செவ்வாய், 24 நவம்பர், 2009

யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே

மனிதர்களை மனிதர்களே அடிமைகளாய் விற்கும் கேடுகெட்ட பழக்கம் உலகெங்கிலும் பண்டைக்காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது. தற்காலத்திலும் இத்தகைய பழக்கம் பல இடங்களில் இரகசியமாக நடந்துகொண்டே இருக்கிறது. செய்திகளில் அவ்வப்பொழுது கொத்தடிமைகளாய் இருந்தவர்கள் பற்றியும் அவர்கள் மீட்பு பற்றியும் அறிகிறோம். கல்வி கற்று வாழ்வில் உயர வேண்டிய பிஞ்சுக் குழந்தைகள் ஏராளமானோர் இன்றும் பல இடங்களில் தங்கள் குடும்பத்துக்காக உழைக்க வேண்டிய சூழ்நிலையில் குழந்தைத் தொழிலாளர்களாகத் தள்ளப்பட்டிருப்பதை அனைவரும் அறிவர். மேடைகள் தோறும் ஏழைகளுக்காகத் தாங்கள் பாடுபடுவதாக அடுக்கு மொழியில் முழங்கும் அரசியல்வாதிகள் எவரும் இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க உண்மையான முழு முயற்சி ஏதும் எடுக்கவில்லை என்பதே உண்மை.
இவ்வடிமை வியாபாரத்தில் பல இடங்களில் பெண்கள் போகப் பொருட்களாக விற்கப்படும் அநீதியும் அன்று தொடங்கி இன்று வரையிலும் வெற்றிகரமாக நடந்து வருகின்றது. அவ்வாறு போகப் பொருளாக விற்கப்படும் அழகிய பெண்ணொருத்தியை அவள் மேல் கருணையும் காதலும் கொண்ட வாலிபன் ஒருவன் விலைகொடுத்து வாங்க, அவனிடமிருந்து அப்பெண் தப்பிச் செல்ல முயலுகையில் அவளை ஒரு கயிற்றில் சுருக்குப் போட்டு மடக்கிப் பிடிக்கும் அவ்விளைஞன் பாடுவதாக அமைந்ததொரு இனிய பாடல்:

யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே

படம்: பாக்தாத் திருடன்
இயற்றியவர்: மருதகாசி
இசை: ஜி. கோவிந்தராயுலு நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1960

யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே எங்கே ஓடுறே சொல்லு
யாருக்கு டிமிக்கி கொடுக்கப்பாக்குறே எங்கே ஓடுறே சொல்லு
சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு ஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்

காட்டுப்பூனை போல் முழிக்கிற திருட்டுப் பெண்ணே
காசைக் கொட்டி நான் வாங்கி இருக்கிறேன் கண்ணே
கன்னிப் பொண்ணு நீயே கட்டழகன் நானே
உன்னை இப்போ விட்டுவிடுவேனோ?

சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு ஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே எங்கே ஓடுறே சொல்லு

இதுவரை பேகங்கள் இருக்கு எனக்கு
அதுலே சரி இடம் தருவேன் பீவி உனக்கு
அதிசயம் எதுக்கு ஆத்திரம் எதுக்கு இது ரொம்ப சகஜம் எனக்கு

சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு ஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
யாருக்கு டிமிக்கி கொடுக்கப்பாக்குற எங்கே ஓடுற சொல்லு

தாடியப் பாத்து தயங்குது உனது மனசு
நாடியத் தொட்டு பாரு தெரியும் என் வயசு
ஓட எண்ணாதே மோடி பண்ணாதே இதுதான் உனக்குப் புதுசு

சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு ஒ
பாச்சா ஒண்ணும் பலிக்காதிங்கே பேகம்
யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே எங்கே ஓடுறே சொல்லு
சூட்சுமக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்து நில்லு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக