திங்கள், 23 நவம்பர், 2009

உன்னால் முடியும் தம்பி தம்பி

வெறுமனே நல்ல காலம் வருகுது, சாதிகள் தொலையுது, சண்டைகள் தீருது என்று சொல்வதால் நல்ல காலம் வந்து விடாது. மந்திரத்தால் மாங்காய் வீழ்வதில்லை. அவ்வாறு நல்ல காலம் வருவதற்கு உழைக்க வேண்டும். யார் உழைக்க வேண்டும்? பணி ஓய்வு பெறும் வயதைக் கடந்து நாளொரு வியாதியும் பொழுதொரு பிரச்சினையுமாய் வாழ்க்கையைத் தள்ளும் வயோதிகரா? அல்ல. குருதியில் துடிப்புள்ள இளைஞர்கள் தங்கள் நோக்கத்தை நாட்டினை வலிமை மிக்கதாக ஆக்கும் பணிக்கு எனத் திருத்தி அமைத்துக் கொண்டு சமுதாய சீர்கேடுகளை நீக்கிப் புதியதோர் உலகம் படைத்திடப் பாடுபடுதல் வேண்டும்.
ஆனால் இன்றைய இளைஞர்களில் பலர் தங்களால் இத்தகைய மாபெரும் சாதனையை நிகழ்த்த இயலுமா என ஐயுற்று, ஏதோ கிடைத்த பணியைச் செய்து, ஊதியம் ஈட்டி, உயிர் வாழ்ந்து கொண்டு, தங்களால் இயன்ற உதவியை நண்பர்களுக்கும் நம்மில் நலிவடைந்தோருக்கும் செய்தால் போதும் என்ற நோக்கில் செயல்படுகின்றனர். ஆஞ்சனேயனுக்குத் தனது பலம் தெரியாத நிலையில் அவனது பலத்தை அவனுக்கு நினைவுறுதியதாலேயே அவனால் கடலைக் கடந்து, சீதையைக் கண்டு ராமாயண காவியம் சுபமாக நிறைவேற உதவ முடிந்தது.

நம் நாட்டின் இளைஞர்களுக்கு அவர்களது பலத்தை நினைவூட்டி, "நாளைய நாட்டின் தலைவனும் நீயே, நம்பிக்கை கொண்டு வருவாயே, உனக்கென ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு" என்று அவர்களைத் தட்டி எழுப்ப வல்லதொரு பாடல்:

உன்னால் முடியும் தம்பி தம்பி

திரைப்படம்: உன்னால் முடியும் தம்பி
இயற்றியவர்: பொன் மகாலிங்கம்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
இசை: இளையராஜா

உன்னால் முடியும் தம்பி தம்பி உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்

உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

நாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கென ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு

உன்னால் முடியும் - அட உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் சாரய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிற்பான் குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்

உன்னால் முடியும் - அட உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

கல்லூரி பள்ளி இல்லாத ஊரை கையோடு இன்றே தீ மூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவெனும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்

க கஸ்ம தபத நிதநி
மமமமகஸ மமமம தம ததததநி நிதநிநிநிநி
ஸ்ஸ்ஸ் நிதநி தநித மதம
நிஸ்நி தஸ்நி தநித மஸக

உன்னால் முடியும் அட உன்னால் முடியும் ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து துங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையயும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக