சனி, 28 நவம்பர், 2009

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ

மாலை நேரம் வந்தாலே காதல் கொண்ட உள்ளங்களுக்கு மயக்கம் வரும் போலும்.
மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான் கருப்பு
வில்லி கணையெறிந்து மெய்கரப்ப முல்லை மலர்
மென் மாலை தோளசைய மெல்ல நட்ந்தததே
புன்மாலை அந்திப் பொழுது

எனும் நளவெண்பாப் பாடலில் புகழேந்திப் புலவர் மாலை நேரம் வந்தால் மன்மதனின் கணைகள் பாய்ந்து காதல் கொண்ட மாந்தர்க்கு உடலில் விரகதாபத்தால் ஒருவித மயக்கம் உண்டாவதாகக் கூறுகிறார்.

அம்மயக்க நிலை தீர்ந்து மனம் மகிழ்ச்சி கொள்ள ஒருவரை ஒரவர் சந்தித்து, ஒருவரோடு ஒருவர் கருத்தொருமித்து, காதல் உணர்வைப் பகிர்ந்து கொண்டு உறவாடுதல் மாலை நேரத்தில் இயலாதே, தனிமை கிடைக்காதல்லவா? அவ்வாறு தனிமை கிடைத்தாலும் இரவு வந்து வானில் நிலவு வந்தாலல்லவோ காதலை முழுமையாக அனுபவிக்க இயலும்.

காதல் உணர்வையும், பக்தியையும் வெளிப்படுத்த இசை பெரிதும் உதவுகிறது. பக்தியை வெளிப்படுத்துகையில் உள்ளம் உருகுகின்றது. காதலை வெளியிடுகையில் மனம் மயங்குகின்றது. இரண்டில் காதலே தன்னை மறந்த இன்ப நிலையைப் பெரிதும் ஏற்படுத்த வல்லது. அத்தகைய காதல் கீதத்தை இணைந்து பாடும் ஜோடியின் குரல்களும் மயக்கம் தருமளவுக்கு இனிமையாய் இருப்பின் இசை என்ற இன்ப வெள்ளத்துக்குப் பஞ்சமேது?

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ

படம்: குலேபகாவலி
பாடியோர்: ஜிக்கி, ஏ.எம். ராஜா
இயற்றியவர்: தஞ்சை ஏ. ராமையா தாஸ்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

ஆஆ... ஆஆஆஆஆஆஆ ஆஆஆ..

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே
பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாடுமே
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாடுமே
புன்னை மலர்கள் அன்பினாலே
புன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலே
போடும் போர்வை தன்னாலே

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
காண்போம் பேரின்பமே
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி எந்நாளும்
வானிலும் ஏது வாழ்விது போலே
வசந்தமே இனி எந்நாளும்

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலைத் தீர்க்க வா

ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக