செவ்வாய், 24 நவம்பர், 2009

ஆடை கட்டி வந்த நிலவோ?

விண்ணளந்த வெண்ணிலவு விண்ணினின்று இறங்கி வந்து மண்ணதனில் பெண்ணுருவில் வாழுகின்ற போதில் அதன் பொன்னுடலை மூட ஒரு ஆடை தர வேண்டுமெனில் போவதெங்கே?
வெறும் பஞ்சாலும் பட்டாலும் ஆன எந்த மெல்லிய ஆடைகளும் அந்த நிலவுப் பெண்ணின் ஒளிவீசும் எழில் மேனியை முழுதும் மறைக்கத் தக்கவையாகுமோ? ஆதலினால் விண்வெளியில் பவனி வரும் போதினில் வானமெனும் கடலினிலே அலைகளெனவே தோன்றி, அங்குமிங்கும் ஓடி அவளுடலை மூடி விளையாடி வந்த கருமுகிலும் வெண்முகிலும் கலந்துருவாக்கிய முகிலாடையையே அணிந்து வந்தாளோ?

ஆடை கட்டி வந்த நிலவோ?

படம்: அமுதவல்லி
இயற்றியவர்: தங்கை டி.என். ராமையா தாஸ்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம், பி. சுசீலா
ஆண்டு: 1959

ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ?
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ?

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்கை

எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்

கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளனுடன் கலந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்க்கை
சொந்தமுள்ள ராணி இவள் நாக மங்க்கை

ஆ...ஆ..ஆ..

அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
அந்தி வெய்யில் பெற்ற மகளோ குலுங்கும்
அல்லி மலர் இனத்தவளோ?
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மலர் சிந்தி வரும் தென்றல் தானோ?
இன்பம் தந்த மயில் இந்த மானோ?

ஆஹா அஹஹஹஹஹஹா ஓஹொஹோஹொஹோ..ம்ம்..லாலா..

அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்பமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன்னேரமிதே மனம் மீறிடுதே
நன்னேரமிதே மனம் மீறிடுதே
வன மாளிகை ஓரம் ஆடிடுவோம்

ஆ.. ஆ.ஆஆ..ஆஆ...

ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ? குளிர்
ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ?
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ? முகில்
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக