சனி, 2 ஜனவரி, 2010

தோல்வி நிலையென நினைத்தால்

நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் நம் மனதில் நிலைநிறுத்திச் செயல்படும் லட்சியம் "வெற்றி" ஆகும். வெற்றி என்பது ஒருவரின் நோக்கத்துக்கேற்றவாறு தனித்தன்மை பெறுகிறது. ஒருவரது வெற்றி மற்றொருவரது தோல்வியாகலாம் அல்லது மற்றவரது வெற்றியும் ஆகலாம், மற்றவரின் வெற்றி தோல்வியுடன் தொடர்பின்றியுமிருக்கலாம்.

ஒரு மருத்துவரது வெற்றி அவர் தன்னிடம் சிகிச்சை பெறும் நோயாளியை குணப்படுத்துவதில் கிடைக்கிறது. ஒரு நோயாளியின் வெற்றி நோயிலிருந்து குணமடைந்து வாழ்வதில் கிடைக்கிறது. இங்கே மருத்துவர் வெற்றி கண்டால் நோயாளியும் வெற்றி காண்கிறார். சூதாட்டத்தில் பொருளை இழப்பவன் தோல்வியடைகையில் அவன் இழந்த பொருள் தனக்குக் கிடைக்கப்பெற்ற வேறொருவன் வெற்றியடைகிறான்.

வியாபாரி விற்பனை அதிகரித்து லாபம் நிறைய ஈட்டுகையில் வெற்றி பெறுகிறான். ஒரு சமூக சேவகன் சமூக நீதியை நிலை நாட்டுவதில் வெற்றியைக் காண்கிறான், அச்சமூக சேவையில் அவன் தனது உடைமைகள் அனைத்தையும் இழந்து உயிரையும் இழந்தாலும் வெற்றிபெற்றவனாகவே கருதப்படுகிறான்.

ஒரு துறையில் வெற்றி பெற்றவன் அதே துறையில் வெற்றி பெறாத மற்றொருவனைத் தோல்வியடைந்ததாக எண்ணுதல் அறிவுடைமை ஆகாது. மற்றவன் எத்துறையில் வெற்றி பெற்றான் என்பதை அறிவுபூர்வமாக ஆராய்ந்தறிதல் நன்று.

எத்துறையிலும் வெற்றி பெற விடாமுயற்சி மிகவும் அவசியம். வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைக்க முயல்கையில் பல இடையூறுகள் வந்துற்ற போதும், அவற்றால் மனம் தளர்ந்து முயற்சியைக் கை விடாமல், தொடர்ந்து பாடுபடுபவன் வெற்றி இலக்கை எய்துவது திண்ணம்.


தோல்வி நிலையென நினைத்தால்


திரைப்படம்: ஊமை விழிகள்
இயற்றியவர்: ஆபாவாணன்
இசை: மனோஜ் கியான்
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1986

தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து - தாயின்
கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம் - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்
வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து - தாயின்
கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் - விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம்? - உன்
நெஞ்சம் முழுவதும் வீரம் - இருந்தும்
கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக