செவ்வாய், 24 நவம்பர், 2009

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்
பித்தமனிதர் அவர்சொலுஞ்சாத்திரம்
பேயுரை யாமென்றிங்கூதேடாசங்கம்
என்றார் மஹாகவி பாரதி.

சொர்க்கம், நரகம் என்று தனியாக ஏதும் கிடையாது. இவ்வுலகே சொர்க்கமும் நரகமும் ஆகும் என்பது கண்கூடு. வெயிலில் வாடும் உயிர்களுக்கு நிழல் தந்து, காற்றில் மிகுந்திருக்கும் கரியமில வாயுவை உண்டு பிராண வாயுவை உமிழ்ந்து, உயிர்கள் அனைத்தும் வாழ வழி செய்து, வான் மேகங்களை ஈர்த்து மழை பொழிய வைத்து, பூமியைக் குளிரச் செய்து, பயிர்கள் வளர ஏதுவாகி உலகிலுள்ளோர்க்கெல்லாம் உணவளித்துக் காக்கும் மரங்களையும் மரங்கள் மிகுந்த வனங்களையும் அழித்து, கல்லும் மண்ணும் கலந்து கட்டடங்கள் எனும் பெயரில் தம்மைத் தாமே உயிரோடு சமாதி வைத்துக் கொள்ளும் மனிதர்களுக்கு இவ்வுலகம் நரகமே.

மரங்களின் அழிவினால் அதிகமாகும் உஷ்ணத்தைக் குளிர்விக்கவென்று ரெஃப்ரிஜிரேடர், ஏர் கண்டிஷனர் எனும் பெயர்களில் கண்டறிந்து பயன்படுத்தும் குளிர் சாதனப் பெட்டிகளில் பயன்படும் ரெஃப்ரிஜிரண்ட் எனும் திரவம் ஆவியாகி மேலே சென்று ஆகாயத்தில் படர்ந்து நின்று உலகை சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் காத்து ரக்ஷிக்கும் ஓசோன் படலத்தை அழிப்பதனால் உலகின் வெப்பம் மேலும் அதிகரித்து, துருவப்பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர் மட்டம் அதிகரித்து, ஜல சமாதியாகும் வழியையும் தேடிக்கொண்ட மனிதனுக்கு இவ்வுலகம் நரகமே.

ஆறுகளில் ஆலைக்கழிவுகளை அபரிமிதமாகக் கலப்பதால் ஆற்று நீரை மட்டுமின்றி நிலத்தடி நீரையும் கொடும் விஷமாக மாற்றுவதோடு, குடிநீர் வடிகால் வாரியங்களின் மூலம் பூமிக்கடியில் நிறுவப்படும் குழாய்கள் ஓட்டையாவதால் சாக்கடை நீர் குடி நீருடன் கலந்து வர எமனை வீட்டுக்கே வரவழைத்துக் கொள்ளும் மனிதர்களுக்கு இவ்வுலகம் நரகமே.

மானுடா, உனக்கு இவ்வுலகமே சொர்க்கமாக அமைய வழி தேடு, இயற்கையை அழிக்காமல் காப்பாற்று, இயற்கை உன்னை என்றென்றும் காப்பாற்றும்.

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

திரைப் படம்: கள்வனின் காதலி
இயற்றியவர்: எஸ்.டி. சுந்தரம்
பாடியோர்: கண்டசாலா, பி. பானுமதி,
ஆண்டு: 1955

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

கையில் கம்பன் கவியுண்டு கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறை அமுதுண்டு கலசம் நிறை அமுதுண்டு அமுதுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

தெய்வ கீதம் பலவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு தெரிந்து பாட நீயுண்டு பாட நீயுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வையந்தரும் இவ்வனமன்றி வையந்தரும் இவ்வனமன்றி
வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ
ஸ்வர்க்கம் வேறுண்டோ

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
வெய்யிற்கேற்ற நிழலுண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக