வியாழன், 30 ஜூன், 2011

மாலையில் யாரோ மனதோடு பேச

14 செப்டம்பர் 2010

பிரபல பிண்ணனி பாடகி ஸ்வர்ணலதா-அகால மரணம்!

http://www.peopleofindia.net/arts/movies/20100912_swarnalatha.php

செப்டம்பர் 12, 2010

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி சுவர்ணலதா இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானர்.

இறக்கும் போது அவருக்கு வயது 37.நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்படடுவந்த அவர், இன்று காலை
சிகிச்சை பலனின்றி காலமானார். இரண்டு பாடல்கள் சுவர்ணலதாவை சட்டென ஞாபகப்படுத்தும்.இன்று வரை பழமை விரும்பிகள் உச்சரிக்கும் 'மாலையில் யாரோ மனதோடு பேச'', இளைஞர்களின் ஆல்டைம் பேவரிட் 'எவனோ ஒருவன் வாசிக்கின்றான்'. இந்தப்பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ணலதா தான்!
1995 ல் பாரதிராஜாவின் கருத்தம்மா திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'போறாளே பொண்ணுத்தாயி' என்ற பாடலை பாடி அனைவரின் உதட்டிலும் தன் பெயரை முணுமுணுக்க வைத்தார். இப்பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார்.

கேரளாவில் பிறந்த இவர், தன் பெற்றோரை சிறிய வயதிலேயே இசையில் நாட்டம் பெற்றார். 1989 ம் ஆண்டு
முதல் பாடிய பாடல், 'மாலையில் யாரோ மனதோடு பேச' தொடர்ந்து பாம்பே திரைப்படத்தில் 'குச்சி குச்சி
ராக்கம்மா', ஜெண்டில் மேன் படத்தில் 'உசிலம் பட்டி பெண்குட்டி', காதலன் படத்தி 'முக்காலா', அலைபாயுதே
படத்தில் 'எவனோ ஒருவன்' என ஏ.ஆர்.ரஜ்மான் இசையில் ஆஸ்தான பாடகியானார்.

இவர் பாடிய, 'ஆட்டமா, தேரோட்டமா', சின்ன ஜமீனில் பாடிய 'வனப்புத்தட்டு புல்லாக்கு', சத்ரியனில்
"மாலையில் யாரோ", சின்னத்தம்பியில் 'போவோமா ஊர்கோலம்', சின்னத்தாயி படத்தில் பாடிய 'நான்
ஏரிக்கரை" ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. பட்டித் தொட்டிகளிலெல்லாம் முழங்கியது
தளபதி படத்தில் இவர் பாடிய 'அடி ராக்கம்மா கையத்தட்டு'. தேவர் மகனில் இடம்பெற்ற 'மணமகளே,
மருமகளே' என்ற அருமையான பாடலுக்கு சொந்தமானவரும் சுவர்ணலதாவே என்பது குறிப்பிடத்தக்கது.
வீராவின் இரண்டு ஹிட் பாடல்களான 'மாடத்திலே கன்னி மாடத்திலே', 'மலைகோயில் வாசலில்' ஆகிய
இரண்டையும் பாடியவர் சுவர்ணலதா.

தமிழகத்தின் இசை விரும்பிகளின் மிகப்பிரியமான பாடகியாக விளங்கிய சுவர்ணலாதாவின் மரணம்,
தென்னிந்திய இசையுலகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

V.Shrinivas (Seenu)

மாலையில் யாரோ மனதோடு பேச

திரைப்படம்: சத்திரியன்
இயற்றியவர்:
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ?
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ?

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ?
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ?

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ?
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ?

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக