சனி, 28 நவம்பர், 2009

தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது

ஒரு பெண் குழந்தையாய் இருக்கையில் அனைவரோடும் மிகவும் பிரியத்துடன் நெருக்கமாகப் பழகுகிறாள். ஆண் பெண் வெறுபாடு பார்ப்பதில்லை. அதே பெண் பருவமடைந்து விட்டால் எங்கிருந்தோ நாணம் வந்து அவளுக்குள் குடி புகுந்து கொள்வதால் அவள் பிறருடன் பழகுவதில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆண்களுடன் பேசிப் பழக நாணுகிறாள். தன் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த ஒரு ஆடவன் மேல் காதல் ஏற்பட்டாலோ அவளது நாணம் பன்மடங்காகப் பெருகி, அவளது உள்ளத்தில் ஆசை அலைகள் கரைபுரண்டு எழுந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக்கொள்ள இயலாத சூழ்நிலையை ஏற்படுத்துவதால் தன் உள்ளத்தில் எழும் எண்ணங்களைப் பிறரிடம் மட்டுமின்றித் தன் காதலனிடமும் வெளிப்படுத்த வழியின்றித் தவிக்கிறாள்.

அவ்வாறு காதல் உணர்வுகளாலும் நாணத்தாலும் அலைமோதும் மனத்தினளாய் அவதியுறும் பெண்ணொருத்திக்கு அவளது காதலன் அவளது தவிப்பைப் போக்க சொல்லும் ஆலோசனைகள் என்ன?


தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது


திரைப்படம்: சங்கிலித் தேவன்
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியோர்: பி. லீலா, டி.எம் சௌந்தரராஜன்
ஆண்டு: 1960

தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது - புவி
எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள் உறங்காது - புவி
எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள் உறங்காது
தென்றல் உறங்கிடக் கூடுமடி என் சிந்தை உறங்காது

நீலக் கடலலை ஓடி வருவதில் நெஞ்சம் பறிகொடுப்பேன்
நீலக் கடலலை ஓடி வருவதில் நெஞ்சம் பறிகொடுப்பேன் - இன்று
கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை யாரிடம் போய் உரைப்பேன் - இன்று
கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை யாரிடம் போய் உரைப்பேன் - இனி

தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது

துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள் பிள்ளைப் பருவத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..
துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள் பிள்ளைப் பருவத்திலே - நாண
வெள்ளத்திலே இவள் உள்ளம் மிதப்பது கன்னிப் பருவத்திலே - நாண
வெள்ளத்திலே இவள் உள்ளம் மிதப்பது கன்னிப் பருவத்திலே
கன்னிப் பருவத்திலே

கண்களில் ஏறிப் பெண்மையில் ஓடிய காதலை விட்டுவிடு
கண்களில் ஏறிப் பெண்மையில் ஓடிய காதலை விட்டுவிடு
நங்கைப் பருவம் வேதனை தந்தால் - இள
நங்கைப் பருவம் வேதனை தந்தால் நாணத்தை விட்டுவிடு - நெஞ்சே
நாணத்தை விட்டுவிடு

உற்றவர் கண்ணும் பெற்றவர் கண்ணும் உண்மை அறிவதில்லை
உற்றவர் கண்ணும் பெற்றவர் கண்ணும் உண்மை அறிவதில்லை - இதைக்
கற்றவர் அல்லால் மற்றவார் யாரும் காரணம் சொன்னதில்லை - இதைக்
கற்றவர் அல்லால் மற்றவார் யாரும் காரணம் சொன்னதில்லை

தென்றல் உறங்கிடும் நேரத்திலும் நம் சிந்தை உறங்காது - புவி
எங்கும் உறங்கிடும் காலத்திலும் நம் கண்கள் உறங்காது - புவி
எங்கும் உறங்கிடும் காலத்திலும் நம் கண்கள் உறங்காது
தென்றல் உறங்கிடும் நேரத்திலும் நம் சிந்தை உறங்காது

சங்கே முழங்கு சங்கே முழங்கு

"தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நி்ல்லடா" என்று வெறும் முழக்கமிட்டால் போதாது, உண்மையாகவே தமிழன் என்று சொல்லித் தலை நிமிர்ந்து செல்லும் தகுதியை ஒவ்வொரு தமிழனும் அடைய வேண்டும். பண்டைக்காலத்தில் தமிழ் நாடு சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, கொங்கு நாடு என்றிவ்வாறாகப் பல கூறுகளாகப் பிரிந்திருந்தது. அவை தவிர சிறு சிறு நாடுகள் குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டன.
பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது இந்நாடுகள் ஒன்றன் மேல் ஒன்று படையெடுத்ததன் விளைவு தமிழர்கள் ஒருவருக்கொருவர் விரோதம் பாராட்டி, ஒருவ்ரை மற்றவர் வெட்டிக் கொன்ற கொடுமை தொடர்ந்து நிறைவேறியது. இக்கொடுமையை சிந்தித்துப் பாராமல் பொருளுக்காகத் தம் தமிழறிவை விற்று இத்தகைய கொலைபாதகங்களுக்குக் காரணமான அரசர்களின் மேல் கவிஞர்கள் பலர் பரணி என்ற பெயரில் பாடி வைத்த பிதற்றல்களைப் பெரிதென எண்ணி நாம் அறியாமையால் பெருமை கொள்கிறோம்.

இன்று உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் பெரும்பாலோர் சொல்லொணாத் துயரில் மூழ்கி வருந்துகின்றனர். இவர்களின் துயரை யாராலும் விரைவில் நீக்க இயலாத சூழ்நிலை நிலவுவது மிகவும் வேதனை தருகிறது. இந்நிலைமைக்கு யார் காரணம்? அரசியல்வாதிகள் ஒருவரை மற்றவர் குற்றஞ்சாட்டி அவர்கள் தமிழரின் இன்னல்களைத் தீர்க்க வழி காணது தாங்கள் பதவிகளைப் பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அவ்வாறு குற்றஞ்சாட்டுபவர்கள் உண்மையிலே தமிழர்களின் துயர் துடைக்கப் பாடுபடுபவர்களா எனில் இல்லை எனும் பதிலே கிடைக்கிறது.

தமிழர்கள் செய்த மிகப் பெரிய தவறு என்னவெனில், தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகவும் அறிவுபூர்வமாகவும் செயல்படாது, உணர்ச்சிபூர்வமாக முடிவெடுத்ததே ஆகும். அத்துடன் தம்முள் ஒற்றுமை குறைய விடுவதும் இத்தகைய இன்னல்களுக்கு முக்கியக் காரணமாகும்.

தமிழர்கள் ஒருவரோடொருவர் நட்புக்கொண்டு, தன்னலம் கருதாது உண்மையாய்ச் சேவை செய்யும் மனப் பக்குவமும், அறிவும் திறமையும் கொண்ட தலைவர்களைத் தேர்வு செய்வார்களேயானால் தமிழரை யாரும் இன்னல்களுக்குள்ளாக்க இயலாதென்ற சூழ்நிலை விரைவிலேயே உருவாகும்.

உலகத் தமிழர்களே ஒன்று கூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்.

சங்கே முழங்கு சங்கே முழங்கு

திரைப்படம்: கலங்கரை விளக்கம்
இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1965

சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே

சங்கே முழங்கு ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
வெற்றித் தோள்கள் ஆஆஆஆஆஆஆஆஆஆ
கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

உலகில் உயிர் வாழ்க்கை உறவுகளாலும், நட்பாலும் காதலாலும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் அன்பினாலும் பாசத்தினாலும் நிலைத்திருக்கிறது. பரஸ்பரம் அன்பு கொண்டவர்கள் சேர்ந்திருக்கும் போது சந்தோஷம் விளைவது போலவே ஒருவரையொருவர் பிரிந்திருக்கையில் துக்கமும் விளைவது இயற்கை. துன்பம் தரும் அத்தகைய பிரிவு முடிந்து அன்புக்குரிய்வரை மீண்டும் சந்திக்க மாட்டோமா என மனம் ஏங்குவதும் இயற்கை.

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

திரைப்படம்: சதாரம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: ஜி. ராமனாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1956

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே உன்னை
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனததே - வாழ்க்கை
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனதே - நான்
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அமைதியின்றியே அலைய நேர்ந்ததே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
இந்த நிலை என்று மாறுமோ?
இந்த நிலை என்று மாறுமோ? உனைக் காணும்
இன்ப நாளுமே வந்து சேருமோ?

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே

ஒரு பெண் திருமணம் முடித்துப் புகுந்த வீடு செல்கையில் தன் கணவனின் பெற்றோரைத் தன் பெற்றோராக அடைகிறாள், அவர்களுக்கு ஒரு மகளாகவும் ஆகிறாள். அதனாலேயே அவள் மருமகள் என அழைக்கப்படுகிறாள். மருமகள் என்றால் மருவி வந்த மகள் என்று பொருள் கொள்ளலாம். என் வீட்டுக்கு விளக்கேற்ற மருமகள் வந்து விட்டாள் என அவளது மாமனாரும் மாமியாரும் பிற உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கூறி அகமகிழ்வது மரபு. விளக்கேற்றுவதென்றால் அதுவரை அவர்களது வீட்டில் இருந்த சிறு சிறு துன்பங்களாகிய இருளை நீக்கி ஒளிகொடுப்பதென்று பொருள் கொள்ளலாம்.
தன் கணவனும் தான் புகுந்த வீடும் செழிப்பாக விளங்குவதற்குப் பாடுபடுவதும், அவ்வீட்டிலுள்ள அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வாழ்வை வளமாக்குதலும் ஒரு பெண்ணின் இன்றியமையாத கடமைகளாகும். அக்கடமைகளை முறையாக ஒரு பெண் நிறைவாற்றுவாளேயானால் அவளது வாழ்வும் வளம் பெற்று அவள் மிகவும் பெறுமை பெறுவாள்.

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே

திரைப்படம்: பானை பிடித்தவள் பாக்கியசாலி
இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்.
இசை. எஸ்.வி. வெங்கட்ராமன், எஸ். ராஜேஸ்வரராவ்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
ஆண்டு: 1958

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கணும் - குளிச்சு
சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே - இந்த
அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே - நம்ம
அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான் - ஓடும்
பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான் - அவுங்க
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிகள் சொல்லுறன் கேளு முன்னே

புருஷன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நெறைஞ்சு கிட்டு ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
மக்களைப் பெத்து மனையப் பெத்து மக்க வயத்திலே பேரனைப் பெத்து
பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து நோயில்லாம நொடியில்லாம
நூறு வயசு வாழப்போற தங்கச்சி - நமக்கு
சாமி துணை இருக்கு தங்கச்சி - நமக்கு
சாமி துணை இருக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

"புல்லினும் அற்பமானது எது?" என்று தரும தேவதை கேட்டதற்குப் பாண்டவர்களில் மூத்தவனான யுதிஷ்டிரன் சொன்ன பதிலாவது, "கவலை" என்பதாகும். ஆனாலும் அவனும் தன் வாழ்நாளெல்லாம் கவலையிலேயே கழித்ததாக மஹாபாரதக் கதையின் வாயிலாக அறிகிறோம். நாமெல்லோரும் இவ்வுலகில் அனுதினமும் கவலைப் பட்டு வருந்தி மடிவதற்காகவே அவதரித்தோமோ?
பிறந்த குழந்தைக்குத் தன் தாயை ஒரு கணம் காணவில்லையெனில் கவலை, குறித்த நேரத்தில் பசியாறப் பாலும் உணவும் தரவில்லையெனில் கவலை. தூக்கம் வரத் தாலாட்டவில்லையெனில் கவலை. குழந்தைப் பருவம் விளையாட்டில் ஒரு வழியாகக் கழிந்ததும் தாயையும், விளையாட்டுத் தோழர்களையும் விட்டுப் பள்ளி செல்ல வேண்டுமென்ற கவலை. பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பின்னர் வீட்டுப் பாடங்களைப் படிக்க வேண்டுமென்ற கவலை. ஆண்டு நிறைவடைந்த நிலையில் தேர்வு எழத வேண்டுமெனும் கவலை. கல்வி முடிந்து தேராவிடில் தேரவில்லையெனும் கவலை, தேர்வுபெற்றால் உத்தியோகம் கிடைக்க வேண்டுமெனும் கவலை, காதலினால் கவலை, காதல் தோல்வியுற்றாலும் வெற்றியுற்றாலும் கல்யாணக் கவலை, கல்யாணம் செய்தபின்னர் பிள்ளைப் பேற்றைப் பற்றிய கவலை. கவலையோ கவலை.

முற்காலத்தில் (1960களில்) அப்பா அலுவலுக்குச் செல்ல அம்மா வீட்டிலிருப்பாள் வேளாவேளைக்கு சோறும் பிற பதார்த்தங்களும் வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போடுவாள். மாலை தந்தை பணி முடிந்து வீடு திரும்புகையில் தின்பண்டங்கள் வாங்கி வருவார். அதனை சுவைத்த பின்னர் ஏதோ சில பாடம் படித்துவிட்டுப் படுத்துறங்கி வாழ்வை எளிதாகக் கழிக்கும் நிலை இருந்தது. ஐந்து வயது வரையில் பள்ளிக்கூடம் கிடையாது. ஐந்து வயதில் நேரடியாக ஒண்ணங்கிளாஸ் சேர வேண்டும். அதன் பின்னர் 10 வருடங்கள் படித்தாலே போதும் நல்ல உத்தியோகம் பெற்று விரைவில் திருமணம் செய்து வாழ்வை சுகமாகக் கழிக்கலாம்.

காலம் செல்லச் செல்ல எல்.கே.ஜி., யு.கே.ஜி., கிரீச் என்று பிறந்து இரண்டு வயது நிறைவடையும் முன்னரே பிள்ளையை எங்காவது கொண்டு தள்ளிவிட்டுக் கணவனும் மனைவியும் இருவருமே பணி செய்து சம்பாத்திக்க வேண்டிய சூழ்நிலை (ஏழையை வாழ வைப்பதாகச் சொல்லி ஏலம் போட்டு, ஏழைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, விலைவாசியை ஏற்றி, தான் மட்டும் சொத்து சேர்த்த அரசியல்வாதிகளுக்கு நன்றி! "ஏழையாய் வாழ வைப்பதாக அவர்கள் சொன்னதை நாம் சரியாகக் கேட்கவில்லையோ?" என ஓட்டுப் போட்டு ஆட்சியை ஒப்படைத்தபின்னர் கவலைப்பட்டு என்ன பயன்?)

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

படம்: நிச்சய தாம்பூலம்
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1961

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

கொடுத்தானே கொடுத்தானே பழரசம் ஆண்டவன் கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

கழுதை குட்டியாக இருக்கையில் பார்க்க மிகவும் அழகாக இருக்கும் அடர்ந்த ரோமத்துடன் திகழும். ஓடுகையில் ஒரு குதிரைக் குட்டி ஓடுவதைப் போல் இருக்கும். அதே கழுதை வயது ஏற ஏற அதன் பின்னங்கால்கள் இரண்டும் கோணிக்கொண்டு, ரோமம் உதிர்ந்து, உடலெங்கும் மண் படிந்து பார்க்க சகிக்காத அளவுக்கு அருவெறுப்பான தோற்றத்தை அடையும். இதனாலேயே "வர வ்ர மாமியார் கழுதைப் போலானாளாம்" என்று தனது மருமகளைக் கொடுமைப் படுத்தும் மாமியார்களைக் கழுதைக்கு உதாரணமாகக் கூறுவதுண்டு.
குழந்தைகளாக இருந்தபோது நமது உள்ளங்களில் பெரிதும் குதூகலமே குடியிருந்தது. அவ்வப்போது பிற குழந்தைகளுடனும், பெற்றோருடனும், பிற வயதில் மூத்த நண்பர்களுடன் ஏதேனும் சில காரணங்களினால் ஏற்படும் மன வருத்தங்கள் அனைத்தையும் அக்காரணங்கள் நீங்கியதும் நொடிப்பொழுதில் மறந்து விட்டு அனைவருடனும் மனம் விட்டுக் கலந்து பேசி, விளையாடி மகிழும் மனம் அப்போது நமக்கு இருந்தது.

குழந்தைப் பருவத்தைக் கடந்து வயது வந்த பின்னர் கழுதையைப் போலவே நம் மனதில் கள்ளமும் கபடமும் குடிபுகுந்து போலி கௌரவம் கொண்டு, பொறுமை இழந்து அவதிப் படுகிறோம். பிறருடன் அற்பக் காரணங்களுக்காகவும் காரணமே இல்லாமலும் கோபம் கொண்டு அவரது மகிழ்ச்சியைக் குலைப்பதோடல்லாமல் நமது உள்ளங்களையும் நாமே புண்படுத்திக் கொள்கிறோம். நாம் குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா?

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

படம்: குழந்தையும் தெய்வமும்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1965

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

தங்கரதம் வந்தது வீதியிலே

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே
எனும் திருஞான சம்பந்தரின் தேவாரப் பாட்டில் கூறியுள்ளது போல் இறைவனை வழிபடுகையில் உள்ளம் உருகி அவன் மேல் காதலுடன் வணங்க வேண்டும். இறை வழிபாட்டில் உண்டாகும் காதல் உணர்வுக்கும் ஒரு பெண் தான் நேசிக்கும் ஒரு ஆணின் மேல் அல்லது ஒரு ஆண் தான் நேசிக்கும் ஒரு பெண்ணின் மேல் கொள்ளும் காதலுக்கும் அடிப்படை அன்பில் வேறுபாடு கிடையாது. காதல் என்றாலே தூய்மையான மரியாதைக்குரிய அன்பு என்பது பொருளாகும்.

ஆண் பெண் காதலில் இயல்பாக எழும் பாலுணர்ச்சியைப் புறந்தள்ளி இத்தகைய தெய்வீக உணர்வுடன் கொள்ளும் காதல் தெய்வ வழிபாட்டில் கிடைப்பது போன்ற பேரின்பத்தைத் தர வல்லதாகும்.

இதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதாதேவி அம்மையாரும் ஆவர்.

தெய்வத்தை வழிபடுவோர் அத்தெய்வத்தைத் தேரில் அமர்த்தி அத்தேரை வடம் பிடித்து இழுத்து ஊரெங்கும் உலாவருதல் விழாக்கோலமாய் அமைந்த வழிபாடாகும். ஆலயங்களில் இத்தகைய வழிபாட்டுக்கெனத் தங்கரதம் ஏற்படுத்தி அதனை விசேஷமாகத் துதிக்க விரும்பும் பக்தர்கள் இழுக்க வகை செய்வது வழக்கத்தில் உள்ளது.

அத்தகையதொரு நிலையில் தங்களது தெய்வீகக் காதலை வெளியிடுகின்றனர் கலைக்கோவில் காதலர்கள்.

தங்கரதம் வந்தது வீதியிலே

திரைப் படம்: கலைக்கோவில்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி
பாடியோர்: டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா, பி. சுசீலா

ஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆ ஆஆஆஆ ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
மரகதத் தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ

செவ்விளநீரின் கண் திறந்து செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
முளைவிடும் தண்டில் கோலமிட்டு மூவருலா வந்த காலங்கள் போலே

தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

மாங்கனிக் கன்னத்தில் தேனூற சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
தேன் தரும் போதைகள் போராட தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட

தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

தமிழன் இதயம்
தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும்;
அன்பே அவனுடை மொழியாகும்.

அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.

கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்;
கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்;
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.

'பத்தினி சாபம் பலித்துவிடும்'
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதி காரமதைச்
செய்தவன் துறவுடை ஓரரசன்.

சிந்தா மணி,மணி மேகலையும்,
பத்துப் பாட்டெனும் சேகரமும்,
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக்காட்டும்.

தேவா ரம்திரு வாசகமும்
திகழும் சேக்கி ழார்புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்.

தாயும் ஆனவர் சொன்னவெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்;
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.

நேரெதும் நில்லா ஊக்கமுடன்
நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
பாரதி என்னும் பெரும்புலவன்
பாடலும் தமிழன் தரும்புகழாம்.

கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்.

சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.

உழவும் தொழிலும் இசைபாடும்;
உண்மை ; சரித்திரம் அசைபோடும்;
இழவில் அழுதிடும் பெண்கூட
இசையோ டழுவது கண்கூடு.

யாழும் குழலும் நாதசுரம்
யாவுள் தண்ணுமை பேதமெலாம்
வாழும் கருவிகள் வகைபலவும்
வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.

'கொல்லா விரதம் பொய்யாமை
கூடிய அறமே மெய்யாகும்;
எல்லாப் புகழும் இவைநல்கும்;'
என்றே தமிழன் புவிசொல்லும்.

மானம் பெரிதென உயிர்விடுவான்;
மற்றவர்க் காகத் துயர்படுவான்;
தானம் வாங்கிடக் கூசிடுவான்;
'தருவது மேல்' எனப் பேசிடுவான்.

ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்;
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
நிறைகுறை யாமல் செய்தவனாம்.

உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன்; பெருமையுடன்
சத்தியப் போரில் கடனறிந்தான்;
சாந்தம் தவறா துடனிருந்தான்.

- நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

படம்: மரகதம்
இயற்றியவர்: ஆர். பாலு
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1959

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு

காவியம் புகழும் சிறந்த பண்பாடு
காவியம் புகழும் சிறந்த பண்பாடு
காப்பதில் நமக்கு உண்டோ ஈடு
காப்பதில் நமக்கு உண்டோ ஈடு

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

விண்ணை மறைத்திடும் கோபுரமே - நம்
வித்தையைக் காட்டிடும் ஓவியமே
விண்ணை மறைத்திடும் கோபுரமே - நம்
வித்தையைக் காட்டிடும் ஓவியமே
எண்ணில் அடங்கா இலக்கியமே
எண்ணில் அடங்கா இலக்கியமே
இயல் இசை நாடக இலக் கணமே

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

கொல்லாமை பொய்யாமை நெறி கண்டே
குறளெனும் அமுதாம் தேனுண்டே
சொல்லும் செயலும் ஒன்றெனவே
வாழ்வது உலகில் தமிழினமே
வாழ்வது உலகில் தமிழினமே

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
கலைகளுக்கெல்லாம் தமிழ் நாடு
தமிழ் நாடு தமிழ் நாடு

ஒரு முறை பார்த்தாலே போதும்

ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்ட ஓர் இளைஞனுக்கு அவளது முகம் எப்பொழுதும் மனக்கண்ணில் தோன்றியவாறு இருப்பதும். அவன் காணுகின்ற பொருளிலெல்லாம் அவள் உருவம் தெரிவதும் காதல் படுத்தும் பாடு. காதல் கொண்டவன் மனதில் கவிதைகள் தோன்றும். அக்கவிதைகளிலும் அவள் கருவிழிகளும் அவ்விழிகள் அவன் மேல் தொடுத்த மலர்க் கணைகளுமே தோன்றும்

ஒரு முறை பார்த்தாலே போதும்

திரைப்படம்: பாஞ்சாலி
இயற்றியவர்:
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: ஏ.எல். ராகவன்
ஆண்டு: 1959

ஒரு முறை பார்த்தாலே போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்

கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கலையழகே உன்னை வாழ்நாளில்

ஒரு முறை பார்த்தாலே போதும்

கன்னங்களை ரோஜா மலர் என்பதா?
கன்னங்களை ரோஜா மலர் என்பதா? இல்லை
கண்ணாடி என்றே நான் வர்ணிப்பதா?
கண்களை மீனென்று சொல்வதா? ஆஆ
கண்களை மீனென்று சொல்வதா? இல்லை
கடலுக்கு உவமையாய்க் கொள்வதா?

ஒரு முறை பார்த்தாலே போதும்

மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது
மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது - உன்
வண்ண மேனி அதில் காணுதே வண்ண மேனி அதில் காணுதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போதே ஒரு
புதிய உலகமும் தோணுதே..

ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்

ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே

நமது நாட்டின் பல பகுதிகளை பண்டைக் காலத்திலிருந்து ஆண்ட மன்னர்கள் அனைவரும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாதிருக்கவும், நிலத்தடி நீர் குறையாமல் இருக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவுமென்றே பல்வேறு இடங்களில் ஏரிகள் வெட்டி மழை நீரைச் சேமித்தனர். அந்தக் காலததில் மக்களின் முக்கியமான தொழில்களாகப் பெரும்பாலும் விவசாயம், நெசவு, வாணிகம், கைவினைப் பொருட்கள் செய்தல், சிற்பம் வடித்தல், ஓவியம் வரைதல் போன்றவையே விளங்கின. தற்காலம் போல அடுக்கு மாடிக் கட்டடங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் முதலியவை மிகவும் குறைந்த அளவிலேயே செயல் படுத்தப்பட்டன.
அவ்வாறு நம் முன்னோர்கள் ஏற்படுத்திய ஏரிகள் ஒன்றன்பின் ஒன்றாக மண்மேடாக்கப் பட்டு வீட்டுமனைகளாக மாறும் போக்கு தற்காலத்தில் பெருகியுள்ளது. இது மிகவும் ஆபத்தானதாகும். இத்தகைய போக்கை மாற்றி மத்திய மாநில அரசுகள் தரிசு நிலங்களில் ஏரிகள் வெட்டி மழை நீரைச் சேகரிக்கும் திட்டத்தைப் பரவலாக அமுல்படுத்த வேண்டும். இல்லாவிடில் இன்னும் சிறிது காலத்தில் நிலத்தடி நீர் குன்றி உயிர் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.

ஏரிகள் நிறைய வெட்டப்பட்டால் அவற்றின் கரையில் சோலைகளும் பூங்காக்களும் ஏற்படுத்தி சுற்றுலாத் தலங்களாக அமைத்து அதன்மூலம் வருவாய் ஈட்டவும் வழி செய்யலாம். அது மட்டுமா? காதலர்கள் தங்களது வாழ்வை மிகவும் இனிமையாகவும் சுகமாகவும் அமைத்துக் கொள்ளவும் பூங்காற்று வீசும் ஏரிக் கரைகள் உதவும்.

ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே

படம்: முதலாளி
இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன்

ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
ஏஏஏ..ஏ.. ஏஏஏஏ.. ஏஏ.. ஏஏஏஏஏஏஏ... ஏஏஏ....
தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
சிட்டுப் போல போற பெண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே

அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
மச்சான் வரும் வேளையிலே
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே

அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ

நம் நாட்டின் பாரம்பரியக் கலைகளுள் ஒன்று புலியாட்டம். புலியாட்டக் கலைஞர்கள், பல வண்னங்களால் தம் உடலில் வரிகள் மற்றும் புலியின் இதர அம்சங்களைத் தீட்டிக் கொண்டு ஒரு புலியின் செயல்பாட்டுக்கீடாகத் தம் உடல் அசைவுகளை வெளிப்படுத்தப் பயிற்சி பெற்று இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றனர். புலியாட்டம் கேரள மாநிலத்தில் வருடந்தோறும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழகத்திலும் கிராமங்களி்ல் இந்தப் புலியாட்டம் பல பண்டிகைகளின் போது இடம் பெறுகிறது.
இத்தகைய பாரம்பரியமான கலைகளுக்கு அரசாங்கமும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களும் முக்கியத்துவமளித்து இக்கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கௌரவித்து வந்தால் இக்கலைகள் அழியாமல் பாதுகாக்கப்படும்.

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ

படம்: அபூர்வ சகோதரர்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1989

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு அட
காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு ஹோய்
சீறினா சீறுவேன் கீறினாக் கீறுவேன்

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ அட
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோ
வேசம் திக்கெட்டும் சொக்கட்டும் நிக்கட்டும் பூவாரம் போடத்தான்
பாரு முன்னாலும் பின்னாலும் என்னாளும் வாலாட ஹோய்
யாரும் வம்புக்கும் தும்புக்கும் எங்கிட்ட வாராம ஓடத்தான் அட
போக்கிரி ஆடுறான் மோதினாத் தூளு தான் நான் பாஞ்சாட
மூக்கு தான் மொகர தான் எகிரித்தான் போகுமே நான் பந்தாட
கில்லாடி ஊரிலே யாரடா கூறடா மல்லாடிப் பாப்போமா வாங்கடா
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்தத்
தோட்டாவும் என்னைத் தொளைக்காதே

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ போடு
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

அட பாசம் வச்சாலே வாலாட்டி நிப்பேனே நாய் போல ஹோ
மோசம் செஞ்சாலே சொல்லாமக் கொல்வேனே பேய் போல மாறித்தான்
உள்ளம் இப்போதும் எப்போதும் கொண்டேனே பூவாக ஹோய்
நியாயம் இல்லாத பொல்லரைச் சாய்ப்பேனே புலியாக மாறித்தான்
அட ஒட்டுனா ஒட்டுவேன் வெட்டுனா வெட்டுவேன் என் வீராப்பு
ஒத்தையா நின்னு தான் வித்தையைக் காடுவேன் என் கித்தாப்பு
வில்லாதி வில்லானும் அஞ்சணும் கெஞ்சணும் வந்திங்கு வந்தனம் சொல்லணும்
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்தத் தோட்டாவும் என்னைத் தொளைக்காதே

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு
காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு
சீறினா சீறுவேன் கீறினாக் கீறுவேன்

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே (ஹொய்) ஆடுறார் (ஹொய்) ஒத்திக்கோ (ஹொய்) ஒத்திக்கோ (ஹொய்)
தென்னாட்டு (ஹொய் ஹொய்) வேங்கை தான் (ஹொய் ஹொய்) ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே

Charity begins at home என்ற ஆங்கிலப் பழமொழியும்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

எனும் திருக்குறளும் உணர்த்தும் பொருள் ஒன்றே. ஒவ்வொருவரும் தமது குடும்பத்தை அன்புடனும் அறநெறி வழுவாமலும் நடத்திச் சென்றால் பண்புடனும் பயனுடனும் அவரது வாழ்க்கை அமையும். இவ்வாறு ஒவ்வொரு குடும்பத் தலைவனும், அக்குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் பொறுப்புடன் செயல்பட்டால் அந்நாடும் சிறந்து விளங்குவது உறுதி.

தொன்றுதொட்டு நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் உடன் பிறந்த சகோதரர்கள் அவர்களுக்குத் திருமணம் முடிந்து பிள்ளைகள் பிறந்து வளர்ந்த காலத்திலும் ஒன்றாக இருந்து அனைவரது குடும்பங்களும் ஓரே குடும்பமாக வாழும் வாழ்க்கை முறையைக் கண்டு பிற நாட்டவர் அனைவரும் மிகவும் வியந்து பாராட்டுகின்றனர்.

இத்தகைய சிறந்த பாரம்பரியத்தை மதியாது சிலர் சுயநல மிகுதியால் தனிக்குடுத்தனம் எனும் பெயரால் சொந்த பந்தங்களைப் பிரிந்து அவதிப்படுவதுடன் செலவினங்களையும் அதிகப் படுத்துக் கொண்டு துன்புறுகின்றனர். இவ்வாறு குடு்ம்பத்திலிருந்து பிரிந்து செல்லும் போக்கு மாறிப் பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை அனுசரித்து நடக்கும் பாதைக்குத் திரும்புவார்களேயானால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நலம் விளையும்.

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே

படம்: பாமா விஜயம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
ஆண்டு: 1967

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ அடியோ
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
அந்தக் கன்னத்தில் என்னடி முத்து்ம் வண்ணம் இந்தக்
கள்ளத் தனத்தினில் வந்ததடி
வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து மின்னுதடி
ஒரு முத்து இரு முத்து மும்முத்து நால் முத்து அம்மம்மா
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

மாமன் மக்கள் தேடிய செல்வங்கள் யாருக்கடி?
ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி கையில்
உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
வீட்டு நலத்துக்கும் நாட்டு நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு பிள்ளைக்கு ஊருக்கு நாட்டுக்கு
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே

"கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்" என்று சொன்னார்கள் நமது முன்னோர்கள். இதன் பொருளை விளக்கிக் கூறவில்லை யாரும். "ஆயுட்காலப் பயிர்" என்று சொல்வது பொருத்தமானதென நான் கருதுகிறேன், காரணம் மனிதர்க்கு வாழ்க்கை திருமணத்தின் மூலமே அமைகிறது. திருமணம் செய்யாதவர் வாழ்க்கை வெறுமையாகவே காணப்படுகிறது. எனினும் திருமணம் செய்வதென்பது காலப்போக்கில் பொருளாதார ரீதியில் மிகவும் கடினமான விஷயமாகி வருகிறது, காரணம் விலைவாசி ஏற்றம். உணவுப் பொருட்கள் நாளுக்கு நாள் விலை உயர்ந்து சாமான்ய மக்கள் அவற்றை வெளிச் சந்தையில் எல்லோரையும் போல் விலை கொடுத்து வாங்க இயலாத சூழ்நிலை ஏற்கெனவே உருவானதாலேயே ரேஷன் கடைகளை நம்பி வாழ்க்கை நடத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.
தமது குடும்பத்திலுள்ளோர் உண்பதற்கே மலிவு விலைக் கடைகளை நம்பியிருக்கும் நிலையில் உறவினர்களை எல்லாம் அழைதது அவர்களுக்கு விருந்து படைப்பதென்பது சாமான்ய மக்களுக்குப் பெரும் செலவை ஏற்படுத்துகிறது. ஒருவர் தன் ஆயுட்காலம் முழுதும் உழைத்துச் சேர்த்த பொருள் அனைத்தையும் செலவழித்தாலும் தன் ஒரு மகளுக்குக் கூட உரிய முறையில் திருமணம் செய்வதென்பது அரிதாகிவிட்டது.

இந்நிலை நீடித்தால் மாப்பிள்ளை, பெண் மற்றும் அவர்களின் பெற்றோரும் அவர்களது திருமணத்திற்குச் செல்லப் பேருந்துக் கட்டணத்துக்கும் வழியின்றி மாட்டு வண்டிகளில் செல்வது ஒன்றே வழி எனும் நிலை நேர்ந்தாலும் நேரலாம்.

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே

படம்: காவேரியின் கணவன்
இயற்றியவர்:
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1959

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே

புள்ளையப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே
புள்ளையப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே
பொண்ணைப் பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே
பொண்ணைப் பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே

காக்காக் கடி கடிச்சுக் கொடுத்த கம்மருகட்டு முட்டாயி
சோக்கா வாங்கித் தின்னுப்புட்டு விட்டானையா கொட்டாவி
காக்காக் கடி கடிச்சுக் கொடுத்த கம்மருகட்டு முட்டாயி
சோக்கா வாங்கித் தின்னுப்புட்டு விட்டானையா கொட்டாவி
ஓட்டாஞ்சல்லிய எடுத்துக் கிட்டு ஓடுனாங்க மாருக்கட்டு
ஓட்டாஞ்சல்லிய எடுத்துக் கிட்டு ஓடுனாங்க மாருக்கட்டு
ஓராழாக்கு அரிசி வாங்கி ஒலையில தான் போட்டுக்கிட்டு

கூட்டாஞ்சோறு ஆக்கிககிட்டு கும்மாளந்தான் போட்டுக்கிட்டு
கூட்டாஞ்சோறு ஆக்கிககிட்டு கும்மாளந்தான் போட்டுக்கிட்டு
கொழவிக் கல்லு புள்ளய ஒண்ணு குஷியாகப் பெத்துகிட்டு
கொழவிக் கல்லு புள்ளய ஒண்ணு குஷியாகப் பெத்துகிட்டு

ஆராரோ நீ ஆரோ அருமையான கொழந்தை யாரோ?
ஆராரோ நீ ஆரோ அருமையான கொழந்தை யாரோ?

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

திருமணமாகும் வரை ஒரு பெண் தன் பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்வதால், தன் மனம் விரும்பும் இடங்களுக்குச் செல்வது, நண்பர்களுடன் கலந்து பழகுவது போன்ற செயல்களுக்கான முழு சுதந்திரம் அவளுக்குக் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் நமது நாட்டின் சமுதாய அமைப்பு பெண்ணைப் போற்றிப் பாதுகாக்கும் விதமாக அமைந்ததுவே ஆகும். அப்பெண் திருமணமாகித் தன் கணவனுடன் குடும்பம் நடத்துகையில் தன் பெற்றோர்களுடன் வாழ்ந்த காலத்தை விடவும் அதிக சுதந்திரத்தை எதிர்பார்ப்பதும், கணவன் காலையில் பணிக்குச் சென்றால் மாலையில் சற்று நேரம் முன்னதாகவே வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும், அவனுடன் வெளி உலகைச் சுற்றிப் பார்க்கப் பல இடங்களுக்குச் செல்ல வேண்டும் என விரும்புவதும் இயல்பு.
இத்தகைய எதிர்பார்ப்புகளை ஓரளவேனும் பூர்த்தி செய்வது அவளது கணவனின் கடமையாகும். மாலை கணவன் நேரத்தோடு வீடு திரும்புவான், அவனுடன் அளவளாவி மகிழலாம், இல்லற சுகம் காணலாம் என எதிர்பார்த்து வீட்டு வாசலில் மாலை நேரங்களில் வந்து காத்திருப்பது நமது நாட்டில் மணமான பெண்கள் மேற்கொள்ளும் வழக்கமாக உள்ளது. வாழ்க்கையே ஓர் எதிர்பார்ப்பல்லவா?

அவ்வாறு வாசலில் வெகுநேரம் நின்று பார்த்துத் தன் கணவன் திரும்பிவரக் காணாது துயருற்ற ஒரு பெண் தன் மன ஆதங்கத்தை ஒரு சிட்டுக்குருவியிடம் வெளியிடுகிறாள்.

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

படம்: டவுன் பஸ்
இயற்றியவர்: கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
ஆண்டு: 1955

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே

பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது - பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது
பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது - பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது
தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது - சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது - சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது
வாழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது
வாழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது - அவர்
வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது - அவர்
வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

மனிதன் தன் ஆசைகளைத் தன் தகுதிக்கு ஏற்ற விதத்தில் கட்டுப்படுத்திக் கொள்வது மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மிகவும் அவசியமாகும். தகுதிக்கு மீறி ஆசைப்படுபவன் தன்மானமிழந்து பெரும் துன்பத்துக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக ஒரு ஏழை செல்வச்சீமாட்டியான ஒரு பெண்ணை விரும்புவானாகில் அவன் வாழ்வில் பெரும் எதிர்ப்புககளை சந்திப்பது உறுதி. இத்தகைய ஆசை அவன் வாழ்வை நிலைகுலையச் செய்து அவன் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்ய இயலாத சூழ்நிலை உருவாகி, அவன் வாழ்வின் அடிப்படையே ஆட்டம் காணக் கூடும்.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுதல் தகாது.

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு இதில்
நான் அந்த மான் நெஞ்சில் நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம்
காதலை யார் மனம் தேடும் இதில்
நான் அந்த மான் நெஞ்சில் நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

படித்த இளைஞர்கள் பொருளீட்டுவதற்கெனப் பன்னாட்டு நிறுவனங்களிலும் அயல்நாடுகளிலுமே பெரும்பாலும் வேலை வாய்ப்பைத் தேடுகின்றனர். சுயதொழில் செய்து பிழைக்கலாம், வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என நம்பிக் கடனை வாங்கி, அவ்வாறு கடன் வாங்கிய தொகையை மூலதனமாகக் கொண்டு தொழில் ஆரம்பிக்கும் பலர் அவ்வாறு சுயதொழில் ஆரம்பித்த பின்னர் சந்திக்கும் முதல் பிரச்சினை பணியாளர்களைத் தேடி நியமிப்பதாகும். பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தினால் சாதாரணத் தொழிலாளிக்கும் கை நிறையச் சம்பளக் கிடைக்கும் நிலைமை நிலவுவதால் சுயதொழில் செய்வோரிடம் குறைந்த ஊதியத்துக்கு வேலைக்கு வர யாரும் விரும்புவதில்லை.
அது மட்டுமின்றி சாதாரணமாக வீட்டு வேலை செய்வதற்கும் ஆள் கிடைக்காமல் பலர் அல்லலுறுகின்றனர். அவ்வாறு வேலைக்கு ஆள் கிடைத்தாலும் அவர்களால் பல தொல்லைகள் விளைவதுண்டு. வேலை செய்யும் வீட்டில் உள்ளோர் தங்களது உறவினரிடத்தும் நண்பர்கள் மற்றும் அண்டை அயலாரிடத்தும் கொண்ட கருத்து வேறுபாடுகளைப் பேச்சு வாக்கில் அறியும் பணியாளர் அதனை ஊரெங்கும் பரப்பி வம்பில் மாட்டி விடுவதும் உண்டு.

இந்நிலைமையை ஆராய்கையில் மஹாகவி பாரதியாரின் கவிதை நினைவுக்கு வருகிறது.

''கூலி மிகக் கேட்பார், கொடுத்ததெலாந் தான் மறப்பார்
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்.
ஏனடா நீ நேற்றைக்(கு) இங்கு வரவில்லை யென்றால்,
பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார்.
வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்.
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்.
ஓயாமற் பொய்யுரைப்பார், ஒன்றுரைக்கவொன்று செய்வார்.
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்.
உள் வீட்டுச் சேதியெலாம் ஊரம்பலத்(து) உரைப்பார்.
எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்.
சேவகராற் பட்ட சிரம மிகவுண்டு கண்டீர்.
சேவகரில்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை!
இங்கிதனால் நானும் இடர் மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்...''

என்று தொடங்கி, பிற பணியாளர்களிடம் காணப்படும் இத்தகைய குறைபாடுகளற்ற சேவகனாய் கண்ணன் தனக்கு அமைந்து தன்னையும் தன் குடும்பத்தையும் போற்றிப் பாதுகாத்ததாக மானசீகமாகக் கண்ணனைத் தன் சேவகனாகக் கொண்டு பாடிய பாடலின் முக்கியப் பகுதியை. படிக்காத மேதை திரைப்ப்டத்தில் ரங்கன் எனும் பெயருடன் தன் தாய்மாமனுக்கு சேவகனாய் அமைந்த சிவாஜி கணேசனைப் பற்றி அவரது தாய்மாமனான ரங்காராவ் எண்ணுவதாக அமைக்கப்பட்ட ஒரு அழகான காட்சியில் மிகவும் பொருத்தமான விதத்தில் படைத்துள்ளனர்.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

படம்: படிக்காத மேதை
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1960

எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்

எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - ரங்கன்
எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

நெஞ்சினிலே நினைவு முகம்

ஒருவர் மேல் ஒருவர் புனிதமான அன்பு கொண்டு இருவர் மனமும் ஒன்றிணைந்த காதலர்கள் ஒருவரையொருவர் சந்திக்கையி்ல் பேரின்பம் அடைவது போலவே ஒருவரையொருவர் பிரிந்தால் துன்பப் படுவதும் இயல்பு. அவ்வாறு தன்னை விட்டுப் பிரிந்த காதலியின் முகம் காதலனுக்கும் காதலனின் முகம் காதலி்க்கும் அவர்கள் காணும் பொருடகள் யாவிலும் காட்சி கொடுக்குமெனக் கவிஞர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்ல அப்பிரிவுத் துயரம் அவர்களது உயிரையும் வாட்டுமாம்.

நெஞ்சினிலே நினைவு முகம்

திரைப்படம்: சித்ராங்கி
இயற்றியவர்: கு.மா. பாலசுப்பிரமணியம்
இசை: வேதா
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1964

நெஞ்சினிலே
நெஞ்சினிலே நினைவு முகம் நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்

ஆருயிர் என்றுஅழைத்தவளே புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே
ஆருயிர் என்றுஅழைத்தவளே புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே நான்
ஓருயிர் நின்று தவிக்கையிலே நீ ஓடி மறைந்தது நீதியில்லை

நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்

வானத்தின் தாரகைப் பூவெடுத்தேன் என்றும்
வாடாத மாலையாய் நான் தொடுத்தேன்
வானத்தின் தாரகைப் பூவெடுத்தேன் என்றும்
வாடாத மாலையாய் நான் தொடுத்தேன் அதில்
தேன் இல்லையே என்று சொல்லிவிட்டார்
தீண்டாமலலே மண்ணில் தள்ளி விட்டார் தள்ளி விட்டார்

நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்

ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என்
அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன் ஆஆஆ
ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என்
அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன் அந்த
கோயிலிலே என்தன் தெய்வமில்லை நான்
கோரிய வரமும் கிடைக்கவில்லை

நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்

காற்றினிலே வரும் கீதம்

எத்தனையோ விதவிதமான இசைக் கருவிகள் இருந்தாலும் அவையனைத்திலும் மிகவும் சிறப்பானது புல்லாங்குழல். புல்லாங்குழலின் இசை மனிதர்கள் மட்டுமன்றிப் பிற உயிரினங்களையும் தன்னை மறந்து ரசிக்க வைக்கத்தக்கது. அதனாலேயே ஆநிரை மேய்க்கும் ஆயர்பாடிக் கண்ணன் புல்லாங்குழலைத் தன் வாத்தியமாகப் பாவித்தானோ?
கண்ணன் குழலூதினால் அவ்விசையில் மயங்காதவர் உலகில் உண்டோ? மனிதர்கள் மட்டுமின்றி சுனை வண்டுடம் சோலைக் குயிலும் மனம் குவிய, வானில் உலாவரும் நட்சத்திரங்களும் தயங்கி நின்றிடுமன்றோ அவன் குழலிசை கேட்டு?

காற்றினிலே வரும் கீதம்

படம்: மீரா
இயற்றியவர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
இசை: எஸ். வி. வெங்கட்ராமன், கே. வி. நாயுடு
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
ஆண்டு: 1945

காற்றினிலே... வரும் கீதம் காற்றினிலே
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொளி பொங்கும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

சுனை வண்டுடன் சோலைக் குயிலும் மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாரா கணங்கள் தயங்கி நின்றிடவும்
ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம் காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

மஹாபாரதக் கதையில் பஞ்ச பாண்டவர்களான தருமன், பீமன், அருச்சுனன், நகுலன், சஹாதேவன் எனும் ஐந்து சகோதர்களும் அவர்களது பெரியப்பாவின் மகனான துர்யோதனின் கூட்டாளியான சகுனியுடன் சூதாடியதன் விளைவாக 12 வருடங்கள் வனவாசம் செய்ய நேரிட்டது. அவ்வனவாசம் முடியும் தருவாயில் பாண்டவர்கள் தங்கியிருந்த குடிலி்ன் அருகாமையில் வசித்து வந்த ஒரு அந்தணனுடைய அரணிக்கட்டையின் மேல் மான் ஒன்று உடலை உராய்ந்து விட்டுத் திரும்பிச் செல்கையில் அவ்வரணிக்கட்டை அதன் கொம்புகளில் சிக்கிக்கொண்டதால் மான் மிரண்டு ஓடியது. அரணிக் கட்டை என்பது நெருப்பை உண்டாக்குவதற்கு உதவும் கடைக்கோலும் கீழ்க்கட்டையும் கொண்டதொரு இயந்திரம்.
அவ்வந்தணன் தனது அரணிக்கட்டையை மீட்டுத் தருமாறு பாண்டவர்களிடம் முறையிட, அவர்கள் மானைத் துரத்திக் கொண்டே வனத்துக்குள் நீண்ட தூரம் சென்றபோதிலும் மான் அகப்படவில்லை. ஓடிய களைப்பு நீங்க ஒரு மரத்தின் அடியில் சற்றே இளைப்பாறுகையில் அவர்களுக்கு மிகவும் தாகம் எடுக்கவே தருமன் சொற்படி அருகில் இருக்கும் பொய்கையில் நீர் எடுத்து வர ஒவ்வொருவராகச் சென்ற தம்பியர் யாரும் திரும்பாமையால் தருமபுத்திரன் தானே பொய்கையை அடைந்தான். அங்கே அவனது தம்பிமார் ஐவரும் மயங்கி வீழ்ந்து கிடப்பதைக் கண்டு துணுக்குற்றாலும் தாக மிகுதியால் பொய்கையில் கை வைத்ததும் அசரீரி ஒலித்த்து, "யுதிஷ்டிரனே, நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தந்த பிறகே நீ நீரருந்தலாம் மீறினால் உன் தம்பியர் போல நீயும் மடிவாய்" என.

தருமனும் அசரீரியின் கேள்விகளுக்கு பதில் தந்தான். அவற்றுள் ஒரு கேள்வி, "உலகில் அதிசயமானது எது?" என்பதாகும். தருமன் தந்த பதிலாவது, "தினமும் தமது கண் முன்பாகவே தம்மைச் சார்ந்தவரும் பிறரும் ஒருவர் பின் ஒருவராக யமன் வாயிலுக்குச் செல்வது கண்ட பிறகும் மனிதர்கள் தாம் மட்டும் நிரந்தரமாக இவ்வுலகில் வாழ்வோம் என நினைக்கிறார்களே, அதுவே உலகில் அதிசயமானது" என்பதாகும்.

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

திரைப்படம்: அவன் தான் மனிதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1975

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

ஒருவரது உடலைக் கொன்றால் அத்துடன் அவரது வாழ்வு முடிந்து விடும். இன்பம் துன்பம் இரண்டிலிருந்தும் அவருக்கு விடுதலை கிடைக்கும், ஆனால் ஒருவரது உணர்சசிகளைக் கொன்றால் அவர் உயிருடன் இருக்கும் காலம் வரையிலும் மரண வேதனைக்கொப்பான துன்பத்தைத் தொடர்ந்து அனுபவித்து வாழ்வே நரகமாகி விடும்.
இதற்கு உதாரணம் அறியாச் சிறு வயதில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்து அவள் பருவமடையு முன்னரே அவளது கணவன் இறந்துவிட்டாலோ அல்லது காணாமற் போய்விட்டாலோ அப்பெண்ணை அவளது மரணம் வரையிலும் ஒரு கைம்பெண்ணாக வைத்து அவளுக்கு வெள்ளைச் சீலையைக் கட்டிவிட்டு அல்லது தலையை மொட்டையடித்துக் காவிப்புடவையைக் கட்டவைத்து உயிருடன் கொல்லும் கொடுமையான வழக்கம் ஆகும். இவ்வழக்கம் நமது நாட்டில் நமது முந்தைய தலைமுறை வரையிலும் நடைமுறையில் இருந்தது.

இதில் ஒரு மிகப்பெரிய அநியாயம் என்னவெனில் அவ்வாறு மணமான தம்பதியினருள் பெண் மடிந்தால் அந்த ஆண் வேறொரு பெண்ணைத் தடையின்றி மணக்கலாகும் எனும் ஒருதலைப்பட்சமான பெண்ணடிமைத் தனத்தை வளர்க்கும் கேடுகெட்ட வழக்கம் ஆகும். பெண்ணடிமை ஒழிந்து ஆணுக்கு நிகரான உரிமையைப் பெண்ணுக்கும் வழங்குவதன் அவசியத்தை மஹாகவி பாரதியார், பாவேந்தர் பாரதி தாசன், தந்தை பெரியார் முதலிய பெரியோர்கள் வலியுறுத்தியதன் விளைவாக இப்பெண்ணடிமை நிலை காலப்போக்கில் மாறி வருகிறது.


மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி


மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்

ஒரு காலத்தில் (இந்தியா வெள்ளையரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரமடைந்து சுமார் இருபது வருடங்கள் வரை) நம் நாட்டில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி எல்லோருக்கும் கல்வி இலவசமாகக் கிடைத்தது. மருத்துவ உதவி உட்பட அடிப்படைத் தேவைகள் அனைத்தும் அனைவருக்கும் கிட்டின. எல்லோரும் எல்லாமும் பெற்று வாழும் நிலை நிலவியது. குடிமக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகாது அரசுகள் மதுவிலக்கை அமுல்படுத்திக் காத்தன.
விலைவாசி குறைவாக இருந்தது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைத்தன. நாட்டில் உழைத்து வாழ்வோர் பெருகி வளம் கொழித்தது. ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு குறைவாகவே இருந்தது. ஆறு, குளம், ஓடை, ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் நீர் தூய்மையாக இருந்தது, நாட்டில் இருக்கும் ஊர்கள் அனைத்திலும் வீடுகள் தோறும் வழிப்போக்கர்கள் அமர்ந்து இளைப்பாற ஏதுவாகத் திண்ணைகள் அமைக்கப் பட்டு அனைவரின் நன்மையையும் கருதி அனைவரும் வாழும் மனப்பாங்கு நிலவியது.

பிற்காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களாலும் வெளிநாட்டு நாகரீகத்தின் ஆக்கிரமிப்பாலும் மனிதத் தன்மை நாளுக்கு நாள் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் குறைந்து, இன்று கல்வி கற்பதற்கும் சாதாரணமானதொரு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் ஒரு சாமான்யன் தனது உழைப்பினால் ஈட்டும் வருவாய் போதாத நிலையடைந்து பிறரிடம் கையேந்தும் சூழ்நிலை உருவாகியு்ள்ளது. குடிநீர் விஷமாகி, இயற்கைச் சீரழிவால் உலகம் உஷ்ணமடைந்து துன்பப் படுகிறோம்.

இத்தகைய சீர்கேடுகள் மறைந்து உலகம் இன்பமயமானதாக வழி உள்ளதா? உள்ளது என்கிறது இப்பாடல்:

எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்

படம்: எல்லாம் இன்பமயம்
இசை: கண்டசாலா
பாடியவர்: கண்டசாலா
ஆண்டு: 1955

எல்லாம் இன்பமயம் இன்பமயம் எல்லாம் இன்பமயம் இன்பமயம்
எல்லாம் இன்பமயம் இன்பமயம்
எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்

நல்ல குணம் செழித்து நாடு வளம் கொழித்து
நல்ல குணம் செழித்து நாடு வளம் கொழித்து
பல்கும் தொழில் வளர்த்துப் பாடுபட்டாலே
பல்கும் தொழில் வளர்த்துப் பாடுபட்டாலே

எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்

அன்பினில் உலகாளலாம் எந்நாளும்
அமைதியில் நலங்காணலாம் எல்லோரும்
அன்பினில் உலகாளலாம் எந்நாளும்
அமைதியில் நலங்காணலாம் எல்லோரும்
இல்லார் இருப்பவர் என்றிடும் பேதம்
இல்லார் இருப்பவர் என்றிடும் பேதம்
இலை எனச்செய்தால் சமமுயர்ந்தோங்கும்
இலை எனச்செய்தால் சமமுயர்ந்தோங்கும்

எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்
எல்லாம் இன்பமயம் எல்லாம் இன்பமயம்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

ஒருவன் எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் அவனிடம் வாழ்வை வளமாக வாழத் தேவையான அளவு பணம் இல்லை எனில் அவன் சமுதாயத்தில் உரிய மதிப்பைப் பெறுவதில்லை.
"செல்வாக்கு இல்லையென்றால் சொல்வாக்குக்கு மதிப்பேது? பணமில்லாதவன் பிணம், பொருளில்லார்க்கிவ்வுலகமில்லை, பொருள் படைத்தவனிடம் சென்று அவனைப் பாடி, புகழ்ந்து, பரிசு பெற்றால் தான் கல்வி கற்றவன் வறுமையின்றி வாழ முடியும்."

"செல்வம் தானே உலகில் சிறந்தது, அதற்கு நிகரேது? கல்வியின் அறிவே இல்லாத ஒருவன் செல்வச் சிறப்போடு சீமானாக வாழ்வானாகில் படித்த புலவன் அவனிடம் சென்று பாடி, புகழ்ந்து பரிசுகள் பெறுவதை இன்று உலகில் காண்கின்றோமே, அது மட்டுமா? விரகரிருவர் புகழ்ந்திட வேண்டும், விரல்கள் நிறைய மோதிரம் வேண்டும், அரையது தன்னில் பஞ்சேனும் பட்டேனும் இருந்தால் அவரின் கவிதை நஞ்சாய், வேம்பாய் இருந்தாலும் நன்று,"

என்று சரஸ்வதி சபதம் திரைப்படத்தில், ஏ.பி. நாகராஜன் அவர்கள் எழுதி, நாரதர் வேடமேற்று நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கூறும் வசனங்கள் நினைவுக்கு வருகின்றன.

ஆகையால், நாம் ஒவ்வொருவரும் தன்னிறைவோடு வாழத்தேவையான பணத்தை நாம் முயன்று உழைப்பால் ஈட்டுதல் மிகவும் அவசியமாகும். நம்மிடம் பொருள் இல்லாத நிலையைச் சொல்லி மற்றவரிடம் உதவி கேட்கும் நிலை இழிந்த நிலையென்று சான்றோர்கள் கூறியுள்ளனர்.

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்றிழிவு பட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்மோடொரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

என்று அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியி்ல் கூறியதை நினவில் நிறுத்தி இறையருளை வேண்டி, உண்மையும் நேர்மையும் துணையாகக் கொண்டு உழைத்தால் நிச்சயம் உயர்வுண்டு.

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

படம்: பணம் பந்தியிலே
இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே

ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை
உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை
உய்ர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை - உலகம்
எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான் - பணம்
அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான்
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை - இதை
எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே

உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு - அவர்கள்
உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு - நாளும்
முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?

காதலைப் பற்றி எண்ணுகையில் மனக்கண்ணில் தோன்றுவது கண்ணனும் ராதையும் ஆவர். வடமொழிக் கவிஞரான ஜெயதேவர் தாம் எழுதிய கீத கோவிந்தம் எனும் காவியத்தில் கண்ணன், ராதை இருவரும் கொண்ட தெய்வீகக் காதலை அற்புதமாக விவரித்துள்ளார். இத்தகைய விவரங்களைப் பல உபன்யாசகர்களும் ஆன்மிக சிந்தனையாளர்களும் கூறக் கேட்டதுண்டு.
அத்துடன் கண்ணனைப் பற்றிய கதைகள் பலவற்றில் அவன் கோபியருடன் ஆடிய லீலைகள் பற்றியும், யமுனா நதி தீரத்திலும், பிருந்தாவனத்திலும் நடத்திய காதல் விளையாட்டுக்கள் பற்றியும் மூத்தோர் கூறக் கேட்டதுண்டு,

அந்தக் கதைகளில் மனம் லயித்த நமது இளைஞர்கள் தாமும் காதல் கொள்கையில் தம்மைக் கண்ணன் ராதை போலக் கற்பனை செய்து மகிழ்வது வாடிக்கை.

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?

படம்: உத்தரவின்றி உள்ளே வா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை. எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா

ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹாஹ ஹா ஆஹாஹா ஆ...

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ?
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ?

கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் என்தன் மனம்
ம்ம்ம் ஆஹாஹா ஆஆஆ
கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் என்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி நீராட நீ செல்லும் யமுனா நதி
மங்கல மங்கையின் மேனியும் தங்கிய மஞ்சள் நதியோ குங்கும நதியோ?
ஆ..ஆ.. ஆஆஆ ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?

ஆஹாஹா ஆஹாஹா ஹா ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஆஆஆ

காணாத உறவொன்று நேர் வந்தது கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது
வாழாத பெண் ஒன்று வழி கண்டது வாழாத பெண் ஒன்று வழி கண்டது
வாடிய பூங்கொடி நீரினில் ஆடுது மன்னா வருக மாலை தருக
ஆஆ.ஆஆ. ஆஆஆ ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?

பூமாலை நீ தந்து சீராட்டினாய் புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன்
பாமாலை பல கோடி பாராட்டுவேன் பாமாலை பல கோடி பாராட்டுவேன்
பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம் சொல்லிட வருவேன் ஏதோ தருவேன்
ஆஆஆ ஆ... ஆஆஆ ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தேரோடும் எங்க சீரான மதுரையிலே

நமது பாரத நாட்டில் உலகப் புகழ் பெற்ற பல விதமான நாட்டியக் கலைகள் தொன்று தொட்டு வளர்ந்து வருகின்றன. இவற்றுடன் பல விதமான கிராமியக் கலைகளும் சிறப்பாகப் போற்றி வளர்க்கப் படுகின்றன. இருப்பினும் சமீபத்திய தொலைகாட்சி முதலிய ஊடகங்களின் கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்பினால் மேலை நாட்டு நாகரீகம் பலதரப்பட்ட மக்களை, குறிப்பாக இளைஞர் சமுதாயத்தைக் கவரும் விதத்தில் பரப்பப்படுவதால் நம் நாட்டின் பாரம்பரியம் மிக்க கலைகள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையை மாற்றி, கிராமியக் கலைகளுக்கும் உரிய முக்கியத்துவமளித்து அவற்றையும் இளைய தலைமுறையினர் பயின்று பாராட்டும் விதத்தில் நிகழ்ச்சிகளை அமைத்து நடத்த இத்தகைய ஊடகங்களுள் சில முயற்சிகள் மேற்கொள்வது பாராட்டத்தக்கதாகும். இத்தகைய முயற்சியை அனைத்து ஊடகங்களும் மேற்கொள்ளுமாகில் நம் நாட்டின் தொன்மையான கலைகள் என்றென்றும் சிறந்து வாழ வழிபிறக்கும்.

கிராமியக் கலைகளுல் ஒயிலாட்டமும் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்:

ஒயிலாட்டம்

அத்தகைய ஒயிலாட்டத்தை கவி நயம் மிக்க அற்புதமான பாடலுடன், அதற்கேற்ற தனித்தன்மை வாய்ந்த, மனதைக் கவர்ந்து லயிக்க வைக்கத்தக்க இசையுடனும் படமாக்கியுள்ளனர் நம் தமிழ்த் திரையுலக மேதைகள்:

தேரோடும் எங்க சீரான மதுரையிலே

படம்: பாகப் பிரிவினை
இயற்றியவர்: மருதகாசி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: எய்.எம். சௌந்தரராஜன், பி. லீலா
ஆண்டு: 1959

ஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
பாலூற்றி உழவு செய்வார் உழவு செய்வார்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஓஓஓஓ
பனிபோல் விதை நடுவார் விதை நடுவார் ஓ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஓஓஓஓ
மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார் உரமிடுவார்
தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே
ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓ

தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் ஓய்
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்

தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டு விழியெனும் கெண்டைகள் துள்ளிட
தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்

சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

சித்திரை மாதம் முத்துகள் வித்து
திரும்பி இங்கே வருவதென்றே
சென்றவர் இன்னமும் வந்திலர் சேதி
தெரிந்து சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
ஓ ராமாயம்மா

வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும்
விரிச்ச வலையில் விழுந்து விட்டார்
உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
உண்மையைச் சொல்லடி ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா

சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

மஞ்சு விரட்டில் மாடு பிடித்தால்
மாலை சூடி மணப்பதென்று
சொன்னவள் இன்னமும் வந்திலள் நீயும்
தூது சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
ஓ ராமாயம்மா

கொஞ்சும் கிளிபோல் வஞ்சித்த உன்மேல்
கொள்ளை ஆசை பிறந்திருக்கு
வாசல் கதவு சாத்தியிருக்கு வழியுமில்லை ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா

தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டுவிழியெனும் கெண்டைகள் துள்ளிட

தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

செய்வன திருந்தச் செய் சேரிடம் அறிந்து சேர்
என்று மூதாட்டி ஔவையார் ஆத்தி சூடியில் கூறியுள்ள அறிவுரைகளை மனதில் கொண்டு நாம் எந்நாளும் நமது கடமைகளை முறையாக, நேர்மையான வழியில் முழுமையாகச் செய்தல் வேண்டும். நல்லவர்களுடன் மட்டுமே சேர்ந்து பழக வேண்டும். அவ்வாறு நடந்தால் வாழ்வில் நமக்கு இடையூறுகள் வாரா.

தற்கால உலகில் நல்லவர்களைக் காண்பது மிக அரிதாக உள்ளது, காரணம் பொருள் ஒன்றையே பெரிதாகக் கருதி, அப்பொருளையும் அதனால் கிடைத்திடும் சுகவாழ்வுக்கும் ஆசை மிகக்கொண்டு தன்மானத்தையும் நற்கொள்கைகளையும் இழக்கவும் தயங்காத கேடு கெட்ட சுபாவம் மனிதனைத் தொற்றிக் கொண்டதேயாகும்.

செலவுகளைக் குறைத்துக் கொள்ளை லாபம் அடிக்கும் துர்நோக்கத்துடன் ஆற்று நீர் அனைத்திலும் ஆலைக் கழிவுகளைக் கலந்து வெளியேற்றும் பல தொழிற்சாலைகள் லஞ்ச லாவண்யத்தின் மூலம் அரசின் அனுமதியுடன் தொடர்ந்து நடத்தப்படுவதால் ஆற்று நீருடன் நிலத்தடி நீரும் விஷமாகிறது.

இதன் காரணமாக ஏற்பட்ட சீரழிவு ஏதெனில், மக்களுக்குக் குடி நீர் கிடைக்காமல் இன்று திருமணங்கள் மற்றும் பிற விழாக்களில் பங்குபெறுவோர் முதல் தினசரி ஒவ்வொரு வீட்டிலும் குடிக்கும் நீரை விலை கொடுத்து வாங்கும் முரண்பாடான நிலை நிலவுகிறது. இத்தகைய நிலை தொடர்ந்தால் உலகில் மனிதர்கள் மட்டுமன்றிப் பிற உயிரினங்கள் எவையும் வாழ இயலாத கேடு விரைவில் ஏற்படும். அப்பொழுது இது போல் குறுக்கு வழியில் பணத்தைத் தேடியவர்களும் இந்த அவல நிலைக்குட்பட்டு மடிவது உறுதி.

நேர்மையற்ற வழியில் பணத்தைத் தேடுவோர் இன்றைய சமுதாயத்துக்கு விளைவிக்கும் கேடுகள் எண்ணற்றவை. "குரங்கு தான் கெட்டதுமன்றி வனத்தையும் அழித்ததாம்" என்ற கூற்றுப்படி இவர்கள் பிறரை அழிவுப்பாதையில் தள்ளுவதுடன் தானும் அவர்களுடன் சேர்ந்து மடிய நேரும் என்பதை அறியாது தவறு செய்கின்றனர். அத்தகைய சுயநலவாதிகளை நீக்கி, நாட்டை நல்லோர் பொறுப்பேற்று நடத்த வழி காண்பது மிகவும் அவசியம்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா

படம்: மஹாதேவி
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1957

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்
ஓ... ஓ.. ஓ..
விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும் - மனம்
வெந்திடும் தோட்டக் காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் பல வரட்டு கீதமும் பாடும்
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும்
கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
குணமும் இது போல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
ஆ.. ஆஆஆஆஆஆ... ஆஆஆஆஆ

ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்

தீபாவளி என்றாலே குழந்தைகளின் கொண்டாட்டத்துக்கு அளவே இல்லை. புத்தாடை அணிவதிலும், பட்சணங்கள் தின்பதிலும், பட்டாசு வெடிப்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் அவர்கள் அடையும் சுகம், அடடா! அது போன்றதொரு ஆனந்தம் தரும் பண்டிகை வேறெதுவும் இல்லை.
தீபாவளி குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெற்றோர்களுக்கும் இன்பகரமான பண்டிகையே. நமது நாட்டில் அரசுத் துறைகளிலும், பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் பணி செய்யும் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தீபாவளி வந்ததும் போனஸ் என்ற பெயரில் கணிசமான பணம் அவர்கள் பண்டிகை செலவைப் பூர்த்தி செய்ய வசதியாக வழங்கப் படுகிறது. அத்துடன் பல நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இனிப்புப் பொட்டலங்களும் வழங்கும் வழககம் உள்ளது.

இவை அனைத்துடனும் பணியிலிருந்து விடுமுறையும் அளிப்பதால் குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒன்று கலந்து மிகவும் கோலாகலமாகக் கொண்டாடும் விதத்தில் தீபாவளிப் பண்டிகை அமைந்துள்ளது.

இத்தகைய கொண்டாட்டமான பண்டிகை தொடர்பான மிகப் பெரிய துயரத்தைத் தரும் செய்தி என்னவெனில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணி செய்பவரில் அநேகர் சிறு குழந்தைகளாவர் என்பதே. பள்ளி சென்று, கல்வி பயின்று பிற குழந்தைகளைப் போல வாழ்வை சிறப்பாக வாழும் உரிமை மறுக்கப் பட்ட பல்லாயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி பிறந்து, குழந்தைத் தொழிலாளர்கள் நாட்டில் அறவே இல்லாத நிலை உருவாகி, அனைவருக்கும் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்து தரும் கடமை உணர்வு கொண்ட அரசும் சமுதாயமும் மலர வேண்டுமென இந்த நன்னாளில் இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்

படம்: திகம்பர சாமியார்
இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரீஃப்
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு, ஜி. ராமநாதன்
பாடியோர்: பி. சுசீலா, ஏ.எல். ராகவன்
ஆண்டு: 1950

ஊசி பட்டாசே
ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்
ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்
லேடி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்
பீரங்கி போலே பீரங்கி வெடியை வெச்சாலே வெடி டமார் டமார்

அடடா யானை வெடி இதனாலே சுடுவேனே உன்னைத் தாத்தா
அடடா யானை வெடி இதனாலே சுடுவேனே உன்னைத் தாத்தா
ஆமாமா நிஜமா சுட்டுப் போடாதே கோமாளித் தனமா கொளுத்திப் போடாதே
ஆமாமா நிஜமா சுட்டுப் புடாதே கோமாளித் தனமா கொளுத்திப் போடாதே

சீறிய பாம்பாய்
சீறிய பாம்பாய் மாறிடுமாம் தீ வெச்சாலே வெடி டமார்
சீறிய பாம்பாய் மாறிடுமாம் தீ வெச்சாலே வெடி டமார்
ஏரோபிளேனாப் போகுமாம் மேலே இது தானே பேஷ் பலே பலே
ஏரோபிளேனாப் போகுமாம் மேலே இது தானே பேஷ் பலே பலே

புதுசா இன்னும் மத்தாப்பு வாங்க தர வேணும் பணம் தாத்தா
புதுசா இன்னும் மத்தாப்பு வாங்க தர வேணும் பணம் தாத்தா
தாரேண்டி கண்ணே நாளைக்குக் காசு தாராளமாக பூவாணம் வாங்கு
தாரேண்டி கண்ணே நாளைக்குக் காசு தாராளமாக பூவாணம் வாங்கு

ஊசி பட்டாசே
ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

தேசபக்தியும் தெய்வபக்தியுமே தன் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் மஹாகவி பாரதியார். அனைத்து தெய்வங்களிலும் மேலாக அவர் கண்ணனை பூஜித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது பாடல்களுள் பல திரைப்படங்களில் இடம் பெற்றன. குறிப்பாக பாரதம் சுதந்திரமடைந்த பின்னர் தமிழ்த் திரையுலகில் தேச பக்தியையும் தெய்வபக்தியையும் வலியுறுத்தும் கதையம்சத்துடன் கூடிய பல திரைப் படங்கள் தயாரிக்கப் பட்டன. அவற்றுள் பலவற்றில் பாரதியாரின் பாடல்கள் பல இடம் பெற்றன.
இறைவன் அன்புக்கு அடிமை என்பது இறை நம்பிக்கையுள்ளவர் அனைவரது ஒத்த கருத்தாகும், அத்தகைய உன்னத அன்பை இறைவனிடத்தில் பொழிய பக்தர்கள் இறைவனைத் தமது தாயாகவும், தந்தையாகவும் காண்பது பொதுவான இயல்பு.

இத்தகைய பக்தர்கள் அனைவரிலும் உயர்ந்த நிலையி்ல் தன்னை நிறுத்திக் கொண்டு, கண்ணனை தாயாகவும், தந்தையாகவும், ஆசானாகவும், சற்குருவாகவும், தோழனாகவும், சேவகனாகவும் கண்டு மகிழ்ந்து பாடித் துதித்த பாரதியார், அத்துடன் திருப்திப் படாமல், கண்ணனைப் பெண்ணாகக் கொண்டு கண்ணம்மா என் காதலி, கண்ணம்மா என் குழந்தை என்றெல்லாம் தனக்கு இவ்வுலகில் உள்ள உறவுகள் அனைத்தையும் கண்ணன் வடிவிலே கண்டார்.

தனது குழந்தையின் மேல் செலுத்தும் அன்புக்கு ஈடானதோர் அன்பை வேறொரு உறவினரிடமும் ஒருவர் செலுத்துவதில்லை. ஏனெனில் நம் குழந்தை நம்மில் ஒரு பாகமன்றோ?

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

படம்: மணமகள்
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: சி.ஆர். சுப்பராமன்
பாடியோர்: எம்.எஸ். வசந்தகுமாரி, வி.என். சுந்தரம்
ஆண்டு: 1951

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில்
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே

ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய்
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவதடி

உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயில் நின்னதன்றோ?

முகத்தில் முகம் பார்க்கலாம்

காதல் இல்லாமல் உலகமில்லை, வாழ்வுமில்லை. காதலர் இருவர் கண்ணுடன் கண் நோக்கி, கருத்தொருமித்து விட்டால் வாழ்வில் அவர்களுக்கு இவ்வுலகைப் பற்றிய சிந்தனையில்லை, வேறெதைப் பற்றியும் சிந்தனையில்லை. அவனுக்குள் அவளும் அவளுக்குள் அவனும் ஐக்கியமாகி விடுகின்றனர்.
அத்தகைய சங்கம நிலையில் அவர்கள் தங்கள் முகத்தைப் பார்ப்பதற்கு நிலைக்கண்ணாடி அவசியமற்றதாகிறது, ஏனெனில் ஒருவரது முகமே மற்றவரது முகத்தையும் மனதையும் காட்டும் கண்ணாடியாகின்றது என்று நான் சொல்லவில்லை. தமிழ் மக்கள் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்ட கவிஞர் பட்டுக்கோட்டையார் சொல்கிறார். அவரது கருத்துக்கு மறுப்புண்டோ?


முகத்தில் முகம் பார்க்கலாம்


படம்: தங்கப் பதுமை
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ், விஸ்வநாதன், டி.கே. இராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா ஆண்டு: 1959

முகத்தில் முகம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்

வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால் ஆ...
வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால்
மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் - என் முன்
வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம்
வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம் - மானே உன்

முகத்தில் முகம் பார்க்கலாம்

இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே அதன்
எண்ணிக்கை விரிவாக்கலாம் - காதல்
அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம் - இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம்

இளமை பொங்கும் அங்கம் சிந்தும் - அழகில்
தங்கம் மங்கும் நிலையில் - நின்று
தன்னை மறந்து எண்ணம் கலந்து
வண்ணத் தோகை மயிலென்னச் சோலைதனில்
பொழுதெலாம் மகிழலாம்
கலையெலாம் பழகலாம் சதங்கையது
குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும் குறும்பு படர்ந்திடும்

முகத்தில் முகம் பார்க்கலாம் விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?

நம் நாட்டுப் பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது மேனியை நன்கு மறைத்து, அதே சமயம் அலங்காரமாய் விளங்கும் அற்புதமான ஆடை அணிகலன்களும், அவர்களிடம் இயல்பாகவே வெளிப்படும் நாணமுமே ஆகும். நம் நாட்டுப் பெண் ஒருத்தி ஓர் ஆடவனிடம் காதல் கொண்டு பழகினாலும் தன் உள்ளத்தில் அவன் மேல் இருக்கும் ஆசையையும், தன் மேனி அழகையும் அவனுக்கும் கூடக் காட்ட மாட்டாள்.
இதற்கு மாறாக ஆடவர்கள் தம் மனதில் ஒரு பெண்ணின் மேல் காதல் ஏற்படுகையில் அதனை அப்பெண்ணிடம் தயங்காமல் எடுத்துச் சொல்லும் தைரியமும் அதே சமயம் அவளிடம் நெருங்கிப் பழகும் ஆசையும் மிகுந்தவர்களாக விளங்குவது இயற்கை.

தனது காதலி தான் அவள் மேல் கொண்ட ஆழமான காதலை அறிந்திருந்தும் தன்னுடன் நெருங்கிப் பழகாமலும் தன் மேல் அவளுக்குள்ள ஆசையை வெளிப்படுத்தாமலும், அவளது அழகைத் தான் ரசிக்க விடாமலும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கக் கண்டு, அதனால் பரிதவிக்கும் தனது மனதின் நிலையை எடுத்துரைப்பது போல் அமைந்த அழகியதோர் பாடல்:

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?

படம்: தெய்வத்தின் தெய்வம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி? - உன்
கன்னத்தில் எத்தனை பள்ளமடி?
பெண்ணுக்குள் எத்தனை உள்ளமடி? - கொஞ்சம்
பேசி விட்டால் என்ன மோசமடி? - கொஞ்சம்
பேசி விட்டால் என்ன மோசமடி?

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?

முக்கனிச் சாறு பிழிந்து வைத்து - அதை
மூடி விட்டாய் ஒரு ஆடையிட்டு
முக்கனிச் சாறு பிழிந்து வைத்து - அதை
மூடி விட்டாய் ஒரு ஆடையிட்டு
சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து
சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து - வாசல்
சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு - வாசல்
சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி?

ஆசை முழுவதும் தேக்கி வைத்தேன் - அதில்
ஆயிரம் கற்பனை ஆக்கி வைத்தேன்
ஆசை முழுவதும் தேக்கி வைத்தேன் - அதில்
ஆயிரம் கற்பனை ஆக்கி வைத்தேன்
பாசத்தில் நான் என்ன பாக்கி வைத்தேன்
பாசத்தில் நான் என்ன பாக்கி வைத்தேன் - எந்த
பாபத்திற்கோ என்னை நீக்கி வைத்தாய்? - எந்த
பாபத்திற்கோ என்னை நீக்கி வைத்தாய்?

கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி? - உன்
கன்னத்தில் எத்தனை பள்ளமடி?
பெண்ணுக்குள் எத்தனை உள்ளமடி - கொஞ்சம்
பேசி விட்டால் என்ன மோசமடி?

துயிலாத பெண்ணொன்று கண்டேன்

இராமாயணக் கதையில் இராவணனின் மகனான இந்திரஜித் தேவேந்திரனையே வென்றதனால் அப்பெயர் பெற்றான் எனவும், 14 ஆண்டுகள் தொடர்ந்து கண்ணுறங்காது தவ வாழ்க்கை வாழ்ந்த ஒருவனே அவனை வதம் செய்த இயலும் எனவும் குறிப்பிட்டுள்ளதாகக் கேள்விப் படுகிறோம். அதன் படியே இராமன் தந்தையின் ஆணைப்படி 14 ஆண்டுகள் வன வாசம் செய்கையில், கண்ணுறங்காது இராமனையும் சீதா பிராட்டியையும் கண்ணின் இமையெனக் காத்து வந்த இலக்குவன் கைகளால் இந்திரஜித் மடிந்ததாகக் கூறப் படுகிறது.
14 ஆண்டுகள் தூங்காமல் ஒருவனால் உயிர்வாழ முடியுமா எனும் கேள்வி எழுகிறது.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த தாய் காக் எனும் 64 வயதான விவசாயி ஒருவர் 1973ஆம் ஆண்டு முதல் முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறிதும் உறங்காது வாழ்வதாக ஒரு செய்தி:

முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறிதும் உறங்காது

அது சரி. இவர்கள் ஆண்கள். கண்ணுறங்காத பெண் உலகில் உண்டோ:

துயிலாத பெண்ணொன்று கண்டேன்

துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்

அழகான பழம் போலும் கன்னம் - அதில்
தர வேண்டும் அடையாளச் சின்னம்
பொன் போன்ற உடல் மீது மோதும் - இந்த
கண் தந்த அடையாளம் போதும் - இந்த
கண் தந்த அடையாளம் போதும்

துயிலாத பெண்ணொன்று கண்டேன் நானா? ஆமாம் - எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்

மாலைக்கு நோயாகிப் போனேன் - காலை
மலருக்குப் பகையாக ஆனேன்
உறவோடு விளையாட எண்ணும் - கண்கள்
உறங்காது உறங்காது கண்ணே கண்கள்
உறங்காது உறங்காது கண்ணே

துயிலாத பெண்ணொன்று கண்டேன் யாரோ? நீ தான் எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்

மணமேடை தனில் மாலை சூடும் - உங்கள்
மன மேடை தனிலாட வேண்டும் - நெஞ்சம்
பிறர் காண முடியாத மேடை - அதில்
நடமாடிப் பயனேதும் இல்லை - அதில்
நடமாடிப் பயனேதும் இல்லை

துயிலாத பெண்ணொன்று கண்டேன் ஓஹோ எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்

தகுதியுள்ள ஓர் ஆடவனும் அவனுக்கேற்ற ஒரு பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட நிலையில் இருவரும் ஒருவரையொருவர் பார்க்கையில் கண்களின் வழியாகவே தம் காதல் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்தல் மரபு. வாய் வார்த்தைகள் தேவையில்ல்லை, காதல் கடிதமும் தேவையில்லை தூது போகத் தோழியும் தேவையில்லை.
கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய் சொற்கள்
என்ன பயனும் இல

என்று வள்ளுவர் இதனை உணர்த்துகிறார்.

கம்பர் எழுதிய ராமாயண காவியத்தில் மிதிலா நகரின் வழியே குரு விஸ்வாமித்திரருடனும் தம்பி இலக்குவனுடனும் சென்ற இராமன் உப்பரிகையில் நின்ற சீதையைக் காண, அவ்வாறு நின்ற சீதையும் ராமனைக் காண,

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்

என்று அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கண்ட மாத்திரத்திலேயே தம்மையறியாமல் உள்ளத்தே எழுந்த காதல் உண்ர்வுகளைப் பரிமாறிக் கொண்ட விதத்தை விளக்குகிறார்.

ஆனால் தற்காலத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரையொருவர் பார்க்கையில் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட போதிலும் பல காரணங்களால் மற்றவருக்குத் தன்மேல் உண்டான காதலை நிச்சயமாக உணர முடியாத நிலையில் குழம்புவதும் தவிப்பதும் சகஜம்.


நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்


திரைப்படம்: இரும்புத் திரை
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எஸ்.வி. வெங்கடராமன்
பாடியோர்: பி. லீலா, டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1960

ஓஓஓஓ ஓஓ ஆஆஆஆ ஆஆஆஆஆ

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

மனிதன் உயிர் வாழத் துணைபுரியும் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுடன் அவனது உள்ளமும் வளமாய் வாழ உறுதுணையாய் விளங்குவது இல்லம். இல்லம் சிறக்க சிறந்த இல்லத்தரசி வேண்டும். அவள் கணவனது மனதறிந்து அவனது அனைதது முயற்சிகளுக்கும் துணை புரிவதுடன் சந்ததி விளங்கத் தேவையான புத்திர சந்தானத்தைப் பெற்றுத் தந்து அவ்வாறு பெற்ற மக்களை சான்றோர்களாக வளர்க்கவும் கணவனுக்கு உதவி புரிவது அவசியம்.
மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டன்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

என்று இரண்டடிகளில் வள்ளுவர் இத்னை விளக்குகிறார். அவ்வாறு தனக்காகவே வாழ்ந்து, தனது வாரிசுகளை ஈன்று, தன்னுடன் அவர்களையும் காப்பாற்றவென்றே வாழும் தன் மனைவியை ஒருவன் கண்ணெனப் போற்றி வாழ வேண்டும். அவளை விடுத்து பிற பெண்களை மனதாலும் தீண்டத் தகாது.

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

என்று மஹாகவி பாரதியார் இதனை விளக்குகிறார்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

படம்: மன்மத லீலை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1976

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்

பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம் அருகினில் இருந்தென்ன லாபம்?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

கணவன் மனைவி உறவென்பது இருவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நிலைபெற்றிருக்க வேண்டிய ஒன்றாகும். அதற்கு ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் நம்பிக்கையே அடிப்படை. அத்துடன் ஒருமித்த கருத்தும் உண்மை அன்பும் கொண்டு விளங்கினால் குடும்பமே கோவிலாகும். இடையே சந்தேகமெனும் சாத்தான் உள்ளே நுழைந்தால் நம்பிக்கை எனும் அஸ்திவாரம் ஆட்டம் கண்டு உறவு முறிந்து விடும், வாழ்க்கையே நரகமாகி விடும். இத்தகைய சந்தேகத்தைப் பிறர் மனதில் விதைப்பதையே நோக்கமாகக் கொண்டு பிறரை ஏமாற்றிப் பிழைப்போர் பலர் இவ்வுலகில் உளர்.
அத்தகைய விஷமிகளை அடையாளம் கண்டு, வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். எதனையும் சந்தேகக் கண் கொண்டு பாராமல் தெளிந்த அறிவுடன் ஆராய்ந்தாலே உண்மை விளங்கும். காமாலைக் காரன் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள். அது போல சந்தேகக் கண் கொண்டு பார்த்தால் உண்மை விளங்காது.

"சம்சயாத்மா வினச்யதி" அதாவது, ஐயமுற்றோன் அழிவான், நம்பினவன் மோக்ஷமடைவான் என்று இறை பக்திக்காகச் சொல்லப் படும் வாக்கியமே குடும்ப உறவுக்கும் பொருந்தும். குடும்பம் ஒரு கோவில் அல்லவா?


தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்


படம்: தெய்வப் பிறவி
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தானே நம்பாதது சந்தேகம்

மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும் - மனித
மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும் - பல
விபரீத செயல்களை விளைவாக்கும்

தன்னைத் தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே ஏ..ஏ
ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
உள்ளத்தை ஒடவிடும் - பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் -காதில்
ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே வில்க்கிவிடும் - மனம்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மனிதனை விலங்காக்கிடும்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - சுத்த
ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - அது
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும்
ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்

தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்

பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாகும். பணம் இல்லாதவன் பிணம் என்பார்கள். அத்தகைய பணத்தினால் கிடைக்கத்தக்க வசதிகளை அனுபவிக்க அடிப்படையில் ஒருவருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைதல் அவசியம். பலர் வாழ்க்கைத் துணையைத் தேடுகையில் அதன் மூலமாகவே தனக்கு செல்வம் கிடைக்க வேண்டுமெனப் பெரும் முயற்சி செய்து அதற்கெனப் பல பொய்களை உரைத்து நாடகமாடுவதுண்டு.
அவ்வாறு பொய்யுரைத்துத் தேடிய துணை நிலைக்காது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளிலே என்பது போல அப்பொய் வெளியாகி வாழ்வே நரகமாகிவிடும். அதன் பிறகு எத்துணை செல்வம் இருந்தாலும் பயனில்லை.

இவ்வுண்மையை மிகத் தெளிவாக விளக்கிய தமிழ்த் திரைப்படம் அவசரக் கல்யாணம். இப்படத்தில் செல்வச் சீமாட்டியான ரமாபிரபாவை மணந்து அதன்மூலம் செல்வந்ததனாகலாம் என்று மனக் கோட்டை கட்டும் நாகேஷ் அவளிடமும் அவள் தந்தையிடமும் தான் சூரக்கோட்டைஜமீன்தாரரின் மகன் என்று பொய்யுரைத்து அவசரமாக அவளை மணமுடிக்கிறார். பின் அவரது குட்டு வெளியாகி அவர்கள் இருவரும் படும் அவதியை விளக்குகிறது திரைப்படம். இப்படத்தில் பக்கோடா காதர் வி.கே. ராமசாமியின் மகனாக நடிக்கையில் தினமும் நடு இரவில், "நைனா பசி" என்று உரத்த குரலில் சப்தமிடுவது மிக வேடிக்கையாகப் படமாக்கப் பட்டுள்ளது.

நாகேஷ், ரமாபிரபா இருவரின் முதலிரவுப் பாடலாக ரமாபிரபா பாடுவதாக அமைந்த பி. சுசீலா அவர்களின் தேனினும் இனிய குரலில் ஒலிக்கும் இப்பாடல் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிக்கத்தக்கது.


வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்


படம்: அவசரக் கல்யாணம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: பி. சுசீலா

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா ஆஆ கண்ணா ஆஆஆ

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்
போக வேண்டும் சூரக்கோட்டை
பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்
போக வேண்டும் சூரக்கோட்டை - அந்த
சூரக் கோட்டை சின்ன ராஜா - உங்க
தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொடங்கட்டும் கோகுல லீலைகளெல்லாம் - பின்பு
தொடரட்டும் கண்ணனின் சேவைகளெல்லாம்

வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்

மாமேதைகள் பலர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கையில் மனம் குதூகலிக்கிறது. தமிழ்த் திரையுலகில் நமது சிந்தையள்ளும் செந்தமிழ்ப் பாடல்களை இசை நயத்துடன் கதையில் வரும் சூழ்நிலைகளுக்கேற்ப இயற்றி, அவற்றுக்கு சிறப்பாக மெட்டமைத்துப் பாடி, அவற்றுக்கேற்ற பாவங்களுடன் திறம்பட நடித்து நாம் வாழ்வை உற்சாகமாகக் கழிக்க உதவிடும் மேதைகள் பலருடன் நாம் வாழ்கிறோம்.
நடிக மாமன்னன் சிவாஜி கணேசனும் நாட்டியப் பேரொளி பத்மினியும் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் நம் உள்ளங்களைக் கொள்ளையடிக்கும் வண்ணம் அமைந்துள்ளன. அவற்றுள் இரு மலர்கள் திரைப்படம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மிகவும் சுவாரஸ்யமான ஆரோக்யமான திரைக் கதையமைப்புடன், நடிகர்கள் அனைவரின் வளமான நடிப்புத் திறனையும் முழுதும் வெளிக்கொணரும் வகையில் அமைந்த இப்படத்தில் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் பயிலும் நடிகர் திலகமும் பத்மினியும் சிலப்பதிகாரத்தில் கோவலன், மாதவி இருவர் பற்றிய ஒரு நாட்டிய நாடகம் நடத்துகின்றனர்.

பத்மினி மயில் தோகையை முதுகில் அணிந்து கொண்டு ஒரு மயில் போலவே துள்ளித் துள்ளி ஆடுகையில் உடன் நடிகர் திலகம் பாடுவதாக அமைந்த இப்பாடல், டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் தன் கணீரென்ற குரலில் பாட, திரை வானை ஒரு கலக்குக் கலக்கியது.

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்

படம்: இரு மலர்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் - இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் - இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட - கலை
மானின் இனம் கொடுத்த விழியாட

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

மானின் இனம் கொடுத்த விழியாட - அந்த
விழி வழி ஆசைகள் வழிந்தோட - நல்ல

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் - நல்ல
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

கரிதநிதபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
கரிதநிதநிபதநிஸ்ரிநீ தபதமபமகரி
ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
ஸ்ரிரிகமநீ நிஸ்ஸ்ரிகதா தநிநிஸ்ரி பாதமாபமகரிஸ
ரிகமநி ஸ்ரிக மபதமா பதநி ஸ்ரிக நிரிஸ்தநி நித
மாபதநிஸ்கரி மாதவிப் பொன் மயிலாள்

தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம்
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தாததிம்த தத்திம் தத்திம்
பதநிஸ்நித தணதஜம் தபஜுணுத ஜம் ஜம்
பதநி பதப ஜம் தஜம் தமதணகு ஜம் ஜம்

பமபதீம் தகிட நிதம ஜம் ஸ்ரித ஸ்நித சுகம் தகிட கரிநிதஜம்
பதநிஸ் தஜம் ஸ்ரிகம தகிடதஜம் கரிநீ ததரித ஜம்
ரிகமபா பதா தஜம் தணம் ஸ்கரி நிரிஸ் தணதா ப ஜணும்
ஸ்ரிகமாபதநீஸ்ரி கரிநீத தரிகிணதோம்
ஸ்ரிகாமபதாநிஸ் ரிஸ்நீத தரிகிணதோம்
ரிககாரி நிஸ்தாநி கரிநீத தரிகிணதோம் தரிகிணதோம் தரிகிணதோம்

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்

முருகா என்றதும் உருகாதா மனம்

மாலையில் மன்மதனின் மலர்க்கணைகளின் தாக்கத்தால் மயக்கமுற்று, இரவின் வருகைக்காக ஏங்கி, இரவிலே காதல் கதைகள் பேசி மயக்கம் தீர்ந்து, உறங்கி விழிக்கவும், கடமை வந்து கதவைத் தட்டுகையில் மனதில் சற்றுத் தடுமாற்றம். வாழ்வின் இன்னல்களை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போடும் நேரம் வந்துவிட்டதே!
உலகம் எனும் போர்க்களத்தில் கடமை எனும் போர் புரியத் துணிவெனும் ஆயுதம் கொண்டு புறப்படுகையில், மனம் சாந்தியடைந்து நம்பிக்கையில் நிரம்ப இறைவனருளை வேண்டிப் பெறும் தருணம் வந்து விட்டது. இறைவன் உறைவது இசையிலல்லவோ?

கடமைகளை ஆற்றத் தேவையான சக்தியைத் தந்தருளி, வெற்றிக்கு வழி வகுக்க வேண்டி, உள்ளம் உருகிப் பாடித் துதித்தால் கருணை மழை பொழிந்து, சகல பயங்களையும் நீக்கி அருளும் கலியுகக் கடவுள் கந்தனேயன்றோ?

முருகா என்றதும் உருகாதா மனம்

படம்: அதிசயத் திருடன்
இயற்றியவர்: தஞ்சை என். ராமையா தாஸ்
இசை: எஸ். தக்ஷிணாமூர்த்தி, கே பிரசாத் ராவ்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1958

முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா

முறை கேளாயோ குறை தீராயோ மான் மகள் வள்ளியின் மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா

மறையே புகழும் மாதவன் மருகா
மறையே புகழும் மாதவன் மருகா மாயை நீங்க வழி தான் புகல்வாய்
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே ஏ..ஏ... ஏ...
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய் அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்

முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா

ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
ஜென்ம பாப வினை தீரவே பாரினில் சிவமே பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா... ஹே சிவ பாலா.... தவசீலா ஹே சிவ பாலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா

முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா