வெள்ளி, 8 ஜனவரி, 2016

விநோத தீபம் நவீன தீபம்

தினம் ஒரு பாடல் 25 ஆகஸ்ட் 2014
இவ்வுலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் தொடர்ந்து உழைக்கின்றன. எறும்புகள் கூடச் சாரி சாரியாகச் சென்று தங்கள் இனத்தினர் அனைவருக்கும் உணவைக் கண்டு எடுத்துச் சென்று சேகரித்து வைக்கின்றன. காக்கைகள் உணவுண்கையில் சுயநலம் பாராட்டாமல் காகா எனக் கூவித் தன் இனத்தினரை அழைத்து ஒன்றாகக் கூடி உண்கின்றன. ஒரு காகம் இறந்தால் அனைத்துக் காகங்களும் அப்பகுதியில் ஒன்று கூடிக் காகா என உரக்கக் கூக்குரலிட்டுத் தம் துக்கத்தை இப்பரந்த உலகுக்கு வெளிப்படுத்துகின்றன.

அனைத்து உயிரினங்களையும் விட அதிக அறிவு படைத்த மனிதன் இதற்கு மாறாக உழைக்காமலே இவ்வுலகில் கிடைக்கும் அனைத்து சுகங்களையும் தான் மட்டுமே அனுபவிக்கத் துடிக்கிறான். சுயநலத்துக்காக சொந்த பந்தங்களையும் தூக்கி எறிகிறான். உற்ற நண்பர்களுக்கு துரோகம் செய்கிறான். தன் தாய்த்திரு நாட்டைக் காட்டிக் கொடுக்கிறான். சக மனிதர்களைக் கொள்ளையடிக்கிறான், கொல்கிறான். பல மூட மதியினர் தம் சிற்றின்பங்களைப் பெறுவதற்கு மந்திர தந்திரங்களைப் பயன் படுத்த விழைந்து மந்திரவாதிகளை அணுகி அவர்கள் சொற்படி சக மனித ஜீவர்களை பலி கொடுக்கவும் தயங்குவதில்லை.

அக்காலம் முதல் இக்காலம் வரை மனிதர்களுடைய இத்தகைய விநோதமான சுபாவம் உலகெங்கிலுமுள்ள கதாசிரியர்களுடைய கற்பனைக்குத் தீனியாக அமைகின்றது. இதன் காரணமாகவே பல மந்திர தந்திரக் கதைகள் பல்வேறு நாடுகளில் பழங்காலம் தொட்டுப் பிரபலமாக விளங்குகின்றன. அத்தகைய கதைகளுள் ஒன்றே அலாவுதீன் கதை. அலாவுதீன் ஒரு விளையாட்டுச் சிறுவன். ஒரு விதவைத் தாய்க்கு ஓரே மகன். அவனது சித்தப்பா சிறு வயதிலேயே வீட்டை விட்டு எங்கோ காணாமல் போய் விட்டார்.

ஒரு மந்திரவாதி பல பூதங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் அவற்றினால் செய்ய இயலாத மாபெரும் காரியங்களை செயல்படுத்த மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பூதத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அலாவுதீனைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறான். அதன்படி அலவுதீனின் சித்தப்பா போல் வந்து அவர்களை நம்பவைத்து அப்பூதத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு விளக்கு இருக்கும் மலைக்குகைக்கு அலாவுதீனை இட்டுச் செல்கிறான். அலாவுதீனை குகைக்குள் சென்று விளக்கை எடுத்து வரச் சொல்கிறான். அலாவுதீன் குகைக்குள் சென்று அந்த விளக்கை எடுத்து வந்து, தன்னை முதலில் குகைக்குள்ளிருந்து வெளியே வர உதவக் கேட்கிறான். 

ஆனால் மந்திரவாதியோ விளக்கை மட்டும் வெளியே வீசச் சொல்கிறான். அலாவுதீன் மறுக்கவே மந்திரவாதி கோபத்தில் குகையின் வாயிலை மூடிவிட்டுச் சென்று விடுகிறான். அதன் பின் அலாவுதீன் மந்திரவாதியால் அங்கே விட்டுச் செல்லப்பட்ட உதவியாளனின் உதவியால் தப்பித்துப் பின்னர் பூதத்தின் உதவியால் பெரும் செல்வந்தனாகி பாக்தாத் அரசனின் அரண்மனையை விடப் பெரிய மாளிகை ஒன்று கட்டி பாக்தாத் அரசகுமாரியை மணக்க இருக்கும் நிலையில் மந்திரவாதி இச்செய்தியை அறிந்து விளக்கை அலாவுதீனிடமிருந்து அபகரிக்கத் திட்டமிடுகிறான். அதன்படி அவன் ஒரு விளக்கு வியாபாரியாக மாறிப் பல புதிய விளக்குகளை எடுத்துக் கொண்டு பாக்தாத் நகருக்கு வந்து பழைய விளக்குக்குப் புது விளக்குத் தருவதாகக் கூறித் தன் வியாபாரத்தை நடத்துகிறான். மந்திரவாதி தனது அடிமையான ஒரு பெண்ணை வெகு காலத்திற்கு முன் அரசனிடம் பணி செய்ய அமர்த்தியிருக்கிறான். அப்பெண்ணின் உதவியுடன் அலாவுதீனின் விளக்கை மந்திரவாதி புது விளக்கைக் கொடுத்து அபகரிக்கிறான். 

இக்கதையை "அலாவுதீனும் அற்புத விளக்கும்" என்ற பெயரில் 1957ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படமாக எடுத்து அதைத் தமிழில் டப் செய்து வெளியிட்டுள்ளனர். மந்திரவாதி விளக்கு விற்கும் காட்சியை ஒரு பாடற் காட்சியாக அமைத்துக் கதைக்கு இனிமை சேர்த்திருக்கின்றனர். இப்படத்தில் மந்திரவாதியாகப் பழம்பெரும் நடிகர் எஸ்.வி. ரங்காராவ் நடித்துள்ளார். திருச்சி லோகநாதனின் தீங்குரலில் அமைந்த அப் பாடலைக் கேட்டு மகிழ்வோமா?


திரைப்படம்: அலாவுதீனும் அற்புத விளக்கும்
இயற்றியவர்: 
இசை: எஸ். ராஜேஸ்வர ராவ், எஸ். ஹனுமாந்தராவ்
பாடியவர்: திருச்சி லோகநாதன்

பழைய தீபம் கொடுங்க ஆஆஆஆ ஆஆஆஅ ஆஆஆ
புதிய தீபம் தருவேனுங்க ஆஆஆஆஆஆ ஆஆஆஆ
மோசமேதும் இல்லை இல்லை
பார்த்து வாங்கிப் போகலாம் ஆஆஆஆ ஆஆ ஆஆஆஆஆ

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜந் தான்
குறஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஹாங்
குறஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஏங் ஏங்

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜந் தான்
குறஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஹாங்
குறஞ்ச விலை தான் எல்லோர்க்குமே

காசு பணம் உங்க கிட்ட ராசி தீபம் நம்ப கிட்ட
யோசிக்கணும் மாசில்லாத தீபந்தான்
உண்மையிலே பாக்கப் போனா
சத்தியமா சொல்லப் போனா
குலவிளக்கு இந்த தீபந்தான்

பழைய தீபம் போடுங்க புதிய தீபம் தாரேங்க
பழைய தீபம் போடுங்க புதிய தீபம் தாரேங்க
மோசமேதும் இல்லை இல்லை
பாத்து வாங்கிப் போகலாம் வாங்கய்யா

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜம் தான்
குறைஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஹாங்
குறைஞ்ச விலை தான் எல்லார்க்குமே

சீமான்கள் வாழ்விலும் ஏமாளி தாழ்விலும்
இருள் நீங்கி ஒளி வீசும் உயிர் தீபமே
சீமான்கள் வாழ்விலும் ஏமாளி தாழ்விலும்
இருள் நீங்கி ஒளி வீசும் உயிர் தீபமே
எல்லார்க்கும் நன்மைதான் என் பேச்சு உண்மை தான்
கண்ணா உன் தீபந்தான் 
விண்ணோடு மண்ணிலே விளையாடும் ரூபமே
தன்னாலே வாழும் எழிலாகுமே ஜோதி
இல்லேன்னா லோகமே இருளாகுமே
தன்னாலே வாழும் எழிலாகுமே ஜோதி
இல்லேன்னா லோகமே இருளாகுமே

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜந் தான்
குறைஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஹாங்
குறைஞ்ச விலை தான் எல்லோர்க்குமே

உன் போல நானடா என் போல நீயடா
உணராத போதிலே சுகமேதடா?
உன் போல நானடா என் போல நீயடா
உணராத போதிலே சுகமேதடா?

எப்போதும் நீதியின் பெயர் ஜோதியாகுமே 
பண்பாகும் தீபம் தான்
எல்லோரும் வாருங்க என் பேச்சக் கேளுங்க
எல்லோரும் வாருங்க என் பேச்சக் கேளுங்க
இருக்குங்க புதிய தீபம் ஏராளங்க இதில்
எதிர்கால பலனுண்டு நிஜந்தானுங்க
இருக்குங்க புதிய தீபம் ஏராளங்க இதில்
எதிர்கால பலனுண்டு நிஜந்தானுங்க ஹாங்

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜந் தான்
குறைஞ்ச விலை தால் எல்லார்க்குமே ஹாங்
குறைஞ்ச விலை தான் எல்லார்க்குமே

வியாழன், 7 ஜனவரி, 2016

தென்னங்கீற்று ஊஞ்சலிலே

நமது பாரத தேசத்தில் பண்டைக் காலத்திலிருந்தே கடவுளர் பலர் இருப்பதாக நம்பி வழிபட்டு வருகிறார்கள் நம் மக்கள். அக்கடவுளர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட பணி இருப்பதாகவும் நம்புகிறோம். அதே போல் கிரேக்க நாட்டிலும் பல கடவுளர் உளர் எனும் நம்பிக்கையுடன் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட பணி இருப்பதாகவும் நம்பி வந்துள்ளனர். உலகத்தையும், பல்வித உயிர்களையும் படைக்கும் கடவுள் நம் நாட்டில் பிரம்மா என்று அழைக்கப்படுகிறார். பிரம்மன் படைத்த யாவற்றையும் தீய சக்திகளிடமிருந்து அதிலும் குறிப்பாக அசுரர்களிடமிருந்து காக்கும் கடவுள் விஷ்ணு என்று அழைக்கப் படுகிறார். அசுரர்களும் மானிடர்கள் போன்றொரே ஆவர். அரக்கர் என்று தமிழில் சொல்லபடுவோர், ஆனால் தீய செயல்களைத் தயங்காமல் செய்யும் குணமுடைய 
பாதகர்கள். நீதி, நேர்மையற்றவர்கள். கவிச்சக்கரவர்த்தி கம்பர் அரக்கர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில்

இரக்கமென்றொரு பொருள் இலாத நெஞ்சினர்
அரக்கரென்றுளர் பலர் அறத்தின் நீங்கினார்

என்று குறிப்பிடுகின்றார் தன் இராமாயண காவியத்தில்.

உரிய காலத்தில் யாவற்றையும் அழிக்கும் பணியை செய்யும் கடவுள் சிவன் என்று அழைக்கப் படுகிறார். 

சமீப காலமாக உலகில் நடைபெறும் வன்முறை, சாதிக் கலவரங்கள், பெண்களின் மேல் அடக்குமுறை மற்றும் பச்சிளம் குழந்தைகளையும் விட்டு வைக்காமல் கற்பழிக்கும் தீமைகள், காடுகளையும், விளை நிலங்களையும் திட்டமிட்டு அழிக்கும் அரசியல் சதிகள், நீதிமன்றங்கள் போதிய அளவில் இல்லாமை, நீதிபதிகள் பற்றாக்குறை, நீதித் துறை செயல்படும் காலம் மிகவும் குறுகியுள்ளமை, இலவசமாக இருந்த கல்வி விலைக்கு விற்கப்படும் கொடுமை, சாராயம் விற்றவர்கள் கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் வியாபார ரீதியில் நடத்தி மக்கள் உழைத்து ஈட்டும் பணம் அனைத்தையும் வழிப்பறி செய்வதற்கொப்பாகப் பறித்துக் கொள்ளும் பகல் கொள்ளை எனும் வகையில் நம் நாட்டில் மாத்திரமன்றி உலகம் முழுவதும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறுவதைக் காண்கையில் நமது பூமி இன்னும் எவ்வளவு காலம் இருக்கும் என்பதே ஐயமாக உள்ளது. 

வெறும் காகிதத்தில் அச்சிடப்பட்ட பணம் எனும் மாயப் பிசாசு மனிதர்களை மதியற்றவர்களாக ஆக்கி ஊழிக் காற்றைப் போல் அலைக்கழிக்கிறது. மனிதர்களை இவ்வாறு அழிவுப் பாதையில் இட்டுச் செல்வது யார்? 

அழிக்கும் கடவுளா அல்லது மனித வடிவில் திரியும் சாத்தான்களா?

61 ஆண்டுகள் நிறையப்பெற்ற நான் சிறுவனாயிருக்கையில் கிராமங்களில் என் தந்தை குடியிருந்திருக்கிறார். அங்கே அன்று கண்ட இயற்கை வளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு பூமியின் பெரும் பகுதி கட்டடங்களாக மாறி விவசாயம் குறைந்து, நீர் வளம் கெட்டு, காற்றும் விஷமாகிப் போன நிலையைத் தற்காலம் காணுகையில் மனம் சொல்லொணாத் துயருறுகிறது. வருங்கால சந்ததிகள் வாழத் தேவையான வளங்களை நம் தலைமுறையினர் மனம் போன போக்கில் அழித்துத் தாங்களும் இன்புறாமல் பிறரையும் இன்புற விடாமல் தீய வழியில் செல்வது கவலைக்கிடமளிப்பதாக உள்ளது. இயற்கையை இன்பமயமாக்கும் பல உயிரினங்களும் பறவைகளும் இன்று இருக்கும் இடமே தேரியவில்லை. அத்தகைய ஒரு அரியதாகிக் கொண்டிருக்கும் உயிரினம் (endangered species) சிட்டுக்குருவி. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் (1987 அளவில்) நாம் அம்பத்தூரில் என் மனைவியுடன் குடியிருக்கையில் எங்கள் வீட்டுப் பலகணியில் அழகிய ஒரு சிட்டுக்குருவி கூடுகட்டி வாழ்ந்திருந்தது. அது என் கையில் வைத்து நான் தரும் தானியங்களைக் கொத்தித் தின்னும் காட்சியை நான் புகைப்படமெடுத்து வைத்திருக்கிறேன்.

உலகம் அழிவிலிருந்து மீள வேண்டுமெனில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப் பட வேண்டும். இரும்புத் தாது, நிலக்கரி, அலுமினியத் தாது, கருங்கல், மணல் முதலான பொருட்களுக்காக வனங்களும், மலைகளும் ஆற்றங் கரைகளும் தொடர்ந்து அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். நம் நாட்டில் சட்டவிரோதமான சட்டங்கள் பல நம் நாட்டை ஆள்வோரால் அடக்குமுறையில் ஆட்சி செய்ய வேண்டுமென்றே இயற்றப்படுகின்றன. இவற்றை மாற்றி மக்களுக்கு நன்மை தரும் சட்டங்கள் மட்டுமே நடைமுறையில் இருக்குமாறு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் மனித இனமும் மற்ற உயிரினங்களுடன் சேர்ந்து விரைவிலேயே அழிவதை யாரும் தடுக்க இயலாது.

இங்கே ஒரு சிட்டுக்குருவி தென்னங்கீற்றில் ஊஞ்சலாடிக்கொண்டு இயற்கை வளங்களின் இனிய சுகத்தை அனுபவித்துக் கொண்டு உடன் கலந்து மகிழத் தன் பெட்டைத் துணையைத் தேடுகின்றது. இனிமையான அந்த கானத்தைக் கேட்டு மகிழ்வோமா?



திரைப்படம்: பாதை தெரியுது பார்
இயற்றியவர்: ஜெயகாந்தன்
இசை: எம்.பி. ஸ்ரீனிவாசன்
பாடியோர்: பி.பி. ஸ்ரீநிவாஸ், எஸ். ஜானகி

album/paathai-theriyuthu-paar 

தென்னங்கீற்று ஊஞ்சலிலே 
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது

ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ

நீலமேகம் ஏழு வண்ண
ஆடையோடுலாவுது
வானை பூமி அழைக்குது
தொடு வானில் இரண்டும் கலக்குது

தென்னங்கீற்று ஊஞ்சலிலே 
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது

ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ

தென்னங்கீற்று ஊஞ்சலிலே 
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது

ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ

நீலக்கடல் ஓலமிட்டு
இங்கிருந்தும் கூவுது
அதுவே பாடி நடக்குது
கடலில் கலக்கத் துடிக்குது

தென்னங்கீற்று ஊஞ்சலிலே 
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது

ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ

திங்கள், 4 ஜனவரி, 2016

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

தினம் ஒரு பாடல் - ஆகஸ்டு 15, 2014

ஒருவன் வாழ்வில் எந்த ஒரு காரியத்திலும் சித்தியடைய முதற்கண் அவனது மனம் அவனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஐம்புலன்களின் வழியே நுகரும் பலவிதமான இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுதைக் கழிக்க மனமே தூண்டுகிறது. அத்தூண்டுதலுக்கு அடிமையாவோர் தம் லக்ஷியங்களிலிருந்து தம்மையறியாமலே விலகி இன்பநாட்டத்தில் ஈடுபட்டுத் தம் பொன்னான காலத்தை வீணடித்துப் பிற்காலத்தில் வருந்துவது நிச்சயம். 

இளம் வயதில் கல்வி கற்கும் பருவத்தில் கல்வியில் மனதைச் செலுத்தித் தேராமல் போவோரும் போதிய அளவு மதிப்பெண்களைப் பெறாதவரும் அதன் பின்னர் வேலை கிடைக்காமலும் தம் வயதையொத்த நண்பர்களை விடக் குறைவான ஊதியத்திற்கு இரண்டாம் தர, மூன்றாம் தர நிறுவனங்களில் வேலை செய்ய நேர்ந்தும் அல்லல் பட்டு வாழ்வில் முன்னேற இயலாமல் கீழ்நிலையிலேயே கிடந்து வாடுவர். 

தன் மனதிற்குப் பிடித்த ஒருவர் மேல் காதல் கொண்டவர் உரிய காலத்திற்குள் தன் காதலைத் தன் மனதிற்குப் பிடித்தவரிடம் தெரிவிக்காமல் போனால் அவரது காதல் தோல்வியில் முடிவதும் நிச்சயம். இதற்கெல்லாம் காரணம் அவரது மனம் அவரது 
கட்டுப்பாட்டில் இல்லாதிருத்தலே ஆகும்.

"மந்திரம் கால் மதி முக்கால்" என்றொரு பழமொழி உண்டு. அதன் பொருளாவது எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெற மந்திரம் அதாவது மனதின் திறம் கால் பங்கும் மதி அதாவது அறிவு முக்கால் பங்கும் காரணமாகின்றன என்பதேயாம். 

யோகம் பயிலுகையில் முதலில் உடற்பயிற்சியும், அதன் பின்னர் சுவாசப் பயிற்சியும் செய்வித்து இறுதியில் மனப் பயிற்சியைக் கற்பிக்கிறார் ஒரு யோகா ஆசிரியர். உடல் பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் மனதைப் புலன்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க மிகவும் அவசியமாகின்றன. மனம் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் மனப் பயிற்சி செய்கையில் மனதில் திறன் கூடுகிறது. கட்டுப்படா மனத்தைப் பயிற்சி செய்விக்க இயலாது. 

ஒரு மாணவன் ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்கவென்று பள்ளி கல்லூரிகளில் ஒதுக்கப் படும் நேரத்தைத் தவற விட்டாலோ, கல்வி பயிலுகையில் ஆசிரியர் சொல்லித் தருவதை கவனியாமல் இருந்தாலோ அவன் கல்வியில் திறமை பெற இயலாது. அது போலவே யோகம் பயிலும் மாணவனும் மனதை முதலில் கட்டுப்படுத்தத் தவறிடின் யோகம் கைகூடாது. அனைத்திற்கும் மேலாக மனம் ஐம்புலன்களின் வழியே இழுத்துச் செல்லப்பட்டு இன்பநாட்டம் அதிகரிக்கையில் ஒருவர் எவ்விதப் பாபச் செயலையும் செய்யத் தயங்காத தன்மையை அடைவர். 

அது அவரை மனித நிலையிலிருந்து தாழ்த்தி மிருக நிலைக்குக் கொண்டு சென்று விடும்.

ஒரு குரங்கு எவ்வாறு மரத்தின் கிளைகளிடையேயும் மரங்களிடையேயும் தாவுகிறதோ அதைப் போலவே மனம் ஆசைகளின் வயப்பட்டு ஒரு நிலையில் நிற்காமல் தாவிடும். ஒரு குரங்கு எவ்வாறு மரத்திலிருக்கும் பழங்கள் யாவற்றையும் பிய்த்தெரிந்து தனக்கே உணவில்லாமல் ஆக்கி அழிவுப் பாதையில் செல்கிறதோ அதே போல் மனமும் ஒரு கட்டுப்பாடற்ற மனிதனை அழித்து விடுவதோடு அவனைச் சேர்ந்தவர்களையும் சமுதாயத்தையும் அழித்து விடும் அபாயகரமான தன்மையடைகிறது. 

நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 67 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்னமும் பசியும் பஞ்சமும், நோயும், ஏமாற்றும், கொலைகளும் கொள்ளைகளும், பெண்களைக் கொடுமைப் படுத்தும் கொடூரமும், பச்சிளம் குழந்தைகளைக் கற்பழித்துக் கொல்லும் படுபாதகங்களும் தொடர்ந்து நடைபெற்று சமுதாயம் அமைதியற்று விளங்கக் காரணம் மக்களின் மனங்கள் கட்டுப்பாடற்றுத் தவறான வழியில் ஆசைவயப்பட்டுச் செயல்படுவதனாலேயே ஆகும். மக்கள் என்றால் நாட்டின் குடிகளாக விளங்கும் பொதுமக்களும் ஆட்சிப் 
பொறுப்பில் இருக்கும் அதிகார வர்க்க மக்களும் சேர்த்தே கொள்ள வேண்டும்.



திரைப்படம்: மனம் ஒரு குரங்கு
இயற்றியவர்: வீ. சீதாராமன்
இசை: டி.பி. ராமச்சந்திரன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்
வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்
கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்
கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்
கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

கலையின் பெயராலே காமவலை வீசும்
காசு வருமென்றால் மானம் விலைபேசும்
நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும்
நிம்மதியில்லாமல் அலைபோல மோதும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு 

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்

தினம் ஒரு பாடல் - ஆகஸ்ட் 12, 2014
ஒரு ஆசிரியன் அல்லது ஆசிரியை தன் மாணாக்கர்களுக்கு வெறும் பள்ளிப் பாடத்தை மட்டும் போதித்தால் அது அவர்களது வாழ்க்கையை வளமாக்கப் போதாது. உடன் நல்லொழுக்கத்தையும், மனோதைரியத்தையும் போதிக்க வேண்டியது மிகவும் அவசியம். எவ்வளவு கல்வி பயின்று மிகவும் திறமைசாலிகளாக மாணவர்கள் வளர்ந்த போதிலும் தீமைகளை எதிர்த்துப் போராடும் துணிவு இல்லாவிடில் அவர்களது திறமை அனைத்தும் விழலுக்கிரைத்த நீரே போலாகும். தைரியம் பல வகைப்படும். உடல் வலிமையினால் வளரும் தைரியம் பல வீர விளையாட்டுக்கள், இராணுவம், மலையேறுதல், தீய சக்திகளை எதிர்த்து நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்தல் போன்ற செயல்களில் திறமை பெறப் பெரிதும் உதவியாக இருக்கும். 

மனோ பலத்தால் வளரும் தைரியம் எந்த ஒரு இடர் வந்த போதும், நோயினால் தாக்குண்ட போதும் அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொள்ளத் தகுந்த துணிச்சலைத் தரும். நேர்மையினால் வளரும் தைரியம் பிறர் துன்பம் களைய நற்காரியங்களில் ஈடுபட்டு அநீதி இழைப்போரைத் தட்டிக்கேட்கும் பேராற்றலைத் தரும். அறிவினால் வரும் தைரியம் வியாபாரம், நிர்வாகம் உட்படப் பல துறைகளில் திறமை காட்டி வாழ்வில் மேன்மையடையவும், பொருளாதார ரீதியிலும் சமயோசித ரீதியிலும் பிறருக்குதவி செய்வதற்கும் பயன்படும்.

எத்துணை உடல் வலிமை இருப்பினும் மனோ தைரியமும் அறிவுடன் நேர்மையும் இல்லாவிடில் செய்யும் எந்த செயலும் முழுமை பெறாது, நன்மை பயக்காது. எனவே சிறு வயது முதலே ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளிக் கல்வியுடன் சேர்த்து தைரியத்தையும், மனோ பலத்தையும், அறிவையும் வளர்க்கும் வாழ்க்கைக் கல்வியையும் அளிப்பதோடு போதிய உடற்பயிற்சி தந்து உடல் வலிமை பெறவும் உதவ வேண்டும். சில ஆண்டுகள் முன்பு (சுமார் 1980) வரை நம் நாட்டில் பள்ளிகளில் விளையாட்டுக்களுக்குப் போதிய இடம் இருந்தது. அத்துடன் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சமூக சேவை செய்யும் நோக்கத்துடன் பல தனவந்தர்களால் நடத்தப்பட்டன. 

அத்தகைய தனியார் பள்ளிகளுக்கு அரசாங்கம் பொருளுதவி செய்ததுடன் ஆசிரியர்களின் ஊதியத்தையும் வழங்கி வந்தது. ஆசிரியர்கள் திறமையும் ஒழுக்கமும் உள்ளவர்களாக இருப்பதைக் கல்வி நிறுவனங்களும் அரசும் உறுதி செய்து வந்தன. 

அதன் பின்னர் அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் சரியாகப் பராமரிக்கப்படாமல் கல்வி தனியாருக்கு விற்கப்பட்டு வியாபார ரீதியில் அமையப் பெற்றதனால் முறையான கல்வி வழங்குவதற்கு மாறாக மாணவர்களின் பெற்றோர் தம் வருவாயில் பெரும் பகுதியை அவர்களது கல்விக்கெனச் செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். அது மட்டுமின்றிப் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லாத நிலை ஏற்பட்டது. ஒருசிறு வீட்டிலும் ஒரு பள்ளி அல்லது கல்லூரி நடத்த அனுமதி வழங்கப் பட்டது. இதனால் பல விபத்துகள் நேர்ந்து எண்ணிறந்த குழந்தைகள் மாண்டு போன பின்னரும் கல்வி கவனிக்கப்படாமலே இருக்கிறது. இந்நிலை மாறும் வரை ஏட்டுச் சுரைக்காய் கரிக்குதவாது எனும் நிலையிலேயே கல்வி இருக்கும். தீமைகள் நாட்டில் மிகும். 

நல்லோர் துயர்க்குள்ளாவர். இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டும் ஏன் என்று கேட்க யாருக்கும் துணிவில்லாத துர் நிலையே தொடரும்.

இன்றைய பாடலில் ஒரு ஆசிரியை தன் குழந்தைப் பருவ மாணவனுக்கு தைரியமூட்ட ஒரு இனிமையான பாடலைப் பாடி அறிவு புகட்டுகிறாள். அக்குழந்தைச் சிறுவனும் ஆசிரியையின் பாடலை நன்கு மனதில் கொண்டு அவர் கேட்கும் கேள்விகளுக்குத் தக்க பதிலை புத்திக் கூர்மையுடன் சொல்கிறான்.



திரைப்படம்: கைதி கண்ணாயிரம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: பி. சுசீலா, மாஸ்டர் ஸ்ரீதர்
ஆண்டு: 1959

ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆ ஆஆஆஆஆ 
ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் 

ஆஆஆ
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்

உண்மை இதை உணர்ந்து
நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும்புகழ் சேர்த்திடடா

பள்ளி சென்று கல்வி பயின்று
பலரும் போற்றப் புகழ் பெறுவேன் சபாஷ்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு

அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரனாவேன் சபாஷ்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

தன்னந்தனிமையில் நீயிருந்தால்
துன்பப் புயலுமே உனை சூழ்ந்தால்
தன்னந்தனிமையில் நீயிருந்தால்
துன்பப் புயலுமே உனை சூழ்ந்தால்

கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா?
கண்மணி எனக்கதை சொல்லிவிடு

வேளைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன் சபாஷ்

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ

பேசும் யாழே பெண் மானே

தினம் ஒரு பாடல், ஆகஸ்டு 8, 2014

குழலினிது யாழினிது என்பார் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

என்று குழல், யாழ் ஆகிய இன்னிசைக் கருவிகளின் இசை தன் குழந்தையின் மழலைக்கீடாகது என்று ஒரு படி குறைத்துச் சொன்னார் வள்ளுவர்.

மலரும் வான் நிலவும் சிந்தும் 
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும் கொஞ்சும்
ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

என்று குழல், யாழ் ஆகியவற்றின் இசை இறைவனின் குரலின் பிம்பங்களே என உயர்த்திச் சொன்னான் கவி கண்ணதாசன்.

கலைஞர் கருணாநிதி யாழை ஒரு பெண்ணாக வர்ணித்து அவளது காதலன் அகமகிழ்ந்து அவளிடம் பாடுவதாக அமைத்து சிதம்பரம் ஜெயராமன் அவர்களது இசையில் ஏ.எம். ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடும் இப்ப்பாடல்எளிமையாக இருப்பினும் இனிமையாகவே உள்ளது. காதல் உணர்வை மென்மையாக வெளிப்படுத்தும் இப்பாடல்எம்.ஜி.ஆர். அவர்களும் அவரகளது துணைவியார் வி.என்.. ஜானகியும் இணைந்து பாடுவதாக 1953ஆம் ஆண்டு வெளிவந்த "நாம்" எனும் திரைப் படத்தில் இடம் பெறுகிறது.

யாழ் எப்படியிருக்கும்? அழகிய ஒரு மரச்சட்டம், அதில் சில கம்பிகள் மேலிருந்து கீழாக வரிசையில் இழுத்துக் கட்டியிருக்கும். இசைப்பவர் யாழின் ஒரு சட்டத்தை இடக்கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு சட்டத்தைத் தன் மார்பில் அணைத்து, வலக்கையால் கம்பிகளை இசைக்குத் தக்கபடி மீட்டுவர். "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் "அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்" எனும் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். யாழ் மீட்டிப் பாடுவதாக அமைந்துள்ளது. 

பெண்ணை அணைக்கும் ஒரு காதலனுக்கு அவள் யாழைப் போல இனிய குரலையுடைய இசைக்கருவியாகத் தோன்றுவதில் வியப்பில்லை.! 

யாழிசை போல என் தமிழிசையைக் கேட்டு ரசிக்கும் தமிழ் நண்பர்கள் அனைவரது வாழ்வும் இனிமையானதாக அமைவதாக! இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் அவரவர் இதயம் கவர்ந்த காதலர் அமைவதாக! இல்லறம் சிறக்க இன்பவாழ்வு வாழ்க என இளைஞர்கள் யாவரையும் என் உளமாற ஆசீர்வதிக்கிறேன்!


திரைப்படம்: நாம்
இயற்றியவர்: கலைஞர் மு. கருணாநிதி
இசை: C.S. ஜெயராமன்
பாடியோர்: ஏ.எம். ராஜா, ஜிக்கி
ஆண்டு: 1953

ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

பேசும் யாழே பெண் மானே
பேசும் யாழே பெண் மானே
வீசும் தென்றல் நீதானே 
வீசும் தென்றல் நீதானே
பேசும் யாழே பெண்மானே

நீல வானே தன்னை மறந்து
நிலவினைப் புகழ்ந்திடலாமோ?
வானே தன்னை மறந்து 
நிலவினைப் புகழ்ந்திடலாமோ?

எழிலே தமிழ்க் காவியமே 
எழுதாத ஓவியமே 
எழிலே தமிழ்க் காவியமே 
எழுதாத ஓவியமே 

இன்பமொழி பேசிப்பேசி
அன்புப் பார்வை வீசிவீசி 
இன்பமொழி பேசிப்பேசி
அன்புப் பார்வை வீசிவீசி 

பேசும் யாழே பெண்மானே
வீசும் தென்றல் நீதானே
பேசும் யாழே பெண்மானே

யாழே நான் என்றால் நாதம் 
யாழே நான் என்றால் நாதம் நீர் தானே 
யாழே நான் என்றால் நாதம் நீர் தானே 
நாதத்தில் பேதமுண்டு நமக்கது வேண்டாமே
நாதத்தில் பேதமுண்டு நமக்கது வேண்டாமே

காதல் வாழ்வே கனிரசமே
காதல் வாழ்வே கனிரசமே
மாதர் மறவர் உல்லாசமே 
காதல் வாழ்வே கனிரசமே

சனி, 4 ஜூலை, 2015

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

மனிதப் பிறவி கிடைத்தற்கரியது. ஏனெனில் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ ஒரு பாதை வகுக்கிறது மனிதப் பிறவி. அப்பாதை அகக் கண்களுக்கும் புறக்கண்களுக்கும் தெளிவாகத் தெரிந்தும் இந்தப் பாழும் மனித ஜன்மம் ஆசை, பொறாமை, கோபம், துர்ப்பேச்சு எனும் விலக்க வேண்டிய தீமைகளையே தேடிப் பிடித்துத் தேம்பி அலைகிறது. கோடிகள் குவிப்பதிலும், உடலின்பம் துய்ப்பதிலும், பிறரைத் துன்புறுத்தி அதில் அற்ப இன்பம் தேடுவதிலும், வரியார்க்கொன்றும் ஈயாமல் இருக்கும் செல்வத்தைத் தீய வழியில் செலவிட்டுத் தான் 
கெடுவதோடு பிறரையும் கெடுப்பதிலும் தன் நேரத்தையும் சிந்தனையையும் செலவு செய்வோர் நரகமெனும் படுகுழியில் வீழ்ந்து மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் மனிதப்பிறவி கிட்டாமல் அறிவற்ற அற்ப ஜந்துக்களாக அவதாரம் செய்து அல்லலுறுகின்றனர்.

இப்பிறவியிலேயே ஆசைகளைத் துறந்து, தன் உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்துதவி தெய்வமாகவே வாழ்வோர் மரணமில்லாத பெருவாழ்வு வாழ்வது நிச்சயம் என்பதை இவ்வுலகில் பல ஞானியர் நிரூபித்துள்ளனர். அத்தகைய நிலைக்கு முக்தி என்று பெயர். எந்த வித ஆசையோ, கோபமோ, சந்தேகமோ இல்லாத தெளிந்த ஞானமே முக்திக்கு வழி. மனிதன் தன் முற்பிறவியில் குரங்காகப் பிறந்தான் என்று முன்னோர்கள் பலர் கூறியுள்ளனர். புகழ்பெற்ற விஞ்ஞானி டார்வின் தனது "Theory of Evolution" எனும் விரிவான ஆராய்ச்சிக் கட்டுரையில் உலகில் உயிர்கள் ஏற்பட்டுப் பரிமாண வளர்ச்சியடைந்த சரித்திரத்தை விரிவாக விளக்கியுள்ளார். அவரும் குரங்குப் பிறவிக்கு அடுத்ததே மனிதப் பிறவி என்று எடுத்துரைக்கிறார். 

குரங்குகளும் சற்றேறக் குறைய மனிதர்களுக்கீடான பகுத்தறிவு கொண்டவை என்பது விஞ்ஞான பூர்வமாக இன்றும் நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்தியாவின் தொன்மையான புராணமான இராமாயண காவியத்தில் இராமன் காணாமற்போன தன் மனைவி சீதை இருக்குமிடத்தைக் கண்டறியவும், சீதையைக் களவாடிச் சென்ற இராவணன் மீது போர் தொடுத்து வெல்லவும் ஒரு குரங்குப் படையைத் துணையாகக் கொண்டதாகப் படிக்கிறோம். அந்தக் குரங்குகளில்ஒருவனே அனுமன். அவனே இலங்கைக்குக் கடல் கடந்து சென்று சீதையைக் கண்டதாகவும், பின் இராமனிடம் திரும்பி வந்து சீதையின் இருப்பிடம் குறித்த தகவலைச் சொன்னதாகவும், மேலும் போரில் இராம இலக்குவர்களுக்குப் பெரும் துணையாக நின்று இராவணனின் சேனைகளை அழித்து வெற்றி ஈட்டித் தந்ததாகவும் எழுதி வைத்துள்ளார் வால்மீகி முனிவர். 

அன்னியனின் சிறையில் அல்லலுற்று அரற்றித் தன் அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து வாடிய நிலையில் அனுமன் வந்து தனக்கு நம்பிக்கையூட்டியமையால் அவன் பிணி, மூப்பு, மரணமின்றி என்றும் சிரஞ்சீவியாய் வாழ சீதை ஆசீரவதித்தாள். 

"எனதன்பு ஹனுமான், எனக்காக நீ ஆற்றிய தொண்டுகளை ஒரு போதும் என்னால் திருப்பிச் செலுத்த இயலாது. நான் என்றும் கடன் பட்டவனாகவே இருப்பேன். உம்முடைய வாழ்க்கை இராமாயணம் உச்சரிக்கப்படும் வரை தொடரட்டும். மேலும் இராமாயணமோ பூமி இருக்கும் வரை தொடர்ந்து உச்சரிக்கப்படும்." என்று பகவான் ஸ்ரீ ராமச்சந்திரர் கூறினார்.

குரங்குகளின் சேட்டைகளும் அன்புடன் தன் இனத்தை அரவணைத்துக் கொண்டு வாழும் இனிமையும் என்றும் கண்டின்புறத் தக்கவையே. அத்தகைய அபூர்வமான குரங்குப் பிறவி எடுத்து அதன் பின்னர் மனிதனாகப் பிறந்தது குறித்து நாம் எவரும் ஆதங்கப் பட வேண்டாம். பெருமையே கொள்ளலாம்.



திரைப்படம்: தூக்கு தூக்கி
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி
பாடியோர்: பி. லீலா, ஏ.பி. கோமளா, டி.எம். சௌந்தரராஜன், வி.என். சுந்தரம்
ஆண்டு: 1954

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது

உருவ அமைப்பைக் காணும் போது
ஓரறிவீரறிவுயிர் என மாறி மாறி வாலில்லாத குரங்கு 
உருவ அமைப்பைக் காணும் போது
ஓரறிவீரறிவுயிர் என மாறி மாறி வாலில்லாத குரங்கு
ஓரறிவீரறிவுயிர் என மாறி மாறி வாலில்லாத உர்ர்ர்ர்ர்ர் 
ஓரறிவீரறிவுயிர் என மாறி மாறி வாலில்லாத உர்ர்ர்ர்ர்ர்

பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும் தலையில்
பேனும் ஈறும் தேடித் தேடிப் பிடிப்பதனாலும் தலையில்
பேனும் ஈறும் தேடித் தேடிப் பிடிப்பதனாலும்
நடிப்பினாலும் நடத்தையாலும் நரர்களும் வானரமும் ஓர் குலம்
நடிப்பினாலும் நடத்தையாலும் நரர்களும் வானரமும் ஓர் குலம்

உடுக்கும் உடைகள் படிப்பினாலும் உள்ளபடி பேதமுண்டு 
உண்மையில் வித்தியாசமில்லை 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உடுக்கும் உடைகள் படிப்பினாலும் உள்ளபடி பேதமுண்டு 
உண்மையில் வித்தியாசமில்லை 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

பதநிஸ்ரி குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
பதநிஸ்ரி குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

ஸ்நிஸ்கரிஸ் நிரிஸ் நிதப நிரிஸ் நிதப மபதநிஸ்ரி குரங்கு
ஸ்நிஸ்கரிஸ் நிரிஸ் நிதப நிரிஸ் நிதப மபதநிஸ்ரி குரங்கு

மாமா பாபா தபம பாபா தாதா நிதப தாதாநீநீ ஸ்நித பதநி மனித குரங்கு
மாமா பாபா தபம பாபா தாதா நிதப தாதாநீநீ ஸ்நித பதநி மனித குரங்கு

பமதபநிதபம ஸரிகம பதநிஸ்ரி கரிஸ்நிரிஸ் நிதப கரிஸ்நிதபமப
பமதபநிதபம ஸரிகம பதநிஸ்ரி கரிஸ்நிரிஸ் நிதப கரிஸ்நிதபமப

நிதமபமதநிஸ்கரி நிரிஸ்நிதம மதபம கமபதநிதமப
நிதமபமதநிஸ்கரி நிரிஸ்நிதம மதபம கமபதநிதமப

பபபபபதா தததததநி நிநிநிததாநிரீஸ்ஸ்தபா
பபபபபதா தததததநி நிநிநிததாநிரீஸ்ஸ்தபா

ரிகரிஸ்நிதப ரிகரிஸ்நிதப
ஸ்ரிஸ்நிதபம ஸ்ரிஸ்நிதபம
ரிகரிஸபமக ரிகரிஸபமக

தபம கமப தபம கமப
நிதப மபத நிதப மபத
ஸ்நிதபதநி ஸ்நிதபதநி
நிஸ் நிஸ் ஸ்நி ஸ்நி பதா பதா மபா மபா

மாமா குரங்கு மாமா குரங்கு
பாபா குரங்கு பாபா குரங்கு
தாத்தா குரங்கு தாத்தா குரங்கு
 
நீதான் குரங்கு நீதான் குரங்கு
நீ குரங்கு நீ குரங்கு நீ குரங்கு நீ குரங்கு
குரங்கு குரங்கு குரங்கு குரங்கு
குரங்கு குரங்கு குரங்கு குரங்கு
குரங்கு குரங்கு குரங்கு குரங்கு

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும் 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும் 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் 

இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு

கவிஞர்களுக்கு வாக்குப் பலிதமுண்டு என்பது ஆன்றோர்கள் கண்டுணர்ந்த உண்மை. நம்புவதும் நம்பாதிருப்பதும் அவரவர் விருப்பம் ஏனெனில் பொய்க்கு ஆயிரம் சாட்சிகள் வருவர். உண்மைக்கு சாட்சி சொல்ல யாரும் இன்று வருவதில்லை. அத்துணை மதிப்பு உண்மைக்கு மஹாத்மா காந்தி பிறந்த நாட்டில்!

காளமேகப் புலவர் என்றால் தமிழறிஞர்கள் யாவரும் அறிவர். திருமலைராயன் பட்டினம் எனும் நாட்டை அவர் சரமகவி அல்லது வசைகவி பாடி மண்மாரிப் பொழிந்து அழியச் செய்தார் என்பது காளமேகப் புலவர் வரலாற்றில் காணும் குறிப்பு.

செய்யாத செய்த திருமலைராயன்வரையில் 
அய்யா வரனே அரைநொடியில் - வெய்யதழற் 
கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர் 
மண்மாரி யாலழிய வாட்டு

என்பதே அச்சரமகவி.

"வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர் சயங்கொண்டான் விருத்தமென்னும்
ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா அந்தாதிக் கொட்டக் கூத்தன் 
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் வசைபாடக் காள மேகம் 
பண்பாகப் பகர்சந்தம் படிக்காச லாலொருவர் பகரொ ணாதே." 

- பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

மரணத்தின் விளிம்பில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஜீவனையும் காக்கவல்ல பாடல்களைப் புலவர்கள் பாடியுள்ளமைக்கு வரலாற்றுச் சான்றுகள் உள. இத்தகைய நாவன்மை சங்ககாலப் புலவர்களை மட்டுமின்றி தற்காலப் புலவர்களிடத்தும் உண்டு என்பதை நம்மில் பலர் அல்லது சிலர் அறிந்திருக்கக் கூடும். குறிப்பிட்டுச் சொல்லுவது தற்காலத்தில் கடினம் ஏனெனில் இயந்திரகதியில் உலகம் இயங்குகையில் யாருக்கும் நிற்கவோ, நினைக்கவோ நினைத்ததை விரிவாக எடுத்துச் சொல்லவோ போதிய நேரம் கிட்டுவதில்லை. அது மட்டுமின்றி அவ்வாறு யரேனும் எழுதிவைத்தாலும் அதைப் படிப்போர் வெகுசிலரே. மனிதர்கள் பணம் சம்பாதிப்பதிலும் அடுத்த வேளைப் பசிக்கு உணவு தேடுவதிலுமே பெரும்பான்மையான நேரத்தை செலவிட வேண்டிய நிர்ப்பந்தம்.

புரட்சி நடிகராயிருந்து புரட்சித் தலைவராக உயர்ந்த மக்கள் திலகம், எம்.ஜி.ஆர். என்று தமிழக மக்களால் மட்டுமின்றி உலகிலுள்ளோரில் பெரும்பாலோரால் அறியப்பட்ட எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 1984ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் திவிர சிகிச்சை பெற்றுவந்தார். செய்திகேட்டுத் தமிழக மக்கள் அனைவரும் மாளாத் துயரில் ஆழ்ந்தனர். தங்களது பிரியமான தலைவன் நலம் பெற்று எழுந்து வரவேண்டும் என்று அனைவரும் ஒருமனத்துடன் சாதி, மத பேதம் ஏதுமின்றிப் பிரார்த்தனை செய்தனர். அவர்களது ஒருமித்த குரலாக ஒரு பாட்டு தொடர்ந்து ஒலித்தது. அனைத்து 
ஆட்டோரிக்க்ஷாக்களிலும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுத் தொடர்ந்து இசைக்கப்பட்டது அப்பாட்டு. அதனை எழுதியவர் கவிஞர் வாலி. பாடல் இடம் பெற்ற திரைப்படம் 1968ஆம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ஒளிவிளக்கு. 

கவிஞர் வாலியின் பாடல்கள் பொதுவில் கருத்தாழம் மிக்கவை. அதிலும் இப்பாடல் கேட்போர் உள்ளத்தை உருக வைக்கும் வல்லமை கொண்ட வரிகளும் பொருளும் நிறைநததாகும். தமிழக மக்களின் குரல் அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களுக்குக் கேட்டது. அவர் தாமதமின்றி உடனடியாக ஏற்பாடு செய்த சகல வசதிகளும் பொருந்திய மருத்துவமனையாகவே மாற்றியமைக்கப்பட்ட ஆகாய விமானமொன்றில் எம்.ஜி.ஆர். அமெரிக்காவின் ப்ரூக்லின் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எம்.ஜி.ஆர். அவர்களது அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் லீலாவதி தனது ஒரு சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்க சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டு நாடு திரும்பினார் எம்.ஜி.ஆர். மருத்துவமனையிலிருந்து கொண்டே தேர்தலையும் சந்தித்து மாபெரும் வெற்றி பெற்றார்.


MGR Vallalin Varalaru- Promo 4min

MGR Hospital video

இந்தப் பாடல் திரைப்படத்தில் எந்தச் சூழ்நிலைக்காக எழுதப் பட்டுப் படமாக்கப் பட்டதோ அதே சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். அவர்களின் நிஜ வாழ்விலும் பாடப்பட்டது. திரைப்படத்தில் கதாநாயகனின் உயிரை மீட்ட அதே பாட்டு எம்.ஜி.ஆர். அவர்களின் உயிரையும் மீட்டது.

தமிழக மக்களின் இதயக்கனியான எம்.ஜி.ஆர். அவர்களது உயிரை எமனிடமிருந்து மீட்டு வந்த அந்த உயிர்ப் பாடல்இன்றைய பாடலாக ஒலிக்கிறது.



திரைப்படம்: ஒளிவிளக்கு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1968

இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியின் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
நம்பிக்கையின் ஒளிவிளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா!

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை
உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்

மேகங்கள் கண்கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்?
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!
இறைவா நீ ஆணையிடு! ஆணையிடு!
இறைவா! இறைவா! இறைவா!