உலக வாழ்வுக்கு ஆதாரம் காதல், அதனாலேயே, "காதல் காதல் காதல், காதல் போயில் காதற் போயின் சாதல் சாதல் சாதல்" என்று மஹாகவி பாரதி எழுதினாரோ? ஒருவன் ஒருத்தியை உள்ளத்தால் நேசித்து அவளுடன் இணைந்து வாழ விரும்புகையில் தன் உள்ளத்து ஆசைகளை அவளிடம் தெரிவிப்பது மிகவும் அவசியம். இதற்குப் பல உபாயங்கள் இருப்பினும் தன் கைப்பட எழுதிய கடிதத்தைப் போல் தனது காதலைத் தான் காதல் கொண்ட பெண்ணிடம் முழுமையாக எடுத்துச் சொல்ல வல்லது வேறெதுவும் இல்லை.
காதல் கடிதம் எவ்வாறிருக்க வேண்டுமெனில், அதனை அப்பெண் படிக்கப் படிக்க அவள் உள்ளத்திலும் தன் மேல் காதல் உணர்வு தோன்றுமளவுக்கு உயர்ந்ததாக இருக்க வேண்டும். காதல் கடிதத்தில் எத்தகைய விஷயங்களை எவ்வாறு எழுத வேண்டுமெனில், அவள் மேல் தான் கொண்ட நேசத்தையும் அவளுக்குத் தனது உள்ளத்தில் தந்துள்ள உயர்வான இடத்தையும் தெளிவாக எடுத்துக் கூறி அவளுக்குத் தனது தூய்மையான நேசம் மிக்க மனத்தின் தன்மையையும் அவள் மேல் தான் கொண்ட காதலின் ஆழத்தையும் விளங்க வைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
நான் அனுப்புவது கடிதம் அல்ல
படம்: பேசும் தெய்வம்
இயற்றியவர்: வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1967
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல
நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்குத் தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்
எழுதி அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல
எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக