திங்கள், 23 நவம்பர், 2009

முத்துக்களோ கண்கள்

பொன் மணி முத்துக்கள், பவளங்கள் வைரங்கள்
இன்னபல செல்வங்கள் எல்லாமும் பெண்ணொருவள்
கண்வலையில் வீழ்ந்த பின்னர் காளையர்க்குப் பொருளாமோ?
காதல் தரும் சுகம் போல வேறெதுவும் உலகிலுண்டோ?
ஒரு பெண்ணிடம் உள்ளத்தில் காதல் பிறந்த பின்னர் காளை ஒருவனுக்கு இவ்வுலகமும் அவளே, இவ்வுலகிலுள்ள அனைத்து செல்வங்களும் அவளே. கன்னி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் காளை அவனுக்குப் பசியே மறந்துவிடும், அவள் வாய்திறந்து பேசிவிட்டாலோ உலகத்தை மறந்து, உறக்கத்தை மறந்து, உள்ளத்தால் அவளுடன் ஒன்று கலந்து விடுவான்.

என்னே காதலின் சக்தி! அதனாலேயே
காதலினால் மாந்தருக்குக் கலவியுண்டாம்,
கலவியினால் மாந்தருக்குக் கவலை தீரும்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே
என மஹாகவி பாரதி பாடி வைத்தாரோ?

முத்துக்களோ கண்கள்

படம்: நெஞ்சிருக்கும் வரை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1967

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன?
பாலில் ஊறிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன?

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை

கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன?

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன?
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன?
மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன?
வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை

பூங்கொடி தான் பூத்ததம்மா

ஆசைகளே துன்பத்துக்குக் காரணம், ஆகவே ஆசையை விட்டொழியுங்கள் என்று ஞானியர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு ஆசைகளை அறவே ஒழிக்க அந்த ஞானிகளாலேயே இயலாதென்பதுவே உண்மை. ஆனால் ஞானிகள் தங்களது ஆசைகளை அறவே ஒழிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர் என்பதும் உண்மை. இதனை ஞானயோகம் என்று சொல்வர். இதனைக் கடைபிடிப்பது சாமான்யர்களுக்கு இயலாது. எது சாத்தியமோ அதனையே முயற்சிக்க வேண்டு்ம். ஆகவே உலக வாழ்வில் இல்லற மார்க்கமே சிறந்ததென ரிஷிகளுள் தலையாயவராகக் கருதப் படும் ஜனக முனிவர் அறிவுறுத்தி, அதன்படி வாழ்ந்தும் காட்டினார் எனப் பல அறிஞர்கள் எழுதிய நூல்களின் வாயிலாக அறிகிறோம்.
அவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபடுவோர்க்கு ஆசைகளே வாழ்வுக்கு ஆதாரம், ஆனால் ஆசைகள் அளவுக்குட்பட்டும், நியாயமானவையாகவும் அமைய வேண்டும். பேராசையாகவோ அடுத்தவர் உரிமையைப் பறிப்பதாகவோ அமைவது தவறு.

நாணத்தினாலும், தேவையற்ற அச்சத்தினாலும் ஏற்படும் தயக்கத்தால் மனதில் எழும் ஆசைகளை வெளியில் சொல்லாமல் மறைத்தல் அவ்வாசைகள் நிறைவேறுதில் தாமதத்தையும் ஆசைகள் நிறைவேறா நிலைமையையும் ஏற்படுத்துதல் உண்டு.

குறிப்பாகக் காதல் உணர்வுகளை மறைப்பதால் அக்காதல் நிறைவேறுதல் சாத்தியமாகாது. ஒருவரைக் காதலிக்கும் ஆணோ பெண்ணோ தனது காதலைத் தான் காதலிக்கும் நபரிடம் விரைவில் தெரிவிப்பது அக்காதல் வெற்றியடையத் தேவையான முதல் முயற்சியாகும். அம்முயற்சியில் தோல்வி கண்டால் பாதகமில்லை, மனதைத் தேற்றிக்கொள்ள வழிகள் உள்ளன, ஆனால் முயற்சியே செய்யாதிருந்து, அதனால் உள்ளத்தில் உதித்த காதல் கானல் நீராவது மிகவும் வேதனை தரக்கூடியதாகும்.

பூங்கொடி தான் பூத்ததம்மா

இதயம்
இளையராஜா
எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா

ஆசைக்குத் தாள் போட்டு அடைத்தென்ன லாபம்?
அது தானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழை நீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல் ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..

பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா

தாய் கூட அழுகின்ற பிள்ளைக்குத் தானே
பசி என்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன் வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன? ஊமைக்குப் பாடலென்ன? ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..

பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்

பொதுவான செயல்பாடுகளில் பொறுமையைக் கடைபிடிக்கும் ஆண்கள் காதல் விஷயத்தில் பெரும்பாலும் அவசரக்காரர்களாக இருக்கிறார்கள். தன் மனம் கவர்ந்த ஒரு பெண்ணைப் பார்த்துத் தன் காதலை வெளியிட்டதும் உடனே அவள் தானும் அவனைக் காதலிப்பதாகக் கூற வேண்டுமென எதிர்பார்ப்பது ஒரு ஆணின் இயல்பு. இதற்கு நேர்மாறாக, பொதுவான செயல்பாடுகளில் அவசரத்தைக் காட்டும் பெண்கள் காதல் விவகாரம் என வந்துவிட்டால் வாய்மூடி மௌனிகளாகவே இருப்பது அவர்களது இயல்பு. இதற்குக் காரணம் இயற்கையாகவே பெண்களிடமுள்ள நாணம், அவர்கள் உள்ளத்தில் உண்மையிலேயே காதல் உணர்வு எழுந்தாலும் அதனை வெளிப்படுத்தத் தயங்கும் தன்மையைத் தருவதாகும்.
இயல்பாக நாண உணர்வு அதிகம் இல்லாதிருந்தபோதிலும், தன்னிடம் காதலைச் சொன்ன ஆணின் மனதை அலைபாய வைத்து வாட்டுதல் சில பெண்களுக்குப் பிடித்த விளையாட்டு. எங்கே அவள் தன்னைக் காதலிக்கவில்லை என்று சொல்லிவிடுவாளோ என்று எண்ணி தன்மேல் காதல் கொண்ட ஆண்கள் தவிக்கும் தவிப்பைக் கண்டு அளவிலா சந்தோஷமடைவார்கள் இத்தகைய பெண்கள்.

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்

படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: சங்கர் மஹாதேவன்
ஆண்டு 1999

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?
அன்பே என்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?
அன்பே என்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

இதயமொரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இது தான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
க்ண்ணாடி பிம்பம் கண்ட கை ஒன்றுமில்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆனதடி நீ
ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொள்ளடி கண்ணே
என்தன் வாழ்க்கையே உந்தன் விழி விளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இனி இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?
பூவாசம் வீசும் உன்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்டபின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து காயும் உன்தன் கண்களடி பல
உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா?

என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
நியாயமா நியாயமா?
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்?
மௌனமா மௌனமா? என்ன சொல்லப் போகிறாய்?

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்

ஆதியில் மனிதர்கள் விலங்குகளுடன் விலங்குகளாய்க் காடுகளில் வசிக்கையில் கொடிய விலங்குகளிடமிருந்தும் இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள ஒன்று சேர்ந்து கூட்டம் கூட்டமாக வசித்தனர். நாளடைவில் அவர்கள் உலகில் உள்ள பல்வேறு பொருட்களின் உபயோகம் குறித்தும், இயற்கை சக்தியினைத் தன் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் நுட்பத்தையும் அறிந்துகொண்டு பல இயந்திரங்களையும் உபகரணங்களையும் கண்டு பிடித்து உருவாக்கினர். இத்தகைய அறிவு வளர வளர அவர்கள் காடுகளை அழித்து வீடுகள் கட்டி, நாடு நகரங்களை நிர்மாணித்தனர்.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்த நிலையில் மனிதர்கள் கடலிலும் வானிலும் பயணம் செய்யும் வழிமுறைகளைக் கண்டனர், பின்னர் சந்திரனுக்கும் வேறு கிரகங்களுக்கும் செல்ல வழி கண்டனர். உணவு, உடை, இருப்பிடம் எனும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகவே மனிதர்கள் பலவிதமான கேளிக்கைகளையும் தகவல் தொடர்பு சாதனங்களையும் கண்டறிந்ததால் இன்று உலகெங்கிலுமுள்ளோர் ஒருவரோடொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், இசை மற்றும் பேசும்படங்கள் உள்ளிட்ட பலவகையான கேளிக்கைகளை அனுபவிக்கவும் முடிகிறது.

இன்னும் இத்தகைய கண்டுபிடிப்புகள் எத்தனை எத்தனையோ உருவாக்கிவிட்டு, மேலும் புதிய சாதனங்களையும் தொழில் நுட்பங்களையும் உருவாக்கி, உயிரினங்கள் அனைத்தையும் விட மிகவும் அதிக அறிவுள்ள நிலையை அடைந்து, பல்வேறு விஷயங்களை அறிந்த மனிதன், மனிதனாக மனிதத் தன்மையுடன் வாழ்வது எப்படி என்பதை மட்டும் இன்னமும் அறிந்து கொள்ளவில்லை.

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்

அழகு நிலா
கவிஞர் கண்ணதாசன்
சீர்காழி கோவிந்தராஜன் 1960

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

இனிய குரலில் குயில் போலே
இசையும் அழகாய்ப் பாடுகின்றான்
எருதுகள் போலே வண்டிகளை
இழுத்துக் கொண்டு ஓடுகின்றான்
வனத்தில் வாழும் பறவைகள் போல்
வானில் பறந்து திரிகின்றான்
வனத்தில் வாழும் பறவைகள் போல்
வானில் பறந்து திரிகின்றான்
மனிதனாக வாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை
சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்
குள்ளநரி போல் தந்திரத்தால்
குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
மனிதனாக வாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி

இவ்வுலக வாழ்வு நிலையற்றதென உணர்ந்த உன்னத மனிதர்களான நம் முன்னோர்கள் உலகில் வாழும் வரை அனைவரும் ஒற்றுமையாக, அமைதி காத்து, வாழ்வை அக மகிழ்வோடு வாழ வழி காணும் வகையில் பல்வேறு மதங்களையும் மதக் கோட்பாடுகளையும், அவரவர் வாழ்ந்த இடத்தையும், காலத்தையும், சூழ்நிலைகளையும் அனுசரித்து அவற்றுக்குப் பொருத்தமான வகையில் அமைத்தனர்.
இவ்வாறு ஏற்பட்ட மதங்களும் மதக் கோட்பாடுகளும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டவருக்கு அறிமுகமாகி, அவற்றால் ஈர்க்கப்பட்ட பிற நாட்டினரில் ஒரு பகுதியினர் அம்மதத்தைத் தழுவிய சம்பவங்கள் அனேகமாக உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பல சமயங்களில் ஏற்பட்டுள்ளன, இன்னமும் ஏற்பட்டு வருகின்றன.

தழுவிய சமயங்கள் வேறாயினும் அடிபடையில் அனைவரும் ஒரே ஜாதி, அதாவது மனித ஜாதி. பல்வேறு பெயர்களில் தெய்வத்தை பல்வேறு சமயத்தினர் வழிபட்டாலும் தெய்வம் ஒன்றேயாகும். இவ்வுண்மையை உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் உணர்ந்துள்ளதாலேயே பல்வேறு மதத்தினர் ஒன்றுகூடி வாழத்தக்க சூழ்நிலை உலகெங்கிலும் நிலவுகிறது. சுயநலம் மிக்க சில விஷமிகளால் இம்மத நல்லிணக்கம் உலகின் சில பகுதிகளில் சில சமயங்களில் பாதிக்கப் பட்டாலும் வெகுவிரைவிலேயே இணக்கமான சூழ்நிலை மீண்டும் திரும்புவதை நாம் நடைமுறையில் காண்கிறோம்.

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி

படம்: ஆளுக்கொரு வீடு
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1960

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா
ஊத்துக்கெல்லாம் ஓரே காத்து ஓரே காத்து ஓரே தண்ணி
ஓரே வானம் ஓரே பூமி ஆமடி பொன்னாத்தா
ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ

தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்
தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்

எல்லோருக்கும் ஒலகம் ஒண்ணு இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு நானும் ஒண்ணே தான்
எல்லோருக்கும் ஒலகம் ஒண்ணு இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு நானும் ஒண்ணே தான்

யாரு என்னைக் கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே
யாரு என்னைக் கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தானே
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தானே

உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஓரே பாதை ஓரே வாசல்
ஓரே கூடு ஓரே ஆவி பாரடி கண்ணாத்தா
உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஓரே பாதை ஓரே வாசல்
ஓரே கூடு ஓரே ஆவி பாரடி கண்ணாத்தா

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா

தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்
தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்

தானந்தா தானா தைதன்னேனா தானந்தா தானா தானே தந்தேனா
தானே தன்தேனா தானே தன்தேனா தானே தன்தேனா தானே தன்தேனா
தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்
தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்

பாடு பட்டோம் கொஞ்சமுமில்லே பலன் வெளஞ்சசா பஞ்சமுமில்லே
ஆடும் மாடும் நாமும் வாழ அருள்புரிவாளே அம்மா அருள் புரிவாளே

அங்காளம்மன் கோயிலுக்குப் பொங்க வைக்க வேணும்
அங்காளம்மன் கோயிலுக்குப் பொங்க வைக்க வேணும்
அன்னை அவள் எங்களையும் பொங்க வைக்க வேணும்
அன்னை அவள் எங்களையும் பொங்க வைக்க வேணும்

ஆளுக்கெல்லாம் ஓரே கோயில் ஓரே கோயில் ஓரே பூஜை
ஓரே நியாயம் ஓரே தீர்ப்பு கேளடி கண்ணாத்தா
ஆளுக்கெல்லாம் ஓரே கோயில் ஓரே கோயில் ஓரே பூஜை
ஓரே நியாயம் ஓரே தீர்ப்பு கேளடி கண்ணாத்தா

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா
ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

இயல், இசை, நாடகம், நாட்டியம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்தி நான்கிலும் உலகிலேயே மிகவும் சிறந்து விளங்கியதும், இன்னும் சிறந்து விளங்குவதும் நம் பாரதநாடு. இதற்கு முக்கியக் காரணம் கலைஞர்கள் கலைக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணிக்கும் தியாக மனப்பான்மையே ஆகும். சிற்பக் கலைகள் மிளிரும் எண்ணிறந்த ஆலயங்கள் நமது நாட்டில் உருவாகக் காரணமும் அதுவே. கோவில் சிற்பங்களுக்கு நடன மாதரும், நடனம் பயின்ற ஆண்கள் பலரும் மாதிரிகளாக இருக்க, அவர்களது அபிநயத்துக்கேற்றவாறு கல்லினாலும், சுதையினாலும் சிலைகள் பலவற்றை வடித்தனர் கைதேர்ந்த சிற்பிகள் பலர். அவ்வாறு வடித்த சிற்பங்கள் நிறைந்த ஆலயங்கள் உலகப் புகழ் பெற்று விளங்குகின்றன.
நாட்டியக்கலை பயிலுகையில் அந்நாட்களில் அவர்களது குருவானவர் தம் சீடர்கள் தங்கள் வாழ்வை நாட்டியக் கலைக்கு அர்ப்பணிக்க வலியுறுத்தி வந்திருக்கின்றனர். இதனாலேயே நடனமாதர்கள் பலர் அன்று திருமணம் செய்துகொள்ளாது நாட்டியக் கலையினை வளர்க்கவும், தெய்வப்பணி புரியவுமென்றே தங்கள் வாழ்வை அர்ப்பணித்தனர். இவர்களில் பலர் இயற்கையின் தாக்கத்தால் காதல் வயப்பட்டதும் அவ்வாறு காதல் வயப்பட்டவர் தம் வாழ்வைக் கலைக்கு அர்ப்பணித்தமையால் மனதுக்கிசைந்த தன் காதலருடன் கூடி இல்வாழ்வை மேற்கொள்ள இயலாத நிலையால் வாடியதும் உண்டு. இத்தகைய பெண்கள் மேல் காதல் கொண்ட ஆண்கள் பலரும் தமது மனதுக்கிசைந்த காதலியுடன் கூடி வாழும் பாக்கியமின்றி வேறு பெண்களை மணமுடிக்க விருப்பமின்றியும் அவ்வாறு வேறு பெண்ணை மணமுடித்தும் அவளுடன் மனமொத்து வாழ முடியாமலும் வருந்தியதுண்டு.

கலை பலரது வாழ்க்கையின் திசையையே மாற்றியது.

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

திரைப்படம்: மீண்ட சொர்க்கம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி. சலபதி ராவ்
பாடியோர்: ஏ.எம். ராஜா, பி. சுசீலா
ஆண்டு: 1960

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆஆ
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

மாலையிலும் அதிகாலையிலும் ஆஆஆஆஆஆஆஆஆஆ
மலர் மேலும் சிலை மேனியிலும் ஆடிடும் அழகே
ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நான் இல்லையே

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை ஆஆஆஆஆஆஆஆஆஆ
கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய்
பாவமும் ராகமும் தாளமும் நீயே
பாவமும் ராகமும் தாளமும் நீயே
நீ இல்லையேல் நான் இல்லையே ஆஆஆஆஆஆஆஆஆ

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆஆஆ
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே

ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்ட ஆடவனுக்கு இவ்வுலகமே அவளாகத் தோன்றுதல் காதல் செய்யும் மாயம். காதலி வருகைக்காகக் காத்திருக்கும் நேரம் அவனுக்கு முள் மேல் நிற்பது போன்ற துன்பத்தைத் தரும். அவள் வந்து விட்டாலோ வாடிய அவன் முகம் ஒளிபெறும். அவள் பேசும் மொழி அவனுக்குத் தேன் போல இனிப்பதுடன் அவளது உருவம் உலகிலுள்ள அழகிய பொருட்களையெல்லாம் நினைவுறுத்தும்.
அவளது முகம் மலர்ந்து சிரிப்பது முழுமதி போலவும், இடை மலர்க்கொடி போலவும், அவளது நீல விழிகளே கடலுக்கு நீல நிறத்தைத் தந்தாற் போலவும் இவ்வாறாகப் பலவிதமான கற்பனைகளில் மிதப்பதும் அவற்றைக் கவிதையில் வடிப்பதும் காதலர்க்கு வாடிக்கை. கவிஞர்களல்லவா கவிதைகளை வடிக்கின்றனர்? எனும் கேள்வி எழுமாயின் கவிஞர்கள் எல்லாரும் காதல் உணர்வு கொண்ட மாந்தர்களே என்பதை உணர்ந்தால் பதில் கிடைக்கும். கவிஞர்களெல்லாம் காதலர்களே, ஆனால் காதலர்களெல்லாம் கவிஞர்கள் அல்ல, என்றாலும் காதல் உணர்வு உள்ளத்தில் உருவாகிவிட்டால் கவிஞர் அல்லாத யாரும் கவிஞராகலாம்.

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே

மாலையிட்ட மங்கை
கவிஞர் கண்ணதாசன்
டி.ஆர். மஹாலிங்கம்
எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

அனைத்து உயிரினங்களிலும் மனிதனுக்கு அதிகப்படியான அறிவைக் கொடுத்த இறைவன் அறியாமையையும் அவனுக்குச் சற்று அதிகமாகவே கொடுத்துவிட்டான். இதனாலேயே ஜாதி மதங்களாலும், பொருளாதார நிலையாலும், கல்வியாலும், இனத்தாலும், தேசியத்தாலும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனும் பேதத்தை மனிதன் வளர்த்ததால் ஒற்றுமை குலைந்து, ஒருவரோடொருவர் சண்டையிடும் நிலைமை உலகெங்கிலும் உருவாகி, அப்பாவி மக்கள் பலர் காரணமின்றி உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு அமைதி குலைகிறது.
இந்த பேதம் என்று மாறுமோ அன்றுதான் உலகில் அமைதி நிலவும், அனைவரும் சுகமாய் வாழ முடியும். சாதிமத பேதமற்ற, ஏழை பணக்காரனற்ற சமத்துவம் நிலவ வேண்டும். உலகில் எல்லோரும் சுகவாழ்வு வாழ வேண்டும்.

எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்திய மக்கள் நாம் எல்லோரும் இந்திய மக்கள் எல்லோரும் ஓர் விலை எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர் நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்

என்று பாரதி பாடிய சமதர்ம சமுதாயம் மலர வேண்டும் உண்மையான சுதந்திரம் அனைவர்க்கும் கிடைக்க வேண்டும்.

எது எவ்வாறாயினும் அனைவரும் என்றும் சம மதிப்பைப் பெறும் ஒரே இடம் ஒன்றுண்டு. அதுவே சமரரசம் உலாவும் இடம்:

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

படம்: ரம்பையின் காதல்
இயற்றியவர்: மருதகாசி
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு 1956

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ...ஆ.
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினுங் கை கொடுத்து மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வமடி
என்று தன் மனதுக்கிசைந்த மணாளனுடன் வாழ்வது ஒரு பெண்ணின் உரிமை என வலியுறுத்துகிறார் பாரதியார். ந்மது நாட்டில் பெண்ணுரிமைக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்பது இன்றளவும் ஒரு கேள்விக்குறியாகவே விளங்குகிறது. இல்வாழ்க்கை என்பது கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் உள்ளத்தால் விரும்பி வாழ்வதேயாகும். பொதுவாக நமது நாட்டில் ஒரு பெண்ணைப் பெற்றவர்கள் அவளது திருமணத்தை நடத்தி வைக்கையில் மணமகன் அவள் மனதுக்குப் பிடித்தவனா என்பதை உறுதி செய்யத் தவறுவதால் திருமணங்கள் தோல்வியடைந்து அப்பெண்ணின் வாழ்வு பாழாகிறது.

தாலி கட்டிய கணவன் தனக்கு விருப்பமில்லாத நிலையில் திருமணத்தை நடத்தித் தன்னை அடைந்தவன் எனவும் தனக்கு உண்மையுள்ளவனாக நடப்பவனில்லை எனவும் எண்ணும் ஒரு பெண் எவ்வாறு அவனுடன் இணைந்து மனமொப்பி வாழ முடியுமா? அத்தகைய மனநிலையில் அவள் இருக்கையில் அவளைப் பாடச்சொன்னால் அவளால் பாட முடியுமா?

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

படம்: இருவர் உள்ளம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1963

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
வீட்டுக் குயிலைக் கூட்டில் வைத்தால் பாட்டுப்பாடுமா பாட்டுப்பாடுமா?

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில
மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில
மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை செய்தானே

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது?
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது?
பழுதுபட்ட கொவிலியே தெய்வமேது?
பனி படர்ந்த பாதையிலே பயணமேது?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

நற்பண்புகளை வளர்க்காத கல்வி பயனற்றது என்பதனாலேயே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்குப் பல அறிஞர்கள் எழுதிய நீதிகளையும் அத்தகைய உத்தமர்கள் வாழ்க்கை வரலாறுகளையும் போதிக்கின்றனர் ஆசிரியப் பெருமக்கள். கல்வி கற்றுத் தேர்ந்த பின்னர் அக்கல்வித் தகுதியைக் கொண்டு பொருளீட்டுவது ஒன்றையே நோக்காகக் கொண்டு தாம் கற்ற நீதிகளையும் பிற நன்னெறி புகட்டும் செய்திகளையும் காற்றில் பறக்கவிட்டு வாழ்வோர் வாழ்க்கை முழுமையடையாது. ஒருவர் உலகில் அனைவராலும் மதிக்கப்பட வேண்டுமெனில் அவர் நற்பண்புகளின் உறைவிடமாக விளங்குதல் அவசியம்.
நற்பண்புகளில் முக்கியமானது பிறரது நம்பிக்கையில் குறுக்கிடாமை. ஒருவர் தமக்குப் பிடித்த மதத்தைத் தழுவுதலும், தமக்குப் பிடித்த கடவுளரை வணங்குதலும், கடவுள் நம்பிக்கை இல்லாதிருப்பதும், சோதிடத்தில் நம்பிக்கை வைப்பதும், சோதிடம் மூடநம்பிக்கை எனக் கொள்வதும் அவரது தனி உரிமை. இதில் பிறர் குறுக்கிடுவது அநாகரீகமாகக் கருதப்படும்.

தாம் நம்புவதையே பிறரு்ம் நம்ப வேண்டும் என யாரும் யாரையும் கட்டாயப்படுத்துதல் ஜனநாயக மரபன்று. நம்மில் மூத்தோரிடம் பணிவாக நடந்து கொள்தலும், பிறர் மனம் புண்படும் படி ஏதும் கூறாதிருத்தலும், அனைவரிடமும் இன்சொல் பேசிப் பழகுதலும் குறிப்பிடத்தக்க அவசியமான நற்பண்புகளாகும்.

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

திரைப்படம்: குமாரராஜா
ஆண்டு: 1957
இசை: டி.ஆர். பாப்பா
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
பாடியவர்: பி.லீலா

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே - நம்
நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே
நல்லவர்கள் தூற்றும் படி வளர்ந்து விடாதே - நீ

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - நீ
மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக்கூடாது
மாற்றார் கைப் பொருளை நம்பி வாழக் கூடாது - தன்
மானமில்லாக் கோழையோடு சேரக் கூடாது - நீ

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும்
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - நீ
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும் - நீ

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேணும்
வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேணும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் ஆ
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேணும் - நீ

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?

உயிர்களுக்கிடையில் திகழும் பாசப் பிணைப்பினாலேயே உலகம் செயல்படுகிறது. ஒரு தாய் தன் பிள்ளையிடம் காட்டும் பாசத்துக்கு வேறெவர் பாசமும் ஈடாகாது என்பது அனைவரும் அறிவோம். இதில் விதிவிலக்கும் உண்டு என்பதை மறுக்க முடியாதாயினும் இயற்கை நியதிப்படி தாயின் பாச உணர்வே அனைத்திலும் உயர்ந்ததென்பதை ஒப்புக்கொள்கிறோம். இத்தகு தாய்ப்பாசம் மனிதர்களிடம் மட்டுமின்றி அனைத்து உயிர்களிடமும் ஓரே தரத்தில் உயர்ந்து விளங்குவதையும் காண்கிறோம். உதாரணமாக ஒரு கோழி சாதாரணமாக உயரப் பறப்பதில்லை. ஆனால் அதே கோழி பருந்தொன்று தன் குஞ்சினைக் கவ்விச் செல்லக் கண்டு வானுயரப் பறந்து பருந்தினை விரட்டித் தன் குஞ்சினைக் காத்த காட்சியை நான் கண்டிருக்கிறேன்.
ஒரு பெண் தான் பெற்ற செல்வங்கள் அனைத்திலும் உயர்ந்ததாக உள்ளுணர்வாலும் பகுத்தறிவாலும் ஒன்றுபட்ட நோக்குடன் கருதுவது தான் ஈன்ற மகவையே ஆகும். தனக்கு எத்தகைய துன்பம் நேரிடினும் அதனால் தன் குழந்தைக்கு ஊறு விளையாது பார்த்துக் கொள்வது ஒரு தாயின் இயல்பு. பத்து மாதம் வயிற்றில் சுமந்து தன் ரத்தத்தையே பாலாக்கி ஊட்டி வளர்த்து, தன் உயிரையே பணயம் வைத்து, உலகில் வேறு யாராலும் தாங்க இயலாத பிரசவ வேதனையை அனுபவித்துப் பெறும் பிள்ளை அல்லவா? அதனை விடவும் உயர்ந்த செல்வம் உலகில் வேறுண்டோ?

"ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன்" எனும் ஆங்கிலக் கவிஞர் தான் எழுதிய "ஹோம் தே ப்ராட் ஹர் வாரியர் டெட்" எனும் கவிதையில் கூறுவதாவது: ஒரு பெண்ணின் கணவன் போரில உயிர்துறக்கவே அவனது உடலை அவனது வீட்டுக்குக் கொண்டு வருகின்றனர். அவனது மரணத்தினால் ஏற்பட்ட துக்கத்தால் அப்பெண் ஸ்தம்பித்துப் பேச்சற்றவளாகி நிலைகுலைந்து ஒரு மூலையில் உட்கார்ந்து விடுகிறாள். அவள் அழவில்லை, வாயைத் திறந்து பேசவுமில்லை. துக்கம் விசாரிக்க வந்திருந்த அண்டை வீட்டார்கள் பலர் அவளை அழ வைக்க முயற்சிக்கின்றனர், ஏனெனில் அவள் தனது துக்கத்தை வெளியே அழுது கொட்டாவிடில் அவள் இறந்து விடும் அபாயம் உள்ளது. அவர்கள் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை, அவள் அழவில்லை. இந்நிலையில் அவர்களுள் இருந்த ஒரு மூதாட்டி வேறோரிடத்தில் இருந்த அப்பெண்ணின் சிறு குழந்தையை எடுத்து வந்து அவளது மடியில் கிடத்த, "ஓ மை சைல்ட், ஐ லிவ் ஃபார் தீ" என்று கூறிக் கதறியழுகிறாள்.

தான் வழ்வதே தன் குழந்தைக்காக எனும் மன நிலை கொண்டவள் தாய் எனும் உண்மையைக் கவிஞர் தெளிவாக்குகிறார்.

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
இயற்றியவர்: சுரதா
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
ஆண்டு: 1958

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?

மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

பசுமை நிறைந்த நினைவுகளே

"கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர் இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்."
பொருளாதரத்தில் நலிவுற்றவனை உற்றார் உறவினர் யாரும் மதிக்க மாட்டார்கள், அவனை ஒரு சுமையாகவே கருதுவது உலக இயல்பு. பெற்ற மகனைத் தனக்குப்பின் பேணிக்காக்கத் தக்கதொரு உற்ற துணைவியைத் தேடித்தரும் கடமையுள்ள தாயே வரும் மருமகள் தன் மகனிடமும் தன்னிடமும் பிற குடும்ப உறுப்பினரிடமும் அன்புடன் பழகும் பாங்குள்ளவளா? கடமையைச் செய்யும் பொறுப்பு மிக்கவளா? என்று ஆராய்ந்தறிவதைக் காட்டிலும் அவள் எவ்வளவு நகைகள் அணிந்து வருகிறாள்? எத்தனை பணம் சீதனமாகக் கொண்டு வருகிறாள்? என்றறிவதிலேயே அதிக அக்கரை காட்டுவதும் உலக இயல்பு.

ஒருவன் வாழ்க்கைத் துன்பங்களால் துயருற்று வருந்துகையில் அவன் எத்தகைய இழிநிலையை அடைந்தாலும், அது பொருளாதாரப் பிரச்சினையாயினும், உடல் ஊனம், நோய் முதலான பிரச்சினையாயினும் அதிலிருந்து அவனை மீட்க முன்வந்து தன்னலம் கருதாது அவனைக் கைதூக்கிக் கரையேற்றி உண்மையான அன்பு செலுத்தும் உன்னத உறவு இவ்வுலகில் நட்பு ஒன்றேயாகும். இத்தகைய நட்பு பெரும்பலும் மலர்வது ஒன்றாக வாழ்ந்து ஒன்றாகக் கல்வி கற்று வாழ்வில் உயர வழி தேடும் மாணவப் பருவத்திலேயே ஆகும்.

கல்லூரியில் சில பல ஆண்டுகள் ஒன்றாகக் கல்வி பயின்ற நண்பர்கள் தம் கல்வி பயிலும் காலம் முடிந்து ஒருவரையொருவர் பிரிய வேண்டிய சூழ்நிலை அனைவர் மனதிலும் வினோதமான உணர்வுகளை விதைப்பதாகும். இதுநாள் வரை நம்முடன் மனமொப்பி, ஆடிப் பாடி ஒன்றுகூடி மகிழ்ந்து, கல்வியில் ஒருவருக்கொருவர் உதவியிருந்த நண்பர்களைப் பிரிகிறோம் எனும் உணர்வு நண்பர்கள் ஒவ்வொருவரது மனதிலும் நீங்காததொரு ஏக்கத்தை உண்டாக்க வல்லது.

அவ்வாறு கல்வியில் தேர்ச்சிபெற்று வாழ்க்கைப் போராட்டத்தில் குதிக்க வேண்டிப் பிரியும் நண்பர்களில் பலர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாய்க் கூடி மகிழும் வாய்ப்புக் கிட்டினால் அதனை விட ஒருவர்க்கு சொர்க்கம் வேறில்லை.

இவ்வாறே 1976ஆம் ஆண்டு கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்துப் பிரிந்து சென்ற எனது கல்லூரித் தோழர்களில் பெரும்பாலோர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாங்கள் கல்வி பயின்ற கல்லூரி வளாகத்திலேயே மீண்டும் அவரவர் மனைவி மக்களுடன் ஒன்று கூடி, இரண்டு நாட்கள் கலந்து பழகி மகிழ்ந்தோம். அந்த அனுபவத்தின் சுவையை மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் எனும் தீராத ஆவலால் அதன் பின்னர் இரண்டாண்டுகளுக்கோர் முறை அதேபோல் குடும்பத்தினருடன் ஏதேனும் ஓரிடத்தில் ஒன்று கலந்து மகிழும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு 2003ஆம் ஆண்டு பெங்களூரிலும், 2005ஆம் ஆண்டு சென்னையிலும் 2007ஆம் ஆண்டு திருச்சியிலும் கொண்டாடிய நாங்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சேலம் அருகிலுள்ள ஏற்காட்டில் ஒன்று கூடுவதென முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

இன்று நண்பர்கள் தினம் (Friendship Day) என்று சொல்கிறார்கள். நண்பர்களை ஆண்டுக்கு ஒரு நாள் நினைத்தால் போதுமா? நண்பர்களின் நினைவு அமுதமன்றோ? அதனை நாள்தோறும் சுவைக்கும் ஆசையால் எனது கல்லூரித் தோழர்களுக்கென cit76.com என ஓர் இணையதளத்தை பிரத்யேகமாக உருவாக்கி நடத்தி வருகிறேன்.

இந்த நன்னாளில் உலகெங்குமுள்ள மாந்தர்களிடையேயும் நாடுகளுக்கிடையேயும், பல்வேறு மதத்தினரிடையேயும், ஆண்கள் பெண்கள் அனைவரிடையேயும் நட்புணர்வு மலர்ந்து ஒருவருக்கொருவர் உதவும் பண்பு பெருகி, நட்பின் வாயிலாக

"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

பசுமை நிறைந்த நினைவுகளே

படம்: ரத்தத் திலகம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே நாமே
வாழ்ந்து வந்தோமே

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ - என்றும்
மயங்கி நிற்போமோ

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் நாம்
பறந்து செல்கின்றோம்

சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?

நாம் ஒவ்வொருவரும் குழந்தைப் பருவத்தில் வாழ்வை மிகவும் அனுபவித்து அளவிலா மகிழ்ச்சியுடன் வாழ்ந்துள்ளோம். இதற்கு விதிவிலக்காகக் குழந்தைப் பருவத்தில் மிகவும் துயருற்று வருந்துபவர்களும் உலகில் உளர். இதனாலேயே மூதாட்டி ஔவை "கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினுங் கொடிது இளமையில் வறுமை" என்றாள். ஒரு குழந்தையை தெய்வத்துக்கு நிகராகக் கருதிப் பேணுவது உலகிலுள்ளோர் அனைவரது வழக்கம், இதற்குக் காரணம் குழந்தைப் பருவத்தில் யாருக்கும் கள்ளம், கபடு, சூது, வாது, போட்டி, பொறாமை முதலான தீய குணங்கள் இருப்பதில்லை.
"நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைய மாட்டீர்கள்" என்று இயேசுநாதர் கூறியுள்ளார். இதன் பொருள் குழந்தைகளின் உள்ளத்தைப் போன்று நிஷ்களங்கமாக உங்களது இதயத்தை வைத்துக் கொள்ளுங்கள். தீய குணங்களைக் கொள்ளாதீர்கள், அப்பொழுது தான் நீங்கள் உண்மையான மகிழ்ச்சியை அடைவீர்கள் என்பதாகும்.

வயதில் மிகவும் முதிர்ந்த பெரியோர்களாயினும், இளம் வாலிபர்களாயினும், நடுத்தர வயதினராயினும் அவர்கள் யாவரும் மிகவும் விரும்பிப் பழகுவது குழந்தைகளிடமே. தினமும் சிறிது நேரம் நமது அன்றாடப் பணிகளின் தொல்லையிலிருந்து விலகி, குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தால் நம் துன்பங்களெல்லாம் மறந்து நம்முள் ஒரு புத்துணர்ச்சி உண்டாகி, நாம் உற்சாகமாக வாழ வேண்டுமெனும் ஆவல் பெருக்கெடுத்து, துன்பங்களுக்கிடையிலும் மகிழ்ச்சியுடன் இருக்க நாம் கற்றுக் கொள்ளலாம்.

சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?

படம்: வாழ்க்கைப் படகு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1964

சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?

பால் மணக்கும் பருவத்திலே உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே சிட்டுப்போல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா

சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?

ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி தேவன் தந்த தெய்வ மொழி
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா

சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?

பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா
நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா
நன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு துன்பமடா
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா

சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?

தூங்காதே தம்பி தூங்காதே தூங்காதே

ஆகாரம் அரை, நித்திரை கால், மைதுனம் வீசம், பயம் பூஜ்யம் என்று ஆரோக்ய வாழ்வுக்கான சூத்திரத்தை வடலூர் ராமலிங்க வள்ளலார் வகுத்துத் தந்துள்ளார். இதன்படி அரை வயிற்றுக்கே ஆகாரம் இட வேண்டும், அரை வயிறு அளவை எவ்வாறு கண்பதெனில் உணவுண்கையில் பசியடங்கிய நிலையில் இன்னும் கொஞ்சம் உண்ணலாம் எனும் எண்ணம் இருக்கையிலேயே உணவருந்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நித்திரை கால் என்றால் ஒரு நாளில் 6 மணி நேரமே உறங்கலாம் என்பதாகும், மைதுனம் வீசம் என்பது 16 நாட்களில் ஒரு முறையே உடல் சுகம் பெறலாம், பயம் அறவே கூடாது.

அதிக நேரம் உறங்குபவர் உற்சாகக் குறைவுடனேயே காணப்படுவர். அதிலும் குறிப்பாகப் பணி செய்யும் நேரத்தில் உறங்கும் பழக்கமுள்ளவர் ஒரு சோம்பேரியாகவே திகழ்வதுண்டு. ஒருவர் இன்னொருவரிடம் சொன்னாராம், " 4 நாட்களாக சரியாகத் தூங்கவில்லை' என. மற்றவர் ஏன் எனக்கேட்க இவர், "4 நாட்களாக அலுவலகம் விடுமுறை" என்றாராம்.

இத்தூக்கம் உடல் ரீதியானது. இதைத் தவிர மனரீதியாகவும் அறிவு ரீதியாகவும் பலர் உறங்குவதாலேயே உலகில் அவர் மட்டுமின்றி அவரை நம்பியிருப்பவர்களும் ஏனையோரும் அவதிப்படுகின்ற கொடுமை அன்றாடம் நிகழும் ஒன்றாகும்.

நாட்டில் நீதித்துறை, காவல் துறை, அரசாங்கம் மற்றும் இராணுவ அதிகாரிகள் இத்தகைய உறக்க நிலையில் இருப்பதாலேயே நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி முதலான குற்றங்கள் மலிகின்றன, குற்றவாளிகள் தைரியமாகத் தங்கள் முறைகேடான தொழில்களை சட்டத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தொடர்ந்து செய்கின்றனர். நம் நாட்டிற்குள் அயல் நாட்டுத் தீவிரவாதிகள் நுழைந்து அழிவுச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இத்தகைய தீமைகள் நீங்கி அனைவரும் நல்வாழ்வு வாழ வேண்டுமெனில் அனைவரும் பணி நேரத்தில் விழித்திருப்பது மட்டுமின்றி விழிப்புடன் செயல்படவும் வேண்டும்.

தூங்காதே தம்பி தூங்காதே தூங்காதே

திரைப்படம்: நாடோடி மன்னன்
ஆண்டு: 1958
பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
திரைக்கதை வசனம்: கவிஞர் கண்ணதாசன்

தம்பீ, தூங்காதே தம்பி தூங்காதே தூங்காதே தம்பி தூங்காதே - நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

நீ தாங்கிய உடையும் ஆயுதமும் - பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
நீ தாங்கிய உடையும் ஆயுதமும் - பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடங்கொடுக்கும்

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்
நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் - சிலர்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆ
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன் போல்
குறட்டை விடடோரெல்லாம் கோட்டை விட்டார்

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே தம்பி தூங்காதே

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது

உலகில் வாழும் மிருகங்களுக்கும் பிற உயிரினங்களும் இயற்கையாகவே சில குணங்கள் அமைகின்றன. புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு இயல்பாகவே சினத்துடன் சீறும் குணமுள்ளது. யானை அனைத்து விலங்குகளிலும் அதிக பலம் கொண்டதாக விளங்கினாலும் அது பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிறது. புதிய நபர்களையோ வேறு நாய்களையோ கண்டால் குரைக்கும் குணம் எல்லா நாய்களுக்கும் உண்டு. கூடி வாழும் இயல்பு காக்கைகளிடம் அமைந்துள்ளது. இவ்வாறாக அனைத்து உயிரினங்களுக்கும் பிரத்தியேகமான குணங்களைப் படைத்த இறைவன் மனிதர்களுக்கு மட்டும் மாறுபட்ட குணங்களைக் கொடுத்தது ஏனோ?
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம்

என்றாள் ஔவைப் பிராட்டி. இங்கே குலம் என்பது ஒருவர் பிறந்து வளரும் சூழ்நிலையைக் குறிப்பதாகும். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, சாதியையோ சேர்ந்தவர் என்று எடுத்துக் கொள்வது தவறு. ஒருவன் இளம் வயது முதலே கல்வியிலும் தர்ம நெறிகளிலும் சிறந்து விளங்கும் நல்லோரின் சேர்க்கையைப் பெற்று வளர்வானாகில் அவன் நல்ல குணங்களையே பெறுதலும், தீய குணங்களும் தீய பழக்க வழக்கங்களும் நிறைந்தவருடன் பழகும் சூழ்நிலையில் வளர்கையில் தீய குணங்களைப் பெறுதலும் இயல்பு.

இயல்பாகவே அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, பொய் நீக்கி உண்மையே உரைத்து வாழும் உத்தமர்கள் என்றும் தீய வழியில் செல்வதில்லை, எத்தகைய துன்பங்கள் நேரிட்டாலும் தீய குணங்களைப் பெறுவதுமில்லை.

இயல்பாகவே காமம், குரோதம், கோபம், லோபம், மதம், மாத்சர்யம், ஐயம், அச்சம் முதலிய தீய குணங்களை வளர்த்துக்கொண்ட மனிதர்கள் பொதுவாகத் தம் வாழ்நாளில் என்றும் திருந்துவதில்லை. அவர்களது தீய குணத்தாலும், தீய செயல்களாலும் விளைந்த தீமைகள் அவர்கள் இறந்து அவர்களது உடல்களைக் கட்டையில் வைத்து எரிக்கையிலும் மறைவதில்லை.

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
ஓஹோஹோஹோஹொஹொஹோ

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

வரவறியாமல் செலவழிச்சாலும் நெலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் வெத வெதைச்சாலும் முளைக்காது
காத்துல வெளக்க ஏத்தி வச்சாலும் எரியாது

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
ஓஹோஹோஹோஹொஹொஹோ

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

இந்த மான் உன்தன் சொந்த மான்

வன விலங்குகளிலேயே மிக அழகானது மான். அது துள்ளி ஓடுவதும் விளையாடுவதும் காணக் கண்கொள்ளாக் காட்சி. இதானால் தானோ என்னவோ இராமாயண காவியத்தில் ராமனை சீதையிடமிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்த மாரீசன் ஒரு மானிம் உருவம் கொண்டு சீதையின் கண்ணில் படும்படியாக அங்குமிங்கும் ஓடியாடி அவளைக் கவர்ந்து, தன்னைப் பிடித்துத் தர ராமனை வற்புறுத்தும்படித் தூண்டினான்.
அழகில் மட்டுமன்றி காதல் இன்பத்தை அனுபவிப்பதிலும் மான் பிற விலங்குகளைக் காட்டிலும் மேம்பட்டு விளங்குகிறது.

மஹாபாரத காவியத்தில் பாண்டு மஹாராஜா காட்டில் வேட்டையாடுகையில் ஒரு ஆண் மானும் ஒரு பெண் மானும் உறவு கொள்ளும் நிலையில் சற்றும் சிந்தியாமல் ஆண் மானின் மேல் அம்பெய்துவிட்டான். உண்மையில் அந்த மான்கள் ஒரு ரிஷியும் அவரது பத்தினியுமாவர். உலகிலேயே காதலின்பத்தை அதிகம் பெறும் ஜீவன் எது எனத் தனது பத்தினி கேட்டதற்கு முனிவர் மான் என்று பதில் கூறவும், அவ்வாறாயின் மானின் வடிவம் கொண்டு இருவரும் புணர வேண்டும் என்று அவள் ஆசைப்படவே, முனிவர் தன் தவ வலிமையால் இருவரும் மான் உருவம் அடையச் செய்ய, அந்நிலையில் இருவரும் உறவு கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பாண்டுவின் அம்புக்கிரையாகிய முனிவர் மரணிக்கும் தருவாயில் பாண்டுவை நோக்கி, "நீசனே, மிருகங்கள் காதல் உறவு கொள்ளும் நிலையில் நீ சிறிதும் இரக்கமின்றி அவற்றின் மேல் அம்பு எய்தாய். நீ உன் மனைவியுடன் இணைந்தால் அக்கணமே மரணமடைவாய்" என்று சபித்து விட்டார். இதனால் மனம் வாடிய மன்னன் ஆட்சியைத் தனது அண்ணன் திருதராஷ்டிரனிடம் ஒப்படைத்து மனைவியருடன் வனவாசம் மேற்கொண்டான். இடையில் ஒரு நாள் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் இளைய மனைவி மாத்ரியுடன் உறவு கொண்டதால் முனிவரின் சாபப்படி மரணமடைந்தான்.

அது சரி, கவிஞர்கள் பெண்களை மான்களுக்கு ஒப்பிடுவது எதனாலோ? அவர்களது அழகு கண்டோ, அல்லது அவர்கள் தரும் சுகம் கருதியோ? மான் என்றால் புலிகளுக்கு வேட்டையல்லவோ? அவ்வாறாகில் ஆண்கள் புலிகளோ?

எந்த மானை எந்தப் புலி வேட்டையாடினாலும் இந்த மானை நீ வேட்டையாடத் தேவையில்லை, ஏனெனில் இது உன்தன் சொந்த மான்.

இந்த மான் உன்தன் சொந்த மான்

திரைப்படம்: கரகாட்டக் காரன்
இயற்றியவர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா
பாடியோர்: இளையராஜா, சித்ரா

இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்த மான்

வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே
அன்னமே ஆ..ஆ..ஆ.
அன்னமே என்தன் சொர்ணமே உன்தன்
எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மதுக் கிண்ணமே அதில்
பொன்மணி வைரங்கள் மின்னுமே
எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண்ணென்னும் கங்கைக்குள் பேரின்பமே

இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவனே என்னுயிரே

பொன்மணி மேகலை ஆடுதே
உன்விழி தான் இடம் தேடுதே
பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே
எண்ணத்தான் ஆ.. ஆ..
எண்ணத்தான் உன்னை எண்ணித்தான்
உடன் மின்னத்தான் மேகலை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சைக் கிள்ளித்தான் என்னை
சொர்க்கத்தில் தேவனும் சோதித்தான்
மோகந்தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்

இந்த மான் உன்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
இந்த மான் என்தன் சொந்த மான் பக்கம்
வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னவனே

யாரை நம்பி நான் பொறந்தேன்

வளர் சிதை மாற்றம் என்பது இவ்வுலகில் பிறப்பெடுத்து வாழும் ஜீவன்கள் அனைத்திற்கும் இயற்கை வகுத்த நியதி. அதிலிருந்து ஒருவரும் தப்ப இயலாது. பிள்ளைப் பிராயம் முதல் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நம் உடலின் ஒவ்வொரு அங்கமும் வளர்ச்சியடைந்து, நடுத்தர வயது முதல் இறுதிக் காலம் வரை ஒவ்வொருவரது உடல் பாகங்களும் சிறிது சிறிதாகத் தேய்மானம் அடைந்து செயலிழக்கும் தன்மையைப் பெறும் மாற்றத்தையே வளர் சிதை மாற்றம் என்கிறோம். இத்தகைய மாற்றத்தை நாம் சந்திக்கும் ஒவ்வொரு முதியவரிடமும் கண்டும் நாம் மட்டும் என்றும் முதுமையடையாமல் சுகமாய் வாழ வேண்டும் எனும் நப்பாசையும் ஒவ்வொருவரிடமும் உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
தன்னைப் பெற்று சீராட்டி, பாராட்டி, வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள் வயது முதிர்ச்சியால் ஏற்படும் பலவீனங்களால் வருந்தித் துயருறும் காலத்தில் அவர்களைப் பேணிக் காத்தல் பிள்ளைகளின் தலையாய கடமையாகும். வாழ்வின் சிற்றின்பங்களில் சிக்கிப் பெற்றோரது பொருளை மட்டும் தன் சுகங்களுக்காக அனுபவித்து விட்டுப் பொருள் தீர்ந்த பின்னர் அவர்களை நிராதரவாக விடும் பிள்ளைகள் பிள்ளைகளே அல்ல. வயதான காலத்தில் உடல் நலம் குன்றித் துன்பப் படும் பெற்றோருக்குப் பிள்ளைகளே உற்ற துணை என்பது மனித குலம் வாழ ஆன்றோர் வகுத்த நீதி.

அற்ற குளத்தின் அருநீர்ப் பறவை போல்
உற்றுழித்தீர்வர் உறவல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.

என்று தமிழ் மூதாட்டி ஔவை இக்கருத்தை வலியுறுத்துகிறார்.

"மாதா பிதா குரு தெய்வம்" என்று தெய்வத்திற்கும் மேலாகப் பெற்றோரை நியமித்தனர் சான்றோர். அத்தகைய பெற்றோரைப் பேணிக் காப்போம், நம் நற்செயலைக் கண்டு நம் பிள்ளைகள் நமக்கு வயது முதிர்கையில் அவர்கள் நமக்காகச் செய்யத்தக்க கடமைகளை நிறைவேற்ற விழைவார்கள் எனும் மன நிறைவுடன் வாழ்வோம். தன் பிள்ளைகள் தன்னைக் கைவிட்டதாகக் கருதும் தந்தை ராஜா ரகுபதி வேடத்தில் நடித்துள்ள சிவாஜி கணேசன் பாடுவதாக அமைந்த இப்பாடல் பிள்ளைகளால் கைவிடப் பட்ட முதியவர்களுக்கும் மன உறுதி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

யாரை நம்பி நான் பொறந்தேன்

திரைப்படம்: எங்க ஊர் ராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்னதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்ல

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

தாய், தந்தை, சகோதரன், சகோதரி, காதலன், காதலி, குடும்பம், மனைவி, குழந்தைகள், உற்றார் உறவினர், சுற்றத்தார் என்று உலகில் நாம் அனைவரும் தொடர்ந்து சொந்த பந்தங்களில் கட்டுண்டு அதன் விளைவாகப் பல சோதனைகளையும், ஏமாற்றங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கிறோம்.
அவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் நாம் தவிக்கையில் நமக்கு ஆறுதல் கூறித் தேற்றி, நம்பிக்கையூட்டுவதையே தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்கள் ஜோதிடர்கள், நிமித்தக் காரர்கள், கோடங்கிகள் அல்லது குடுகுடுப்பாண்டிகள், பூம் பூம் மாட்டுக்காரர்கள் முதலானோர்.

இவர்களுள் ஏமாற்றுபவர்கள், அதாவது தீய பலன்களைக் கூறிப் பரிகாரமாகச் சடங்குகள் செய்யவென்று பணம் பறிப்பவர்கள் பலர் இருப்பினும், அத்தகைய ஏமாற்றுக்காரர்களைத் தவிர்த்துப் பார்க்கையில், பொதுவில் இத்தகைய பணியைச் செய்பவர்கள் கூறும் ஆறுதல் வார்த்தைகளும், நல்ல காலம் வரும் எனும் நம்பிக்கையூட்டும் செயலும் மிகவும் பாராட்டத்தக்கவை.

ஆங்கிலேயர் ஆட்சி நமது நாட்டில் நடைபெற்ற காலத்தில் ஒரு கிராமத்தில் சிறு வயதிலேயே தாயை இழந்த கள்ளங்கபடறியாக் கன்னிப்பெண் கண்ணம்மா தன் தந்தையுடன் வசித்து வருகிறாள். ஜமீன்தாரர் ஆட்சி முறை நிலவிய அக்காலத்தில் அவ்வூர் ஜமீன்தாரரின் ஓரே மகன் ராஜா அவளது அழகிலும் அடக்கத்திலும் கவரப்பட்டு அவளிடம் காதல் கொளகிறான். தான் ஊர் ஜமீன்தாரரின் மகன் என அறிந்தால் அவள் தன் காதலை ஏற்கமாட்டாள் என்பதால் தான் ஜமீன்தாரரின் பண்ணையில் பணி செய்யும் ஒரு பண்ணையாள் எனப் பொய்யுரைத்து அவளது காதலைப் பெறுகிறான்.

"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளிலே தெரியும்" எனும் கூற்றுக்கிணங்க இவர்களது காதல் விவகாரம் ஜமீன்தாரரின் காதுக்கு எட்டவே அவர் கடுங்கோபம் கொண்டு அவர்களது காதலுக்குத் தடை விதிக்கிறார். "உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை" எனும் மஹாகவியின் சொற்களுக்கேற்ப ஏமாற்றத்தால் ஊண் உறக்கம் பிடிக்காமல் மனம் பேதலித்த நிலையில் அவள் இருக்கையில் அவளது வீட்டுக்கு அலங்கரிக்கப்பட்ட தனது மாட்டுடன் வரும் ஒரு பூம்பூம் மாட்டுக்காரன் அவளது மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே படம் பிடித்தவன் போல் அவளுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைப் பாடலாகப் பாடுகிறான்.

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

நெஞ்சம் மறப்பதில்லை
கவிஞர் கண்ணதாசன்
எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
டி.எம் சௌந்தரராஜன் காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

பாடுகிற பாட்டக் கொஞ்சம் கேளடி பொண்ணே
பாடுகிற பாட்டக் கொஞ்சம் கேளடி பொண்ணே
பக்குவமா பதிலே இங்கே கூறடி பொண்ணே பொண்ணே

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

மாடப்புறாப் போலே ஒரு கன்னி வந்தாளாம்
மாப்பிள்ளைய மனசுக்குள்ளே எண்ணி வந்தாளாம்
ஆடி மாச வெள்ளம் போலே ஆடி வந்தாளம் - வந்து
ஆசையெல்லாம் கண்ணுக்குள்ளே மூடி வச்சாளாம்

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

எட்டாத தூரம் என்று ஏங்கி விட்டாளா?
ஏழையென்று வீட்டுக்குள்ளே தங்கி விட்டாளா?
தொட்டது போல் ராத்திரி வேளே கனவு கண்டாளா?
தூக்கத்திலே யாரிடமும் உளறி விட்டாளா?

ஏன் பாத்தோம் ஏன் நெனச்சோமுன்னு கவலைப் படுறாங்களா?
எப்போ பாப்போம் கப்புனு சேருவோமுன்னு நெனக்கிறீங்கிளா?
அப்போதைக்கப்போ ஆசையிலேயும் பாசத்திலேயும்
நேசத்திலேயும் விழுந்து துடிக்கிறாங்களா?
அம்மா மனசு சும்மா இருன்னு ஜமாஜமான்னு
கல்யாணம் நடக்கும்னு சொல்றியா?

கல்யாண மாப்பிள்ள பொண்ணு போகுது பாரு
காதல் தந்த கவலை எல்லாம் தீருது பாரு
பொ்ல்லாத மாமன் மனசு மாறுது பாரு
பூப்போல பெண்ணுக்கு வாழ்வு வருது பாரு

காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே
கள்ளழகர் கோயில் கொண்ட வீட்டுப் பொண்ணே
காடு மலை மேடு கண்ட மாட்டுப் பொண்ணே

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

வேதாந்தமும் சித்தாந்தமும் நாம் வாழ்வில் படும் துன்பங்களால் ஏற்படும் துயரங்களை மறந்து, இயற்கையின் ரகசியத்தை ஓரளவு உணர்ந்து, தொடர்ந்து மன அமைதியுடன் வாழத் துணைபுரிகின்றன. உண்மையாய் உழைத்து, தன் கடமைகளைச் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்து, தன்னை நம்பியவர்களைக் காப்பதில் உறுதியாக நிற்பவனுக்கு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏற்படும் இடர்களை நீக்க தெய்வம் உற்ற துணையாக நிற்கும். அவனது நண்பர்களும், உற்றார், உறவினர் முதலான யாவரும் அவனுக்கு முன்வந்துதவுவர். அவன் சமுதாயத்தில் அனைவராலும் தொடர்ந்து மதிக்கப்படுவான்.
தன் கடமைகளை மறந்து, வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குமே பிறரது தயவை எதிர்நோக்கி சோம்பேரியாக வாழும் சிலர் நாவில் இவ்வேதாந்தமும் சித்தாந்தமும் சிக்கித் தவிப்பதுண்டு. முற்றும் துறந்த ஞானியர் போல் தத்துவங்களை அள்ளி வீசுவதில் இத்தகையவர்கள் உண்மை ஞானிகளை விடவும் வல்லவர்களாக விளங்குவதுண்டு. இத்தகைய வீணர்களுக்கு தெய்வமும் உதவாது, பிறரும் அவனை மதிக்க மாட்டார்கள். தன் தவறுகளை உணர்ந்து நல்வழியில் உழைத்து வாழ அவன் முயலாதவரை அவனது வாழ்வு பெரும்பாலும் துயரமானதாகவே அமையும்.

அத்தகையதொரு கதாபத்திரத்தை இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் 1975ஆம் ஆண்டு வெளிவந்த தனது "அவள் ஒரு தொடர்கதை" படத்தில் அமைத்தார். அக்கதாபாத்திரத்தில் ஜெய்கணேஷ் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். இவர் பாடுவதாக அமைந்த ஒரு பாடலை ஜெசுதாஸ் அவர்கள் பாடியுள்ளா. வீணை பாலச்சந்தர் இயக்கத்தில் 1964ஆம் வருடம் வெளிவந்த "பொம்மை" எனும் திரைப்படத்தில் வரும் "நீயும் பொம்மை, நானும் பொம்மை" என்று பிச்சைக்காரன் ஒருவன் பாடுவதாக அமைந்த பாடலைப் பாடி தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஜேசுதாஸ் அதன் பின்னர் தமிழ்ப் படங்களில் நீண்ட காலத்துக்குப் பின்னர் தன் இசைப்பயணத்தைத் தொடர ஒரு படிக்கல்லாக அமைந்தது "தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு" எனும் அவள் ஒரு தொடர்கதை திரைப்படப் பாடல்.

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

அவள் ஒரு தொடர்கதை
கவிஞர் கண்ணதாசன்
எம்.எஸ். விஸ்வநாதன்
கே.ஜே. ஜேசுதாஸ்

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? ஆ..
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? - இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
தெய்வம் செய்த பாபம் இது போடி தங்கச்சீ
கொன்றால் பாபம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு இதில்
நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

வெறும் கோவில் இதிலென்ன அபிஷேவம் உன்
மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன - இதில்
தாயென்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதையென்ன?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது
தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன இதில்
தேனென்ன கடிக்கும் தேளென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

கின்னஸ் சாதனை புரிந்து சிகரம் தொட்டபின்னர் வெகுகாலம் தொடர்ந்து சிகரமாகவே வாழ்ந்து வரும் இசைகோர் மாமேதை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் முதன்முதலில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் புரட்சி நடிகர் மற்றும் மக்கள் திலகம் என்று அறியப்பட்டுப் பின்னர் புரட்சித்தலைவராக உயர்ந்தவருமான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களும், முன்னாள் முதல்வர் செல்வி ஜே. ஜெயலலிதா அவர்களும் இணைந்து நடித்து 1969ஆம் ஆண்டு வெளிவந்த அடிமைப் பெண் படத்தின் மூலமே தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தொலைக்காட்சிக்கு திரு எஸ்.பி. பாலசசுப்பிரமணியம் அளித்த பேட்டியில் இவ்வனுபவத்தைக் குறிப்பிடுகையில், பாடல் ஒலிப்பதிவு செய்யக் குறித்த நாளில் தனக்கு ஜூரம் வந்து பாட இயலாத நிலையில் இருந்ததாகவும், இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். தனக்காகப் பாடல் ஒலிப்பதிவு நாளைத் தள்ளி வைத்ததைக் கூறினார். தனக்காக ஒலிப் பதிவையே தள்ளி வைக்க வேண்டுமா எனத் தான் எம்.ஜி.ஆர். அவர்களிடம் கேட்டதற்கு எம்.ஜி.ஆர். கூறினாராம், "நீ எனக்காகப் பாடுவதாக உனது நண்பர்கள் அனைவரிடமும் கூறியிருப்பாய். இந்நிலையில் உனக்கென அளிக்கப் பட்ட வாய்ப்பைப் பறித்தால் நீ மிகவும் ஏமாற்றம் அடைவாய், அதனை நான் தவிர்க்க விரும்புகிறேன்" என்று பெருந்தன்மையோடு கூறியதை நினைவுகூர்ந்தார்.

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

படம்: அடிமைப் பெண்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் - பி. சுசீலா

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
என்னுயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ?

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

பொய்கை எனும் நீர்மகளும் பவாடை போர்த்திருந்தாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பவாடை போர்த்திருந்தாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்கவேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ?
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ?
அந்த நிலையில் அந்த சுகத்தை நானுணரக் காட்டாயோ?

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

காணா இன்பம் கனிந்ததேனோ

மீனா ஒரு அழகிய இளம்பெண். ஏழையாக இருந்தபோதிலும் தன்மானத்துடன் வாழ வேண்டும் எனும் கொள்கைப் பிடிப்புடையவள் அவள்.
மோகன் செல்வந்தரின் மகனாகப் பிறந்து வளர்ந்தவன். அவன் ஒரு நாடகப் பிரியன். தந்தை நிர்வகிக்கும் பொருளீட்டும் தொழிலில் அக்கரையின்றி நாடகங்கள் நடத்துவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்தான். அவன் இவ்வாறு பொறுப்பின்றி இருப்பதை மாற்ற விரும்பிய அவனது தந்தை வேற்றூரில் இருக்கும் தனது நண்பரிடம் அவனை அனுப்புகிறார்.

அந்த நண்பரிடம் செல்ல மனமில்லாத மோகன் தனது நண்பனை அவரிடம் தன் பெயரில் சென்று இருக்குமாறு அனுப்புகிறான். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மோகனை ஏழ்மையில் தள்ளுவதால் அவன் தனக்குக் கிடைத்த பணிகளைச் செய்ய முயல்கையில் அவனுக்குப் புதிதாய் அமைந்த சினேகிதனோ ஒரு திருடன். அதனால் சகவாசதோஷத்தால் திருட்டும் புரட்டும் செய்தாவது வாழ முனைகிறான்.

இந்நிலையில் மீனாவின் மேல் மோகன் காதல் கொள்கிறான். அக்காதல் உண்மைக் காதலாக மலர்ந்து அவனை நேர்வழியில் செல்லத் தூண்டுதலாக அமையவே யாரையும் ஏமாற்றாமல் உழைத்து வாழ விழைகிறான். அவனது நல்ல உள்ளத்தையும் நேர்மையையும் அறியும் மீனா அவன் மேல் காதல் கொள்கிறாள்.

இருமனம் ஒருமனமான அவர்கள் திருமணம் செய்துகொண்டு இல்வாழ்வு வாழக் கனவு காண்கின்றனர். அப்போது மேகங்கள் திரண்டு வானிலிருந்து மழை பொழிகிறது. அம்மழைச்சாரலை அவர்களது திருமண ஊர்வலத்துக்கு வானோர் பொழியும் பூமழை போலவும், மேகங்கள் ஒன்றோடொன்று மோதி உண்டாகும் இடியோசையை மேளம் போலவும், மின்னலை வாணவேடிக்கை போலவும் உணர்கின்றனர்.

காணா இன்பம் கனிந்ததேனோ

படம்: சபாஷ் மீனா
இயற்றியவர்: கு.ம. பாலசுப்பிரமணியம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: மோதி, பி.சுசீலா

காணா இன்பம் கனிந்ததேனோ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
ஆஆஅ ஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

வானம் சிந்தும் மாமழை எல்லாம்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ?
வானோர் தூவும் தேன்மலரோ?
மேகம் யாவும் பேரொலியோடு
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே

காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே

காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆஆஆஆஆஆ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆ..ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஅ, ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅஅ ஆஆஆஆஆஆஆஆஅ

காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

இறைவன் மனிதனைப் படைத்தானோ இயற்கை படைத்ததோ, எவ்வாறாயினும் இயற்கையில் மனிதர்களுக்கிடையில் வேறுபாடுகள் அடையாளத்துக்காகவே ஏற்படுகின்றனவேயல்லாது அடிப்படியில் அனைவரும் ஒன்றுபோலவே உள்ளோம்.
இவ்வுலகினில் இயற்கை வளங்கள் அனைத்தும் எல்லோருக்கும் பொதுவாகவே படைக்கப்படுகின்றன. குறுகிய மனம் கொண்ட மனிதன் பொருளின் மேல் கொண்ட பற்றின் காரணமாக அவற்றை எனது உனது என சொந்தம் கொண்டாடிப் பிரிவினையை ஏற்படுத்துகிறான்.

சாதிகளையும் மதங்களையும் ஏற்படுத்தியவன் மனிதனே, அவற்றில் உயர்வு தாழ்வு பார்க்க்கும் போக்கினை ஏற்படுத்தியவனும் மனிதனே. இதனால் ஏற்றத் தாழ்வுகள் உண்டாகிப் பிரிவினைக்கு வித்தாகித் துன்பம் விளைகிறது.

சிறிது காலமே உலகில் வாழும் பேறு பெற்ற மனிதன் அக்குறுகிய காலத்திலும் கவலைகளுடன் பிறருடன் முரண்பாட்டை வளர்த்து இன்ப வாழ்வைத் தொலைத்து, துன்பமுற்று மடிகிறான். என்னே அறியாமை!

சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு தன்னில் செழித்திடும் வையம் ஆதரவுற்றிங்கு வாழ்வோம் தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்

என்று பாடிய பாரதி தான் எழுதிய பகவத் கீதைக்கான உரையில், "மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல்" எனக் குறிப்பிட்டு, கீதை மோக்ஷ சாஸ்திரம் என்றும், இவ்வுலகிலேயே மரணமில்லாப் பெறுவாழ்வு வாழ்தல் சாத்தியம் என்னும் ரகசியத்தைக் கூறுகிறார். இதே கருத்தை ஸ்வாமி விவேகானந்தரும் தனது "ராஜயோகம்" எனும் உரையில் குறிப்பிட்டுள்ளார். மரணமில்லாப் பெருவாழ்வு வேண்டின் வேற்றுமைகளைக் களைந்து அனைவரையும் சம நோக்குடன் கருதி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுதும் பொன்னுக்கும் பொருளுக்குமே ஆசைப்பட்டுப் பிறருடன் பிணங்கி இருப்பவர்கள் மரணத்தை நோக்கியே தம் வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர்.

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

படம்: பாவ மன்னிப்பு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1961

ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்

ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் அது
வேதன் விதியென்றோதுவான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே

மனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்

ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

அமுதைப் பொழியும் நிலவே

வெண்ணிலவு கோடையில் தந்த சிறிதளவு குளிர்ச்சி போதாது, மேலும் தொடர வேண்டும். கோடையின் வெப்பத்தால் மிகவும் தாக்குண்டு களைத்துப் போன உடலும் மனமும் மேலும் புத்துணர்ச்சி பெற நிலவின் துணை அவசியம்.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறவேண்டிப் பாற்கடலைக் கடைகையில் அதற்கு மத்தாக மந்தரகிரியையும் நாணாக வாசுகி எனும் பாம்பையும் கொண்டார்கள். மத்தாகிய மலையைத் தாங்கிப் பிடிக்க திருமால் ஆமையாக அவதாரம் செய்தார் (கூர்மாவதாரம்). அவ்வாறு பாற்கடலைக் கடைகையில் திருமாலுடைய மேனி வெப்பமடையவே சிவபெருமானின் சடாமுடியில் இருக்கும் நிலவின் ஒளிக் கதிர்கள் அவர் மேல் வீசி அவரது மேனி வெப்பத்தைத் தணித்தனவாம்.

இணங்கேன் ஒருவரை; நின் இரு தாள் அன்றி எப்பொழுதும் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன்; வஞ்ச நெஞ்சர் உடன் பிணங்கேன் - அமுதம் பெருகும் செம் பாதிப் பிறை முடித்த அணங்கே! சரணம் கண்டாய், மதுராபுரி அம்பிகையே!

என்று குலசேகர பாண்டியன் அருளிய மதுராபுரி அம்பிகை மாலை

அமுதைப் பொழியும் நிலவே

பாடல்களுள் நிலவிலிருந்து அமுதம் பெருகுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய அமுதைப் பொழியும் நிலவை அருகில் அழைக்கிறாள் பருவமடைந்த நிலையில் ஆசைகள் அரும்பும் மனத்தினளான ஒரு அழகிய கன்னிப்பெண்.

அமுதைப் பொழியும் நிலவே

திரைப்படம்: தங்கமலை ரகசியம்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: க்விஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை: டி.ஜி. லிங்கப்பா ஆண்டு: 1957

அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ ஓ... அருகில் வராததேனோ ஓ...
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய் ஆ...ஆ..
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்
புதுமலர் வீணே வாடிவிடாமல்
புதுமலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற

அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா ஆ..ஆ..ஆ..ஆ..
மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா
இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே

அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

கோடை மறைந்தால் இன்பம் வரும்

பகற்பொழுதின் வெப்பத்தால் வாடி மாலை முடிந்து இரவு வருமுன்னரே வெப்பம் தணிக்கும் வழி வேண்டி மொட்டை மாடியில் படுத்துறங்கி, வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே சுட்டெரிக்கும் வெயில் பட்டு விழித்தெழுந்து. மீண்டும் அன்றாடப் பணிகளில் புழுங்கித்தவித்து. மாலை மீண்டும் வருவதெப்போதென்று வானைப் பார்த்த வண்ணமே நாளைக் கழிக்கும் கோடை காலத்தில் நமக்குச் சற்றே இதமளிப்பது வானத்தில் வரும் வெண்ணிலவு.
காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்பான அதன் தண்ணொளியில் உடலின் வெப்பம் தணிவதுடன் மனச்சோர்வும் மறைந்து புது உற்சாகம் பெருகுவது அனைவரும் அனுபவித்தறிந்த உண்மை.

என்னதான் நிலா வந்து வெயில் பட்டு வாடிய மேனியைச் சற்றே குளிர்வித்தாலும் கோடை என்று மறையும் என்று எதிர்பார்த்து ஏங்கும் மனிதர் குலத்துக்குக் கோடை மறைந்தாலே இன்பம் வரும்.

அவ்வாறு வரும் இன்பத்தை மெய்யன்பு கொண்டோரே முழுமையாக அனுபவிக்க இயலும்.

உண்மைக் காதல் கொண்ட ஆணும் பெண்ணும் ஒருவரோடொருவர் அளவளாவி ஆனந்தமடையும் காலம் கோடை மறைந்த பின் வரும் வசந்த காலமல்லவோ?

கோடை மறைந்தால் இன்பம் வரும்

திரைப்படம்: மஞ்சள் மகிமை
இசை: மாஸ்டர் வேணு
பாடியோர்: பி.சுசீலா, கண்டசாலா
ஆண்டு: 1959

கோடை மறைந்தால் இன்பம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும் - கூடி
பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்

ஓடும் தென்றல் முன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும் - இசை
பாடும் குயிலோசை தன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும்

வாசமாமலர் வாவென்றசைந்ததே
ஆசையாய் வண்டு நேசம் இசைத்ததே
பேசினால் சுகம் வருமோ தெரிந்தே
மாசிலா இன்பம் இனிமேல் நமதே

கோடை மறைந்தால் இன்பம் வரும்

பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
பளிங்கு நீர் தனில் விளங்கும் இம்மதியம்
பாவை உனதொரு முகமே உதயம்

ஓடும் தென்றல் முன்னால் வரும்

ஆனந்தம் அது எங்கே பிறந்தது?
அமைந்த ஆண் பெண் அன்பால் வளர்ந்தது
ஊனும் உயிரும் ஒன்றாய்க் கலந்தது
உண்மைக் காதல் உறவே பெரிது

கோடை மறைந்தால் இன்பம் வரும் கூடி
பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்

காளை வயசு கட்டான சைசு

சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானியரும் புத்தரோடும் ஏசுவும் புனிதராம் காந்தியும் எழுதி வைத்த எத்தனையோ உண்மைகளில் முக்கியமானது மனக்கட்டுப்பாடு. ஒருவன் கவலைகள் நீங்கி அமைதி பெற வேண்டுமெனில் முதலில் தன் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அது வாழ்வின் சுவைகளை அனுபவித்து அறிந்து தெளிந்தவர்க்கே.
ஆசை என்னும் பாசக் கயிறால் கடையப்படும் மத்தாகும் மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதிலும் குறிப்பாக காதல் கொண்ட பெண்ணின் மனம் மிகவும் பொல்லாதது. என்ன அறிவுரை சொன்னாலும் கேளாது காதலில் மூழ்கி அல்லல்படும், தன் காதலனைத் தேடி அலையும். காதலனைக் காணாவிடில் வாடித் துயருரும். காதலனைக் கண்டவிடத்தே துள்ளி ஆடும். காதல் உண்ர்வைப் போல் ஒரு பருவமடைந்த பெண்ணின் மனதை மயக்கி வாழ்வில் இன்பம் தர வல்லது வேறில்லை. தன் மனதைக் கொள்ளை கொண்ட காதலன் கள்ளம் கபடற்ற நல்ல உள்ளம் கொண்டவனாக அமையப் பெற்ற பெண் பெரும் பேரின்பம் சொல்லால் விளக்க இயலாதது. சுவைத்தாலன்றிப் புரியாதது.

அவ்வாறு காதல் வயப்பட்ட ஒரு பெண் கொஞ்சு மொழியில் பாடும் மனதை மயங்க வைக்கும் பாடல்:

காளை வயசு கட்டான சைசு

படம்: தெய்வப் பிறவி
பாடியவர்: கே. ஜமுனாராணி

அஹஹாஹாஹா ஒஹொஹோஹோஹோ
ஆஹாஆஹாஆஹாஹா ஹஹஹா

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு எங்கள்
காதல் ஒரு தினுசு

காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு காவல்
மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு காவல்
மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று

பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு

மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா

பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது

எங்களுக்கும் காலம் வரும்

எந்த ஒரு லக்ஷியத்தையும் அடைய முதற்கண் நம்பிக்கை அவசியம். "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு" என்று இவ்வுண்மையை எடுத்துரைத்த மஹாகவி பாரதி பாரத நாடு வெள்ளையர்களிடம் அடிமைப் பட்டிருந்த காலத்திலேயே
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோம்"

என்று பாடியது பாரதத்தாயை அடிமைத் தளையினின்றும் விடுவித்து சுதந்திரம் பெறுவோம் எனும் அவரது ஆழ்ந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.

"ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?"

என்று அவர் பாடியது, வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் கோரப் பிடியிலிருந்து கோடானு கோடி தேசபக்தர்கள் மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது கண் துஞ்சாது ஆங்கிலேயர்களிடம் அடி வாங்கி, அவர்களின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்றுத்தந்த சுதந்திரத்தை இழக்கும் வகையில், அரசுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குமளவுக்கு சுரண்டல் பெருகிய பின்னர் இன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ள இன்றைய காலத்தின் அவலத்தை எண்ணித்தானோ?

எது எவ்வாறாயினும் நாமெல்லோரும் ஒருங்கிணைந்து பாடுபட்டு உழைப்பதுடன் நாடு சீர்கேடான பாதையிலிருந்து விலகி முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய அவசியத்தைப் பிறருக்கும் உணர்த்தி "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே" எனும் தத்துவத்தை மனதில் கொண்டு செயல்புரிந்தால் நாடு சுபிட்சமடைவதுடன் நீதியும் நேர்மையும் நெறியோடு செல்வமும் நிலவி, நம் மனத்துயர் மாறுவது உறுதி.

நாடு சுபிட்சமடைந்து எல்லோரும் நல்வாழ்வு வாழும் அந்தப் பொன்னாளை மனக்கண்ணால் கண்டு நாமெல்லோரும் பாடி மகிழவென்றே நமக்கென்று கருத்துச் செறிவுள்ள இந்தப் பாடலைத் தந்துள்ளளாரோ கவியரசர்?

எங்களுக்கும் காலம் வரும்

படம்: பாசமலர்
இயக்கம்: ஏ. பீம்சிங்
பாடலாசிரியர்: க்விஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1961

தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா ஓ....ஓ..ஓ..ஓ..
தந்தான தானதந்தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானே தந்தா

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனன்னா

தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ ஆ..ஆ..ஆ

வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்
காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ

உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்
உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம்
பணம் படைத்த மனிதரைப் போல் பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ...ஆ..ஆ..ஆ..
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ.ஆ.ஆ.அ
தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

இயற்கையையும் மனித வாழ்வையும் இணைத்து நோக்கும் ஞானம் இயல்பாகவே அமையப் பெற்ற கவிஞர்கள் தமிழில் அனேகர் உளரென்றாலும் அவர்களுள் தலைசிறந்தவர் கவிஞர் கண்ணதாசன். தமிழை முறையாக இலக்கணத்துடன் பயிலாத பாமர மக்களும் பொருளுணர்ந்து கேட்டு மகிழும் வகையில் எண்ணிறந்த தமிழ்ப் பாடல்களைத் தந்தவர் அவர்.
காதலர் இருவர் வெண்ணிவைத் துணைக்கழைத்து இருவரும் ஒருவரோடொருவர் கொண்ட காதலை நூதனமான முறையில் வெளிப்படுத்தும் பாடலொன்று அவற்றுள் உண்டு. மனித வாழ்வில் பெரும்பங்கு வகிக்கும் பலவகையான காய்கறிகளுடன் மனித குணங்களையும் வாழ்வின் சூழ்நிலைகளையும் ஒப்பிட்டு, சிந்தனையைத் தூண்டி, சிந்தையள்ளும் தமிழ் செழுந்தேனை உண்டு விந்தையுடன் பாட விழையும் மனவண்டுகளின் பசியைத் தீர்க்கவல்ல இனிய அந்தப் பாடல் இதோ:

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

பலே பாண்டியா
விஸ்வநாதன் ராமமூர்த்தி
கவிஞர் கண்ணதாசன்
டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
இயக்கியவர்: பி.ஆர். பந்துலு
ஆண்டு 1962

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..

ஓஓஓ..ஓஓஓ..
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..

ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..

உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்

"இப்போது நாட்டை ஆள்பவர்கள் ஏமாற்றுக் காரர்கள், நல்லவர்களைப் போல் நடித்து நாட்டைக் கொள்ளையடிக்கிறார்கள். இவர்களை விரட்டிவிட்டு எங்களை ஆட்சியில் அமர்த்துங்கள். நாட்டிலுள்ள தெருக்கள் அனைத்திலும் பள்ளிக்கூடங்கள் கட்டி கல்வியறிவில்லாதவர் யாருமில்லை எனும் நிலையை உருவாக்குவோம். பொதுமக்கள் அனைவருக்கு ஆளுக்கொரு வீடு கட்டித்தருவோம், நாட்டில் தொழில்கள் பல்கிப் பெருக வகை செய்வோம். நாட்டில் உண்ண உணவில்லாது வாடுபவர் யாருமில்லாத நிலையை உருவாக்குவோம்." என்றெல்லாம் அடுக்குமொழியுடன் அலங்கார வார்த்தைகள் நிறைந்த மேடைப் பேச்சுக்கள் வாயிலாகவும், இசைநயமிக்க பாடல்கள் மூலமும் மக்களிடம் கூறி வாக்குப் பெற்று ஆள வந்தவர்கள் செய்தது என்ன?

முன்னர் ஆண்டவர்களுக்குத் தெரியாத பல புதிய ஏமாற்று வேலைகளைச் செய்து முன்னவர் லட்சங்களைக் கொள்ளையடித்த சாதனையை முறியடித்துக் கோடிகளில் புரண்டனர், புரள்கின்றனர். தெருவெங்கும் பள்ளிகள் கட்டினரா? ஆம் உள்ளேயும் வெளியேயும் சென்று வரத் தேவையான வழித்தடங்கள் இல்லாத சிறு வீடுகளிலும் தனியார் பலர் பள்ளிகளைக் கட்டி அவற்றில் சேர்பவர்களிடம் வழக்குத்துக்கு மிகவும் அதிகமான, அநியாயமான தொகையைக் கல்விக் கட்டணமாக வசூலித்ததுடன் அவ்வப்பொழுது அஜாக்கிரதையான நிர்வாகத்தினால் விளைந்த தீ விபத்துக்களுக்குப் பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளைப் பலியாக்கினர்.

ஆளுக்கொரு வீடு கட்டினரா? ஆம் அவர்களது உற்றார், உறவினர், அவர்களுக்கு நிதியளிக்கும் நபர்கள் ஆகியோருக்கு. நாட்டில் தொழில்கள் பெருகினவா? ஆம், அன்னிய நாட்டவர்களின் முதலீட்டில் தொழிற்சாலைகள் உருவாகி, உறப்பத்தியால் வரும் லாபத்தில் பெரும்பகுதி அவர்கள் கையில் போய்ச் சேர, நம் மக்களில் சிலருக்கு அங்கு கூலிக்கு வேலை கிடைக்கின்றது. நம் அரசியல்வாதிகளுக்குப் பெட்டிக் கணக்கில் பணம் கிடைக்கின்றது.

உண்ண உணவில்லாத நிலை நாட்டில் உருவாகியதா? பல இடங்களில் விவசாயிகள் எலிக்கறியை உண்டு வாழ வழி கிடைத்தது. கடன் தொல்லை தாங்காமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது போன்றவை தவிர, கையில் காசுள்ளவர்கள் யாவருக்கும் உணவு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இன்று மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்க்கவும், தங்களுக்கும் குழந்தைகளுக்கும் நோய்கள் வரும் காலத்தில் அவற்றுக்கான சிகிச்சை பெறுவதற்கும் ஊரெல்லாம் கையேந்திப் பிச்சை கேட்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்நிலை நீடித்தால் நம் வருங்கால சந்ததிகள் உலகில் வாழ முடியுமா?

நாமெல்லாம் என்ன செய்கிறோம்?

தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவமெய்திக் கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல..

வீழ்ந்து கிடக்கிறோம். நமது வயிறு நிரம்பினாற் போதும் என்று நாட்டில் நடக்கும் அநீதிகளை நீக்க எம்முயற்சியும் எடுக்காமல் வாளாவிருக்கிறோம். நாமனைவரும் சிந்தித்து இம்முறைகேடுகளை நீக்கிட எதிர்காலத்தில் மக்கள் அனைவரும் நல்வாழ்வு வாழ வழி தேடுவது மிகவும் அவசியம், அவசரம். நாம் பட்ட துன்பங்கள் நமது சந்ததியினர் படாதிருக்க உரிய நடவடிக்கை எடுப்பது நம் அனைவரது கடமை. இளைஞர்களே சிந்தியுங்கள், நாட்டைக் காக்க நல்லதொரு வழி காணுங்கள்.

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்

மலைக் கள்ளன்


டி.எம். சௌந்தரராஜன்
ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - இன்னும்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப்
பாமர மக்களை வலையினில் மாட்டி

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் - கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம் - கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம் - ஊரில்
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம் - ஊரில்
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் - அதில்
ஆன கலைகளை சீராகப் பயில்வோம் - அதில்
ஆன கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகத் திரட்டுவோம்

இன்னும் எத்தனை காலந்தான் இன்னும்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே

ஒரு குழந்தையைக் கொஞ்சி மகிழும் இன்பத்தைப் போல் மெய்மறக்கச் செய்வது இவ்வுலகில் வேறில்லை.
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடி
உச்சிதன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
கன்னத்தில் முத்தமிட்டால உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி

என்று மஹாகவி க்ண்ணனையே ஒர் பெண் குழந்தையாக பாவித்துப் பாடி மகிழ்ந்தார் எனில் மழலைச் செல்வங்கள் தரும் பேரின்பம் அனைத்திலும் பெரியது என்பதில் ஐயமும் உண்டோ?

பாவம் ராகம் தாளம் சேர்ந்த பரத கலை, இந்தப் பாரிலுள்ளோர் என்றும் என்றும் போற்றும் கலை. இதனைப் பெண்கள் ஆடிப் பார்க்கப் பேரின்பம் விளையும். அதிலும் குறிப்பாக பரதக் கலை பயின்ற ஒரு சிறுமி தமிழ்ப் பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடுவதைக் காணக் கண் கோடி போதாது.

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே

வீரபாண்டிய கட்டபொம்மன்
இயற்றியவர்: கு.மா. பாலசுப்பிரமணியம்
பாடியவ்ர்: எஸ். வரலக்ஷ்மி
இசை: ஜி. ராமநாதன்

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
மங்காத பொன்னே
மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே
மாறத இன்பங்கள் சேர்ப்பாயடி
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

வாடாத ரோஜா உன் மேனி
வாடாத ரோஜா உன் மேனி - துள்ளி
ஆடாதே வா சின்ன ராணி
பூவான பாதம் நோவாத போதும்
புண்ணாகி என் நெஞ்சம் வாடும்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே - இந்தப்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி ஆ..ஆ..
செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி எங்கள்
சிந்தை எல்லாம் இன்பமூட்டி நீ
ஆடாதே கண்ணே யாரேனும் உன்னை
கண்டாலும் ஆகாது மானே
அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே நீ
பண் பாட வாராய் செந்தேனே

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

துன்பம் நேர்கையில் யாழெடுத்து

மானுடர் மனதைக் கரைய வைக்க வல்லது இசை. இயற்கையை வசப்படுத்தி இறையருளைப் பெற்றுத் தரவல்லது இசை.
குழலிசையும் யாழிசையும் தம் மக்கள் மழலைச் சொல்லுக்கு ஈடாகாது என்று கூறினாலும் குழலும் யாழும் இனியவை எனும் கருத்துக்கு வள்ளுவர் மறுப்பேதும் சொல்லவில்லை.

இசை துன்பத்தை மறக்கடித்து இன்பம் சேர்க்க வல்லது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அதிலும் தன் மனம் கவர்ந்த எழில் மங்கையொருத்தி யாழ் மீட்டிப் பாடினால் அதனைக் கேட்கும் அந்த ஆண் மகனுக்கு உற்ற துன்பம் எதுவாகினும் அத்துன்பம் நொடியில் பறந்து விடுமன்றோ?

துன்பம் நேர்கையில் யாழெடுத்து

படம்: ஓர் இரவு
பாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா
இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா?

எப்படி எப்படி? மாட்டாயா? - ஓஹோ! - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - ஓஹோ! - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம்

அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே அல்லல்

ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம்
கண்ணே கண்ணே, சரி தானா கண்ணே?
கண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன்
இது இல்லை, பாடு, கண்ணே சரிதானா என்று கேட்டேன்

பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? - கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?

அறமிகுந்தும் யாம் மறமிகுந்துமே
அருகிலாத போதும் - யாம்
அருகிலாத போதும் - தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? - கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு

குழந்தைகளுக்கு எளிதில் உறக்கம் வரவழைப்பது தாலாட்டு. தாலாட்டு குழந்தைகளுக்கு மட்டுமே சொந்தமா, வயதில் மூத்தவர்களுக்கு இல்லையா? யார் சொன்னது?
பருவக் குமரியாயினும் குழந்தை உள்ளம் படைத்த பெண்ணவள் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு செல்வந்தனின் அடக்குமுறை காரணமாக அவனது ஆளுமையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் எளிதில் உறக்கம் வராமல் தவித்தாள். அவளது அழகையும் குழந்தை மனதையும் ஆராதிக்கும் இளைஞன் ஒருவன் அவளது மனம் குளிரப் பாடுகிறான்.

ஊஞ்சலில் அமர்ந்து ஆடியவாறு அவனது பாடலைக் கேட்டு மகிழும் அப்பெண் சற்று நேரம் கழித்து அவனது இசையின் மகிமையால் தன்னை மறந்து, தன் துன்பங்களையும் மறந்து அமைதியான உறக்கத்தில் ஆழ்கிறாள்.

இனிமையான இந்தப் பாடல் அவளை மட்டுமல்ல, கேட்கும் யாரையும் அமைதிப் படுத்தி உறங்க வைக்க வல்லது.

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு

கிழக்கு வாசல் 1990
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்
நிலவே வான் நிலவே நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு

பூநாத்து மொகம் பாத்து வெண்ணிலா நாண
தாளாம தடம் பாத்து வந்த வழி போக
பூநாத்து மொகம் பாத்து வெண்ணிலா நாண
தாளாம தடம் பாத்து வந்த வழி போக
சித்திரத்துச் சோலே முத்து மணி மாலே
மொத்தத்தில தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணுலே மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்

பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னு மணி சிரிச்சா வெள்ளி மணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப் பூவு நீ உச்சி மலத் தேனு
குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு

எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்?

1953ஆம் ஆண்டு பிறந்த என் 11ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப் படிப்புக்காக வருடத்தில் 10 ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகியது. என் கடைசி சகோதரி என் தாயாருக்கு அரசு மருத்துவ மனையில் 1962ஆம் ஆண்டு பிறந்தபோது அவருக்கு சிறப்பான சிகிச்சை மற்றும் தங்கும் வசதி இலவசமாக அளிக்கப் பட்டது.
1976ஆம் ஆண்டு முடிதத B.E. பொறியியல் பட்டப் படிப்புக்காக வருடத்திற்கு 360 ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகியது. தவிர அரசு மருத்துவ மனைகளும் சிறப்பாக இயங்கியதுடன் தனியார் மருத்துவ மனைகளிலும் சிகிச்சைக் கட்டணம் குறைவாகவே இருந்தது. தாயாருக்கு அரசு மருத்துவ மனையில் 1962ஆம் ஆண்டு பிறந்தபோது அவருக்கு சிறப்பான சிகிச்சை மற்றும் தங்கும் வசதி இலவசமாக அளிக்கப் பட்டது.

அதன் பின்னர் நாட்டில் ஆள வந்த அரசுகள் கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு விற்றதனால் வந்த விளைவு இன்று பள்ளிக்குள் எல்.கே.ஜி. வகுப்புக்குள் நுழையவே ஒரு குழ்ந்தைக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் தேவைப்படுகின்றன. பட்டப் படிப்பு படிக்க வேண்டுமெனில் லட்சக் கணக்கில் செலவழிக்க வேண்டியுள்ளது. ஒருவன் நோயுற்று அரசு மருத்துவ மனைகளை சிகிச்சைக்காக அணுகினால் அவன் உயிருடன் திரும்புவது சந்தேகமே. தனியார் மருத்துவ மனைகளை அணுகினாலோ அவன் அது நாள் வரை சேமித்து வைத்த பணம் அனைத்தும் காலியாவதுடன் மருத்துவச் செலவுக்காக வாங்கும் கடனுக்காக ஆயுள் முழுவ்தும் உழைத்துச் சேர்த்தாலும் திருப்பி அடைக்க முடியாத அளவுக்கு அவன் சுமை வலுக்கிறது.

இவ்வாறிருக்கையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெறும் என் நண்பன் ஒருவனுக்கு உதவ எனக்குப் பணம் தேவை.

எங்கே தேடுவேன் பணமதை?

எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்?

படம்: பணம்
நடிகர்கள்: சிவாஜி கணேசன், பத்மினி, என்.எஸ். கிருஷ்ணன்
பாடியவர்: என்.எஸ். கிருஷ்ணன்

எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?

கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை

எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்?

பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?

எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?

திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை

எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்?

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ?

எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணமே பணமே பணமே

நீயே கதி ஈஸ்வரி

தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
போன்ற பழமொழிகளைச் சொல்லி அதன் மூலம் நன்மையையே செய்யப் பணிக்கின்றனர் நம் முன்னோர்களும் ஆசிரியப் பெருமக்களும். ஆனால் உலகில் அனுதினமும் நல்ல மனம் கொண்டோர் வறுமையாலும், பலவித நோய்களாலும், இன்னும் இத்தகைய துன்பங்களை அனுபவித்து வாடுகையில், தினம் பொய்யைச் சொல்லித் தீமையையே எந்நாளும் செய்து வரும் பலருக்கு சுகபோக வாழ்வு அமைவது கண்டு சாமான்யர்கள் மனம் வாடுகையில் அவர்களுக்கு ஒரே ஆதரவு ஆண்டவனைத் தொழுவ்துவே ஆகும்.

நம் சக்திக்கு மீறித் துன்பம் நம்மைத் தாக்குகையில் அத்தகைய துன்பத்திலிருந்து காக்க இறையருள் தவிர வேறில்லை என்பது அனைவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய கருத்தே. அவ்வாறு இறையருள் இருந்தும் சமய சந்தர்ப்பங்களுக்கேற்றவாறு நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் ஆகியோரின் உதவியை நாடுவதும் அவசியமாகும்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

எனும் கருத்துக்கிணங்க ஒருவன் நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கையில் அவன் தானாக முன்வந்து பிறரது உதவியை நாணத்தினால் நாடாதிருப்பினும் அவனது நண்பர்கள் அவனது சார்பில் அத்தகைய உதவிகளைப் பெற்றுத் தந்து காத்தால் கண்கூடு.

நீயே கதி ஈஸ்வரி

பாடியவர்: பி. லீலா
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
திரைப்படம்: அன்னையின் ஆணை

நீயே கதி ஈஸ்வரி
நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி - எனக்கு
நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி - எனக்கு
நீயே கதி ஈஸ்வரி

மாயா உலகிலே ஓயாத துயராலே
மாயா உலகிலே ஓயாத துயராலே
மாயா உலகிலே ஓயாத துயராலே
வாடாமலே ஒரு வழிகாட்டவே எனக்கு
நீயே கதி ஈஸ்வரி
வாடாமலே ஒரு வழிகாட்டவே எனக்கு
நீயே கதி ஈஸ்வரி

ஆவியே அமுதே ஆகமப் பொருளே
ஆவியே அமுதே ஆகமப் பொருளே
அன்புடன் தாராயோ உன் திருவருளே
அன்புடன் தாராயோ உன் திருவருளே
ஆவதும் அழிவதும் யாவும் உன்னாலே
ஆவதும் அழிவதும் யாவும் உன்னாலே
அன்னையே பாராயோ என்னையும் கண்ணாலே
அன்னையே பாராயோ என்னையும் கண்ணாலே
தீயவர் வாழவும் நல்லவர் தாழவும்
தீயவர் வாழவும் நல்லவர் தாழவும்
செய்வதேனோ இது தர்மம் தானோ? அம்பா

நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி - எனக்கு
நீயே கதி ஈஸ்வரி