புதன், 22 ஜூன், 2011

இந்திய நாடு என் வீடு

நமது நாட்டில் மக்களிடையே ஒற்றுமை குலைந்து கலவரங்கள் ஏற்படுவதற்குப் பெரும்பாலும் சாதி மத பேத உணர்வேயாகும். இதன் காரணம் அரசியல்வாதிகள் மக்களிடையே ஒற்றுமை நிலவாமல் பார்த்துக் கொள்ள சாதி மதக் கலவரத்தை அவ்வப்பொழுது தூண்டுவதேயாகும். இந்தியாவில் இந்து முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தோரிடையே கலவரம் ஏற்பட்டதாலேயே இந்தியா இரண்டாக உடைந்து பாகிஸ்தான் உருவானது. இதற்குப் பெரும்பாலும் ஆங்கிலேயன் சூழ்ச்சியால் தூண்டிவிடப்பட்ட மத பேத உணர்வே. பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்து சென்ற பின்னரும் இந்தியாவின் பல பகுதிகளில் அவ்வப்பொழுது இத்தகைய இந்து முஸ்லிம் மதக்கலவரங்கள் உருவாகிக் கொண்டிருப்பதன் காரணம் சுதந்திர இந்தியாவில் மத்திய மாநில அரசியலில் ஈடுபடும் சில அரசியல்வாதிகளேயாவர்.

சத்தியமும் அஹிம்சையும் மத நல்லிணக்கமும் நிலைபெறத் தன் வாழ்நாளில் அரும்பாடு பட்ட அண்ணல் மஹாத்மா காந்தியடிகள் பிறந்த புண்ய பூமியான குஜராத் மாநிலத்தில் இத்தகைய மதக் கலவரங்கள் உருவாக அரசியல்வாதிகளே காரணம் என்பதற்குக் கண்கூடான சான்றுகள் உள.

January 28, 2001 அன்று குஜராத்தின் பூஜ் எனும் இடத்தில் மையம் கொண்டு பெருநாசத்தை விளைவித்த மாபெரும் பூகம்பத்தில் மாட மாளிகைகள் பலவும் நொடிப்பொழுதில் மண்மேடாயின பல்லாயிரக் கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி மடிந்தனர். அச்சமயம் இடிபாடுகளில் சிக்கித்தவித்தவரைக் காப்பதிலும் அவ்வாறு காப்பாற்றப் பட்டு வீடுகளையும் உற்றார் உறவினர்களையும் இழந்து அநாதைகளாக நின்ற பலரை எஞ்சியிருந்தவர்கள் தம் சக்தியெல்லாம் செலவழித்துக் காக்கப் பெரிதும் உதவினர். சில காலத்துக்கு முன்பு வரை அடிக்கொரு முறை இந்து முஸ்லிம் கலவரம் ஏற்படுவது வழக்கமாயிருந்த குஜராத் மாநிலத்தில் இந்த பூகம்பத்தின் பின்னர் உலகே கண்டு அதிசயிக்கும் அளவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை நிலவியது.

http://www.peopleofindia.net/politics/video/20100821_gujarat-earthquake.php

இது அங்குள்ள அரசியல்வாதிகளின் கண்களை உறுத்தியது போலும். இவ்வொற்றுமையைக் குலைக்கத் தக்க சமயம் பார்த்துக் காத்திருந்த புல்லுருவிகள் சிலர் ராம் ஜென்ம பூமி பூஜைக்காக அயோத்யாவிற்குச் சென்ற ஹிந்துக்கள் பலர் ஒன்று சேர்ந்து 27 February 2002 அன்று திரும்பி வந்து கொண்டிருக்கையில் அவர்கள் பயணம் செய்த சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் வண்டிக்கு கோத்ரா எனுமிடத்தில் வெடிகுண்டு வைத்துத் தீ வைத்தனர்.

http://www.peopleofindia.net/politics/video/20100821_gothra-train.php

இந்த சம்பவத்துக்கு முஸ்லிம்களே காரணம் என்று புரளிகளைக் கிளப்பிய அரசியல்வாதிகள் இதன் விளைவாக உ;லகமே அஞ்சி நடுங்கும் வண்ணம் அரங்கேறிய படுகொலை சம்பவங்கள் ஏற்படக் காரணமாயினர்.

http://www.peopleofindia.net/politics/video/20100821_gujarat-riots.php

அரசியல்வாதிகளும் சமூக விரோதிகளும் எவ்வளவு சதி செய்த போதிலும் இந்திய தேசத்திலே மக்கள் பெரும்பாலும் தங்களுக்குள் சாதி மத பேதங்கள் பாராட்டாமல் ஒற்றுமையுடன் வாழப் பழகியுள்ளனர். இத்தகைய சாதி மத ஒற்றுமை நாட்டில் நிலவ நம் நாட்டில் திரையுலகினர் அவ்வப்பொழுது வெளியிடும் திரைப்படங்களின் பங்கு மிகவும் பாராட்டுக்குரியது.

சாதி மதங்களைப் பாரோம் உயர்
ஜன்மமித் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே அன்றி
வேறு குலத்தவராயினும் ஒன்றே

இந்திய நாடு என் வீடு

திரைப்படம்: பாரத விலாஸ்
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, ஏ.எல். ராகவன்

இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
திசை தொழும் துருக்கர் என் தோழர்

திசை தொழும் துருக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்

எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்

கங்கை பாயும் வங்கம் செந்நெல்
கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்

ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம் எங்கள்
அன்னை பூமி பாரதம்

இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்

இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
சுந்தரத் தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்புடி நடனங்கள் ஆடுங்கோ

சல் மோகனரங்கா பாடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ

ஸ்ரீசைலம் திருப்பதி ஷேத்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகப் பட்டினம்
கடற்கரை உண்டு பாருங்கோ

சல் மோகனரங்கா பாடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ

ஏனு ஸ்வாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
காவிரி பிரிந்த கன்னட நாட்டை
யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு ஸ்வாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு

ப்ருந்தாவனமும் சாமுண்டி கோவிலும்
நோடு ஸ்வாமி நீ நோடு
நீ நோடு மைசூரு
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு

ஏனு ஸ்வாமி
ஏனு ஸ்வாமி இல்லி நோடு மைசூரு

படச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
ஞானும் இவளும் ஜனனமெடுத்தது
கேரளம் திருச்சூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவ்விட பாக்கணும் நீங்க
தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க

படைச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
அல்லாஹூ அல்லா அல்லாஹூ அல்லா

சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப்வாலா கீத்து சுனோ
பஞ்சாப்வாலா கீத்து சுனோ
தங்கக் கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ

ஜீலம் ஷட்லஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ உம் ஆஹா அவோ ஆவோ

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்னாடு
பகத்சிங் பிறந்த பொன்னாடு
யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
யாஹூங் யாஹூங்

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
வாழை வழியாக வந்து
பேசிப் பழகும் கிள்ளைகள்

சத்தியம் எங்கள் தேசம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதைப் பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்