்
ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்

தெட்டிக்கின்னு போறதுக்கு திருடன் வருவான்னு
தெட்டிக்கின்னு போறதுக்கு திருடன் வருவான்னு
துட்டுள்ள சீமாங்க தூங்காமே முயிப்பாங்க
துட்டுள்ள சீமாங்க தூங்காமே முயிப்பாங்க
துட்டும் கையில இல்லே தூக்கத்துக்கும் பஞ்சமில்லே
பொட்டுயும் தேவையில்லே பூட்டுக்கும் வேலையில்லே

ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்
அதுவுங்கூட இல்லாக்காட்டி பாட்டுப் பாட சொந்த எடம்
ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்த மடம்

கண்ணன் வந்தான் அங்கே

அன்பு நண்பர்களே,
உலக வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்களைத் தீர்க்கும் வழி இறை வழிபாடேயாகும். இறை என்பது அவரவர் மனத்துக்கு இசைந்தாற்போல் மாந்தர் அமைத்துக் கொண்டு வழிபட்டுத் தம் துன்பங்களை மறந்து அவற்றிலிருந்து மிள முயல்கின்றனர். இறைத் தத்துவத்தில் கண்ணன் மிகவும் சிறந்தவன் ஏனெனில் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டியவன் கண்ணனைப் போல் வேறு யாருமில்லை என்றே கருதும் வண்ணம் கண்ணனின் கதை விளங்குகிறது.

இதனாலேயே மஹாகவி பாரதியாரும் தான் காணும் உறவுகள் யாவற்றிலும் கண்ணனையே கண்டார். கண்ணன் என் தோழன், கண்ணன் என் சற்குரு, கண்னன் என் காதலன், கண்ணன் என் சேவகன், கண்னன் என் ஆசான் எனப் பல விதங்களிலும் அவன் திருநாமத்தைத் தீந்தமிழால் செபித்தார்.

நண்பனாய், மந்திரியாய் நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் அவருக்குக் கண்ணன் காட்சி தந்து அவரது துன்பங்களைப் போக்கி தேச சேவையில் தம் வாழ்வை அற்பணித்து நம் அனைவரின் விடுதலைக்கு வழிகாண அவருக்கு உறுதுணையாக விளங்கினான் என்பது நாம் உணர்வாலும் அறிவாலும் விளங்கக் கூடியதே.

அந்த மாயக்கண்ணன் மேல் ஒரு பாடல்:

கேட்டு மகிழ: கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான்

திரைப் படம்: ராமு
சீர்காழி கோவிந்தராஜன், T.M. சௌந்தரராஜன்

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..

முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
குர்டர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
குர்டர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணா கண்ணா கண்னா!

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்

பிள்ளைக்குத் தந்தை ஒருவன்

அன்பு நண்பர்களே,
தாயோடறுசுவை போம் தந்தையோடு கல்விபோம்
சேயோடு யாம் பெற்ற செல்வம்போம் மாய வாழ்வு
உற்றாருடன் போம் உடன் பிறப்பால் தோள் வலி போம்
பொற்றாலியோடு எவையும் போம்

என்றாள் ஔவை மூதாட்டி.

ஒருவன் உலக வாழ்வை அனுபவிக்க அடிப்படையானவள் தாய், வாழ வழிகாட்டுபவன் தந்தை. இதனாலேயே இந்திய மக்கள் அனைவரும் சுதந்திரமாய் வாழ வழிகாட்டிய மஹாத்மா தேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

சிறு குழந்தைகள் தம் தேவைகளைத் தந்தையரிடம் கேட்டுப் பெறுவது வழக்கம். அவர்களது உலகம் ஒரு சின்னஞ்சிறு உலகம். வளர்ந்து பெரியவர்களாகி, தாய் தந்தையரை அல்லது அவர்களது ஆதரவை இழந்த மானிடர்கள் தங்கள் தேவைகளை யாரிடம் கேட்பது? ஏற்பது இகழ்ச்சி என்பதால் மற்ற மனிதரிடம் கேட்டுப் பெறுவதற்கு நாம் ஒவ்வொருவரும் மிகவும் தயங்குகிறோம். ஆனால் நம் அனைவரையும் ரக்ஷித்துக் காக்கும் ஆண்டவனிடம் கேட்டுப் பெறத் தயங்க வேண்டியதில்லை.

ஆண்டவன் எங்கு இருக்கிறான் என்பது தெரியாவிடினும் ஆண்டவன் என ஒருவன் எங்கோ இருக்கின்றான் அல்லது எங்கும் இருக்கின்றான் என்ற உள்ளுணர்வு நம் ஒவ்வொருவரிடமும் உண்டு, ஆண்டவன் என ஏதும் கிடையாது என மறுதலித்துப் பேசும் நாத்திகரைத் தவிர. அத்தகைய நாத்திகரும் மனம் ஒப்பி வழிபடும் தெய்வங்கள் அவர்கள் மனதில் உண்டு.

நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய, "இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை" என்பது நாம் அனைவரும் கேட்டுள்ள இனிய ஒரு பாடல்.

நாம் அனைவரும் நம் தேவைகளைக் கேட்டுப்பெறத்தக்க இறைவன் நம் அனைவருக்கும் தந்தையல்லவா?

கேட்டு மகிழ: பிள்ளைக்குத் தந்தை ஒருவன்

திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன்

பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ
ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
இறைவனை நம்பி வ்ந்தாயோ? - நீ
ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
இறைவனை நம்பி வ்ந்தாயோ?
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
தாயாரைத் தந்தை மறந்தாலும் - தந்தை
தானென்று சொல்லாத போதும்
தாயாரைத் தந்தை மறந்தாலும் - தந்தை
தானென்று சொல்லாத போதும்
தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்

பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்

உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் - அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் - அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்

பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் - நீ
ஒருவனை நம்பி வந்தாயோ? - இல்லை
இறைவனை நம்பி வ்ந்தாயோ?
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

அன்பு நண்பர்களே,
கடுகைத் துளைதேழ் கடலைப் புகுத்திக்
குறுகத் தரித்த குறள்

என்றொரு புலவர் பாட அதனை

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக்
குறுகத் தரித்த குறள்

என்று மாற்றியமைத்தாராம் ஔவையார்.

ஒன்றே முக்கால் அடியில் உலகினர் அனைவரும் ஒப்புக்கொண்டு கடைபிடிக்கத்தக்க அரிய தத்துவங்களை அழகு தமிழில் எடுத்தியம்பும் திருக்குறளுக்கொப்பானதோர் நூல் உலகெங்கும் தேடினாலும் கிடைத்தற்கரிது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. "வானமளந்த தனைத்து மளந்திடும் வளர்மொழி வாழியவே' என்று தமிழ் மொழியை அமரகவி பாரதி புகழ்ந்தேத்த முக்கியக் காரணமான நூல்களுள் முன்னணியில் இருப்பது திருக்குறள் என்றால் அது மிகையாகாது.

அத்தகைய திருக்குறளைப் பற்றி ஆண் குரலுக்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கும் T.M. சௌந்தரராஜன் பாடிய பாடலைக் கேட்போமா?

கேட்டு மகிழ: அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

திரைப்படம்: அறிவாளி

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

உலகுக்கு ஒளிபோலே உலகுக்கு ஒளிபோலே
உடலுக்கு உயிர்போலே
உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர்போலே
பயிருக்கு மழைபோலே
பயிருக்கு மழைபோலே பைந்தமிழ் மொழியாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தலைபோலே
அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே

வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய்யினிக்க வார்த்திட்ட தேனிது
ஆ..ஆ......
வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய்யினிக்க வார்த்திட்ட தேனிது
வானகம் போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது எம்
மதத்துக்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது எம்
மதத்துக்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குற

கண் போன போக்கிலே கால் போகலாமா?

அன்பு நண்பர்களே,
இவ்வுலக இன்பங்களைத் துய்க்கும் ஆசையை மனிதனுக்குள் வளர்ப்பது அடிப்படையில் அவன் கண்ணால் காணும் காட்சிகள். அவ்வாறு "கண்டதே காட்சி கொண்டதே கோலம்" எனும் விதத்தில் வாழ்வதைத் தவிர்த்து தன் பகுத்தறிவை உபயோகித்து விபரீத ஆசைகளை அடக்கி நல்வழியில் நடக்காதவன் வாழ்வில் மாபெரும் துன்பங்களை அனுபவிப்பது உறுதி. இவ்வுண்மையை விளக்கப் போதுமான ஆதாரங்கள் சரித்திரங்கள் வாயிலாகவும் கதைகள், காவியங்கள் வாயிலாகவும் கிடைக்கின்றன. மனத்தின் ஆசைகளை அடக்கி ஒழுக்க சீலர்களாய் வாழ்ந்தோர் உன்னத நிலையை அடைவதையும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.

"வாழ்க்கை வாழ்வதற்கே", "இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்?" என்பன போன்ற சந்தர்ப்பவாதத் தத்துவங்களைப் பேசிக்கொண்டு இளமையில் சிற்றின்பத்தை நாடிச் செல்வோர் பிற்காலத்தில் அதனால் ஏற்பட்ட கேட்டினால் மனம் வருந்தி உருக்குலைந்து போனதற்கும் நிறைய ஆதாரங்கள் உள்ளன.

வாழ்க்கை நாம் வாழ்ந்தே தீர வேண்டும், வேறு வழி கிடையாது, ஏனெனில் உலகம் நம்மைக் கேட்டு இயங்கவில்லை. நம்மைக் கேட்டு நாம் பிறக்கவில்லை. நம் செயல்கள், சொற்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் சூழ்நிலைகளைக் கொண்டே அமைகின்றன. அத்தகைய சூழ்நிலைகள் நல்லவையாகவும் நிரந்தர இன்பம் தருவனவாகவும் இருப்பதற்கு மனிதன் தனது எண்ணத்தையும் நோக்கத்தையும் அதற்கேற்றவாறு அமைத்துக்கொண்டு வாழ வேண்டும். அவ்வாறு நல்வாழ்வு வாழும் மனிதன் அனைவராலும் போற்றப்படும் உன்னத நிலையடைவது உறுதி.

இக்கருத்தை வலியுறுத்தும் இனிய பாடல்:

கேட்டு மகிழ: கண் போன போக்கிலே கால் போகலாமா?

திரைப்படம்: பணம் படைத்தவன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு

அன்பு நண்பர்களே,
மனிதனின் செயல்களுக்கும் மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்ச்சிகளுக்கும் இயற்கையை உவமானமாகச் சொல்வது பொதுவாகக் கவிஞர்கள் வழக்கம்.

உதாரணமாக

"உடலுக்கு உயிர் போலே உலகுக்கு ஒளி போலே
பயிருக்கு மழை போலே பைந்தமிழ் மொழியாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே"

"மலை போலே வரும் சோதனையாவும் பனி போல் நீங்கிவிடும்"

என்பன போன்ற வரிகள் தமிழ்க் கவிதைகளில் மிகுந்திருத்தல் இயல்பு. இதற்கு மாறாக கவிஞர் மருதகாசி இயற்கையில் பெய்யும் மழைக்கு மனித வாழ்வின் நிகழ்ச்சிகளை உவமையாகச் சொல்கிறார்.

சொட்டு சொட்டாகத் தூரல் போடும் பழை உணவுக்காக ஏங்கும் ஏழையின் வியர்வையைப் போலவும் கண்ணீரைப் போலவுல் உள்ளதாம். பலமாகக் கொட்டும் மழை செல்வந்தர்கள் ஏழைகளைச் சாடுதல் போல் உள்ளதாம். மறைந்த இசை மேதை டி.ஆர். மஹாலிங்கம் அவர்களுடன் இசைக்குயில் பி. சுசீலா இணைந்து பாடிய பாடல்:

கேட்டு மகிழ: சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

திரைப்படம்: ஆட வந்த தெய்வம்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
பாடியோர்: டி.ஆர். மஹாலிங்கம், பி. சுசீலா
இசை: கே.வி. மஹாதேவன்

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே - அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே - அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

முட்டாப் பயலே மூளை இருக்கா ஆஹஹ்ஹாங்
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தை போலே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு?
முழுக்க முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடு எதுக்கு? - உன்
முக்காட்டை நீக்கு தலை ஈரத்தைப் போக்கு
இருக்க எடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
இருக்க எடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே
குறுக்கு மூளை பாயுறே கோண புத்தியைக் காட்டுறே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப்போலவே
பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும் இரும்பைப்போலவே - முகம்
சிவக்குது இப்போ அது சிரிப்பது எப்போ?
குளிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாக ஓடிவா
குளிச்சு முழுகிவிட்டு குளிர்ச்சியாக ஓடிவா
செவந்து போன முகத்திலே சிரிப்பை நீயும் காணலாம்

கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்

அன்பு நண்பர்களே,
உள்ளத்தில் நேர்மையும் உழைத்து வாழத் தெம்பும் இல்லாத சில முதுகெலும்பற்ற ஆண்கள் தங்களைக் காதலிக்கும் பெண் மற்றும் மணந்து கொள்ளும் மனைவி உட்படப் பெண்களை ஒரு கருவியாகக் கொண்டு பொருளும் சுகமும் தேடும் வழக்கம் நம் நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலும் இருந்து வருகிறது. அத்தகைய ஆண்களின் உண்மை சொரூபம் வெளிப்படுகையில் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ஏற்படும் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் உருக்கமான பாடல்:

கேட்டு மகிழ: காவேரி ஓரம் கவி சொன்ன காதல்

படம்: ஆடிப்பெருக்கு
இயற்றியவர்: கண்ணதாசன்
பாடியவர்: பி. சுசீலா
இசை: ஏ.எம். ராஜா

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா? - இந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை சேர்க்கவா
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

பொருளோடு வாழ்வு உருவாகும் போது
புகழ் பாடப் பலர் கூடுவார் - அந்தப்
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - ஏழை
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலிவாக எடை போடுவார் - இந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா?

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவிபாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார்
கொஞ்சு்ம் மொழி பேசி வலைவீசுவார் - தன்னை
எளிதாக விலை பேசுவார் - இந்தக்
கனிவான பாடல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா?

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலைமோதும் நிலை கூறவா?

உள்ளம் என்பது ஆமை

அன்பு நண்பர்களே,
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும் என்றார் பாரதியார்.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார் வள்ளலார்.

உண்மையையே என்றும் பேசி தனது வாழ்வை சத்திய சோதனையாக வாழ்ந்து காட்டிய காந்தியடிகள் மஹாத்மா என்று அகில உலகிலுள்ளோரும் போற்றப் பட்டார்.

அரிச்சந்திரன் சத்திய நெறியைக் கடைபிடித்ததால் பிறவியில்லாப் பெருநிலை பெற்றான் என்று சொன்னார் திருமுருக கிருபானந்த வாரியார்.

உண்மையில் தெய்வம் உறைவதால் உண்மையையே என்றும் பேசும் ஒருவருக்கு வாக்குப் பலிதம் ஏற்படும், அதாவது அவர் நடக்கும் என்று சொல்வது அனைத்தும் உண்மையாக நடக்கும்.

ஆனால் உண்மையைப் பேச பாமர மக்கள் அஞ்சுகிறார்கள். இதனாலேயே உலகில் நீதி நிலைபெறாமல் மக்கள் பலரும் அல்லலுறுகின்றனர்.

இந்நிலையை விளக்கும் பாடல்:

கேட்டு மகிழ: உள்ளம் என்பது ஆமை

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
திரைப்படம்: பார்த்தால் பசிதீரும்

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை

தண்னீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
தண்னீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது நீதி
உள்ளம் என்பது ஆமை அதில்
உண்மை என்பது ஊமை

சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்

"சும்மா இருப்பவன் மனது பேயின் பட்டரை" என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. நாம உண்ணும் உணவு, உடுக்கும் உடை மற்ற்ம் இவ்வுலக வாழ்வில் அனுபவிக்கும் சுகங்கள் யாவும் நமது உழைப்பால் ஈட்டிய பொருளைக் கொண்டு அடைதலே நமக்கு சமுதாயத்தில் உரிய மரியாதையைத் தரும்.

பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை எனும் பழமொழி பிரசித்தம்.

கல்லானேயானாலும் கைப்பொருளொன்றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர் இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாதவன் வாயிற்சொல்

எனும் ஔவையின் பாடலும் நாம் அறிந்ததே.

ஆதாரம் சக்தி என்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம் யாதுமவள் தொழிலாம்

என்று பாரதியார் கூறியபடி எத்தொழிலும் எவ்விதத்திலும் குறைவன்று.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருப்பது உனக்கே சரியாமோ?

என்று நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை பாடியுள்ளார்.

எல்லார்க்கும் எளிது தனது தந்தையார் செய்துவரும் தொழில். இதனை "குலவிச்சை கல்லாமல் பாகம் படும்" என்றனர் நம் முன்னோர்.

இத்தகைய தொழிலின் மேன்மையைப் பாமரரும் எளிதில் அறியும் வண்ணம் விளக்கும் ஒரு இனிய பாடல்:


சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்


திரைப்படம்: மதுரை வீரன், பாடியவர்: ஜிக்கி, இசை: ஜி. ராமநாதன்

சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்
உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா - மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஹெஹே..

படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
படித்த வேலைக்குப் பலபேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
கொடுத்த வேலையை முடிப்பது சேட்டம்
குடிசைத் தொழிலுக்கு வேணும் நாட்டம்

உண்மையோடு உழைக்கோணும் தானே தன்னன்னா - மச்சான்
ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா ஹெஹேஹே..

அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதுமில்லை
அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதுமில்லை
இப்படி செய்வதினாலே தொல்லை
ஏற்பட்டதென்றால் சேர்க்கவுமில்லை

தெரிந்த தொழிலை செய்தாலே தானே தன்னன்னா - மச்சான்
தாழ்வுமில்லை அதனாலே தானே தன்னன்னா ஹெஹேஹே..

வேலை வேலை என்று ஓலமிட்டழுதா
ஆளைத் தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சி இருந்தா
வேலை செய்து பல விவரம் புரியுதா?

பாடுபட்டால் பலனுண்டு தானே தன்னன்னா - மச்சான்
பஞ்சம் தீர்க்க வழியுண்டு தானே தன்னன்னா
ஹேஹேஹே.. ஹேஹேஹே..

ரோஜா மலரே ராஜகுமாரி

தத்துவ மழையில் நனைந்து சலித்த வேளையில் சற்றே ஓதுங்கி நின்று வாழ்வை மலரவைக்கும் சுகங்களில் தலையாயதான காதல் கடல் கரையோரம் இளைப்பாரலாமே.

காதல் காதல் காதல் காதற்போயின் காதற்போயின் சாதல் சாதல் சாதல் என்றார் பாரதியார். காதல் என்பது எது வரை கல்யாண காலம் வரும் வரை என்றார் அவருக்குப் பின்னர் வந்த வேறொரு புலவர். ஆனால் நோயில்லா உடல் இருந்தால் நூறு வரை காதல் வரும் என்றார் கவிஞர் கண்ணதாசன். காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே என்றும் அவர் சொன்னார்.

அரசகுமாரி ஒருத்தி தன் காதலை அரசாங்கத்தில் தளபதியாகப் பணியாற்றும் கதாநாயகனிடம் தெரிவிக்கிறாள். அவன் தங்கள் காதல் நிறைவேறாது, ராஜாவின் மகள் தன்னை நெருங்கலாகாது என்று ஒதுங்குகையில் அவளோ காதலுக்கு முன்னர் நாடும் மணிமுடியும் மற்றெல்லாமும் தூசுக்குச் சமம் என்றுரைத்து அவன் மனதில் இடம் கேட்கிறாள்.

இதோ அந்த இனிய பாடல் பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா குரலில்:


ரோஜா மலரே ராஜகுமாரி


ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா? வருவதும் சரிதானா?
உறவும் முறை தானா?
வாராய் அருகே மன்னவன் நீயே
காதல் சமமன்றோ வேதம் இலையன்றோ?
காதல் நிலையன்றோ?
ஏழையென்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ? உலகின் முறையன்றோ?
என்றும் நிலையன்றோ?

வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் கலந்து
நாட்டை இழந்தவர் பலரன்றோ?

மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ?

பாடும் பறவைக் கூட்டங்களே
பச்சை ஆடைத் தோட்டங்களே
விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே.

ஓர் வழி கண்டோம் ஒருமனமானோம்

வாழிய பாடல் பாடுங்களே

ரோஜா மலரே ராஜகுமாரி
ஏழையென்றாலும் ராஜகுமாரன்
உண்மை இதுவன்றோ? உலகின் முறையன்றோ?
என்றும் நிலையன்றோ?