வெள்ளி, 8 ஜூலை, 2011

முத்து நகையே உன்னை நானறிவேன்

உலகில் உயிர்கள் அனைத்திற்கும் மிகவும் உயர்ந்த செல்வம் பிள்ளைச் செல்வமே. வாழ்வில் ஒருவர் எத்தனை வசதிகள் நிரம்பப் பெற்றவராக இருந்தாலும், செல்வச் சீமானாக இருந்தாலும் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லாவிடில் ஏனைய அனைத்தாலும் பயனில்லை. நல்ல பிள்ளைகள் பிறப்பதற்கு ஒருவர் பூர்வ ஜன்மத்தில் தவம் செய்திருக்க வேண்டும் என்று ஆன்றோர் கூறியதுண்டு.

நல்ல பிள்ளைகள் பிறந்த போதும் அவர்கள் ஆரோக்யமாக வளர்ந்து நல்வாழ்வு வாழ வழிவகுப்பது ஒவ்வொரு பெற்றோரது கடமையாகும். நாகரீகம் வளர வளர மக்களின் உணவுப் பழக்கம் மாறுவதோடு சுற்றுப்புற சூழல் மாசுபடுவதும் தொடர்ந்து நிகழ்வதால் நோய்கள் எளிதில் பரவக்கூடிய சூழ்நிலை உலகில் நிலவுவது யாரும் மறுக்க முடியாத உண்மை. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளை அவர்கள் பிறந்தது முதலே கவனமாகவும் ஆரோக்கியம் கெடாமலும் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். குழந்தகளுக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களில் இளம்பிள்ளை வாதம் என அறியப்படும் போலியோ நோய் மிகவும் கொடிதாகும்.

http://www.indg.in/health/diseases/baabb2bbfbaf-b87bb3baebcdbaabbfbb3bcdbb3bc8-bb5bbeba4baebcd

இவ்வாறு இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலர் கால்கள் செயலிழந்து வருந்தும் நிலை உள்ளது. இதற்கு ஒரு உபகரணம் வலுவிழந்த கால்களுக்கு ஒரு பிடிப்பு ஏற்படுத்த மருத்துவர்கள் அளிக்கும் கம்பிகளால் ஆன ஒரு உறை போன்ற கருவியாகும்.

தான் பெற்ற அழகுமிக்க ஓரே மகள் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டதால் மனம் நொந்து வாடும் ஒரு தகப்பன் தன் மகளின் அங்கள் ஒவ்வொன்றின் அழகையும் வர்ணித்து மகிழுகையில் அவளது கால்கள் தொடர்பாக எண்ணுகையில் தன்னையும் மீறி எழும் துக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு இனிய பாடல் இன்றைய பாடலாக மலர்கிறது.

முத்து நகையே உன்னை நானறிவேன்

திரைப்படம்: என் தம்பி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1968

முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ
முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ

நிலவும் வானும் நிலமும் நீரும்
ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ?
நீயும் நானும் காணும் உறவு
நெஞ்சை விட்டுச் செல்ல எண்ணுமோ?

முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா

தென்மதுரை மீனாள் தேன் கொடுத்தாள்
சித்திரத்தைப் போலே சீர் கொடுத்தாள்

என் மனதில் ஆட இடம் கொடுத்தாள்
இது தான் சுகமென வரம் கொடுத்தாள்

முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ

கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு
கையழகு பார்த்தால் பூ எதறகு
கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு
கையழகு பார்த்தால் பூ எதறகு
காலழகு பார்த்தால்
காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதெற்கு
காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதெற்கு

முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக