சனி, 28 நவம்பர், 2009

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்

மாமேதைகள் பலர் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கையில் மனம் குதூகலிக்கிறது. தமிழ்த் திரையுலகில் நமது சிந்தையள்ளும் செந்தமிழ்ப் பாடல்களை இசை நயத்துடன் கதையில் வரும் சூழ்நிலைகளுக்கேற்ப இயற்றி, அவற்றுக்கு சிறப்பாக மெட்டமைத்துப் பாடி, அவற்றுக்கேற்ற பாவங்களுடன் திறம்பட நடித்து நாம் வாழ்வை உற்சாகமாகக் கழிக்க உதவிடும் மேதைகள் பலருடன் நாம் வாழ்கிறோம்.
நடிக மாமன்னன் சிவாஜி கணேசனும் நாட்டியப் பேரொளி பத்மினியும் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் நம் உள்ளங்களைக் கொள்ளையடிக்கும் வண்ணம் அமைந்துள்ளன. அவற்றுள் இரு மலர்கள் திரைப்படம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மிகவும் சுவாரஸ்யமான ஆரோக்யமான திரைக் கதையமைப்புடன், நடிகர்கள் அனைவரின் வளமான நடிப்புத் திறனையும் முழுதும் வெளிக்கொணரும் வகையில் அமைந்த இப்படத்தில் ஒரே கல்லூரியில் ஒன்றாகப் பயிலும் நடிகர் திலகமும் பத்மினியும் சிலப்பதிகாரத்தில் கோவலன், மாதவி இருவர் பற்றிய ஒரு நாட்டிய நாடகம் நடத்துகின்றனர்.

பத்மினி மயில் தோகையை முதுகில் அணிந்து கொண்டு ஒரு மயில் போலவே துள்ளித் துள்ளி ஆடுகையில் உடன் நடிகர் திலகம் பாடுவதாக அமைந்த இப்பாடல், டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் தன் கணீரென்ற குரலில் பாட, திரை வானை ஒரு கலக்குக் கலக்கியது.

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்

படம்: இரு மலர்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் - இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் - இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட - கலை
மானின் இனம் கொடுத்த விழியாட

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

மானின் இனம் கொடுத்த விழியாட - அந்த
விழி வழி ஆசைகள் வழிந்தோட - நல்ல

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் - நல்ல
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

கரிதநிதபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
கரிதநிதநிபதநிஸ்ரிநீ தபதமபமகரி
ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
ஸ்ரிரிகமநீ நிஸ்ஸ்ரிகதா தநிநிஸ்ரி பாதமாபமகரிஸ
ரிகமநி ஸ்ரிக மபதமா பதநி ஸ்ரிக நிரிஸ்தநி நித
மாபதநிஸ்கரி மாதவிப் பொன் மயிலாள்

தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம்
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தாததிம்த தத்திம் தத்திம்
பதநிஸ்நித தணதஜம் தபஜுணுத ஜம் ஜம்
பதநி பதப ஜம் தஜம் தமதணகு ஜம் ஜம்

பமபதீம் தகிட நிதம ஜம் ஸ்ரித ஸ்நித சுகம் தகிட கரிநிதஜம்
பதநிஸ் தஜம் ஸ்ரிகம தகிடதஜம் கரிநீ ததரித ஜம்
ரிகமபா பதா தஜம் தணம் ஸ்கரி நிரிஸ் தணதா ப ஜணும்
ஸ்ரிகமாபதநீஸ்ரி கரிநீத தரிகிணதோம்
ஸ்ரிகாமபதாநிஸ் ரிஸ்நீத தரிகிணதோம்
ரிககாரி நிஸ்தாநி கரிநீத தரிகிணதோம் தரிகிணதோம் தரிகிணதோம்

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்

1 கருத்து:

  1. ஆரம்பநாட்களில் நான்கூட இந்தப் பாடல் கண்ணதாசனுடையது என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் மெகா TV யில் அந்த அறிவிப்பாளர் சொல்லும் வரை. கண்ணதாசனை அவ்வளவு வாசித்த எனக்கே மருட்சி வருகிறதென்றால் வாலி உண்மையிலேயே உயரங்களைத் தொட்டு விட்டார்.
    ஆரம்ப காலங்களில் கொஞ்சம் சொதப்பினாலும் பின்னால் பின்னி எடுத்து விட்டார். ஆரம்ப காலச் சொதப்பலுக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு.
    தொட்டால் பூ மலரும்.
    எந்தப் பூவாவது தொட்டு மலருமா?
    தொடாமல் நான் மலர்ந்தேன். அவர் சொல்வதும் ஒரு வகையில் சரி பெண் வயதுக்கு வருவதைச் சொல்லியிருந்தால்.
    ஆனால் பெண் ஆணின் தொடலில், அந்த ஸ்பரிஷத்தில்தான் தான் மலர்கிறாள்.
    இது போன்ற தடுமாற்றங்கள் அவரது பிற்காலப் பாடல்களில் வரவில்லை. Seasoned ஆகி விட்டார்.

    பதிலளிநீக்கு