செவ்வாய், 24 நவம்பர், 2009

மருதமலை மாமணியே முருகய்யா

இரவும் பகலும், இன்பமும் துன்பமும், பிறப்பும் இறப்பும் மாறி மாறித் தொடர்ந்து வரும் உலகில் மாந்தர்க்குத் துன்பம் நேர்கையில் அதனைத் துடைக்க உதவுவது தெய்வ சிந்தனை ஒன்றேயாகும். தெய்வம் இருக்கும் இடமும் தெய்வத்தின் உருவமும் தெரியாத நிலையில் நம்மில் ஒரு சாரார் மனித வடிவில் தெய்வத்தைத் தொழுகிறோம், ஒரு சாரார் உருவமற்ற இறைவனைத் தொழுகின்றனர். ஒரு சாரார் பெற்றோரையே தெய்வமாகத் தொழுகின்றனர். வேறு பலர் தமது வாழ்க்கைப் பாதையை அமைத்துத் தந்த தம் தலைவர்களையே தெய்வமாகத் தொழுகின்றனர்.
இவர்கள் அனைவரும் குழந்தைகளை தெய்வமாகப் போற்றி வணங்குவது அனைவரும் அறிந்த ஒன்று. கோகுலத்துக் கண்ணனையும் குன்றுதோறாடும் குமரனையும் குழந்தை வடிவில் வழிபடுவது சிறப்பு. முருகன் தெய்வமாய் அமர்ந்த ஆறு படைவீடுகளை அடுத்து தமிழ் மக்கள் யாவராலும் மிகவும் போற்றி வணங்கப்படும் திருததலம் மருதமலை. இது கோவை நகருக்கு அருகாமையில் உள்ளது. யானைகள் உள்ளிட்ட மிருகங்களைப் பழக்கி அவற்றைத் தன் திரைப்படங்களிலும் நடிக்க வைத்த சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் மருதமலைக்குப் பல குறிப்பிடத்தக்க சேவைகளைச் செய்துள்ளார்.

சூரனையும் அவனைச் சேர்ந்த அசுரர்களையும் அழித்து வானவராம் தேவர்களின் குலத்தைக் காக்கவென்றே அவதரித்தத முருகன் தனது பக்தரான சின்னப்பா தேவரின் குலத்தையும் காக்கின்றான் என்று இருபொருள்பட கவிஞர் கண்ணதாசன் இயற்றி, கர்நாடக இசை வித்துவான் மதுரை சோமு அவர்களின் கணீரென்ற குரலில் ஒலிக்கும் ஒரு பாடல்:

மருதமலை மாமணியே முருகய்யா

திரைப்படம்: தெய்வம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவர்: மதுரை சோமசுந்தரம்
ஆண்டு: 1972

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை

அஆஆ.. ஆஆஆ.. மருத மலை மருத மலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
ஆ...ஆ ஆ ஆ....ஆ...ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா
ஆஆ...ஆஆ...ஆஆ.
தேவர் வணங்கும் மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக