வெள்ளி, 8 ஜூலை, 2011

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ?

உலகில் எத்தனையோ ஜீவராசிகள் பிறந்து வாழ்ந்து மடிந்து மறைந்து மீண்டும் பிறந்து இவ்வாறாக உலகம் சுழல்கின்றது. இவை அனைத்திலும் உயர்ந்தது மானிடப் பிறவி. இத்தகைய கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை அடைந்த நாம் ஒவ்வொருவரும் பாக்கியசாலிகள். இப்பிறவியில் பலர் பொருள் தேடுவதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்நாள் முழுவதையும் வீணே கழித்து இருந்த இடம் தெரியாமல் மறைகின்றனர். ஏதோ ஒரு சிலர் இவர்களுக்கிடையே மானிடப் பிறவியின் மகத்துவத்தை உணர்ந்து மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் உயர்ந்த கொள்கையுடன் வாழ்ந்து உலகுய்யப் பாடுபட்டு இறந்த பின்னரும் அனைவர் மனதிலும் என்றும் அழியா தெய்வங்களாக வாழ்கின்றனர்.

நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு வாழ்கிறோம் என்பது அவரவர் விருப்பம். பிற உயிர்களுக்கு ஒருநாளும் எவ்விதத் தீங்கும் இழைக்காமல், புலால் உண்ணாமல் உலக நலனுக்காகவும் சமுதாய சீரமைப்புக்காகவும் பாடுபட்டு உலகில் நல்வாழ்வு வாழ்வது சிறந்தது. உண்மையும் அன்புமே ஒருவரை தெய்வநிலைக்கு உயர்த்த வல்லவை. பிறப்பு, இறப்பு, மீண்டும் பிறப்பு எனும் தளைக்குள் கட்டுப்பட்டு வாழ்தல் என்றும் சிற்றின்பம் தேடும் ஜீவன்களுக்கு விதிக்கப்பட்ட நிலையாகும். இத்தளையிலிருந்து மீண்டு என்றும் மரணமில்லாது மார்க்கண்டேய வாழ்வு வாழ ஒவ்வொரு மனிதனும் விரும்புவதுண்டு. அவ்வாறான உயர்ந்த நிலையை அடையத் தவம் செய்ய வேண்டும். தவமாவது யாதெனில் ஐம்புலன்களையும் அடக்கி நம்முள்ளே உறைந்து கிடக்கும் மாபெரும் சக்தியை வெளிக்கொணர்தல். இத்தகைய தவநெறியில் செல்ல ஞானியர் பலர் உரிய வழிகளைக் காட்டியுள்ளனர்.

அரிதரிது மானிடலாதலரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தலரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறப்பினும்
ஞானமுங்கல்வியும் நயத்தலரிது
ஞானமுங்கல்வியும் நயந்த காலையும்
தானமுந்தவமுந்தான் செய்தலரிது
தானமுந்தவமுந்தான் செய்திருந்தக்கால்
வானவர் நாடு வழி திறந்திடுமே

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/rajamukthi/maanida-jenmam.php
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ?

திரைப்படம்: ராஜமுக்தி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: சி.ஆர். சுபராமன், எஸ்.எம். சுப்பைய்யா நாயுடு
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1948

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ? உலகீர் - உயர்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ? உலகீர் - உயர்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ? ஓ....

ஞான வைராக்யம்
ஞான வைராக்யம் தவம் ஜீவகாருண்யம் - உண்மை
ஞான வைராக்யம் தவம் ஜீவகாருண்யம் - உண்மை
ஞான பக்தி பகுத்தறிவுடன் இகபர சுகம் தரும் கருணையாம்

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர்.......

கருவறையினுள் கிடந்து வெளியில் வரும் துயர் நினைந்தாலும்
கருவறையினுள் கிடந்து வெளியில் வரும் துயர் நினைந்தாலும் - குடல்
கலங்குதே இங்கெதிரில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே
கலங்குதே இங்கெதிரில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே
இருவினை வசமாம் இவ் உடலொரு நீர்க்குமிழி
இருவினை வசமாம் இவ் உடலொரு நீர்க்குமிழி
இதனிடை உயர் நெறியடைய மெய் இறைவனருளின் வேட்கை
இதனிடை உயர் நெறியடைய மெய் இறைவனருளின் வேட்கை
உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே
உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே
கடிமதில் பண்டரிபுரமதை ஒருமுறை கண்டுபணிந்து
ப்ரபோ பாண்டுரங்க ஜெய விட்டல என்று பணிந்திட

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் - உயர்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ? ஓ...

திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி

பாரத சமுதாயத்தில் பெண்களின் பங்கு மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுவது நாமனைவரும் அறிந்ததே. ஒரு பெண் பருவமடைந்து திருமணத்திற்கு ஏற்ற வயதை அடையும் வரையில் அவள் தனது தாய் தந்தையர் மற்றும் சகோதர சகோதரிகளுடன் தன் பெரும்பாலான காலத்தைக் கழித்த பின்னர் மணமானதும் மணமகனின் வீட்டுக்கு மருமகளாகச் செல்கிறாள். தான் பிறந்த வீட்டில் அவளுக்குக் கிடைத்த பாசப்பிணைப்பும் ஆதரவும் அவள் புகுந்த வீட்டிலும் கிடைக்கப்பெற்றாலே அவளது வாழ்வும் அத்துடன் பிறந்த புகுந்த வீடுகளிலுள்ள பிறரது வாழ்வும் வளம் பெறும்.

அத்தகைய நிலையை அடைய உரிய முயற்சிகள் மேற்கொண்டு வாழ்வை லட்சியப் பாதையில் அமைத்துக் கொள்வது முதற்கண் அப்பெண்ணின் கடமையாகும். அவ்வாறு வாழ்ந்து அவள் புகுந்த வீட்டிலுள்ள அனைவரின் அன்பையும் பெறுவாளாயின் வாழ்வில் அவள் ஸ்வர்கத்தைக் காண்பது உறுதி. திருமண நாளன்று கூடியிருக்கும் மூத்த உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது ஆசியை அப்பெண் பெறுவதுடன் தன் உடன் பிறந்தோரின் ஆசியும் தனக்குக் கிடைக்க வேண்டுமென மிகவும் விரும்புவது இயல்பு.

இங்கே திருமணம் செய்துகொள்ளும் ஒரு பெண்ணின் அண்ணன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சட்டத்தின் முன்னர் குற்றவாளியாகக் கருதப்பட்டு, தன்னை நிரபராதி என நிரூபிக்கும் முயற்சியில் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஒரு சாமியார் போன்று மாறுவேடத்தில் உலாவும் நிலையில் அம்மாறு வேடம் பூண்ட கோலத்துடனேயே தன் தங்கையின் திருமண மண்டபத்துக்கு வந்து மண்டபத்தின் வாயிலில் நின்று, திருமணம் முடிந்த சமயம் தன் சகோதரியை வாழ்த்திப் பாடுகிறான். தன் தங்கைக்காகத் தன் உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் பாசத்தையும் பரிவையும் மடை திறந்த வெள்ளமாய்ப் பொழிகிறான்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/idhaya-veenai/thirunirai-chelvi.php
திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி

திரைப்படம்: இதயவீணை
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இன்றுபோல என்றும் வாழ்க!
எங்கள் வீட்டுப் பொன்மகளே வாழைக்
கன்றுபோலத் தலைவன் பக்கம்
நின்றிருக்கும் குலமகளே!

திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக - என்
இருவிழிபோலே இருவரும் இங்கு
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக

மஞ்சள் குங்குமம் மலர் சூடி
மணமகள் மேடையில் அங்கிருக்க
நெஞ்சம் நிறைய வாழ்த்துக்கள் ஏந்தி
நல்லவன் ஒருவன் இங்கிருக்க
ஆயிரம் காலம் நாயகன் கூட
வாழ்ந்திடு மகளே வளமாக
ஆனந்தததாலே கண்ணீர் பொங்கும்
ஏழையின் கண்கள் குளமாக

திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக
திருமணம் கொண்டாள் இனிதாக

எங்கள் வானத்து வெண்ணிலவாம் - இவள்
இன்னொரு வீட்டுக்கு விளக்கானாள்
எங்கள் குலம்வளர் கண்மணியாம் - இவள்
இன்னொரு குடும்பத்தின் கண்ணானாள்
தாய்வழி வந்த நாணமும் மானமும்
தன்வழி கொண்டு நடப்பவளாம்
கோயிலில் இல்லை கும்பிடும் தெய்வம்
கொண்டவன் என்றே நினைப்பவளாம்

ஒருவரை ஒருவர் அன்புகொண்டு - வரும்
சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு
இருவரும் ஒருவரில் பாதியென்று - இங்கு
இன்புற வாழட்டும் பல்லாண்டு
குறள்வழி காணும் அறம் பொருள் இன்பம்
குறைவின்றி நாளும் வளர்ந்திடுக!
தென்னவர் போற்றும் பண்புகள் யாவும்
கண்ணெனப் போற்றி வாழ்ந்திடுக!

திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி
திருமணம் கொண்டாள் இனிதாக - என்
இருவிழிபோலே இருவரும் இங்கு
இல்லறம் காணட்டும் நலமாக
இல்லறம் காணட்டும் நலமாக

முத்து நகையே உன்னை நானறிவேன்

உலகில் உயிர்கள் அனைத்திற்கும் மிகவும் உயர்ந்த செல்வம் பிள்ளைச் செல்வமே. வாழ்வில் ஒருவர் எத்தனை வசதிகள் நிரம்பப் பெற்றவராக இருந்தாலும், செல்வச் சீமானாக இருந்தாலும் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லாவிடில் ஏனைய அனைத்தாலும் பயனில்லை. நல்ல பிள்ளைகள் பிறப்பதற்கு ஒருவர் பூர்வ ஜன்மத்தில் தவம் செய்திருக்க வேண்டும் என்று ஆன்றோர் கூறியதுண்டு.

நல்ல பிள்ளைகள் பிறந்த போதும் அவர்கள் ஆரோக்யமாக வளர்ந்து நல்வாழ்வு வாழ வழிவகுப்பது ஒவ்வொரு பெற்றோரது கடமையாகும். நாகரீகம் வளர வளர மக்களின் உணவுப் பழக்கம் மாறுவதோடு சுற்றுப்புற சூழல் மாசுபடுவதும் தொடர்ந்து நிகழ்வதால் நோய்கள் எளிதில் பரவக்கூடிய சூழ்நிலை உலகில் நிலவுவது யாரும் மறுக்க முடியாத உண்மை. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளை அவர்கள் பிறந்தது முதலே கவனமாகவும் ஆரோக்கியம் கெடாமலும் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். குழந்தகளுக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களில் இளம்பிள்ளை வாதம் என அறியப்படும் போலியோ நோய் மிகவும் கொடிதாகும்.

http://www.indg.in/health/diseases/baabb2bbfbaf-b87bb3baebcdbaabbfbb3bcdbb3bc8-bb5bbeba4baebcd

இவ்வாறு இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலர் கால்கள் செயலிழந்து வருந்தும் நிலை உள்ளது. இதற்கு ஒரு உபகரணம் வலுவிழந்த கால்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்படுத்த மருத்துவர்கள் அளிக்கும் கம்பிகளால் ஆன ஒரு உறை போன்ற கருவியாகும்.

தான் பெற்ற அழகுமிக்க ஓரே மகள் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டதால் மனம் நொந்து வாடும் ஒரு தகப்பன் தன் மகளின் அங்கள் ஒவ்வொன்றின் அழகையும் வர்ணித்து மகிழுகையில் அவளது கால்கள் தொடர்பாக எண்ணுகையில் தன்னையும் மீறி எழும் துக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு இனிய பாடல் இன்றைய பாடலாக மலர்கிறது.

முத்து நகையே உன்னை நானறிவேன்

திரைப்படம்: என் தம்பி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1968

முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ
முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ

நிலவும் வானும் நிலமும் நீரும்
ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ?
நீயும் நானும் காணும் உறவு
நெஞ்சை விட்டுச் செல்ல எண்ணுமோ?

முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா

தென்மதுரை மீனாள் தேன் கொடுத்தாள்
சித்திரத்தைப் போலே சீர் கொடுத்தாள்

என் மனதில் ஆட இடம் கொடுத்தாள்
இது தான் சுகமென வரம் கொடுத்தாள்

முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ

கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு
கையழகு பார்த்தால் பூ எதறகு
கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு
கையழகு பார்த்தால் பூ எதறகு
காலழகு பார்த்தால்
காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதெற்கு
காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதெற்கு

முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ

கிரிதர கோபாலா

17 செப்டம்பர் 2010 - இன்று எல்லோர் இதய்ததில் என்றும் ஒலித்துககொண்டிருக்கும் திருமதி எம் எஸ் சுப்பலக்ஷ்மி அவர்களது பிறந்த நாள் என்று சற்று முன் தான் இந்த் மறதிககார சீனுவாசனுக்கு நினைவிற்கு வந்தது என்னையே நொந்து கொண்டு இந்த 20ம் நூற்றாண்டு மீரா அம்மைக்கு நான் அனுப்பிய் கடைசி பிறந்த நாள் (அதே வருடம்- டிசம்பர் 11ம் தேதி மறைந்து விட்டார் வாழ்த்துக்களை கண்களில் நீர் மலக (சத்தியமாகச் சொல்கிறேன்) இத்துடன் அனுப்புகிறேன்

சீனு தாத்தா

இன்று திருப்பதி சானலிலும் மாலை இவரது முழு சரித்தரமும் காண்பித்து மரியாச் செலுத்தினர் ஆரம்பமே "கௌசல்யா சுப்ரஜா ராமா "என்று திருமலையைக் காட்டினார்கள் என்றும் அவருடைய இசை பசுமையாக இருக்கும்.

இணையப் பாட்டி விசாலம்

டிடிடி (TTD) சானல் எம் எஸ்ஸைப பற்றி அளித்த காட்சியைப் ப்ற்றி அறிவித்த எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திருமதி விசாலத்திற்கு மிகப் பணிவுடன் கூற ண்டுகிறேன். பொதுவாக அரசியல் வம்பு பேச் விருப்பமேயில்லாத எனது உள்ளக்கிடக்கையை கூறாமல் இருக்க
முடியவில்லை. கடவுளீன் பரிபூரண அருளுடன் இருந்து எல்லோரையும் தெய்வீக இசையினால் இன்புறவைத்து கொண்டே வாழ்ந்து இறைவனடி சேர்ந்த அந்த மாபெரும் அம்மணியார் பிறந்த தமிழ்நாட்டு அரசாங்கம் அவருக்குத் தெலுகு தேசத்திலுள்ள் திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய கௌரவத்தில் பாதியாவாது கொடுத்ததா?

ஆமாம், திருமதி விசாலம் அம்மையாரே, கடு முயற்சியால் உருவாக்கப் பட்ட எனது வாழ்த்துக்களைப் பார்த்து விட்டு "நன்றாயிருக்கிறது" என்று ஒரெ ஒரு சொல்லை வெளிப்படுத்தியிருந்தால், முதிர்ந்த வயதிலும் புகழ்ச்சிக்காக் ஏங்கிக் கொண்டிருக்கும் எனக்கு மகிழ்ச்சியாயிருந்திருக்கும்!

சீனு தாத்தா

திருமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் திருப்பதி வெங்கேடாசலபதி மேல் பாடிய சுப்ரபாதம் நமது பாரதத் திருநாட்டில் ஒலிக்காத வீடே இல்லை எனலாம். இசைக்கச்சேரி மேடைகளில் மட்டுமின்றிப் பல மாபெரும் தேசத்தலைவர்கள் பங்குபெற்ற கூட்டங்களிலும் முதலில் இவர் பாடும் இறைவணக்கப் பாடல் இடம்பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று. கணீரென்ற இனிமையான மனதை மயக்கும் குரல். ஒரு சிறிதும் சுருதி பிசகாத இசை லயம், தேர்ந்த உன்னத இசை ஞானம் ஆகியவை இவரைப் பிற அனைத்துப் பாடகர்களிலிருந்தும் மிகவும் உயர்ந்த நிலையில் அவரது வாழ்நாள் உள்ளளவும் நிறுத்தி வைத்தது.

ஆகிரா
http://www.mazhalaigal.com

கிரிதர கோபாலா

திரைப்படம்: மீரா
இயற்றியவர்: பாபநாசம் சிவம்
இசை:எஸ்.வி. வெங்கட்ராமன், கே.வி. நாயுடு
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
ஆண்டு: 1945

கிரிதர கோபாலா பாலா கிரிதர கோபாலா
பாலா கிரிதர கோபாலா

ஸ்யாமள சரீர கௌஸ்துப ஹாரா
ஸ்யாமள சரீர கௌஸ்துப ஹாரா
பீதாம்பர தர ப்ரபோ முராரே
பீதாம்பர தர ப்ரபோ முராரே

கிரிதர கோபாலா பாலா கிரிதர கோபாலா

நந்த சுகுமார மனமோஹனாகார
நந்த சுகுமார மனமோஹனாகார
ப்ருந்தாவன ஜர துளசீ ஹார
ப்ருந்தாவன ஜர துளசீ ஹார

கிரிதர கோபாலா பாலா கிரிதர கோபாலா

கிரிதர கோபாலா.. ஆ...ஆ...
கிரிதர கோபாலா கம்ச விகார
கிரிதர கோபாலா கம்ச விகார
மீரா மானஸ சரோ விஹார
மீரா மானஸ சரோ விஹார

கிரிதர கோபாலா பாலா கிரிதர கோபாலா
பா...ஆஆ லா