"அரிதரிது மானிடராதல் அரிது" என்றாள் ஔவை மூதாட்டி. காரணம் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளை விட அறிவில் மேம்பட்ட பிறவி மானிடப் பிறவி. இயற்கையின் ரகசியத்தை ஆராய்ந்தறிந்து அவ்வறிவினால் புதியதோர் உலகத்தையே படைக்கும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு. அத்துடன் பிற உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனமிரங்கி அத்துன்பத்தைத் தனதாகக் கருதி, கருணை கொண்டு முயன்று அதனைத் தீர்க்கும் குணமும் மனிதருக்கு இயல்பாகவே உள்ளது.
இதன் காரணமாகவே தெய்வ உருவங்கள் அனைத்தும் மனிதர்களைப் போன்ற தோற்றத்துடன் படைக்கப் பட்டன. "தெய்வம் மானுஷ ரூபேண" என்று வடமொழியில் ஒரு கருத்து வெகுகாலமாகவே வழக்கிலுள்ளது. அதே கருத்தை "மனிதனென்பவன் தெய்வமாகலாம்" என்றும் "மனித வடிவில் தெய்வம்" என்றும் கவிஞர் கண்ணதாசனைப் போன்ற தமிழ்ப் புலவர்களும் கையாண்டிருக்கின்றனர்.
இத்தகைய தெய்வீக குணங்களை நீக்கி மனிதனை மிருகமாக மாற்றுவன ஆசையும் கோபமும். இவ்வுண்மையை உலகுக்கு உணர்த்தவென்றே தோன்றினார் புத்தபிரான்.
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
அசோக் குமார்
பாபநாசம் சிவன்
ஜி. ராமநாதன்
எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1941
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடவோ
காலமும் செல்ல மடிந்திடவோ
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயாநிதியாகிய
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக