புதன், 21 அக்டோபர், 2009

நம்பிக்கை கொள்வாயடா

உங்கள் வரவு நல்வரவாகுக!

அன்பு நண்பர்களே,

நாம் எங்கிருந்து வந்தோமென்பதும் தெரியாது, எங்கு போகி/றோம் என்றும் தெரியாது ஆனால் இப்பொழுது இவ்வுலகில் இருக்கிறோம் என்பதும் எல்லோருடனும் கலந்து பழகி மகிழ்கிறோம் என்பதும் தெரியும். இருக்கும் வாழ்நாளை இன்பமாய் எல்லோருடனும் ஒற்றுமையாய் சுகதுக்கங்களைப் பகிர்ந்து வாழ்வதே நம் அனைவரின் நோக்கம். அதற்கு உறுதுணையாய் நம் மனங்களை செம்மைப் படுத்தி சிந்தனையைத் தூண்ட "தினம் ஒரு தகவல்" எனும் அரிய பொக்கிஷத்தைத் தந்து வரும் ஆனந்த் பிரசாத் அவர்களின் வழியில் செயல்பட விழைகையில் தினம் நான் உங்கள் அனைவருக்கும் என்ன தரலாம் என்று யோசித்ததில் உதித்ததுவே "தினம் ஒரு பாடல்".

வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்த ஏற்பட்ட பல வழிகளுள் இசை மிகவும் இனியதாகும். ஏதொரு கருத்தையும் ஒரு கதை வடிவிலோ, கட்டுரை வடிவிலோ, கவிதை வடிவிலோ எடுத்துரைப்பதோடு நின்றுவிடாமல் அதற்கொரு இலயம் தந்து இசையோடு இசைத்திடின் கிடைக்கும் பலன் தனித்தன்மை வாய்ந்ததாகும்.

என்னோடு இசை கேட்டு உங்கள் துன்பங்களை சற்றே மறந்து "இவ்வுலகம் இனிது, இவ்வுலக வாழ்வு இனிது" எனும் மஹாகவி பாரதியாரின் வாய்மொழியை இசையால் அறிவோம்.

வீட்டுக்கு அஸ்திவாரம் அடிப்படை, வாழ்க்கைக்கு நம்பிக்கை அடிப்படை.

இன்றைய பாடல்:

நாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று

நாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா
நாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா
பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப்
பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா
பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப்
பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா
ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டவன் செய்து வைத்த
ஜாதியும் இரண்டேயடா தலைவன் நீதியும் ஒன்றேயடா
நாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா
போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா
போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா
சத்திய சோதனையை சகித்துக் கொண்டே இருந்தால்
வெற்றியைக் காண்பாயடா அதுவே வேதத்தின் முடிவாமடா
நாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா இறைவன்
நம்பிக்கை தருவானடா இறைவன்
நம்பிக்கை தருவானடா