செவ்வாய், 15 நவம்பர், 2011

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்

கடவுளை நம்பாமல் பகுத்தறிவுப் பாதையில் தாமும் நடந்து உலகையும் வழிநடத்துவதாகச் சொல்லிக் கொண்ட ஆஷாடபூதிகள் அனைவரது பொய்முகங்களும் உண்மையெனும் தெய்வ சக்தியால் வெளியாகி விட்டன. தன் ஆயுள் முழுவதும் மக்களைப் பொய்யான அன்பு வார்த்தைகளாலும் இனப்பற்று, மொழிப்பற்று, ஏழை பணக்காரன் என்பன போன்ற வேற்றுமைகளைக் காட்டியும் ஏமாற்றி வந்தவரின் முகத்திரை கிழிந்து விட்டது. வெளியே பயமில்லாதது போல் காட்டிக்கொண்டு இன்னமும் தான் சத்தியசந்தன் என்று சாதித்தபோதிலும் உண்மை என்ன என்பதும், குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுப்பதும் உலகில் உள்ள உண்மையான பகுத்தறிவாளர்கள் அனைவரும் அறியும் வண்ணம் தெளிவாகி விட்டது.

எத்தனை கோடிகள் பொன்னும் பொருளும் மண்ணும் மணிமுடியும் ஆடை ஆபரணங்களும் சேர்த்தாலும் அவை யாவும் ஒரு நொடியில் மண்ணோடு மண்ணாகிவிடக்கூடும் என்பதுவே விதி. அதனை மனிதன் தன் சிறுமதியால் என்றும் மாற்றிட இயலாது. மனிதராய்ப் பிறந்த நாம் உண்மையில் தேட வேண்டியது நீரால் நனையாத, காற்றால் கரையாத, நெருப்பால் எரியாத, காலத்தால் அழியாத அனைத்திற்கும் மேலாக நின்று அனைத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் ரக்ஷிக்கும் அந்த ஆண்டவன் எனும் ஆதிசக்தியை மட்டுமே. ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் யாவையுமாகி விளங்கும் இறைசக்தியான அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

அண்ணாமலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே, இப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

என்று திருவண்ணாமலையில் உறையும் இறைவனின் பெருமையை திருநாவுக்கரசர் விளக்குகிறார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்

மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறந்து இறந்து இன்ப துன்பங்களுக்குள் சிக்கித் துயருராமல் பிறவியாகிய பெரும் கடலை நீந்திக் கடந்து என்றும் பிறவியில்லாத பெருநிலையை அடைய விரும்புவோர் செய்யத் தக்கது இறை வழிபாடு ஒன்றேயாகும். இறை வழிபாடு என்பது நாம் காணும் அனைவரிடத்திலும் அனைத்து உயிகள் மற்றும் ஜடப்பொருட்களிடத்திலும் இறைவன் உறைவதை அறிவதேயாகும். அத்தகைய மெய்ஞானம் அடையப் பெற்றவர் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கத் துணையாக விளங்கும் இறைவனின் திருவடிகளையே சென்று அடைவதுறுதி.

பக்தி மார்க்கத்தில் மனதைச் செலுத்தி அழியும் பொருட்களின் மேல் கொண்ட பற்றுக்களைக் களைந்து அழியாப் பொருளை அடைய வேண்டித் தவம் செய்வோரே அத்தகைய உயர் நிலையை அடையக்கூடும். அவ்வாறு மனதை ஆசை, கோபம்,குரோதம், லோபம், மதம், மாத்சர்யம் ஆகிய பாபங்களிலிருந்தும் சஞ்சலங்களிலிருந்தும் மீட்டு இறைவனிடத்திலே ஐக்கியமாக்க வல்லது இசை. அதிலும் குறிப்பாக பக்திப் பாடல்கள். அவற்றுள்ளும் பஜனைப் பாடல்கள் பக்திப் பரவசத்தை எளிதில் உண்டு பண்ணக் கூடியவை. எளிய இனிய சொற்களால் புனையப் பட்டு எல்லோரும் ஒன்று கூடி இனிமையாய் மிக சுலபமாய் இசையோடு அனுபவித்துப் பாட ஏற்ற வன்னம் இத்தகைய பஜனைப் பாடல்கள் பல மொழிகளிலும் அமையப்பெற்றுள்ளன.

நம் ஊர்களில் மார்கழி மாதம் பிறந்ததும் தினந்தோறும் அதிகாலையில் பஜனைப் பாடல்களை பக்தர்கள் கூட்டம் கூட்டமாய்த் தெருவெங்கும் நடந்து சென்று இசையுடன் பாடி நகரை வலம் வருவதும் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவதும் மரபு. இத்தகைய பஜனைப் பாடல்களையே பெரும்பாலும் பாடிப் பெரும்புகழ் பெற்ற மூதாட்டி பெங்களூர் ரமணியம்மாள் அவர்கள் ஆவார். அவரது பஜனைப் பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பாடுவதற்கு இனிமையானவை மனதை மயங்க வைத்து இறைவனிடத்திலே நம் மனங்களை ஐக்கியமாக்க வல்ல அருள் நிரம்பிய பாடல்களை அவர் நமக்காகப் பாடி வைத்துள்ளார். அவற்றுள் ஒன்று இன்றைய பாடலாகிறது.

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
பஜனை செய்யலாம் பாடி மகிழலாம்
முருகனைப் பாடலாம் வள்ளியைப் பாடலாம்
கிருஷ்ணனைப் பாடலாம் மீராபாயைப் பாடலாம்

மயிலையும் அவன் திருக்கை
அயிலையும் அவன் கடைக்கண்
இயலையும் நினைந்திருக்க வாருமே

சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

அலைகடல் வளைந்தொடுத்து எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்தரிக்க வாழலாம் இங்கு
அரசென நிரந்தரிக்க வாழலாம் நாமும்
அரசென நிரந்தரிக்க வாழலாம்

சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

அடைபெறுவதென்று முக்தி?
அடைபெறுவதென்று முக்தி?
அதி மதுரச் செந்தமிழ்க்கு
அருள்பெற நினைந்து சித்தி ஆகலாம்
முக்தி அடையலாம் சித்தி ஆகலாம்
முருகனைப் பாடினால் முக்தி அடையலாம்
சிவனைப் பாடினால் சித்தி அடையலாம்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

நாளை எம படர் தொடர்ந்தழைக்க
நம்மை எம படர் தொடர்ந்தழைக்க
அவருடன் எதிர்ந்திருக்க
இடியென முழங்கி வெற்றி பேசலாம் - எமனுடன்
இடியென முழங்கி வெற்றி பேசலாம்
முருகனைப் பாடினால் எமனுடன் பேசலாம்
சிவனைப் பாடினால் எமனை எதிர்க்கலாம்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

உள்ளத்திலே இன்ப வெள்ளத்திலே முருகன்
மெள்ளத் தவழ்ந்து வரும் பாலனாம் உள்ளத்திலே
மெள்ளத் தவழ்ந்து வரும் பாலனாம்
தெள்ளித் தெளித்த தினை அள்ளிக் கொடுத்த புனை
வள்ளிக்கிசைந்த மண வாளனாம்

சொல்லுங்கோ
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

வேதத்திலே திவ்ய கீதத்திலே பஜனை
நாதத்திலே முருகன் தோன்றுவான் பஜனை
நாதத்திலே முருகன் தோன்றுவான் உங்கள்
உள்ளத்திலே முருகன் தோன்றுவான் ஒவ்வொருவர்
பக்கத்திலே முருகன் தோன்றுவான் அவன்
பாதத்தையே என்றும் பற்றிக் கொண்டால் உங்கள்
பக்கத்திலே முருகன் தோன்றுவான்!

சொல்லுங்கோ
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா எங்கப்பனுக்கு அரோகரா
சிவ பாலனுக்கு அரோகரா வடி வேலனுக்கு அரோகரா

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக