வாழ்வின் வழியில் எத்தனையோ இன்ப துன்பங்கள் வரினும், எவ்வளவோ உறவுகள் வந்து போயினும், இவை அனைத்தைக் காட்டிலும் நாம் அதிகம் பாதிக்கப் படுவது இயற்கையினாலேயே ஆகும். வாழ்நாளெல்லாம் உழைத்துப் பாடுபட்டுப் பெரும் பொருளீட்டி செல்வச்சீமான்களாக் வாழ்பவர்களானாலும், தினமும் பாடுபட்டாலேயே உயிர்வாழத் தேவையான பொருளினை ஈட்ட இயலும் நிலையில் வாழும் பரம ஏழைகளானாலும் அனைவரும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கவென்றே சிறிதாகிலும் காலம் ஒதுக்கி அக்காலத்தில் தமது தொழில் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இயற்கையோடு இயைந்து அக்காலத்தைக் கழிக்கின்றனர்.
வசதி படைத்தோர் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என மலைவாசஸ்தலங்களுக்குச் சென்று தங்குவர். வசதிக் குறைவோடு வாழ்வோர், ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை என்பதற்கேற்ப தங்களால் இயன்றபடி, கடற்கரைக்கோ, ஏதேனும் பூங்காவுக்கோ அல்லது அருகிலுள்ள மலைக் கோவிலுக்கோ சென்று வருவர்.
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்
- என்று தனது மனத்தை அதிகம் கவர்வது இயற்கை எழிலே என்று தெளிவாகக் கூறுகிறார் பாரதியார்.
இயற்கையை அழகு படுத்துவதுடன் நறுமணமும் சேர்த்து இன்பம் தரும் சூழ்நிலையை உருவாக்குபவை மலர்கள். மலர்களின் அழகிலும் மணத்திலும் மயங்காதவர் உண்டோ? மலர்கள் பேசுமா? மலர்களோடு நம்மால் பேச முடியுமா?
சின்னச் சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
படம்: கடவுளின் குழந்தை
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: பி.பி. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலா
ஆண்டு: 1960
சின்னச் சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உன்தன் காதில் பேசுவதேனோ? ஏனோ?
அதுவே ஆனந்த ரகசியம் தானோ? ஆ
சின்னச் சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உன்தன் காதில் பேசுவதேனோ?
அதுவே ஆனந்த ரகசியந் தானோ? ஆ
அதுவே ஆனந்த ரகசியம் தானோ?
அரும்பாகவே நின்ற வேளையிலே
அறியாமலே வந்து சொலையிலே
குறும்பாகத் தீண்டி ஆவலைத் தூண்டி ஆ..ஆ.. ஓ..
குறும்பாகத் தீண்டி ஆவலைத் தூண்டி
கொஞ்சும் நெஞ்சில் தேன் பொங்கப் பேசுவதேனோ?
கொஞ்சும் நெஞ்சில் தேன் பொங்கப் பேசுவதேனோ?
அதுவே ஆனந்த ரகசியந் தானோ? ஆ
அதுவே ஆனந்த ரகசியம் தானோ?
அழகாகவே அந்தி நேரத்திலே
யமுனா நதி பொங்கும் ஓரத்திலே
குழலூது கண்ணன் சொல்லாத சொல்லை
கொஞ்சிக் கொஞ்சிப் பூங்குயில் கூவுவதேனோ?
கொஞ்சிக் கொஞ்சிப் பூங்குயில் கூவுவதேனோ?
அதுவே ஆனந்த ரகசியம் தானோ? ஆ
அதுவே ஆனந்த ரகசியம் தானோ?
சின்னச் சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உன்தன் காதில் பேசியதேனோ?
அதுவே ஆனந்த ரகசியம் தானோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக