ஞாயிறு, 20 டிசம்பர், 2009

நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே

இவ்வுலகமும், இவ்வுலகை உள்ளடக்கிய எல்லையில்லாப் பிரபஞ்சமும் எண்ணிறந்த உயிர்களுக்கு வாழ்விடமாக என்றம் விளங்குகின்றன. நம் கண்ணுக்கும் பிற புலன்களுக்கும் புலப்படுவனவும் புலப்படாதனவுமான இவ்வுயிர்கள் அனைத்தும் என்றேனும் ஒரு நாளில் தோன்றி, பல விதமான இன்ப துன்பங்களுக்குள்ளாகி, என்றோ ஒரு நாள் உயிர் நீக்கும் உண்மை நிலையை மனதாலும் அறிவாலும் நாம் உணர்ந்தபோதிலும் நமக்கு மட்டும் என்றும் இன்ப வாழ்வே நிலைக்கே வேண்டும், துன்பங்களே நேரக்கூடாது, மரணமடையாமல் என்றென்றும் சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் எனும் நப்பாசை இல்லாதவர் உலகில் மிகவும் அரிதே.

நம்மில் மகா ஞானிகளாக விளங்கிடும் ஒரு சிலர், இவ்வுண்மையை ஏற்று, இவ்வுலக இன்ப துன்பங்களைத் துறந்து, தான் யார் என்பதை உணரவைக்க வல்லதான மெய்ஞான மார்க்கத்தில் தம் மனதையும் அறிவையும் செலுத்துவதையும் நாம் அறிவோம். இஞ்ஞான மார்க்கம் ஒரு சிலருக்கு மட்டும் உரியதா? நம்மில் பிறர் அனைவரும் இதற்குத் தகுதியற்றவரா? எனும் கேள்வி நம் மனதில் எழுமாகில், நாமும் அத்தகைய உயர்ந்த ஞான மார்க்கத்தில் நம் மனதையும் அறிவையும் செலுத்தத் தொடங்கியுள்ளோம் என்பதை அறிவோமாக.


நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே


திரைப்படம்: சின்ன ஜமீன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியவர்: இசை ஞானி இளையராஜா
ஆண்டு: 1993

நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே - என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே - என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி
யாரைத் தான் கேட்டானோ? ஹோ
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே

என்னெப் பெத்து ராசையான்னு பேரு வச்ச ஆத்தா தான்
பொன்னெப் பெத்த சந்தோசத்தில் போனாளம்மா காத்தா தான்
என்னெப் பெத்து ராசையான்னு பேரு வச்ச ஆத்தா தான்
பொன்னெப் பெத்த சந்தோசத்தில் போனாளம்மா காத்தா தான்
உரைச் சுத்தி நாள் முழுக்க ஓடும் ஆறு நானம்மா
சின்னப் பிள்ள நான் தானுன்னு சொல்லும் இந்த ஊரம்மா
சொல்லட்டுமே சொன்னா என்னம்மா? ஹோய்

நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே - என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே

ஓ...
எந்த நாளும் எண்ணெ கூட ஒட்டிடாது தண்ணீரு
என்னெ அந்த எண்ணெ போல எண்ணிக் கொள்ளும் இவ்வூரு
எந்த நாளும் எண்ணெ கூட ஒட்டிடாது தண்ணீரு
என்னெ அந்த எண்ணெ போல எண்ணிக் கொள்ளும் இவ்வூரு
இங்கிருக்கும் பேர்களெல்லாம் என் மனசெப் பாக்கலே
எங்கதையப் பாசமாக ஒன்னப் போலக் கேக்கல்லே
கேக்கா விட்டாக் குத்தம் என்னம்மா? ஹோய்

நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி
யாரைத் தான் கேட்டானோ? ஹோ
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே

ஆகிரா