திங்கள், 23 நவம்பர், 2009

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். பணத்தின் முன்னால் சத்தியம், தர்மம், நீதி, நேர்மை, மனிதாபிமானம் உட்படப் பிற நற்குணங்கள் யாவும் அகன்று மனிதன் சுயநலவாதியாகும் கேட்டை நாம் கண்கூடாகக் காணும் காலமிது.
கருப்புப் பணத்தையும், சாராயம் மற்றும் பிற முறைகேடான வழிகளில் ஈட்டிய பொருளையும் மூலதனமாகக் கொண்டு அரசியல் ந்டத்துவது வாடிக்கையாகி விட்ட நிலையில், உள்ளத்திலே கள்ளத்தனத்தை ஒளித்து வைத்து உத்தமர் போல வேடமிட்டு மேடையேறி, நான் சத்தியசந்தன், நேர்மைக்காகப் பாடுபடுபவன், ஏழைகளின் தோழன் என்றெல்லாம் பொய்யுரைத்து, மக்களை ஏமாற்றி ஆட்சி பீடத்தில் அமர்ந்த பின்னர் தன் சுயரூபத்தைக் காட்டுவதும், பின்னர் சில காலத்தில் மீண்டும் உத்தம வேஷம் போடுவதுமாகத் தொடர்ந்து அரங்கேறும் நாடகங்கள்.

இத்தகைய நாடகங்களையும் மக்கள் மீண்டும் மீண்டும் நம்பிச் சீரழியும் காலம் என்று மாறுமோ?

இத்தகைய பொய்யான முகங்கள் அரசாள்கையில் சாமான்யனுக்கு உண்மையின் மீதுள்ள பற்று மாறி அவனும் போலியாக வாழத் தலைப்படுகிறான். நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிக்கிறான்.

இது இக்கால வாடிக்கை. எவ்வளவு காலம் அரங்கேறுமோ இவ்வேடிக்கை?

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்

படம்: பராசக்தி
வருடம்: 1952
இயக்குனர்: ஆர். கிருஷ்ணன், எஸ். பஞ்சு
வசனம்: கலைஞர் கருணாநிதி
நடிகர்கள்: சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், சஹஸ்ரநாமம், பண்டரிபாய், சரோஜினி
இசை: ஆர். சுதர்சனம், R Sudarsanam

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே

காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி
காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி குதம்பாய் சாட்சிக் கோர்ட் ஏறாதடி
பை பையாய்ப் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய் மெய் மெய்யாய்ப் போகுமடி

நல்லவரானாலும் ம்.. ம்..ம்..
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது - கல்வி
இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே குதம்பாய் வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே..ஏ..
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - சில
முட்டாப் பயலையெல்லாந் தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந்தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே..ஏ..
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா தாண்டவக்கோனே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக