"உயிர்களிடத்திலன்பு வேண்டும் தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும்" என்று மஹாகவி பாரதியார் சொன்ன கருத்தும், "உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்" என்று கவியரசு கண்ணதாசன் அவர்கள் சொன்ன கருத்தும் ஒன்றே.
இதற்கு எடுத்துக்காட்டாய் நம்மிடையே நம்மில் ஒருவராய் வாழ்ந்து, உலக மக்கள் அனைவருக்கும் அன்பு வழியைக் காட்டி, உண்மையின் பெருமையை உணர்ததி, இறவாப் புகழ் பெற்ற அண்ணல் காந்தி மகான் பிறந்த நாள் நாளை. அவரிடம் உலகம் மயங்கியது உண்மையே அல்லவா? உலகனைத்தும் அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டதும் உண்மையன்றோ?
உண்மையையே பேசுபவன் நாவில் தெய்வம் நின்றுறையும், அவன் சொன்ன சொல் பலிதமாகும், அவன் எல்லாம் வல்ல இறைவனுக்கு ஈடான சக்தியைப் பெறுகிறான் என்பதை காந்தி மகான் வாழ்விலிருந்து நாம் அறிகிறோம். நாம் இங்கே வருகையில் கொண்டு வந்த பொருள் ஏதும் இல்லை. இவ்வுலகை விட்டுச் செல்கையில் கொண்டு போவதும் ஏதுமில்லை. வாழ்நாளெல்லாம் பொய்யுரைத்துப் பொருளைத் தேடியே வாழ்வை வீணாக்கி மடிந்திடாமல் உண்மையாய் உழைத்து, நமக்கு நியாயமான வழியில் கிடைக்கும் பொருளை மட்டும் வைத்து நல்வாழ்வு வாழ்ந்து உண்மையின் சக்தியை உணர முயல்வோமே.
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
படம்: புது வாழ்வு
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1957
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
நன்மை தீமை எது வந்தாலும் நடுநிலையில் மாறிடாது
நன்மை தீமை எது வந்தாலும் நடுநிலையில் மாறிடாது
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
பொன்னில் போக பாக்யம் தன்னில் புரள நேர்ந்தாலும்
மன்னன் அருகில் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
மன்னன் அருகில் என்றெல்லோரும் மதிக்க வாழ்ந்தாலும்
இன்னல் வரவும் ஜீவன் தன்னை இழக்க நேர்ந்தாலும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது
உண்மை ஒன்றே பேசும்
அண்ணல் காந்தி ஆத்ம ஞானி சொன்ன சொல்லை மறந்திடாது
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
அன்னை தந்தை தனை மறவா அருங்குணம் வேண்டும்
அன்னை தந்தை தனை மறவா அருங்குணம் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும்பயன் வேண்டும்
பின்னர் அவர்க்கு சேவை செய்ய பெரும்பயன் வேண்டும்
இன்னபயம் தனை மறவா இயல்பதும் வேண்டும்
இன்னபயம் தனை மறவா இயல்பதும் வேண்டும்
கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல்
உண்மை ஒன்றே பேசும்
கண்ணிரண்டும் குருடராகி கடமை மறந்து உழன்றிடாமல்
உண்மை ஒன்றே பேசும் நல்ல உயர் குணம் வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக