செவ்வாய், 24 நவம்பர், 2009

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

"வெஸ்டர்ன் கல்சர்" எனப்படும் அயல் நாட்டு நாகரிகத்தின் மேல் நம் நாட்டவருக்குள்ள மோகம் என்பது இன்று புதிதாய் ஏற்பட்டதல்ல. இந்திய மண்ணில் ஆங்கிலேயர்கள் அடியெடுத்து வைத்த நாளிலேயே துவங்கி வளர்ந்து படிப்படியாக நமது நாட்டையே அவர்களது கையில் தூக்கிக் கொடுக்கும் அபாயகரமான நிலையை உருவாக்கியது இத்தகைய மோகமே என விவரமறிந்த மூத்தவர்கள் கூறுவர்.
ஆங்கிலேயர்கள் ஊற்றிக் கொடுத்த சீமைச் சாராயத்திற்கும், பிற உல்லாச, சால்லாப விளையாட்டுக்களுக்கும் அடிமையான அந்தக் கால இந்தியப் பகுதிகளின் குறுநில மன்னர்கள் பலர் இத்தகைய ஆடம்பர நடவடிக்கைகளால் வெள்ளையருக்குப் பெரும் பணம் கடன்பட வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து மீளும் நோக்கில் தமது நாட்டின் சில பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயருக்கு அளித்தனர். இத்தகைய அபாயகரமான நடவடிக்கைகள் வளர்ந்து "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது போல" ஆங்கிலேயர்கள் நமது நாட்டிலிருந்த பல குறுநில மன்னர்களைத் தந்திரமாக ஒழித்துக் கட்டி சிறுகச் சிறுக நாட்டையே கைப்பற்றினர்.

நமது நாட்டிற்கு உலகளாவிய அளவில் மிகுந்த மரியாதை இன்றும் தொடர்ந்து கிடைப்பதற்கான முக்கியக் காரணம் நமது குடும்ப அமைப்பும், சமுதாயக் கட்டுப்பாடும், உயர்ந்த கலாச்சாரமுமே ஆகும். நமது நாட்டின் பாரம்பரியம் மிக்க தொன்மை வாய்ந்த கலைகள், குறிப்பாக, இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலாய கலைகள் உலக அளவில் மிகவும் மேன்மை பெற்று விளங்குவதற்குக் காரணமும் அவற்றின் அடிப்படையான நமது கலாச்சாரமே ஆகும்.

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

படம்: அன்பு எங்கே
இயற்றிவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: வேதா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1958

ஏய்..யா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஹா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு
அறிவில்லாம அடக்கிப்புட்டா மிருகமின்னு சொன்னோம் - அந்த
மிருகமெல்லாம் நம்மைப் பாத்து சிரிக்குதென்ன செய்வோம்

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

ஐயா வரவப் பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா - அந்த
ஐயா இங்கே கும்மாளந்தான் போடுறாரு சும்மா
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே ஆஹாஹாஹா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே ஆஹாஹாஹா
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனுஷன் ஆச
குதிரை வாலில் கொண்டு போயி கட்டிடுவார் காச

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹாஹா)
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே (ஆஹாஹாஹா)
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையைக் காலை ஆட்டுது
கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டுக் கையைக் காலை ஆட்டுது
கண்டவங்க மண்டையெல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பையெல்லாம் தூக்கித் தூக்கிப் போடுது

உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

ஹாய்..யா
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக