வெள்ளி, 8 ஜூலை, 2011

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ?

உலகில் எத்தனையோ ஜீவராசிகள் பிறந்து வாழ்ந்து மடிந்து மறைந்து மீண்டும் பிறந்து இவ்வாறாக உலகம் சுழல்கின்றது. இவை அனைத்திலும் உயர்ந்தது மானிடப் பிறவி. இத்தகைய கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை அடைந்த நாம் ஒவ்வொருவரும் பாக்கியசாலிகள். இப்பிறவியில் பலர் பொருள் தேடுவதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்நாள் முழுவதையும் வீணே கழித்து இருந்த இடம் தெரியாமல் மறைகின்றனர். ஏதோ ஒரு சிலர் இவர்களுக்கிடையே மானிடப் பிறவியின் மகத்துவத்தை உணர்ந்து மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் உயர்ந்த கொள்கையுடன் வாழ்ந்து உலகுய்யப் பாடுபட்டு இறந்த பின்னரும் அனைவர் மனதிலும் என்றும் அழியா தெய்வங்களாக வாழ்கின்றனர்.

நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு வாழ்கிறோம் என்பது அவரவர் விருப்பம். பிற உயிர்களுக்கு ஒருநாளும் எவ்விதத் தீங்கும் இழைக்காமல், புலால் உண்ணாமல் உலக நலனுக்காகவும் சமுதாய சீரமைப்புக்காகவும் பாடுபட்டு உலகில் நல்வாழ்வு வாழ்வது சிறந்தது. உண்மையும் அன்புமே ஒருவரை தெய்வநிலைக்கு உயர்த்த வல்லவை. பிறப்பு, இறப்பு, மீண்டும் பிறப்பு எனும் தளைக்குள் கட்டுப்பட்டு வாழ்தல் என்றும் சிற்றின்பம் தேடும் ஜீவன்களுக்கு விதிக்கப்பட்ட நிலையாகும். இத்தளையிலிருந்து மீண்டு என்றும் மரணமில்லாது மார்க்கண்டேய வாழ்வு வாழ ஒவ்வொரு மனிதனும் விரும்புவதுண்டு. அவ்வாறான உயர்ந்த நிலையை அடையத் தவம் செய்ய வேண்டும். தவமாவது யாதெனில் ஐம்புலன்களையும் அடக்கி நம்முள்ளே உறைந்து கிடக்கும் மாபெரும் சக்தியை வெளிக்கொணர்தல். இத்தகைய தவநெறியில் செல்ல ஞானியர் பலர் உரிய வழிகளைக் காட்டியுள்ளனர்.

அரிதரிது மானிடலாதலரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தலரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறப்பினும்
ஞானமுங்கல்வியும் நயத்தலரிது
ஞானமுங்கல்வியும் நயந்த காலையும்
தானமுந்தவமுந்தான் செய்தலரிது
தானமுந்தவமுந்தான் செய்திருந்தக்கால்
வானவர் நாடு வழி திறந்திடுமே

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/rajamukthi/maanida-jenmam.php
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ?

திரைப்படம்: ராஜமுக்தி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: சி.ஆர். சுபராமன், எஸ்.எம். சுப்பைய்யா நாயுடு
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1948

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ? உலகீர் - உயர்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ? உலகீர் - உயர்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ? ஓ....

ஞான வைராக்யம்
ஞான வைராக்யம் தவம் ஜீவகாருண்யம் - உண்மை
ஞான வைராக்யம் தவம் ஜீவகாருண்யம் - உண்மை
ஞான பக்தி பகுத்தறிவுடன் இகபர சுகம் தரும் கருணையாம்

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர்.......

கருவறையினுள் கிடந்து வெளியில் வரும் துயர் நினைந்தாலும்
கருவறையினுள் கிடந்து வெளியில் வரும் துயர் நினைந்தாலும் - குடல்
கலங்குதே இங்கெதிரில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே
கலங்குதே இங்கெதிரில் மரணம் எனும் வெம்புலியும் சீறுதே
இருவினை வசமாம் இவ் உடலொரு நீர்க்குமிழி
இருவினை வசமாம் இவ் உடலொரு நீர்க்குமிழி
இதனிடை உயர் நெறியடைய மெய் இறைவனருளின் வேட்கை
இதனிடை உயர் நெறியடைய மெய் இறைவனருளின் வேட்கை
உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே
உடையராகி இடையறாத திருவடி நினைவுடனே
கடிமதில் பண்டரிபுரமதை ஒருமுறை கண்டுபணிந்து
ப்ரபோ பாண்டுரங்க ஜெய விட்டல என்று பணிந்திட

மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர் - உயர்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ? ஓ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக