செவ்வாய், 24 நவம்பர், 2009

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே

வாழ்க்கைப் போராட்டத்தில் ஓடியாடி வேலை செய்து களைத்த உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரவென்றே சிறந்த பல சுற்றுலாத் தலங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இத்த்தலத்தில் சித்தாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, தாமிரபரணி ஆகிய நதிகள் உற்பத்தியாகின்றன. இங்கே இருக்கும் அருவிகளில் குளிக்கையில் அருவி நீரில் கலந்துள்ள பலவிதமான மூலிகைகளின் சிறப்பால் உடலுக்கு ஏற்படும் மகிழ்வும் தெம்பும் அளவிடற்கரியவை என்று இங்கே வந்து அருவிக் குளியலை அனுபவித்தவர்கள் கூறுகின்றனர்.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
கவனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித்திரை எழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம்பிறைமுடித்த வேணியலங்காரர்
குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே!

என்று திரிகூட இராசப்பக் கவிராயர் எனும் புலவர் தான் இயற்றிய குற்றாலக் குறவஞ்சியில் குற்றாலத்தின் எழிலைப் பாடியுள்ளார்.

இதே போன்றதொரு கருத்தைக் கவரும் இசைநயம் மிக்க பாடலை நம் அனைவருக்கும் பிரியமான பாடகரும் பாடியுள்ளார்:

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே

படம்: பாவை விளக்கு
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவார்: சி.எஸ். ஜெயராமன்
ஆண்டு: 1960

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே
ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால
அழகை நாம் காண்பதற்கு வண்னக் கிளியே
ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால
அழகை நாம் காண்பதற்கு வண்னக் கிளியே

தென்றலிசை பாடி வரும் தேனருவி ஆடிவரும் ம்...
தென்றலிசை பாடி வரும் தேனருவி ஆடிவரும்
அன்றலர்ந்த ஷெண்பகப் பூ வண்ணக் கிளியே
அன்றலர்ந்த ஷெண்பகப் பூ வண்ணக் கிளியே எங்கும்
ஆனந்தக் காட்சி தரும் வண்ணக் கிளீயே
ஆனந்தக் காட்சி தரும் வண்ணக் கிளீயே

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால
அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே

எங்கும் பனி தூங்கும் மலை...
எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக் கிளியே நெஞ்சில்
இன்ப நிலை தந்திடுதே வண்ணக் கிளியே
எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக் கிளியே நெஞ்சில்
இன்ப நிலை தந்திடுதே வண்ணக் கிளியே
பொங்கி வரும் ஐந்தருவி வண்ணக் கிளியே
பொங்கி வரும் ஐந்தருவி வண்ணக் கிளியே இங்கே
சங்கத் தமிழ் முழங்கிடுதே வண்ணக் கிளியே
சங்கத் தமிழ் முழங்கிடுதே வண்ணக் கிளியே

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றாலம்
அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே

மந்தி எல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும்
மந்தி எல்லாம் மாங்கனியைப் பந்தாடிப் பல்லிளிக்கும்
சந்திரன் போல் சூரியனும் வண்ணக் கிளியே குளிர்ச்சி
தந்திடுவான் இங்கு என்றும் வண்னக் கிளயே

ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றாலம்
அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே
வண்ணக் கிளியே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக