புதன், 16 டிசம்பர், 2009

என்ன பார்வை உன்தன் பார்வை

வாழ்க்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம். அதனை எப்படி வாழ்வது என்பது நம் கையிலேயே உள்ளது. அளவோடு ஆசைப்பட்டு, உலகில் எங்கும் நிறைந்திருக்கும் இன்பங்களை முழுமையாக சுவைத்து, அனைவருடனும் அன்புடன் பழகி எந்நாளும் இன்புற்றிக்க வேண்டும். எப்பொழுதும் முகமும் அகமும் மலர்ந்து சிரித்து வாழ வேண்டும். பிறரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். வாழ்வில் துன்பங்கள் நம்மை மீறி வந்தெய்துகையில் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டும் முயற்சியில் பெரும்பான்மையான நேரம் செலவாகிய பொழுதும், மீதமிருக்கு சொற்ப நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க ஏற்றவாறு, தரமான பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டு தயாரிக்கப் படும் திரைப்படங்களைக் கண்டு களிக்க வேண்டும்.

தற்காலக் கல்வி முறை குழந்தைகளை இயந்திர கதியில் இயங்க வைப்பதால் அவர்களுக்கும் தக்க பொழுது போக்காக இத்தகைய திரைப்படங்களைப் பார்த்து மகிழும் வாய்ப்பை அளிக்க வேண்டும். திரைப்படங்களில் நகைச்சுவை மிகுந்து இருத்தல் சிறப்பு. திரைப்படங்களுள் பல முழு நீள நகைச்சுவைச் சித்திரங்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் மிகவும் சிறந்த திரைப்படங்களுள் ஒன்று காதலிக்க நேரமில்லை. அக்காலத்தில் பெரும்பாலும் கருப்பு வெள்ளைப் படங்களே மிகுதியாகத் தயாரிக்கப் பட்ட நிலையில் இது ஒரு மூழு நீள ஈஸ்ட்மென் கலரில் வெளியானது. எத்துணை முறை பார்த்தாலும் திரும்பவும் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்ட வல்ல திரைப்ப்டம் இது. படம் முக்காலே மூணு வீசம் பொள்ளாச்சியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைத்திருக்கும் ஆளியார் அணைக்கட்டுப் பகுதியிலேயே தாயாரிக்கப் பட்டது. சிறந்த கதையம்சத்துடன், தரமான காதல் காட்சிகளும் நகைச்சுவைக் காட்சிகளும் கொண்டு இனிமையான பாடல்களுடன் அமைந்தது இப்படம்.


என்ன பார்வை உன்தன் பார்வை


திரைப்படம்: காதலிக்க நேரமில்லை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: எல்.ஆர். ஈஸ்வரி, கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1964

என்ன பார்வை உன்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்லப் பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா ஆ ஆ
என்ன பார்வை உன்தன் பார்வை
என்னை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ண சேலை தொட்டுக்
கண்ட சுகம் அம்மம்மா ஆ ஆ

தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா?
தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா?
சின்னச் சின்ன நெஞ்சில் உன்னை
எண்ண எண்ண அம்மம்மா ஹோய்

கன்னங்கள் என்னும் தங்கத் தட்டு
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ?
சொல்லச் சொல்ல உள்ளம் துள்ளும்
இன்பம் என்ன சொல்லம்மா ஹோய்

என்ன பார்வை உன்தன் பார்வை
என்னை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ண சேலை தொட்டுக்
கண்ட சுகம் அம்மம்மா ஆ ஆ

மை கொண்ட கண்கள் மெல்ல மூடும்
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ?
மை கொண்ட கண்கள் மெல்ல மூடும்
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ?
பிஞ்சுத் தென்றல் நெஞ்சைத் தொட்டுக்
கொஞ்சக் கொஞ்ச அம்மம்மா ஹோய்

ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்
ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா
ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்
ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வெட்கம் என்ன சொல்லம்மா ஹோய்

என்ன பார்வை உன்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்லப் பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா ஆ ஆ

1 கருத்து: