திங்கள், 23 நவம்பர், 2009

வா கலாப மயிலே

இசைக்கு மட்டுமன்றி இயல் இசை நாடகம் உள்ளிட்ட பல கலைகளுக்கும் வித்திட்டது காதலே என்பதை சற்று சிந்தித்துப் பார்த்தால் புரியும். காதல் ஒவ்வொருவரது உயிர்த் துடிப்பாக விளங்குவதென்பது உலகறிந்த ரகசியம். அரசகுமாரியான ஒரு அழகு தேவதையை எதேச்சையாக ஒரு நந்தவனத்திலே கண்டு அவளது காதலில் விழுகிறான் காளை ஒருவன்.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவனால் அவளுடன் பேச முடியவில்லை, அவள் மேல் மனதில் உதித்த காதற் கவிதையையும் எடுத்துரைக்க நேரமில்லாமல் போகிறது. இக்கட்டான இந்நிலையில் அவன் என்ன செய்வான். துணிந்து மாறுவேடமணிந்து அரண்மனை வாயிலில் இருந்த ஓர் மரத்தடியில் அமர்ந்து அவள் மேல் தன் மனதில் எழுந்த பாடலை உரக்கப் பாடுகிறான். அவன் பாடும் பாடலோசை காதலியின் காதில் விழ அவளும் அனலில் விழுந்த புழுவாய்த் துடிக்கிறாள். கன்னிப்பெண்ணான அவள் அரசகுமாரியாக இருந்த போதிலும் அரண்மனையின் கட்டுக் காவலை மீறி வெளியே செல்ல முடியாத நிலை. காளை கன்னியை சந்தித்தானா? தன் காதலைச் சொன்னானா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த காத்தவராயன் திரைப் படத்தைப் பார்த்தால் விடை கிடைக்கும். காத்தவராயன் முருகனின் அவதாரமென்றும் பார்வதி தேவியின் பிள்ளை எனவும் சொல்லப்படுகிறது.

வா கலாப மயிலே

படம்: காத்தவராயன்
நடிகர்கள்: சிவாஜி கணேசன், என்.எஸ். கிருஷ்ணன், சாவித்திரி, கண்ணாம்பா, ஈ.வி. சரோஜா
பாடலாசிரியர்: டி.என். ராமையாதாஸ்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
தயாரிப்பு: டி.ஆர். ராமண்ணா

வா கலாப மயிலே வா கலாப மயிலே ஓடி நீ
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே

வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே வா
வந்தேன் கனியமுதம் தந்தேன் மகிழ்ந்திடவே
வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே

வாழ்நாளில் இனி நான்
வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா
வண்ணத் தமிழ்க் கலையே துள்ளித் துள்ளி விளையாட வா
நீ வா கண்ணே வா கலாப மயிலே ஓடி நீ வா கலாப மயிலே

ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
ஆலையின் கரும்பானேன் ஆழியின் துரும்பானேன்
காலமெல்லாம் உன்தன் காதலில் மெலிந்தேனே
காலமெல்லாம் உன்தன் காதலில் மெலிந்தேன்
விண்ணோடு விளையாடும் வளர்மதியே
விண்ணோடு விளையாடும் வளர்மதியே என்தன்
கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே

மின்னலிடைக் கொடியே அன்னநடை அழகோடு வா
மின்னலிடைக் கொடியே அன்னநடை அழகோடு வா
வாராயோ என்னைப் பாரயோ கலி தீராயோ
கண்ணே வாராயோ என்தன்
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா ஆரியமாலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக