வியாழன், 7 ஜனவரி, 2010

அஆஇஈ சொல்லித் தருதே வானம்

விஸ்தாரமான ராக ஆலாபனையுடன் ஸ்வர சஞ்சாரங்களும் விதவிதமான சங்கதிகளுடன் தனி ஆவர்த்தனமும் கலந்து படைக்கப்பட்ட சாஸ்திரிய சங்கீதத்தை சற்றே எளிதாக்கும் விதமாக, ராக ஆலாபனை, ஸ்வர சஞ்சாரங்களைச் சிறிதளவு குறைத்து சினிமாப் பாடல்களை அமைத்த காலம் மாறி, சாஸ்திரிய சங்கீதத்தை மேலும் எளிமையாக்கி பாமர மக்களும் கேட்டு இன்புறும் வண்ணம் மெல்லிசையாக வடிவமைத்துத் தந்த தமிழ்த் திரையுலக மேதைகள், காலப்போக்க்கில் மேற்கத்திய இசையின் பரவலைத் தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகவே, தாங்களும் மேற்கத்திய இசை வடிவில் தமிழ்த் திரைப் பாடல்களை வடிவமைக்கத் தொடங்கி அதில் உலக சாதனையும் படைத்துள்ளனர்.

இதே கதியில், அனேகப் பாடல்கள் பெரும்பாலும் பரதம் முதலான பாரம்பரிய நடனங்களையும் நடனங்கள் இன்றி வரு்ம் காட்சிகளின் சூழ்நிலைகளையும் மனதில் கொண்டு இயற்றி இசையமைக்கப் பட்ட வழக்கம் மாறி மேற்கத்திய நடனம் இளைய தலைமுறையினரிடையே ஏற்படுத்திய தாக்கத்துக்கு ஈடு கொடுக்கும் விதமாக அமைக்கப் படுகின்றன. இசை மாறினாலும், நடை, உடை, பாவனைகள் மாறினாலும் தமிழின் மீதுள்ள ஈடுபாடும், இயற்கையின் மேல் கொண்ட காதலும், நமது தாய் மண்ணின் மாண்பினைப் போற்றும் பண்பும் இன்னமும் நமது நாட்டு மக்களுக்கு அன்று போலவே இன்றும் இருப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது.


அஆஇஈ சொல்லித் தருதே வானம்


திரைப்படம்:ஆ-ஆ-இ-ஈ
இயற்றியவர்: ப்ரியன்
இசை: விஜய் ஆன்டனி
பாடியோர்: தினேஷ், ராகுல் நம்பியார்
ஆண்டு: 2009

ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா
ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா
ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா
ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா
ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா

சிம்சுகும்குகும் சிம் சும்சும் சிகு சிம்சுகும்குகும் சிம் சும்சும்
சிம்சுகும்குகும் சிம் சும்சும் சிகு சிம்சுகும்கும் சிம் சும்சும்

அஆஇஈ சொல்லித் தருதே வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்
நதிகள் சொல்லும் ரகசியம் கேட்டு
மரங்கள் மெல்லத் தலையை ஆட்டும்
பச்சை சேலை கட்டிக் கொண்டு
வயல் வெளிகள் முகம் காட்டும்
ஒற்றைக் காலில் பூக்கள் கூட்டம்
ஒன்றாய் சேர்ந்து ஜாடை பேசும்
பறவை போல இதயம் மாறி தூரம் தூரம் போகும்

அஆஇஈ சொல்லித் தருதே வானம், வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம், உருவம் தீட்டிச் சென்றது மேகம், மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்

லல்லலலை லைலைலைலோ லல்லலலை லைலைலைலோ
லலலலலை லைலைலைலோ லைலைலைலைலோ
லல்லலலை லைலைலைலோ லல்லலலை லைலைலைலோ
லல்லலலை லைலைலைலோ லைலைலைலைலோ

கமபநிஸ் நிஸ் நிஸ் நி ஸரிகம காரிகாரி ஸ்நீஸ்
பாதநீஸ் கமகம ரிகரிகஸ

ஓ காற்றில் கலந்திருக்கும் மண்வாசம்
எங்கள் மனசுக்குள்ளும் குடியிருக்கும்
ஊருக்கே உண்டான தனிப்பாசம்
எங்களுடைய பேச்சிலும் மணந்திருக்கும்
பகிர்ந்து உண்ணும் கூட்டாஞ்சோறின்
ருசியை வெல்லும் உணவில்லை
தாவணிப் பெண்கள் அழகுக்கு இங்கே
உலக அழகியும் இணையில்லை
சொத்து சுகங்களால் மனசு நிறையலாம்
வயிறு நிறையாது நண்பா
நெல்மணிக்கு மாறாகத் தங்கத்தை நாமும் தான்
தின்ன முடியாது நண்பா ஆஆஆஆஆஆ

அஆஇஈ சொல்லித் தருதே வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்

பூவாசம் உல்ல லவுலவுலே பூவாசம் உல்ல லவுலவுலே
பூவாசம் உல்ல லவுலவுலே பூவாசம் உல்ல லவுலவுலே
பூவாசம் உல்ல லவுலவுலே பூவாசம் உல்ல லவுலவுலே
பூவாசம் உல்ல லவுலவுலே பூவாசம் உல்ல லவுலவுலே
லவுலவுலவுலவுலே
ஊஹூ ஊஹூஹு ஆஹாஆஹாஹாஹாஹா

காலையில் கண் விழிக்கும் சூரியனும்
பனியில் முகம் துடைத்தே தலை சீவும்
புழுதிகள் சுற்றித் திரியும் சாலைகளில்
மழைத் துளி கை கோர்த்தே நடைபோடும்
கள்ளம் கபடம் இல்லா மனதில் சோகம் தங்க முடியாதே
சேர்ந்து வாழும் வாழ்க்கை போலே சுகமும் இங்கு கிடையாதே
ஒவ்வொரு நொடிகளும் நமக்காய்ப் பிறந்தது
முழுசா அனுபவி நண்பா - நம்
எதிரி எதிரிலே வந்து நின்றாலும்
அன்பு காட்டுவோம் நண்பா ஆஆஆஆஆஆ

அஆஇஈ சொல்லித் தருதே வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்
நதிகள் சொல்லும் ரகசியம் கேட்டு
மரங்கள் மெல்லத் தலையை ஆட்டும்
பச்சை சேலை கட்டிக் கொண்டு
வயல் வெளிகள் முகம் காட்டும்
ஒற்றைக் காலில் பூக்கள் கூட்டம்
ஒன்றாய் சேர்ந்து ஜாடை பேசும்
பறவை போல இதயம் மாறி தூரம் தூரம் போகும்

அஆஇஈ சொல்லித் தருதே வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்

புதன், 6 ஜனவரி, 2010

சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்

இவ்வுலகில் எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. நாமே நமக்கு சொந்தமில்லாத போது பிற பொருட்கள் நமக்கு எவ்வாறு சொந்தமாக முடியும்? இவ்வுண்மையை உணராத மனிதன் ஆணவ மிகுதியால் தன்னிலும் வலிமை குறைந்த சக மனிதரை அடக்கி ஆளும் எண்ணம் கொண்டு பொருளாராதார ஏற்றத் தாழ்வை உருவாக்கி, பொருளற்ற ஏழை எளியோரைப் பிறர் செய்யத் தயங்கும் துப்புறவு முதலிய பணிகளைச் செய்ய வைத்து, நாளடைவில் தீண்டாமை எனும் பேயை உருவாக்கினான். இதனை மனிதர் குலத்துக்கு உணர்த்தி, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும் சேவை மனப்பான்மை கொண்ட பல ஞானிகள் தங்களது அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்து உலகுய்யவென்று வகுத்ததுவே இறைத் தத்துவம்.

தீண்டாமை உணர்வினால் பிற மனிதர்களால் இழிகுலத்தவர் என்று கருதித் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவன் தன் இறை பக்தியால் பிற மனிதர் அனைவரிலும் மேம்பட்டு, இறையருளைப் பெற்ற கதையே நந்தனார் சரித்திரம். இதனை "நந்தனார் சரித்திரக் கீர்த்தனை" என்ற அழகிய பாடல் தொகுப்பாக இயற்றி நமக்களித்தவர் கோபாலகிருஷ்ண பாரதி. ஒரு கிராமத்தில் ஒரு நிலச்சுவான்தாரரிடம் பணியாளாக இருக்கும் நந்தன் மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று சிதம்பரத்தில் குடிகொண்டிருக்கும் நடராஜப் பெருமானுக்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாட்டைக் காண விரும்ப, "மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழித் திருநாளா?" என்று அவனது எஜமானர் அவரைத் தடுக்க, நந்தன் மீண்டும் மீண்டும் மன்றாடி சிதம்பரம் போக அனுமதி வேண்ட, அவனை எவ்வாறாகிலும் தடுத்து நிறுத்தவும் அதே சமயம் அவனது நச்சரிப்பிலிருந்து விடுபடவும் எண்ணிய எஜமானர் ஒரே நாளில் அவரது நிலத்தில் விளைந்திருந்த பயிர்களையெல்லாம் அறுவடை செய்தால் அவரை சிதம்பரம் போக அனுமத்திப்பதாக வாக்களிக்க, செய்வதறியாது நந்தன் திகைத்து நிற்கவும், இறைவனருளால் விடியுமுன்னரே அனைத்துப் பயிர்களும் அறுவடை செய்யப்பட்டிருக்கக் கண்டு ஆண்டவனின் மகிமையை எண்ணி வியக்கிறார்.

வேறு வழியின்றித் தன் வாக்குறுதியைக் காக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்ட எஜமானரும் அவரை அனுமதிக்க, நந்தனார் தில்லை நடராஜரைத் தரிசித்து முக்தி பெற்றதாக நந்தனார் சரித்திரம் கூறுகிறது.

வாருங்கள், நந்தனார் கண்டு மகிழ்ந்த சிவலோக நாதனை நாமும் தரிசிப்போம்.


சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்


திரைப்படம்: நந்தனார்
இயற்றியவர்: கோபாலகிருஷ்ண பாரதி
இசை: எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஸ்வரராவ்
பாடியவர்: எம்.எம். தண்டபாணி தேசிகர்
ஆண்டு: 1942

சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்

அற்ப சுகத்தை நினைந்தோம்
அற்ப சுகத்தை நினைந்தோம் - அரன்
திருவடிகளை மறந்தோம் - நாம்
அற்ப சுகத்தை நினைந்தோம் - அரன்
திருவடிகளை மறந்தோம்

கற்பித மாயா ப்ரபஞ்சமீதை
கற்பித மாயா ப்ரபஞ்சமீதை
கானல் ஜலம் போலே எண்ணி

சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்

ஆசைக் கடலில் விழுந்தோம் - நல்
அறிவுக்கறிவை இழந்தோம் - நாம்
ஆசைக் கடலில் விழுந்தோம் - நல்
அறிவுக்கறிவை இழந்தோம்

பாசமகல வழி தேடாமல்
எமப் பாசமகல வழி தேடாமல்
பரதவிக்கும் பாவியானோம்

சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம்

திங்கள், 4 ஜனவரி, 2010

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்

மனிதத் தாயின் கருவறையிலிருந்து வெளியேறி பூமித்தாயின் மடியில் விழுந்த நாள் முதலாய் நாம் காண்பவற்றையும், பிற புலன்களால் உணர்பவற்றையும் தெரிந்து கொள்ளும் முயற்சியில் புதிய அறிவையும் அனுபவங்களையும் பெற்று வாழ்ந்து வருகின்ற நிலையில், பொறுப்பேதுமின்றி விளையாடித் திரியும் பிள்ளைப் பருவம் முடிந்ததும், வாழ்க்கை ஒரு போராட்டம் என உணர்கிறோம். அப்போராட்டத்துக்கு நம்மைத் தகுதியுடையவர்களாக ஆக்கிக்கொண்டு பல விதமான இலக்குகளை விதித்துக் கொண்டு அவற்றை அடையும் முயற்சியில் தொடர்ந்து செயல்படுகிறோம். காலம் செல்லச் செல்ல இலக்குகள் மாறுவதும், வெற்றி, தோல்வி எனும் இருவேறு நிலைகளால் மனம் ஒரு நிலையில் நில்லாமல் அலைபாய்வதும் எனப் பல காலம் இருந்த பின்னர் உலகே மாயம், வாழ்வே மாயம் எனப்பல தத்துவங்களைப் பற்றிப் பேசி ஒரு வித விரக்தி நிலையில் நாம் காலத்தைக் கழிக்கிறோம்.

இரவும் பகலும் மாறி மாறி வருவதைப் போலவும், கோடை, வசந்தம், குளிர்காலம் என்று பருவ காலங்கள் மாறி மாறி வருதல் போலவும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் வெவ்வேறு நிலைகளை உணர்ந்த போதிலும் அவ்வித வேற்றுமைகளால் மனம் சஞ்சலமடையாமல், அமைதியான நிலையில் சலனமற்றிருக்கும் தன்மையை நாம் அடைவோமேயானால் வாழ்வின் இடர்ப்பாடுகளால் அதிகம் பாதிக்கப்படாமல் தொடர்ந்து வாழ்வை உற்சாகமுடன் வாழ வழி காணலாம்.

புத்தாண்டு பிறக்கும் இத்தருணத்தில் சென்ற ஆண்டின் வெற்றிகளையும் மகிழ்ச்சிகளையும் உடன் அழைத்துச் செல்கையில், கடந்த காலத்தின் துன்பங்களையும் தோல்விகளையும் மூட்டை கட்டி எங்காவது போட்டுவிட்டு, இன்று புதிதாய்ப் பிறந்தோம் எனும் மனப்பாங்குடன் வருங்காலத்தை வரவேற்போம்.

மஹாகவி பாரதியார் தமது பகவத் கீதை உரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

"பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், நலியும் நரகமும் நைந்த நமனுக்கு யாதொன்றுமில்லை; கலியுங்கெடும், கண்டு கொண்மின்" என்று நம்மாழ்வார் திருவாய் மொழியிற் கூறிய நம்பிக்கையை உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்குப் பக்திதான் சாதனம். பக்தியாவது, "ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்" என்ற உறுதியான நம்பிக்கை.

"வையகத்துக் கில்லை மனமே, யுனக்கு நலஞ்
செய்யக் கருதியது செப்புவேன் - பொய்யில்லை,
எல்லா மளிக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லா லழியுந் துயர்"


நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்


திரைப்படம்: நூற்றுக்கு நூறு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: வி. குமார்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1971

பன்னிரண்டு மணியளவில் குளிர்ப்
பனி விழும் நள்ளிரவில்
க்ண்ணிரண்டில் மலர்ந்திடவே - இன்பக்
கனவுகள் வர வேண்டும்
ஹேப்பி பர்த்டே டூ யூ

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே

நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்

மாதா கோவில் மணியோசை நம்மைப் போற்றும் அருளோசை
தேவா நீயும் வா
உருகும் மெழுகில் ஒளியுண்டு ஒளியின் நிழலில் உறவுண்டு
உயிரே நெருங்கிவா
வருங்காலம் பொன்னாக வாழ்நாளில் ஒன்றாக
எதிர்பார்க்கும் நேரத்தில் எனைத் தேடி வாராயோ?
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்
நெஞ்சே என்னிடம் நினைவோ உன்னிடம்

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்

இதயம் எனது காணிக்கை இணைவோம் என்ற நம்பிக்கை
அழைத்தேன் ஓடிவா
ஓடும் காலம் ஓடட்டும் இளமை நின்று வாழட்டும்
அழகைத் தேடி வா
உனக்காகப் பெண்ணுண்டு உறங்காத கண்ணுண்டு
தனக்காக வாழாமல் தவிக்கின்ற நெஞ்சுண்டு
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்
ஆசை ஊஞ்சலில் ஆடும் வேளையில்

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்

சனி, 2 ஜனவரி, 2010

தோல்வி நிலையென நினைத்தால்

நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் நம் மனதில் நிலைநிறுத்திச் செயல்படும் லட்சியம் "வெற்றி" ஆகும். வெற்றி என்பது ஒருவரின் நோக்கத்துக்கேற்றவாறு தனித்தன்மை பெறுகிறது. ஒருவரது வெற்றி மற்றொருவரது தோல்வியாகலாம் அல்லது மற்றவரது வெற்றியும் ஆகலாம், மற்றவரின் வெற்றி தோல்வியுடன் தொடர்பின்றியுமிருக்கலாம்.

ஒரு மருத்துவரது வெற்றி அவர் தன்னிடம் சிகிச்சை பெறும் நோயாளியை குணப்படுத்துவதில் கிடைக்கிறது. ஒரு நோயாளியின் வெற்றி நோயிலிருந்து குணமடைந்து வாழ்வதில் கிடைக்கிறது. இங்கே மருத்துவர் வெற்றி கண்டால் நோயாளியும் வெற்றி காண்கிறார். சூதாட்டத்தில் பொருளை இழப்பவன் தோல்வியடைகையில் அவன் இழந்த பொருள் தனக்குக் கிடைக்கப்பெற்ற வேறொருவன் வெற்றியடைகிறான்.

வியாபாரி விற்பனை அதிகரித்து லாபம் நிறைய ஈட்டுகையில் வெற்றி பெறுகிறான். ஒரு சமூக சேவகன் சமூக நீதியை நிலை நாட்டுவதில் வெற்றியைக் காண்கிறான், அச்சமூக சேவையில் அவன் தனது உடைமைகள் அனைத்தையும் இழந்து உயிரையும் இழந்தாலும் வெற்றிபெற்றவனாகவே கருதப்படுகிறான்.

ஒரு துறையில் வெற்றி பெற்றவன் அதே துறையில் வெற்றி பெறாத மற்றொருவனைத் தோல்வியடைந்ததாக எண்ணுதல் அறிவுடைமை ஆகாது. மற்றவன் எத்துறையில் வெற்றி பெற்றான் என்பதை அறிவுபூர்வமாக ஆராய்ந்தறிதல் நன்று.

எத்துறையிலும் வெற்றி பெற விடாமுயற்சி மிகவும் அவசியம். வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைக்க முயல்கையில் பல இடையூறுகள் வந்துற்ற போதும், அவற்றால் மனம் தளர்ந்து முயற்சியைக் கை விடாமல், தொடர்ந்து பாடுபடுபவன் வெற்றி இலக்கை எய்துவது திண்ணம்.


தோல்வி நிலையென நினைத்தால்


திரைப்படம்: ஊமை விழிகள்
இயற்றியவர்: ஆபாவாணன்
இசை: மனோஜ் கியான்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1986

தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து - தாயின்
கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம் - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து - தாயின்
கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம்? - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

வெள்ளி, 1 ஜனவரி, 2010

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்

"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" எனும் பழமொழியை அனைத்து இந்திய மக்களுக்கும் நன்கு விளங்க வைத்தது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களி்ன் ஆதிக்கம். அவர்கள் நம் நாட்டின் மேல் ஆதிக்கம் செலுத்த ஏதுவாயிருந்தது கி.பி. 1608 ஆண்டில் அவர்கள் நம் நாட்டினுள் வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் கிழக்கிந்தியக் கம்பெனி எனும் பெயரில் உள்ளே நுழைந்த காலத்தில் நம் நாடு பல்வேறு சிறு தேசங்களாகப் பிரிந்திருந்து அவற்றை ஆண்ட மன்னர்கள், சிற்றறரச்கள் முதலானோ்ர் ஒருவரோடொருவர் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காகப் போரிட்டு வந்த நிலைமையேயாகும்.

நம் நாட்டினை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டு சுதந்திர இந்தியாவை உருவாக்க எண்ணற்ற தலைவர்களும் தொண்டர்களும் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து 90 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து போராடி, வெற்றி கண்டு நாமெல்லோரும் சுதந்திரமாகச் செயல்படும் நிலைமையை ஏற்படுத்தித் தந்தனர். அவ்வாறு அவர்கள் அரும் பாடுபட்டுப் பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே முற்றிலும் இழந்து விட்டோம். இன்று நம் நாட்டில் அரசு நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டமடைந்த நிலையில் அந்நிய நாட்டவர் மூலதனத்தில் தொழிற்சாலைகள் நடப்பதும், அவற்றில் நம் நாட்டவர்கள் ஊதியத்துக்காகப் பணி செய்வதும் வாடிக்கையாகியுள்ளது.

இத்தகைய இழிநிலையடையக் காரணம் நாட்டு மக்களிடையே ஒற்றுமை இல்லாத நிலை உருவானதுவே ஆகும். இதற்கு சாதிமத பேதமும் தனி மனித ஒழுக்கக் குறைவுமே முக்கியக் காரணங்கள். "ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?" என்ற பாரதியின் பாட்டு இக்காலத்திற்கும் பொருந்துவதாகும். சாதிமத பேதத்தைத் துறந்து ஒற்றுமையாய் வாழ்ந்து நாட்டை உயர்த்தப் பாடுபடுவது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.


ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்


திரைப்படம்: அன்புக் கரங்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தப் பாருங்க
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் - அந்த
நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் - அந்த
நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா?
உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகததை நிறுத்த முடியுமா?

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை - இதைப்
புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம்

ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க?
ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்