வியாழன், 30 ஜூன், 2011

வீடு வரை உறவு வீதி வரை மனைவி

நிலையாமை ஒன்றையன்றி நிலையான தொன்றுமில்லை
நினையாதே இதனை மாந்தர் நித்தமும் புவியிதன் மேல்
பலகாலம் பாடுபட்டுப் பணமதைத் தேடி வைத்தே
சிலகாலமேனும் இங்கே சிவமதை நினைந்திடாதே
உளமார ஒருவர்க்கேனும் உதவிடா நெஞ்சத்தோடே
உழன்றுழன்று ஒர் நாள் தன்னில் உலகைவிட்டகலுவாரே

ஆதியும் அந்தமும் இல்லாத எங்கும் பரந்து விரிந்த இவ்வுலகில் மிகவும் சொற்ப காலம் மட்டுமே வாழும் நிலையில் வந்து பிறந்து பின் இறந்து போகும் நாம் அஞ்ஞானத்தில் உழன்று பணம் சம்பாதிப்பதொன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்நாளை வீணாளாக்குகிறோம். இடையில் வரும் உறவுகளான மனைவி, மக்கள் மற்றும் சுற்றத்தாரை நிரந்தரமென நினைத்துக் குறுகிய மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு நாம் தேடும் செல்வமனைத்தும் அவர்களுக்கும் நமக்கும் என்று மட்டுமே செலவழிக்கிறோம்.

இப்பரந்த உலகில் நம்மைத் தவிரப் பாமர மக்கள் பலர் வாழ்வதையும், நம்மிடம் உள்ள பொருட்செல்வம் ஏதும் இல்லாத நிலையில் அவர்கள் ஏழ்மையில் உழல்வதையும் கண்ணாரக் கண்டும் அவர்களுக்கு உதவி செய்ய நாம் முன்வருவதில்லை. இத்தகைய சுயநலப் போக்கினால் நாட்டை ஆள வருவோரின் தகுதியை அறிந்து கொள்ளாது அவர்கள் தரும் வாக்குறுதிகளை உண்மையென்று நம்பி நம்மை ஆளும் பொறுப்பை அவர்களுக்கு அளித்து அல்லலுறுகிறோம்.

ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று கூறிக்கொண்டு ஏழைகளை மேலும் ஏழைகளாக ஆக்க மதுவெனும் அரக்கனை உலகில் உலவவிட்டு கஞ்சிக்கும் கூழுக்கும் வழியின்றி இருப்பினும் மதுவருந்தவென்றே ஈட்டும் பொருளனைத்தையும் அவர்கள் செலவிடும் நிலைமையை உருவாக்கி நாட்டில் பஞ்சத்தைத் தலைவிரித்தாட வைத்து ஒரு சிலர் மட்டும் நாட்டில் இருக்கும் வளங்கள் யாவையும் அனுபவிக்கும் சுநலவாத அரசியலை மாற்றி நாம் வாழ்கின்ற வரைக்கும் உலக நன்மைக்காக ஏதேனும் முயற்சி செய்து வாழும் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்வோம்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே!

வீடு வரை உறவு வீதி வரை மனைவி

ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா?

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கடைசி வரை யாரோ?

உ..உ ஆயி ஆரிரோ உ..உ ஆயி ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ

தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கடைசி வரை யாரோ?

சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்
சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்
சென்று விடு என்பான்

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கடைசி வரை யாரோ?

விட்டு விடும் ஆவி பட்டு விடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு
சூனியத்தில் நிலைப்பு

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கடைசி வரை யாரோ?

மாலையில் யாரோ மனதோடு பேச

14 செப்டம்பர் 2010

பிரபல பிண்ணனி பாடகி ஸ்வர்ணலதா-அகால மரணம்!

http://www.peopleofindia.net/arts/movies/20100912_swarnalatha.php

செப்டம்பர் 12, 2010

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி சுவர்ணலதா இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானர்.

இறக்கும் போது அவருக்கு வயது 37.நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்படடுவந்த அவர், இன்று காலை
சிகிச்சை பலனின்றி காலமானார். இரண்டு பாடல்கள் சுவர்ணலதாவை சட்டென ஞாபகப்படுத்தும்.இன்று வரை பழமை விரும்பிகள் உச்சரிக்கும் 'மாலையில் யாரோ மனதோடு பேச'', இளைஞர்களின் ஆல்டைம் பேவரிட் 'எவனோ ஒருவன் வாசிக்கின்றான்'. இந்தப்பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ணலதா தான்!
1995 ல் பாரதிராஜாவின் கருத்தம்மா திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'போறாளே பொண்ணுத்தாயி' என்ற பாடலை பாடி அனைவரின் உதட்டிலும் தன் பெயரை முணுமுணுக்க வைத்தார். இப்பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார்.

கேரளாவில் பிறந்த இவர், தன் பெற்றோரை சிறிய வயதிலேயே இசையில் நாட்டம் பெற்றார். 1989 ம் ஆண்டு
முதல் பாடிய பாடல், 'மாலையில் யாரோ மனதோடு பேச' தொடர்ந்து பாம்பே திரைப்படத்தில் 'குச்சி குச்சி
ராக்கம்மா', ஜெண்டில் மேன் படத்தில் 'உசிலம் பட்டி பெண்குட்டி', காதலன் படத்தி 'முக்காலா', அலைபாயுதே
படத்தில் 'எவனோ ஒருவன்' என ஏ.ஆர்.ரஜ்மான் இசையில் ஆஸ்தான பாடகியானார்.

இவர் பாடிய, 'ஆட்டமா, தேரோட்டமா', சின்ன ஜமீனில் பாடிய 'வனப்புத்தட்டு புல்லாக்கு', சத்ரியனில்
"மாலையில் யாரோ", சின்னத்தம்பியில் 'போவோமா ஊர்கோலம்', சின்னத்தாயி படத்தில் பாடிய 'நான்
ஏரிக்கரை" ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. பட்டித் தொட்டிகளிலெல்லாம் முழங்கியது
தளபதி படத்தில் இவர் பாடிய 'அடி ராக்கம்மா கையத்தட்டு'. தேவர் மகனில் இடம்பெற்ற 'மணமகளே,
மருமகளே' என்ற அருமையான பாடலுக்கு சொந்தமானவரும் சுவர்ணலதாவே என்பது குறிப்பிடத்தக்கது.
வீராவின் இரண்டு ஹிட் பாடல்களான 'மாடத்திலே கன்னி மாடத்திலே', 'மலைகோயில் வாசலில்' ஆகிய
இரண்டையும் பாடியவர் சுவர்ணலதா.

தமிழகத்தின் இசை விரும்பிகளின் மிகப்பிரியமான பாடகியாக விளங்கிய சுவர்ணலாதாவின் மரணம்,
தென்னிந்திய இசையுலகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

V.Shrinivas (Seenu)

மாலையில் யாரோ மனதோடு பேச

திரைப்படம்: சத்திரியன்
இயற்றியவர்:
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ?
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ?

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ?
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ?

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ?
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ?

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது