வெள்ளி, 23 ஏப்ரல், 2010

சிந்து நதியின் மிசை நிலவினிலே

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான நமது நாட்டின் சுதந்திரம் வந்த பொழுது அது முழுமையான சுதந்திரமாக இருக்கவில்லை. நாடு மதக் கலவரத்தால் துண்டாடப் பட்டு பாகிஸ்தான் தனி நாடாக உருவானதன் விளைவாக இந்தியா எனும் பெயர் நாட்டுக்கு ஏற்படக் காரணமாயிருக்கும் சிந்து நதியும் அதனைச் சார்ந்த பகுதிகளும் பாகிஸ்தான் வசம் போய் விட்டன. அது போகட்டும், எஞ்சிய பகுதிகளாவது இந்தியாவிடம் முழுமையாகத் தங்கினவா எனில் இல்லை. இந்திய சீன யுத்தத்தின் விளைவாக திபெத் பகுதியும் அதனையொட்டிய கைலாஷ் மலைப் பகுதியும் சீனாவின் வசம் சென்றுவிட்டன. அதன் பின்னர் வெகு விரைவிலேயே காஷ்மீர் மாநிலத்தின் பெரும் பகுதி பாகிஸ்தான் வசம் போய் விட்டது.

இது போததென்று மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாகாணங்களுக்கிடையே தலைநகரைப் பகிர்ந்து கொள்வதிலும் ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதிலும் எனத் தொடர்ந்து ஜீவ மரணம் போராட்டங்கள் ஏற்பட்டு நாடு அமைதியை இழந்து இன்று இருக்கும் மாநிலங்களில் பல மேலு்ம் சிறு துண்டுகளாக உடையும் நிலை உருவாகி உள்ளது. இந்திய ஒருமைப் பாட்டுக்காகத் தன்னலம் கருதாது பாடுபடுவதாகப் பொய் சொல்லி ஆட்சிக்கு வரும் யாவரும் தாம் தந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டுத் தங்கள் சுயநலத்தையே பெரிதும் பேணி வருகின்றனர். நாடு எங்கே போகிறதென்று நாமும் உணராமல் அடுத்த வேளை உணவைப் பற்றியும் தொலைக்காட்சித் தொடர்கள் பற்றியுமே எண்ணி மயங்கிக் கிடக்கிறோம்.

தேசிய ஒருமைப்பாடு குறித்து பாரதி கண்ட கனவு பகற்கனவாகாவே ஆகிவிட்டது. அக்கனவை நனவாக்க இனியாகிலும் நாம் பாடு படுவோமாகில் நாம் பிறந்த பொன்னாடு வளம் பெரும்.

சிந்து நதியின் மிசை நிலவினிலே

திரைப்படம்: கைகொடுத்த தெய்வம்
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
மமதாவேசம் மாயனி மது பாசம்
மமதாவேசம் மாயனி மது பாசம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்

நீ கங்கண ராகம் ஆஆஆஆஆஆ நீமதி அனுராகம் ஆஆஆஆஆஆ
மனயீ வைபோகம் ஆஆஆஆஆஆ பகுஜன் மனயோகம் ஆஆஆஆஆஆ
வலபுல உல்லாசம் ஆஆஆஆஆஆ நரபுல தரஹாசம் ஆஆஆஆஆஆ
வதரின அவகாசம் ஆஆஆஆ தனிகுரு ஆதேசம்
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ம்ஹ்ம்ம்ஹ்ம்

சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

1 கருத்து:

  1. சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்.
    தமிழனை ஒரு மனிதனாக கருதவில்லையா பாரதி? என்னே ஒரு தொலை நோக்கு பார்வை பாரதிக்கு .

    பதிலளிநீக்கு