திங்கள், 11 ஜூலை, 2011

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை

இருமனம் ஒன்றாகி இணைந்து விளங்கும் திருமண வாழ்வில் இன்பத்துக்கு எல்லையே இல்லை. இதனாலேயே இல்லறத்தை ஞானியர்கள் பலரும் போற்றியுள்ளனர். பண்டைய பாரத நாட்டில் துறவறம் மேற்கொண்டு நாட்டை விடுத்துக் கானகங்களில் ஆச்சிரமம் அமைத்துத் தவவாழ்க்கை மேற்கொண்ட முனிவர்களும் இல்லறவாசிகாளாக இருந்தனர் எனும் உண்மையை இராமாயணம், மஹாபாரதம் முதலிய புராண இதிகாச காவியங்கள் காட்டுகின்றன. முனிவர்களுள் அனைவருக்கும் வழிகாட்டியாகக் கருதப் படுபவர் ஜனகர். இவர் மிதிலா நகர மன்னராக இருந்த போதிலும், இல்லற வாழ்க்கை மேற்கொண்ட போதிலும் தவ வாழ்க்கையையே வாழ்ந்தார் என்பது பிரசித்தி.

இல்லற வாழ்வில் காமம் தரும் இன்பம் வெகு சில நாட்களேயாகும். அதனாலேயே ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று நம் முன்னோர்கள் மொழிந்துள்ளனர். இதன் பொருளாவது சிலர் நினைப்பது போல 60, 30 இரண்டையும் கூட்டக் கிடைக்கும் 90 நாட்களில் திருமண வாழ்வு அலுத்துப் போய்விடும் என்பதல்ல. அனேகமாக திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபடும் தம்பதியர் புத்திர பாக்கியத்தை இந்தக் குறுகிய காலத்தில் பெற இடமிருப்பதால் பிள்ளை பிறந்த பின்னர் அப்பிள்ளையில் மேல் ஏற்படும் அபரிமிதமான ஈடுபாடும் கணவன் மனைவி இருவரிடையே அப்பிள்ளையில் மேல் இருவரும் கொள்ளும் பாசத்தின் காரணமாக ஏற்படும் மனம் ஒருமித்த நிலையும் அவர்களது வாழ்வில் காமத்தினும் மேலான உயர்ந்ததொரு இன்பம் பிறக்க ஏதுவாகின்றன.

அதன் பின் அப்பிள்ளையையும் அதன் பின்னர் வேறு பிள்ளைகள் பிறந்தால் அவர்களையும் ஆளாக்குவதிலும், பிள்ளைகள் ஆளாகி வளர்ந்து உரிய வயதை எட்டியதும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தங்களை தாத்தா பாட்டி என அழைத்து அன்பைப் பொழிவதையும் அனுபவிக்க ஏற்படும் இன்பம் இவ்வுலகில் வேறெவ்வகையிலும் கிடைத்தற்கரியதாகும்.

எவ்வாறாகிலும் இவை அனைத்திற்கும் அடிப்படை ஆண் பெண் இருபாலாரிடையே இயல்பாகவே ஏற்படும் ஈர்ப்பும் காதலுமே ஆகும். காதல் திருமணத்தில் முடிகையில் ஆனந்தமே!

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை

எங்கள் தங்கராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை ம்ம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

பாதிக்கண்களை மூடித் திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம் ஆ..
பாதிக்கண்களை மூடித் திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்

பாதிப் பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்றுதான் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்றுதான் இன்பம்

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை ஆ..
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் ஆ..
ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
களிப்பதென்பது கவிதையின் விளக்கம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப் போவது மஞ்சம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப் போவது மஞ்சம்

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

லால லாலலா லாலா லாலா
லால லாலலா லாலா
லால லாலலா லாலா லாலா
லால லாலலா லாலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக