சனி, 12 டிசம்பர், 2009

சின்னக்கண்ணன் அழைக்கிறான்

கோகுலத்துக் கண்ணன் புல்லாங்குழலெடுத்து இசைமழை பொழிய, கோபியர்கள் யாவரும் தம்மை மறந்திடுவராம். இந்தக் கதை உண்மையோ என்னவோ தெரியாது, ஆனால் புல்லாங்குழல் இசையை யார் வாசிக்கக் கேட்டாலும் சாதாரணமாக இசையில் மயங்காதவர் மனங்களும் மயங்கும். அத்தகையதொரு இனிமை புல்லாங்குழலுக்குண்டு.

அது சரி, கண்ணன் தற்காலத்தில் நேரில் வருவதுண்டோ? உண்டு என்பது போல் அமைந்ததொரு கிராமத்துக் கதையில் கததாநாயகியின் மனதில் ஒரு இனிய கீதம் அடிக்கடி இசைக்க, அதில் மயக்கமுற்று ஒரு புதுவிதமான உணர்ச்சியில் தத்தளிக்கும் அவளது மனதின் ராகத்தைப் புல்லாங்கழலில் யாரோ வாசிக்க, ஒரு நாள் அவள் மெய்யாகவே தன் காதால் கேட்கிறாள். தன் இதயத்தின் ஆழத்தில் இருக்கும் ராகத்தை இசைப்பது யார் என ஆவலுடன் தேடி ஓடுகிறாள். அவளது மனம் கவர்ந்த ராகத்தைத் தனது புல்லாங்குழலில் இசைத்துக்கொண்டு ஒரு அழகிய வாலிபன் செல்லக் காண்கிறாள். அவள் அவ்விளைஞனைக் கண்டு பேசித் தன் காதலைக் கூறினாளா? அவன் உண்மையாகவே கண்ணன் தானா? அவளை அவன் மணந்தானா? மகிழ்வான வாழ்வு தந்தானா?

இக்கேள்விகளுக்கு விடை காணக் கவிக்குயில் திரைப்படம் பார்க்க வேண்டும்.


சின்னக்கண்ணன் அழைக்கிறான்


திரைப்படம்: கவிக்குயில்
இயற்றியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடியவர்: எம். பாலமுரளி கிருஷ்ணா
ஆண்டு: 1977

சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்

கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்
வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்
வயதில் எத்தனை கோடி - என்றும்
காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை - அந்த
மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை

சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்

நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இது
தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இது
தானா கண்மணி ராதா - உன்
புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே - அந்த
மாயனின் லீலையில் மயங்குது உலகம்

சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்

ஆகிரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக