புதன், 16 டிசம்பர், 2009

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே

நமது உடலில் நாம் மிகவும் இன்றியமையாததாய்க் கருதும் உறுப்பு கண்ணேயாகும். இதனாலேயே நாம் மிகவும் உயர்வாக எண்ணும் எதனையும் நம் கண்ணுக்கு நிகராகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் எனும் கருத்து நிலவுகிறது, நாம் பெற்ற பிள்ளையைக் "கண்ணே, கண்மணியே" எனக் கொஞ்சி மகிழ்வதும், கல்வியைக் கண்ணுக்கு நிகராகக் கொண்டு,

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்று ஔவையார் தனது கொன்றை வேந்தன் கவிதைத் தொகுப்பில் கூறியதும்,

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்

என்று வள்ளுவர் உரைத்த பொன்மொழியும் இக்காரணம் கொண்டே.

நம்மிடையே கண் பார்வையின்றித் தவிப்போர் பலரும் வாழ்கின்றனர். பார்வையின்மைக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று கண்ணின் பாவையை மூடியிருக்கும் கருப்பு நிறத்திலான Cornia எனும் கருவிழி சேதமுற்றிருப்பதாகும். அதிர்ஷ்டவசமாக இக்காரணத்தால் பார்வை இழந்தவர்கள் வேறொருவரது கருவிழியை தானமாகப் பெற்றுக் கண்பார்வை பெற வாய்ப்பிருப்பதால், நம்மில் பலர் தமது கண்களை இத்தகையவர்களுக்கு தானமாகத் தரும் வழக்கம் ஏற்பட்டு நாளடைவில் மேலும் அதிகப் படியானோர் கண்தானம் செய்ய முனவரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கண்தானம் செய்த ஒருவரது கண்களிலிருந்து கருவிழிகளை மட்டும், அவர் இறந்த சிறிது நேரத்திற்குள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அவற்றை முறைப்படி கருவிழிகள் பாதிக்கப்பட்டதால் பார்வையிழந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி, கண் பார்வை கிடைக்கச் செய்கின்றனர்.

நாம் உயிருடனிருக்கையில் வேறு தான தருமங்கள் செய்கிறோமோ இல்லையோ, இறந்த பிறகாவது தானம் செய்வோமே. நமது கண்கள் நாம் இறந்த பின்னரும் தொடர்ந்து உலகத்தைப் பார்க்க வைக்க ஒரே வழி கண்தானமே.

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே

திரைப் படம்: காசி
இயற்றியவர்: மு. மேத்தா
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்
ஆண்டு: 2001

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்

கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக் கூறவே இதயம் தாங்குமோ? நீ கூறு

இறைவனிடம் வரங்கள் கேட்டேன் வரங்களை அவனே கொடுத்தான்
மனிதரில்............ இதை யாரும் அறிவாரோ?
நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ?
பூமியில் இதை யாரும் உணர்வாரோ?
மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம்
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே
ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக் கொள்வேன்
என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும்?

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

பொருளுக்காய்ப் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டேயாகும்
பாடினேன் அதை நாளும் நாளும்
பொருளிலாப் பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரைப் பார்ப்பேன்
மறந்திடா ராகம் இது தானே
வாழ்க்கை எனும் மேடை தனில் நாடகங்ககள் ஓராயிரம்
பார்க்க வந்தேன் நானும் பார்வையின்றி

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக் கூறவே இதயம் தாங்குமோ? நீ கூறு

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக