சனி, 28 நவம்பர், 2009

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே

மனித உரிமை பற்றி வாழ்கிழியப் பேசும் மனிதர்களாலேயே மனித உரிமை மீறப்படுவதும், நீதியும் நேர்மையும் நிலைத்திடப் பாடுபடுவோமென மேடைகளில் முழங்கி ஆட்சிக்கு வருவோராலேயே நீதிமன்றங்கள் முடக்கப் பட்டு, சாமான்யர்களுக்கு நீதி மறுக்கப் படுவதும், விலைவாசியைக் குறைப்போம் என்று மக்களுக்குப் பொய்யான வாக்களித்து மக்களின் வாக்குகளைப் பெற்றவர்களாலேயே விலைவாசி உயர்த்தப் படுவதும், இன்னும் இவை போன்ற எண்ணரும் பாபச் செயல்கள் உலகெங்கும் மலிந்து கிடக்கும் மிகவும் சோதனையான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
கலைவாணர் அந்தக் காலத்தில் பாடிய பாடலை மாற்றி,

மனுஷனை மனுஷன் மதிச்சு நடந்தது அந்தக் காலம் அது அந்தக் காலம் நிதமும்
மாடாய் உழைப்பவன் ஓடாய்த் தேய்வது இந்தக் காலம்
உழைச்சவன் வாழ்வில் உயர்வை அடைந்தது அந்தக் காலம் அது அந்தக் காலம் உழைப்பவன்
பிழைப்பைக் கெடுத்துத் தெருவில் நிறுத்துவது இந்தக் காலம்

நீதி நேர்மை நியாயம் இருந்தது அந்தக் காலம் அது அந்தக்காலம்
சாதியின் பெயரால் நீதியை வளைப்பது இந்தக் காலம்
நேர்வழி நடந்தது அந்தக் காலம் நேரெதிரானது இந்தக் காலம்
சீர் பெற வாழ்ந்தது அந்தக் காலம் சீ யென்று தாழ்ந்தது இந்தக் காலம்

என்றே பாடத் தோன்றுகிறது.

பல காலங்களாகப் புலவர் பெருமக்கள் பலரும் மனித சமுதாயத்தில் நிகழும் குறைகளைச் சுட்டிக் காட்டித் திருத்தவென்று எழுதிய பாடல்கள் யாவும் பெரும்பாலும் நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றுபவர்களாலேயே தங்களை உத்தமர்கள் எனப் பறைசாற்றிக் கொண்டு திரியவே பயன்பட்டு வருவது மிகவும் வேதனை தருகிறது.

இத்தகைய குறைபாடுகள் தாற்காலிகமானவையே, புலவர்கள் எழுதி வைத்த கருத்துக்கள் என்றும் உயிருடன் விளங்கி, குறித்த காலத்தில் கேட்க வேண்டிய செவிகளுக்குக் கேட்டு, நற்பயன் விளைவது உறுதி என நம்புவோம்.

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே

படம்: தாய்க்குப் பின் தாரம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம் சௌந்தரராஜன்
ஆண்டு: 1956

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

தத ச்ச்ச் தஹாய்

மானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே - நாம
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே தத ச்ச்ச்
மானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே நாம
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே - ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே - இது
தகாது இன்னு எடுத்துச் சொல்லியும் புரியல்லே அதாலே

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

தஹாய் ஹா ச்ச்ச் என்னடா நெளிஞ்சுகிட்டுப் போறே த

தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு
தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே
அறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே - எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே அதாலே

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

தஹாய் ஹா ச்ச் த

ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்
ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே
ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்
ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே டதம்பிப் பயலே
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே டதம்பிப் பயலே ஒண்ணப்
புரிஞ்சிக்காமலே நடுங்கிடாதே தம்பிப் பயலே

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

ஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக