செவ்வாய், 20 ஏப்ரல், 2010

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா

ஏறத்தாழ கி.பி. 1000 முதல் கி.பி. 1947 வரையிலான காலங்களில் நமது இந்தியா முகலாயர்கள் மற்றும் வெள்ளையரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததாலேயே மஹாகவி பாரதியார் தமது "சுதந்திரப் பயிர்" எனும் பாடலில்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

என்று எழுதினார் போலும்.

முதலில் இந்தியாவின் மீது படையெடுத்த கஜினி முகம்மது பெரும்பாலும் சோமநாதர் ஆலயம் போன்ற இடங்களில் உள்ள செல்வங்களைக் கொள்ளையிட்டுச் சென்றதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இவருக்குப் பின்னர் இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்த மொகலாய மன்னர் முகம்மது கோரி இந்தியாவில் தனது ஆட்சியை நிலைநிறுத்தும் எண்ணத்துடன் பலவிதமான அரசியல் சூழ்ச்சிகளைச் செய்து தமது எண்ணத்தை நிறைவேற்றினார். அவர் செய்த மிகப் பெரிய சூழ்ச்சிகளுள் ஒன்று ஆஜ்மீர் அரசனான பிரித்விராஜ் சௌஹான் கன்னோஜ் மன்னன் ஜெயச்சந்திரனின் புதல்வி சம்யுக்தாவைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட பகையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ப்ரித்விராஜனின் மேல் படையெடுத்து முதலில் தோற்றாலும் பின்னர் பெரும்படையுடன் வந்து அவரை வென்று அவரது ராஜ்ஜியத்தினைக் கைப்பற்றியதாகும்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியைக் கதையாக உருவாக்கி தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்கு மாபெரும் ஒரு விருந்தாக எம்.ஜி.ஆர். பிருத்விராஜனாகவும் எம்.என். நம்பியார் முகம்மது கோரியாகவும் பத்மினி சம்யுத்தையாகவும் நடிக்கப் படைத்தது சரஸ்வதி பிக்சர்ஸ் நிறுவனம்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/rani-samyukta/o-vennila.php

திரைப்படம்: ராணி சம்யுக்தா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1962

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா

நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக