வெள்ளி, 23 ஏப்ரல், 2010

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

அன்பு நண்பர்களே,

ஒரு மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தினம் ஒரு பாடல் தொடர்கிறது. இடைவெளி ஏற்படக் காரணம் சமீபத்தில் விளைந்த ஒரு நண்பனின் எதிர்பாராத மரணமும் அதனால் பிற நண்பர்களிடையே உண்டான ஆழ்ந்த வருத்தமு்மே. "இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?"

மனிதர் யாவர்க்கும் பொதுவில் உள்ள ஓர் பழக்கம் பிறருக்கு அறிவுரை வழங்குவதாகும். வழங்கும் அறிவுரை எதைப்பற்றியதாக இருப்பினும் அவ்வறிவுரையை நாம் முதலில் கடைபிடித்தல் அவசியம். அவ்வாறன்றிப் "பிறர்க்குபதேசம் தனக்கில்லை" எனும் போக்கில் நடந்துகொண்டோமேயானால் நாம் கூறும் அறிவுரையும் பயனற்றுப் போவதுடன் நம் மீது பிறர்க்குள்ள மதிப்பும் மரியாதையும் வெகுவாகக் குறைந்து விடும்.

குறிப்பாகக் குழந்தைகளுக்கு நாம் அறிவுரைகளை வழங்குகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். இல்லாவிடில் அவர்களது மனம் கெட்டு அவர்கள் கட்டுப்பாடின்றித் தவறான பாதையில் செல்ல ஏதுவாகக்கூடும்.

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

திரைப்படம்: நம் நாடு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்
துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று
துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

கிளி போலப் பேசு இளங்குயில் போலப் பாடு
மலர் போலச் சிரித்து நீ குறள் போல வாழு
லாலாலலாலா லலலலாலலாலா
லாலாலலாலா லலலலாலலாலா
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

விழி போல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

லாலலால லாலாலால லாலலா லா
லாலலால லாலலால லாலலாலலாலலா
லாலலால லாலாலால லாலலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக