நாம் ஒவ்வொருவாரும் இவ்வுலகில் பிறந்த நாள் முதல் குழந்தைப் பருவத்தில் கழியும் சில காலம் நம் கண் முன்னே நிகழும் நிகழ்ச்சிகளோ, பிற புலன்களால் உணரும் விஷயங்களோ நாம் வளர்ச்சியடைந்த பின்னர் நம் நினைவுக்கு ஒரு போதும் வருவதில்லை. குழந்தைப் பருவத்தில் ஆணவ மலம் இருப்பதில்லை, உலகிலுள்ள அனைவருடனும், அனைதது ஜீவராசிகளுடனும், இயற்கையுடனும் மிகவும் இயைந்து வாழும் தன்மை அப்போது நிலவுகிறது. வளர்ச்சியடைந்த பின் ஒவ்வொருவருக்கும் ஆணவம் மேலிடுகிறது. இதனால் ஒவ்வொருவரும் தமது உடலைத் தானாக உணர்ந்து நான் எனும் உணர்வுடன் எனது எனும் உணர்வும் வளருகின்றது.
இத்தகைய மன மாற்றத்தினால் சுயநல உணர்வு மிகுந்து பிறரிடம் போதிய அன்பு செலுத்தத் தவறுவதுடன், உலகிலுள்ள பொருட்களில் சிறப்பு மிக்கவை யாவும் தன்னையே சேர வேண்டுமெனும் பேராசையையும் வளர்த்துக் கொள்கிறோம். இக்காரணத்தால் பலர் தரும நெறி தவறி முறையற்ற வழிகளில் பிறரை ஏமாற்றி வாழ்வும் தயங்குவதில்லை. இத்தகைய மன நிலையுடன் வாழ்பவர் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் திரும்பத் திரும்பப் பாபங்கள் பலவற்றைத் தொடர்ந்து செய்கின்றனர். ஆன்மிக ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஒருவரின் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற பலன்கள் நிச்சயம் கிடைக்கும் என்பது இயற்கை நியதி. பாவ மன்னிப்பு என்பது இயற்கைக்கு முரணானது, உண்மையில் கிடைக்காது. காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது.
பாபம் செய்யச் செய்ய, கர்ம வினையால் ஒருவர் இறந்த பின்னர் திரும்பவும் பிறப்பெடுத்து முற்பிறவியில் தான் செய்த பாபங்களுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடுகிறது. இதற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டால் மாயையால் நமது ஐம்புலன்களும் கட்டுண்ட நிலையில் நமது அறிவு குறைந்து விளங்குவதால் நமக்கு எடுத்துச் சொல்லி விளங்காது. நன்மை செய்தால் நன்மை விளையும் தீமை செய்தால் தீமை விளையும் எனும் சாதாரண உலக நீதியே இவ்விடத்திலும் செயல்படுகிறது என்பதை உணர்வால் அறிந்து அதற்கொப்ப நாம் மனமாறப் பிறருக்கு யாதொரு தீங்கும் இழைக்காது, நன்மைகளையே பெரும்பாலும் செய்து வருகையில் நமது கர்ம வினைகள் குறைந்து, பிறவா நிலை எய்தலாம் எனப் பல ஞானியர்கள் உணர்த்தியுள்ளனர். இத்தகைய நிலையை அடைய பக்தி மிகவும் இன்றியமையாதது.
அன்பும் சிவமும் இரண்டென்ப அறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்
எனும் கருத்துக்கிணங்க நாம் முக்தியடைய மேலான வழி சிவபெருமானின் கருணையை நாடுவதேயாகும்.
சிவபெருமான் கிருபை வேண்டும்
திரைப்படம்: நவீன சாரங்கதாரா
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
அஅண்டு: 1936
சிவபெருமான் கிருபை வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் வேண்டும்..
அவலப் பிறப்பொழிய வேண்டும் ஆ...ஆ..
அவலப் பிறப்பொழிய வேண்டும் அதற்கு வித்தாம்
அவலப் பிறப்பொழிய வேண்டும் அதற்கு வித்தாம்
அவமாயை அகல வேண்டும்
அவமாயை அகல வேண்டும் வேறென்ன வேண்டும்?
சிவபெருமான் கிருபை வேண்டும் - அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்?
சிவபெருமான் கிருபை வேண்டும்
வேண்டும் வேண்டும்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
சுக வாழ்வு வாழ வேண்டும்
சுக வாழ்வு வாழ வேண்டும் வேறென்ன வேண்டும்?
சிவபெருமான் கிருபை வேண்டும் - அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக