திங்கள், 23 நவம்பர், 2009

பிறக்கும் போதும் அழுகின்றாய்

வாழ்க்கை வாழ்வதற்கே. உலகில் வந்து பிறந்த பின்னர் வாழத்தான் வேண்டும். அவ்வாழ்வை இன்பமுள்ளதாக வாழ்வதும், கவலைப்பட்டு அனுதினமும் செத்துச் செத்துப் பிழைப்பதும் அவரவர் மனப்பாங்கைப் பொறுத்தது. இருக்கும் சுகங்களை அனுபவிக்கக் கற்றுக்கொள்ளும் மனிதன் இன்பமடைகிறான். இல்லாததையே எண்ணிக் கவலை கொண்டு ஏங்குபவன் துன்பமடைகிறான்.
அழுதுகொண்டே பிறக்கும் மனிதன் அழுதுகொண்டே இறக்கிறான். இடைப்பட்ட காலத்திலாவது இன்பமாய் வாழத் தெரியாதவன் வாழ்ந்தும் வாழாதவனே.

சுயநலம் கொண்டு வாழ்பவன் என்றும் எதைக்கொண்டும் திருப்தியடைவதில்லை. தன்னிடம் உள்ள பொருளைப் பிறருக்கு அளித்து, அவர்களது கவலை தீர்த்து, அவர்களது மகிழ்ச்சியில் தானும் மகிழ்பவன் எல்லையில்லாத பேரின்பத்தை எய்துகிறான்.

பிறக்கும் போதும் அழுகின்றாய்

படம்: கவலை இல்லாத மனிதன்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
இயற்கை சிரிக்கும்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
பெரும்பேரின்பம்

பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக