வெள்ளி, 3 டிசம்பர், 2010

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே

தமிழ்த் திரையுலகம் இசைத்துறையில் அன்று முதல் இன்றளவும் மிகவும் முனைந்து செயல்பட்டு வருவது அனைவரும் அறிவோம். இந்தியாவின் பாரம்பரிய இசை கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி மற்றும் கிராமியப் பாடல்கள் முதலிய வடிவில் தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. தமிழ் இசையில் மிகவும் திறமை வாய்ந்த முன்னோடிகள் எனக் கருதப்படும் பிரபல இசைக் கலைஞர்கள் உலகப் புகழ் பெறுவதற்குத் தமிழ்த் திரையுலகில் அவர்கள் பெற்ற பங்கு ஒரு முக்கியக் காரணமாகும். ஆங்கிலேயர்கள் ஆட்சியிலிருந்து மீண்டு நம் நாடு சுதந்திரமடைவதற்கு சிறிது காலம் முன்பிருந்தே தமிழ்த் திரையுலகம் பல திரைப்படங்களை உருவாக்கி வந்துள்ளது.

தொடக்க காலத்தில் பெருமளவு கர்நாடக சங்கீதத்தையே தழுவி இயற்றி இசையமைக்கப் பட்ட பாடல்கள் மிகவும் அதிக அளவில் திரைப்படங்களில் இடம்பெற்றன. இடையிடையே ஹிந்துஸ்தானி இசை வடிவில் அமைந்த பாடல்களும் அவ்வப்பொழுது சேர்ந்து ஒலித்தன. நாளடைவில் இசை பாமர மக்களைச் சென்று அடையும் நோக்குடன் மெல்லிசைப் பாடல்கள் பெரும்பாலும் திரையுலகை ஆக்கிரமித்தன. இத்தகைய மெல்லிசைப் பாடல்களிலும் கர்நாடக இசையின் சாயலே அதிகம் காணப்பட்டது. இதனூடே மேல்நாட்டு இசையின் தாக்கத்தாலும் வட இந்தியத் திரையுலகின் தாக்கத்தாலும். மெல்லிசையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. மெல்லிசைப் பாடல்களுடன் கலந்து பல கிராமிய இசைப்பாடல்களும் வெளிவந்தன. இருப்பினும் கிராமியப் பாடல்கள் பெருமளவு இடம் பெறாத நிலை தமிழ்த் திரையுலகில் ஒரு தேக்கத்தை உருவாக்கியது.

அத்தேக்கத்தைப் போக்கி ஊக்கத்தை அளித்து கிராமிய இசைப்பாடல்கள் தமிழ்த் திரையுலகில் மிகவும் அதிகமான அளவில் இடம் பெற வைத்த பெருமை இசைஞானி இளையராஜாவைச் சேரும் எனில் அது மிகையாகாது. இளையராஜாவின் திரையுலகப் பிரவேசம் அது வரையில் அதிகமான பாடல்களைப் பாட வாய்ப்பின்றி இருந்த பாடகர்கள் பலருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. குறிப்பாக "கொஞ்சும் சலங்கை" திரைப்படத்தில் வரும் "சிங்கார வேலனே தேவா" எனும் மிகப் பிரபலமான பாடல் உட்படல் பல இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடிய ஜானகி இசை ஞானியின் இசையமைப்பில் மேலும் பல பாடல்களைப் பாடி முன்பிருந்ததை விட மிகவும் பிரபலமடைந்தார்.

இத்தகைய மாற்றம் நிகழ்ந்தது அன்னக்கிளி திரைப்படத்தின் மூலமே..

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே

திரைப்படம்: அன்னக்கிளி
இயற்றியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ். ஜானகி

ஆஆஆ... ஆ ஆஆஆஆஆ..ஆ..
லாஆஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ.. ஆ..

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்
நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்
உறங்காத...
உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி
கலங்காதே காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ?

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

கனவோடு சில நாள் நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
கனவோடு சில நாள் நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
மழை பேஞ்சா
மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நாட்டு கருதறுத்து
போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ?

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

நதியென்றால் அங்கே கரையுண்டு காவல்
கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல்
புள்ளி போட்ட
புள்ளி போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி
நெல்லருக்கப் போகையில் யார் கண்ணிரண்டும் காவலடி

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே

இதோ என்தன் தெய்வம் முன்னாலே

மனிதன் தன் வாழ்க்கைக்குத் தேவையான பொருளையும் தன் மனதில் எழும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள உறவுகளையும் தேடுகிறான். இத்தேடலின் விளைவாக ஏற்படும் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் எழுகையில் அவற்றின் தாக்கத்திலிருந்து மீள வழி தேடுகையில் உதித்ததுவே தெய்வமெனும் தத்துவம். தன்னிடம் இல்லாத ஒரு சக்தியையும் ஆனந்தத்தையும் அவன் அத்தெய்வத்திடம் காண்கிறான். இதன் விளைவாக உருவானவையே மதங்களும் அவற்றினை போதிக்கும் மார்க்கங்களான் புராணங்களும் ஆகும். ஆனால் அத்தகைய தெய்வம் எங்கே உள்ளது என்று பொருளைப் பெரிதென மதித்து உயிர்களை மதிக்கத் தவறும் மாந்தர்கள் உணர்வதில்லை. தெய்வம் இல்லாத இடமேயில்லை.

அனைத்து உயிர்களும் அனைத்துப் பொருட்களும், அனைத்து ஒலிகளும் அனைத்துக் காட்சிகளும் அண்டசராசரங்களும் இறை வடிவமேயென ஞானியர் உணர்ந்து தெளிந்து நமக்கு எடுத்துரைத்த போதிலும் அறியாமையினால் நாம் அதை முழுவதும் உணர்வதில்லை. உலக இன்ப துன்பங்களிலேயே பெரும்பாலும் கிடந்து உழல்கிறோம்.

சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்லென்று இரணியன்தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன் சொல்வான்:'தூணி லுள்ளான்
நாரா யணன் துரும்பிலுள்ளான்' என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ?

என்று மஹாகவி பாரதியார் பிரஹலாதன் கதையிலிருந்து வெளிப்படும் தத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

இதோ இன்கே ஒரு மனிதன் தன்னிடம் அன்பு செலுத்தும் ஒரு சிறு குழந்தையை தெய்வமாகக் கண்டு பாடுகிறான்.

இதோ என்தன் தெய்வம் முன்னாலே

திரைப்படம்: பாபு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்
ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்
ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கட்வுள் வாழ்கிறான் அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்
ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசைப்
பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசைப்
பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் குளிர்
மேகமென தாகத்தையே தணிப்பான் தளிர்க்
கொடி விளையும் கனிகளிலே இனிப்பான் குளிர்
மேகமென தாகத்தையே தணிப்பான் தளிர்க்
கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்விறான் அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்
ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொது
நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் இவை
அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம் இவை
அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்

இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்
ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்விறான் அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்
ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆஆஆஆஆஆஆஆ ஓஓஓஓஓஓஓஓஓ

ஆயிரம் தாமரை மொட்டுக்களே

ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரரன்றோ?

என்று பாரதி பாடக் காரணம் அன்று நம் நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த வெள்ளையர்கள் நாட்டு மக்களிடையே ஜாதி மத பேத உணர்வைத் தூண்டி, அதனால் மக்களிடையே ஒற்றுமை இல்லாத நிலையை உருவாக்கி, அந்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி நாட்டைக் கொள்ளையடித்து வந்ததேயாகும். சுதந்திரப் போராட்டத்தின் நிறைவாக இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயருக்கு ஆதரவு தர வேண்டுமெனில் போர் முடிந்ததும் நம் நாட்டுக்கு விடுதலை தர வேண்டும் எனும் ஒப்பந்தத்தின் வழியாக நாம் சுதந்தரம் அடைந்த பின்னர் நம் நாட்டை ஆளத்தொடங்கி இன்று வரை ஆண்டுவரும் அரசியல்வாதிகள் ஆங்கிலேயன் கையாண்ட அதே ஜாதி மத பேதமென்னும் ஆயுதத்தை ஆங்கிலேயரை விடவும் மிகத் திறமையாகக் கையாண்டு அதி்ல் வெற்றியும் பெற்று, தொடர்ந்து நாட்டைச் சுரண்டி வருகின்றனர்.

சாதி மத பேதம் ஒழியப் பாடுபடுவதாகப் பொய்யாகப் பிரசாரம் செய்துவரும் இவர்கள் அதற்கெனக் கூறும் உபாயம் கலப்பு மணம். உண்மையில் கலப்பு மணங்களால் சாதி மத பேதம் ஒழிகிறதா எனில் இல்லை என்பதே உண்மை. மாறாக இத்தகு கலப்பு மணங்களால் ஏற்கெனவே இருக்கும் சாதி மதச் சண்டை மேலும் வலுத்து சமுதாயத்தில் இருக்கும் பிரிவினை அதிகமாவதை அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களுக்குத் துணைபோகும் கூட்டமொன்று திரைப்பட உலகில் என்றும் உள்ளது. இவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் சாதி மத பேதத்தை ஒழிக்கக் கலப்பு மணங்கள் உதவுவதாகக் காட்டி ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, நாட்டில் ஒற்றுமை நிலவிவிட்டது போன்ற ஓர் பொய்யான மன நிறைவை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்துவதில் மிகவும் முனைப்பாக செயல்படுகின்றனர்.

பாரதி ஆங்கிலேயர்களுக்குக் கூறிய அதே எச்சரிக்கை மொழியை இவர்களுக்கும் கூறியதாக எடுத்துக் கொண்டு சாதி மத விவகாரங்கள் மக்களின் பிரச்சினை, அதில் அரசியல்வாதிகளோ, திரைத் துறையினரோ தலையிடாதிருக்க வேண்டும் எனும் மனப்பாங்கு மக்களிடையே ஏற்பட்டாலன்றி சாதி மத சண்டைகள் ஓயா.

ஆயிரம் தாமரை மொட்டுக்களே

திரைப்படம்: அலைகள் ஓய்வதில்லை
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: இளையராஜா
பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
ஆண்டு: 1980

ஓ.. தந்தனன தந்தனதந்தன தந்தனதந்தன தந்தனதந்தன
ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ
ஹோஹோஹோஹோ
தந்தனன ஹோஹோஹோஹோ தந்தனன
ஹோஹோஹோஹோ தந்தனன
ஹோஹோஹோஹோ தந்தனன

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

ஓ... கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு
தேனை ஊற்று இது தீயின் ஊற்று
ஓ... கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு
தேனை ஊற்று இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஏ வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
புல்வெளியின் மீது ஒரு பூமாலை
ஒன்றை ஒன்று சூடும் இது பொன்மேடை
கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்

ஆயிரம் தாமரை நனனன
ஆயிரம் தாமரை நனனன நனன நனன

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ள காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
_________________________

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா

குரங்கு தான் கெட்டதுமன்றி வனத்தையும் அழித்தது போல மனிதன் தானும் கெட்டு அழிவதுடன் சக மனிதரையும் சமுதாயத்தையும் அழிவுப் பாதையில் தள்ளுவது சுயநலத்தினாலேயே. தான் மட்டும் நன்மையடைந்தால் போதும் என எண்ணி வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனும் வீரபாண்டியக் கட்டபொம்மனைப் போலவே வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டு மாண்டான் என்பதை சரித்திரம் கூறுகிறது.

நமது வாழ்நாளில் நாம் என்றும் பிறரது துயர் களைய முயன்று பாடுபடுவோமெனில் நம் துயர் களையப் பிறர் யாவரும் முன்வந்துதவுவர். இது இயற்கை நியதி. எக்காலமும் தன்னைப் பற்றியே எண்ணிச்செயல்படுபவன் துயருறுகையில் வேறு யாரும் அவனது உதவிக்கு வர மாட்டார். வாழ்க்கை என்பது என்றோ ஒரு நாள் தொடங்கி மற்றொரு நாள் உறுதியாக முடியக்கூடியது. வாழ்நாளைப் பயனுள்ளதாக ஆக்க ஓரே வழி தன்னை மட்டுமன்றித் தன்னைச் சுற்றியிருக்கும் சக மனிதர் மற்றும் பிற உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டிரங்கி உதவுவதொன்றேயாகும்.

மனிதரில் பெரும்பாலோர் சுயநலவாதிகளாக இருப்பதினாலேயே நாட்டில் சுரண்டல்காரர்களின் ஆட்சி தலைமுறை தலைமுறையாகக் கொடிகட்டிப் பறக்கின்றது. இலவசங்களில் ஆசை வைத்துத் தம் பொன்னான வாக்குகளை மக்கள் ஆளத் தகுதியற்றவர்களுக்கு அளிப்பதனால் நாட்டிலெங்கும் இயற்கை வளங்கள் குன்றி இன்று குடிநீரையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்நிலைக்குக் காரணமானவர்களை விலக்கிவிட்டு உண்மையாக நல்லாட்சி தருபவர் யார் எனப் பகுத்தறிவால் அறிந்து மக்கள் செயல்பட்டால் மட்டுமே உலகம் அழிவிலிருந்து மீளக்கூடும். அத்தகைய தகுதியுள்ளவர் யாரும் இல்லாவிடில் தகுதியற்றவர்களைப் பதவியில் இருத்தாமல் வருவது வரட்டுமெனத் துணிவுடன் செயல்பட வேண்டும்.

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
வாயில் என்ன மந்திரமா மனசு என்ன எந்திரமா?
சாமியிடம் பேசுது புள்ள தாயழுக கேக்கவுமில்ல
சாமியிடம் பேசுது புள்ள தாயழுக கேக்கவுமில்ல

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

அம்மா பசி என்றொரு கூக்குரல்
அது தான் இனி தேசிய பாஷை
கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே
கஞ்சிப்பானை தெருவில் இங்கே
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும் தருமம் செஞ்ச பூமி
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும் தருமம் செஞ்ச பூமி

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

தேசமிது செஞ்சது ஒனக்கு ஏராளம் இங்கே உண்டு
நீ என்ன செஞ்ச அதுக்கு? ஒன்னக் கேட்டு நீ பதில் சொல்லு
நமக்கென்ன போடா போன்னு நழுவுறே நேரம் பாத்து
நாடு முழுதும் தீயாப் போனா வீடு மட்டும் ஏது?
நமக்கென்ன போடா போன்னு நழுவுறே நேரம் பாத்து
நாடு முழுதும் தீயாப் போனா வீடு மட்டும் ஏது?

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
வாயில் என்ன மந்திரமா மனசு என்ன எந்திரமா?
சாமியிடம் பேசுது புள்ள தாயழுக கேட்கவுமில்ல
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
_________________________

செவ்வாய், 30 நவம்பர், 2010

தாமரைப் பூக் கொளத்திலே

நமது சமுதாயத்தில் பொதுவில் ஒரு ஆண் இளம் பருவத்தில் தன் புஜ பலத்திலும் அறிவுத் திறமையிலும் மிகவும் பெருமை கொண்டு தனக்கு நிகர் எவருமில்லையெனும் விதமானதொரு இருமாப்புடனே திரிவான். இந்நிலையில் அவன் ஒரு பெண்ணைக் கண்டு அவள் மேல் காதல் கொண்டு தன் மனதைப் பறிகொடுக்கையில் அந்த இருமாப்பு நிலை சற்றே தளர்ந்து அவளது பெண்மைக்கு அடிமையாகிறான். அவள் இல்லாமல் தனக்கு வாழ்வே இல்லை எனும் எண்ணம் மேலிட ஒரு மயக்க நிலையை எய்துகிறான். இயல்பாகவே தன் உள்ளத்தில் எழும் ஆசைகளை மறைக்காமல் வெளிக்காட்டும் போக்கினால் அந்த ஆணின் நிலையை அவன் காதல் கொண்ட அப்பெண் அறிந்து கொண்டு அவனைத் தன் எண்ணத்திற்கு ஏற்ப நடக்க வைக்கத் தொடங்குகிறாள். இவ்வாறு காதலில் கட்டுண்ட ஆண்மகன் தன் சுதந்திரத்தில் பாதியை இழக்கிறான்.

பின்னர் திருமணம் முடிந்து கணவன் மனைவி எனும் பந்தத்தினால் பிணைக்கப் படுகையில் மீதமுள்ள சுதந்திரத்தையும் சிறிது சிறிதாக இழக்கிறான். ஆரம்பத்திலே அவன் தன் பலத்திலும் அறிவுத் திறனிலும் கொண்ட கர்வம் அவனை விட்டு எங்கோ பறக்க அவன் தன் மனையாள் ஆட்டுவித்த படி பம்பரம் போல ஆடுகிறான். பிறகு பிள்ளைகள் பிறந்து வளர்த்து விட்டால் அவன் ஒரு சிறைக்கைதியைப் போல் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதொன்றே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டு தன்னைப்பற்றிய எண்ணங்களைப் பெரிதும் குறைத்துக் கொண்டு தன் பிள்ளைகளுக்காகவும் அவர்களது எதிர்கால வாழ்வுக்காகவும் தன்னையே தியாகம் செய்கிறான்.

இங்கே அவன் தனது சுதந்திரத்தைத் தானே முன்வந்து இழப்பதில் மகிழ்ச்சி கொள்கிறான். அவனது தியாகத்திற்கு பதிலாக அவன் குடும்பம் எனும் பெரும் செல்வத்தைப் பெற்று அன்பெனும் கடலில் மூழ்கித் திளைக்கும் பேறு பெருகிறான்.

தாமரைப் பூக் கொளத்திலே

திரைப்படம்: முரடன் முத்து
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி. ஜி. லிங்கப்பா
டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

ஓஹோஹோஹோ ஒஹோஹோஹோ
ஒஹோஹோ ஓஹோஹோஹோஹோ
ஓஹோஹோஹோ ஒஹோஹோஹோ
ஒஹோஹோ ஓஹோஹோஹோஹோ
ம் ஹ்ம் ம் ஹ்ம் ம் ஹ்ம் ம் ஹ்ம்
ம் ஹ்ம் ஹ்ம் ம் ஹ்ம் ஹ்ம்

தாமரைப் பூக் கொளத்திலே சாயங்காலப் பொழுதிலே
தாமரைப் பூக் கொளத்திலே சாயங்காலப் பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே கூட வந்தான் பின்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா?
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா?

மல்லிகைப் பூ முகத்திலே மாம்பழத்து உதட்டிலே
மல்லிகைப் பூ முகத்திலே மாம்பழத்து உதட்டிலே
பள்ளம் போட வந்தானே பரிசு ஒண்ணு தந்தானே
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா?
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா?

தூங்கும் போது சிரிக்கிறான் தூக்கத்தையே கெடுக்கிறான்
ஓஹோஹோ ஓஹோ ஓஹோஹோ
தூங்கும் போது சிரிக்கிறான் தூக்கத்தையே கெடுக்கிறான்
ஏங்க விட்டு இளைக்க விட்டான் தன்னாலே இப்போ
இடையைப் பாத்து மறந்து விட்டான் முன்னாலே

யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா?
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா?

பருவம் காக்கும் முந்தானே பறக்கும் போது வந்தானே
ஆஹாஹா ஆஹா ஆஹாஹா
பருவம் காக்கும் முந்தானே பறக்கும் போது வந்தானே
கர்வமெல்லாம் விட்டு விட்டு நின்றானே உன்
கைகளுக்குள் பிள்ளையாகிக் கொண்டானே

அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா?
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா?

மேடையிட்டுக் கோலமிட்டு மேளதாள விருந்து வைச்சு
மாலையிட்டு தாலி கட்டிக் கொள்வோமா அந்த
மயக்கத்திலே முழுக் கதையும் சொல்வோமா?
பறந்திடலாமா ஒன்றாய்க் கலந்திடலாமா?
பறந்திடலாமா ஒன்றாய்க் கலந்திடலாமா?

தானே தன்னே தந்தானே தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே தானே தன்னே தந்தானே
_________________________

பூமாலையில் ஓர் மல்லிகை

மலர் என்றதும் மனமெல்லாம் மணக்க வைப்பது மல்லிகை. அதனாலேயே கவிஞர் கண்ணதாசன் மாதங்களில் அவள் மார்கழி என்று சொல்லிப் பின்னர் மலர்களிலே அவள் மல்லிகை என்றாரோ? மங்கையரின் மனம் கவர்ந்ததும் அதனைச் சூடிய அம்மங்கையரின் மணாளரை மயக்க வல்லதும் மல்லிகை மலரேயன்றோ? மாலையில் மலரும் மல்லிகை மலரைப்பற்றி நளவெண்பா இயற்றிய பண்டைத்தமிழ்ப் புலவர் எழுதிய பாடலொன்று மிகவும் பிரசித்தமானது.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணையெறிந்து மெய்கரப்ப முல்லைமலர்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது

மல்லிகை மலரில் வண்டு தேனுண்ண, மன்மதனின் கரும்பு வில்லிலிருந்து பாய்ந்த மலர்க்கணைகள் பட்டு மாந்தர் யாவரும் மெய்மறந்திருக்க முல்லை மலராலான மென்மையான மாலையை அணித்து மாலைப்பொழுது ஒரு மங்கையைப் போல் நடந்ததாக மாலைக்காலத்தை வர்ணித்துப் பாடுகையில் மல்லிகை மலரில் வண்டு வந்தமர்ந்து தேனுண்ணும் காட்சி ஒரு வெண்சங்கினை வாயில் வைத்து ஊதுவது போலிருப்பதாக இப்பாடலில் அவர் கற்பனை செய்து பாடுகிறார். இப்பாடலை நளவெண்பா அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சியில் அவையில் வீற்றிருந்த ஒட்டக்கூத்தர் கேட்டுவிட்டு, "சங்கினை ஊதுபவர் அதன் சூத்தைத் தான் தன் வாயில் வைத்து ஊதுவாரேயன்றி அதன் வாய்ப்பகுதியில் வாய் வைத்து ஊதுவதில்லை, ஆனால் வண்டு மல்லிகையில் தேனுண்கையில் மலரின் வாய்ப் பகுதியின் வழியாகவே தேனை சுவைக்கிறது, ஆகவே இப்பாடலில் பொருட்குற்றமுள்ளது, ஏற்றுக்கொள்ள முடியாது" என்று குறை கூறினார்.

இதற்கு மறுமொழியுரைத்த புகழேந்திப் புலவர், "கட்குடியனுக்கு வாயென்றும் சூத்தென்றும் தெரியுமோ? நீர் தான் சொல்லும்" என்று கேட்க ஒட்டக்கூத்தர் வாயடைத்துப் போய் விட்டார். மல்லிகையின் மலரிலுள்ள தேனை அருந்தும் மயக்கத்தில் உள்ள வண்டுக்கு வாயென்றும் சூத்தென்றும் எவ்வாறு தெரியும்? நியாயம் தானே?

மங்கையரின் கூந்தலை அலங்கரிப்பதுடன் ஆலயங்களில் ஆண்டவனை அலங்கரிக்கவும் மல்லிகை மலர் பெரிதும் பயன்
படுகிறது. மல்லிகை மலரின் மணத்தை அது மொட்டு நிலையிலிருக்கையிலேயே சேகரித்து அதனை திரவமாக்கி மல்லிகை சென்ட் தயாரிக்கப் படுகிறது. இதனை ஜாஸ்மின் சென்ட் என்று அறிகிறோம்.

இங்கேயொரு மல்லிகை தன் மனங்கவர்ந்த காதலனை எதிர்கொள்கையில் என்ன சொல்கிறதெனக் கேட்போமா?

பூமாலையில் ஓர் மல்லிகை

திரைப்படம்: ஊட்டி வரை உறவு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1967

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது

சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது

மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
இளமை அழகின் இயற்கை வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது இன்னும்
வேண்டுமா என்றது
_________________________

ஓடி ஓடி உழைக்கணும்

தெளிவில்லா சிந்தையும், தேரா அறிவும், கொள்கைப் பிடிப்பற்ற குழப்பமான செயல்பாடுகளும் நிறைந்து விளங்குபவர்கள் நம் இந்திய மக்களில் பெரும்பாலோர். இவர்கள் தங்கள் குடும்பதாரில் எவரேனும் நேர்மையாகவும் தனி மனித ஒழுக்க நெறிமுறை தவறாமலும் வாழாவிடில் அவரைக் குடும்பத்திலிருந்தே ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை முறையாகக் கடைபிடித்த போதிலும் நம் நாட்டினை ஆட்சி செய்யும் பொறுப்பை ஏற்கும் மனிதர்களிடம் அத்தகைய நேர்மையும் தனிமனித ஒழுக்கமும் நிறைந்துள்ளனவா என்பதை ஆராய்ந்தறிவதில் போதிய அக்கரை செலுத்துவதில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுள் நேர்மையும் கடமையுணர்ச்சியும், தனிமனித ஒழுக்கமும் கொண்டு விளங்குபவர் எவரும் இல்லாவிடில் அவர்களில் எவரையும் தேர்ந்தெடுக்கலாகாது. இதுவே அறிவுள்ள மனிதன் செய்யத்தக்கது. நம் நாட்டில் மக்களை வழிநடத்தும் பொறுப்பிலுள்ள பல பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்ககள் மக்களை இத்தகைய அறிவுபூர்வமான வழியில் செலுத்த முயற்சிப்பதில்லை. அதற்கு மாறாக இவர்கள் இருப்பவரில் யார் குறைவான தீமை செய்யக்கூடியவர் எனத்தேடிப் பிடித்து அவருக்கு வாக்களிக்குமாறு பொது மக்களை வேண்டுகின்றனர். இது சாவதற்கு தூக்குக்கயிறு, கத்தியால் குத்திக்கொள்தல், விஷம் அருந்துதல், உயரத்திலிருந்து விழுதல், தீக்குளித்தல் முதலான வழிகளுள் எது அதிகத் துன்பம் தராததென்று தேடித் தேர்வதற்கொப்பாகும்.

உண்மையே பேசி, ஊருக்கும் நாட்டுக்கும் நன்மையே செய்து, உழைத்து வாழ்பவனே உயர்ந்த மனிதன். அவ்வாறு உழைத்து வாழத் தலைப்படும் உழைப்பாளிகளுக்கு உரிய ஊதியமும் நல்வாழ்வும் கிடைக்க உரிய வழிமுறைகளை மேற்கொள்வோரே தகுந்த ஆட்சியாளர் ஆவர். அவ்வாறன்றி, மருத்துவக் கல்வியையும் மருத்துவமனைகளையும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு தனியாருக்கு தாரைவார்த்து விட்டு நாளுக்கு நாள் மருத்துவச் சிகிச்சைக்கு செலவு செய்யவேண்டிய தொகை ஆயிரங்கள், லட்சங்கள் என உயரும் நிலையை உருவாக்கி விட்டு, ஏழைகளுக்கு இன்சூரன்ஸ் வசதிகளை அரசு இலவசமாகச் செய்து தருகிறது என்று சப்பைக் கட்டு கட்டுவதென்பது. சமையலறையிலிருக்கும் சர்க்கரை அனைத்தையும் திருடி விற்று விட்டு, சர்க்கரை என்று காகிதத்தில் எழுதி நக்கச் சொல்வதற்கொப்பாகும்.

நம் நாட்டு மக்கள் என்று தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் அறிவுபூர்வமாக செயல்படப் போகின்றனரோ அன்று தான் நம் நாடும் உலகமும் தற்போது சென்று கொண்டிருக்கும் பேரழிவுப் பாதையிலிருந்து விலகி முன்னேற்றம் காணலாகும்.

ஓடி ஓடி உழைக்கணும்

திரைப்படம்: நல்ல நேரம்
இயற்றியவர்: வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1972

1234 அப் அப்

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஓஹோஓஓ

வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
வயத்துக்காக மனுசன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு நான்
அன்போடு சொல்லுறதைக் கேட்டு நீ அத்தனை திறமையும் காட்டு
இந்த அம்மாவைப் பாரு ஐயாவைக் கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டுருந்தா துணியும் இருக்காது தம்பி
சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டுருந்தா துணியும் இருக்காது தம்பி
இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லிப் போடு.

ஓடி ஓடி உழைக்கணும்.. ஓ..ஓ..ஓ..

வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் - நாட்டுக்கு
படிப்பினை தந்தாகணும்.

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

எல்லா இயற்கை வளங்களும் நிரம்பப் பெற்றது நம் பாரத நாடு. வடக்கே இமய மலையும் மற்ற மூன்று திசைகளிலும் முப்பெரும் கடல்களும் சூழ்ந்து விளங்கும் ஒரு தீபகற்பம் இந்தியா. நமது நாட்டின் இயற்கை வளங்களில் நாடெங்கும் நீண்டு பரவியிருக்கும் மலைப்பகுதிகளும், அவற்றுடன் இணைந்து பரவியிருக்கும் காடுகளும், கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான வற்றாத பல ஜீவ நதிகளுமாகும். இத்தகைய இயற்கை வளங்களின் சிறப்பாலேயே விவசாயத்தில் நமது இந்திய தேசம் முன்னிலை வகிக்கிறது. நம் அனைவரது வாழ்வின் ஜீவாதாரமான உணவுப்பொருட்களை விவசாயத்தின் மூலம் பெறப் பெரிதும் உதவும் நம் நாட்டின் இயற்கை வளங்களை மத்திய மாநில அரசுகளும் மக்களும் இணைந்து செயல்பட்டுப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். நாம் அவ்வாறு இயற்கை வளங்களைப் பாதுகாக்கிறோமா எனக் கேட்டால் கிடைக்கும் பதில் இல்லை என்பதேயாகும்.

மலைப்பகுதியிலுள்ள காடுகளையும் மரங்களையும் அழித்து தேயிலை பயிரிடுவதும், மரங்களை வெட்டியெடுத்துச் சென்று பல விதமான கட்டுமானப் பணிகளுக்கும் மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்துவதும், இவற்றுள் பல மலைப்பகுதிகளை அவற்றிலிருக்கும் பாறைகளைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்த வெடிவைத்துத் ததகர்த்து அழிப்பதும் விரைவில் காடுகளும் மலைகளும் அழிந்து நம் ஜீவாதாரமே குலைந்து போக வழிவகுக்கும் என்பதை நாம் உணராமல் செயல்படுகிறோம். இத்தகைய அபாயகரமான போக்கினை விடுத்து இயற்கை வளங்களைக் காக்கும் ஆரோக்யமான பாதைக்குத் திரும்புவது நல்லது.

மலைச் சரிவுகள் வலுவிழப்பதால் மலைப் பாதைகளில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப் படுவதுடன் விபத்துகள் நேர்ந்து உயிர்ச் சேதம் விளையும் ஆபத்தும் உள்ளது. கோடை காலங்களில் நம்மில் பலர் இத்தகைய மலை வாசஸ்தலங்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அத்துடன் மலைகளின் மேல் உள்ள ஊர்கள் பலவற்றில் நம் நாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய வாழ்வு நிலை சிறக்க வேண்டுமெனில் மலைகளும் மலைகளைச் சேர்ந்த வனப்பகுதிகளும் பாதுகாக்கப் பட வேண்டும்.

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

திரைப்படம்: முள்ளும் மலரும்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1978

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோகக் கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
_________________________

உனது விழியில் எனது பார்வை

தொழில்முறையாகப் பல்வேறு பணிகளின் நிமித்தமாகப் பல ஊர்களுக்குக்குப் பயணம் மேற்கொண்டாலும், நாடு விட்டு நாடு சென்று திரைகடலோடி திரவியம் தேடும் பணியில் ஈடுபட்டாலும் நாம் மேற்கொண்ட பணி நிறைவேறியதும் நம் ஒவ்வொருவரின் மனமும் அடுத்துச் சேர விரும்புவது வீடு எனும் தன் இல்லத்தையே என்பது எல்லோரும் அறிவோம். அது போலவே பாடல்கள் எனும் பண்ணுலகில் பல்வேறு திசைகளில் பயணம் மேற்கொண்டு தத்துவ மழையிலும் இசை வெள்ளத்திலும் நனைந்த போதிலும் மீண்டும் மீண்டும் வந்து சேர்வது காதல் எனும் கான மழை பொழியும் பகுதிக்கே.. காதல் நம் அனைவரின் உயிரிலும் ஒன்றிக் கலந்து விளங்குவதாலேயே வாழ்க்கை எனும் ஓடம் தொடர்ந்து ஓடுகிறது.

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடிய பின் கருத்தொருமித்து உடல் இரண்டு உள்ளம் ஒன்று எனும் உயரிய நிலையை அடைவது உண்மைக் காதல். அந்நிலையை அடைந்த காதலனுக்குத் தன் காதலி கண்டு ரசிப்பதெல்லாம் தானும் ரசிக்க விருப்பம் ஏற்படுவதும் காதலிக்குத் தன் காதலன் கண்டு ரசிப்பதெல்லாம் தானும் ரசிக்க வேண்டுமெனும் ஆவல் உண்டாவதும் இயல்பு.

உனது விழியில் எனது பார்வை

உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது என் கவிதை வாழ்வது

உயிர் கொண்ட‌ ஓவிய‌ம் ஒன்று
துணை வ‌ந்து சேர்ந்த‌தென்று
ம‌ன‌ம் கொண்ட‌ இன்பம் எல்லாம்
க‌ட‌ல் கொண்ட‌ வெள்ள‌மோ?

க‌ண் இமையாது பெண் இவ‌ள் நின்றாள்
கார‌ண‌ம் கூறுவ‌தோ? - உனைக்
காண்ப‌தென்ன‌ சுக‌மோ - உனைக்
காண்ப‌தென்ன‌ சுக‌மோ?

உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது - உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது - என் கவிதை வாழ்வது

எனக்கென்று வாழ்வ‌து கொஞ்ச‌ம்
உனக்கென்று வாழும் நெஞ்ச‌ம்
ப‌னிகொண்ட‌ பார்வை எங்கும்
ப‌டிக்காத‌ காவிய‌ம்
எனக்கென்று வாழ்வ‌து கொஞ்ச‌ம்
உனக்கென்று வாழும் நெஞ்ச‌ம்
ப‌னிகொண்ட‌ பார்வை எங்கும்
ப‌டிக்காத‌ காவிய‌ம்

பொன்ம‌ன‌ம் கொண்ட‌ ம‌ன்ன‌வ‌ன் அன்பில்
என்னுயிர் வாழ்கிற‌து - அது
என்றும் வாழும் உற‌வு - அது
என்றும் வாழும் உற‌வு

உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது - உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது ஆஆஆ கவிதை வாழ்வது
_________________________

ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஒளிமயமான எதிர்காலம்

ஜப்பான் நாட்டில் ஒரு சிறை. அங்கே ஒரு தூக்கு தண்டனைக் கைதியைத் தூக்கிலிடும் நாள் நெருங்கியது. மறு நாள் காலை அவன் தூக்கிலிடப்படவிருந்த நிலையில் சிறையதிகாரிகள் அவனது கடைசி ஆசை ஏதேனுமிருந்தால் கூறுமாறு அவனைக் கேட்க, அவன் அவர்களிடம் தனக்கு ஒரு கிடார் வாத்தியம் வேண்டுமெனவும் அதனை மீட்டிப் பாட விரும்புவதாகவும் சொல்லவே, அவர்கள் அவ்வாறே அவனுக்கு ஒரு கிடார் வாத்தியத்தை வழங்கினர். தன் சோகத்தையெல்லாம் பிழிந்து ஒரு பாடலை அவன் பாடுவான் என அவ்வதிகாரிகளும் பிற கைதிகள் உட்பட அனைவரும் எதிர்பார்த்திருக்கையில் அவர்கள் அனைவரையும் மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அவன் மகிழ்ச்சி ததும்பும் தொனியில் ஒரு இனிய பாடலைத் தன் தேனினும் இனிய குரலில் பாடினான். கிடார் வாத்தியத்தின் நாதத்துடன் இழைந்து இணைந்தமைந்த அப்பாடல் புதுவாழ்வைத் தொடங்கும் ஒருவன் தன் எதிர்காலத்தைப் பற்றிய இனிய கனவுகள் நிறைவேறும் நம்பிக்கையுடன் பாடுவதாக அமைந்தது.

அது இரண்டாம் உலகப் போர் நடைபெற்று வந்த காலம். அன்றிரவு அமெரிக்கர்களின் குண்டு வீச்சினால் ஹிரோஷிமா நாகசாயி நகரங்கள் அழிகையில் அச்சிறை மீது விழுந்த அணுகுண்டினால் சிறையில் இருந்த அனைத்துக் கைதிகளுடன் அதிகாரிகளும் பிற ஊழியர்களும் இறந்து போயினர். ஆனால் என்ன ஆச்சரியம்! அக்கைதி ஒருவன் மட்டும் உயிர் தப்பினான். பின்னர் அவன் தனது பாடல் வரிகளில் மொழிந்த வண்ணமே சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான்.

இச்சம்பவம் உண்மையிலேயே நிகழ்ந்ததா அல்லது கற்பனையாக யாரும் கூறியதா என்பதை உறுதியாகச் சொல்ல என்னால் இயலாது. இருப்பினும் இத்தகைய சம்பவம் நடப்பது உலகில் சாத்தியமே. இதன் மூலம் நாம் அறிவது என்னவெனில் நாம் எத்தகைய துன்ப நிலையிலிருப்பினும் நமது உள்ளத்தில் நம்பிக்கை கொண்டு திகழ்ந்தால் அத்துன்பம் எதுவாயினும் அது பகலவனைக் கண்ட பனி போல் விலகி வாழ்வில் இன்பம் விளைவது உறுதியெனும் செய்தியேயாகும்.

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு!

ஒளிமயமான எதிர்காலம்

திரைப்படம்: பச்சை விளக்கு
இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1964

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
_________________________

செவ்வாய், 8 ஜூன், 2010

நான் மலரோடு தனியாக

தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி, பல வெற்றிப்படங்களைத் தந்து, பிற்காலத்தில் வில்லன் வேடத்திலும் புகழ்பெற்று தமிழ்த் திரை ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகர் "மக்கள் கலைஞர்" ஜெய்சங்கர். துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட் பாணியிலமைந்த திரைப்படங்கள் இவரது தனித் திறமையைப் பறைசாற்றின. அதனால் தமிழகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என இவர் அறியப்பட்டார். சண்டைக்காட்சிகளில் மட்டுமின்றி, காதல் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், சோகக் காட்சிகள் முதலான அனைத்து வகையிலும் முதலிடத்தைப் பிடித்து ரசிகர்களின் மனங்களை மிகவும் கவர்ந்தவர் ஜெய்சங்கர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களது மாபெரும் வரலாறு காணாத வெற்றிப்படமான "எங்க வீட்டுப் பிள்ளை' திரைப் படத்தில் நடனமாதாக அறிமுகமாகிப் பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுடன் இணைந்து "குடியருந்த கோவில்" திரைப் படத்தில் ஆடலுடன் பாடலைக் கேட்டு எனும் புகழ்பெற்ற பாடலில் நடனமாடிய எல். விஜயலட்சுமியுடன் ஜெய்சங்கர் இணைந்து நடித்த படம் இரு வல்லவர்கள், இப்படத்தில் இவரும் புகழ்பெற்ற வில்லன் நடிகர் ஆர்.எஸ். மனோகர் அவர்களும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகளாக இருந்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்து, இருவரும் திருடர்களாக வாழ்க்கை நடத்துவதாக அமைந்த கதையில் இவரும் எல். விஜயலட்சுமியும் இணைந்து நடித்த காதல் காட்சிகள் மென்மையான காதல் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தன.

நான் மலரோடு தனியாக

திரைப்படம்: இரு வல்லவர்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1966

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

திங்கள், 7 ஜூன், 2010

நானொரு முட்டாளுங்க

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றை யவை

என்று வள்ளுவர் வகுத்த கல்வியின் சிறப்பைத் தற்காலத்தில் யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. கல்வி என்பது முதற்கண் மாணவ மாணவிகளுக்குத் தாய் மொழியையும் தாய் மொழி வாயிலாகப் புகட்டப்படத்தக்க பாடங்களையும் புகட்ட வேண்டும். அதன் பின்னரே ஆங்கிலமும் பிற மொழிகளும், அவற்றின் வாயிலாகப் புகட்டப்படத்தக்க பாடங்களும் அமைதல் வேண்டும்.

கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு

என பாரதி புகழ்ந்த தமிழ்நாட்டிலே இன்று பள்ளி இறுதிப் படிப்பு முடிந்து பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவர்களும், பல்வேறு துறைகளிலே பட்டங்கள் வாங்கிக் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் மாணவர்களும் பெரும்பாலும் தமிழறிவு பெறாதவர்களாகவே இருத்தல் கண்டு மிகவும் வருத்தம் உண்டாகின்றது.

அது மட்டுமின்றி நமது நாடு உலகமெங்கும் போற்றி வணங்கத்தக்கதாக விளங்குவதற்குக் காரணமான தொன்மையான கலாச்சாரமும், திரைப்படங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வழியாகவும் இறக்குமதியாகி வருகின்ற மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களால் சீரழிவது நமது நாட்டுக்கே பெரும் கேடாக விளையக்கூடும்.

நானொரு முட்டாளுங்க

திரைப்படம்: சகோதரி:
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
ஆண்டு: 1959


நானொரு முட்டாளுங்க
நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நானொரு முட்டாளுங்க

ஏற்கெனவே சொன்னவங்க ஏமாளியானாங்க
எல்லாந்தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க

நானொரு முட்டாளுங்க

கண்ணிறஞ்ச பெண்டாட்டிய கைதேன்னு சொன்னாங்க
ஏ...ஏஏஏ ஏ ஏ ஏ கைதே டேய்
கண்ணிறஞ்ச பெண்டாட்டிய கைதேன்னு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்கா மூஞ்சி மேல அடிச்சாங்க
பேசாத இன்னாங்க பொரட்டிப் பொரட்டி எடுத்தாங்க
பீஸ் பீஸா கீச்சாங்க பேஜாரா பூட்டுதுங்க

நானொரு முட்டாளுங்க

கால் பார்த்து நடந்தது கண் ஜாடை காட்டுது
பால் கொண்டு போறதெல்லாம் ஆல்ரவுண்டா ஓடுது
மேல் நாட்டு பாணியிலே வேலையெல்லாம் நடக்குது
ஏன்னு கேட்டாக்கா எட்டி எட்டி ஒதைக்குது

நானொரு முட்டாளுங்க

நாணமுன்னும் வெக்கமுன்னும் நாலு வகை சொன்னாங்க
நாலும் கெட்ட கூட்டமொண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
ஆன வரை சொன்னேங்க அடிக்கத் தானே வந்தாங்க
அத்தனையும் சொன்ன என்னை இளிச்சவாயன் இன்னாங்க

நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நானொரு முட்டாளுங்க
நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நானொரு முட்டாளுங்க
முட்டாளுங்க முட்டாளுங்க முட்டாளுங்க

வியாழன், 27 மே, 2010

அன்றொரு நாள் இதே நிலவில்

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தேறுவதெப்போ நம்ம கவலே

என்று பட்டுக் கோட்டையார் பாடிய பாடலுக்கொப்ப நம் நாட்டின் பல இடங்களில் பாமர மக்களை ஏமாற்றி அவர்களது செல்வங்களைக் கொள்ளையிடுவதும் மேலும் பல வகைகளில் அவர்களை அடக்கியாண்டு தங்களது சுயநல நோக்கத்தை தந்திரமாக நிறைவேற்றிக் கொள்வதுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் குண்டர்கள் கூட்டம் மலிந்திருக்கிறது. தீர ஆராய்ந்து பார்க்கையில் நாடே அத்தகைய கொள்ளையர் வசம் இருப்பது புலப்படும்.

அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள், நாங்கள் சத்திய சந்தர்கள் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வரும் இவர்களும் அதே கொள்ளையை அவர்கள் செய்ததிலும் பன்மடங்கு அதிகமாகவே நிறைவேற்றி வருகின்றனர். இன்னும் எத்தனை காலம் தான் நாமெல்லோரும் தொடர்ந்து ஏமாறப் போகிறோம் என்பதை எண்ணிப் பார்த்து முடிவு செய்யும் தருணம் வந்து விட்டது. நாமும் உயிர் பிழைத்து நமது சந்ததியினரையும் இத்தகைய எத்தர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற நமக்கு எள்ளளவேனும் சிந்தனை உள்ளதா என்பதே கேள்கிக்குறியாக உள்ளது.

விதிவசத்தால் தன் காதலியை விட்டுப் பிரிந்த கதாநாயகன், அப்பாவி மக்கள் பலரை ஏமாற்றி அவர்களது கண்களைக் குருடாக்கி, பிச்சையெடுக்க வைத்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் சமூக விரோதிகளின் செயலால் கண் பார்வையை இழந்த வேறொரு பெண்ணைக் காப்பாற்ற முனைகையில் அவனும் அந்த சமூகவிரோதிகளின் வலையில் விழுந்து விடுகிறான். இந்நிலையில் இருவரும் ஒன்று சேர்ந்து பிச்சையெடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இதற்கிடையில் ஒரு நாள் அவ்விருவரும் தனியாக ஓய்வெடுக்கும் சமயம் அவள் தன் மனதில் அழமாய்ப் பதிந்திருந்த ஒரு இனிய பாடலைப் பாடுகிறாள்.

அப்பாடலைக் கேட்கும் கதாநாயகன் அது தனது காதலி தனக்காகப் பாடிய பாடலாக இருக்கக் கண்டு மிகவும் அதிசயித்து அப்பாடலுக்கு தனது ஆர்மோனியப் பெட்டியில் பின்னணி இசைக்கிறான். பின்னர் தன் காதலி இவ்வுலகை விட்டு மறைந்த செய்தியையும், தன்னுடன் பிச்சையெடுக்கும் பெண் தன் காதலியின் சகோதரி எனவும் அறிந்து கொள்கிறா. அதன் பின்னர் அவ்விருவரும் ஒன்று சேர்ந்து அவர்களை ஆட்டிப் படைக்கும் சமூக விரோதிகளை தந்திரமாக ஏமாற்றி தப்பிப்பதுடன் அவர்களை சட்ட்த்தின் பிடியிலும் சிக்க வைக்கின்றனர்.

நாம் எப்பொழுது நம்மையெல்லாம் ஏய்த்துப்பிழைப்பவரை சட்டத்தின் பிடியில் நிறுத்தப் போகிறோம்?

அன்றொரு நாள் இதே நிலவில்

திரைப்படம்: நாடோடி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் அவர் இருந்தார்
என் அருகே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ?
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே
நீ பார்த்தாயே வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்க்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே நீ
சாட்சியடி வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்
பாவை மேனியிலே நீ
பார்த்தாயே வென்ணிலவே
ஆஆஆஆஆஆ

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

மனிதர்கள் இளமைக் காலத்தில் எப்பொழுதும் இவ்வுலகில் தாம் அடையக்கூடிய இன்பங்களைப் பற்றியே பெரும்பாலும் எண்ணி ஒரு மயக்க நிலையில் வாழ்கின்றனர். அதிலும் குறிப்பாக பருவமெய்திய பின்னர் ஆண்கள் பெண்களிடம் தாம் அடையக் கூடிய இன்பங்களையும் பெண்கள் ஆண்களிடம் பெறக்கூடிய இன்பங்களையுமே அதிகம் எண்ணுகின்றனர். தம் தாய் தந்தையரைப் பற்றியும் வயது முதிர்ந்த நிலையில் அவர்கள் உலகில் சந்திக்கின்ற துன்பங்களைப் பற்றியும் யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை. இத்தகைய பொறுப்பற்ற போக்கினால் பொதுவில் பெற்றோர்கள் அடையும் துன்பங்கள் மேலும் பெருகி அவர்கள் அல்லலுறும் நிலை ஏற்படுவதை நாம் பல சமயங்களில் கண்கூடாகக் காண்கிறோம்.

குறிப்பாக இளைஞர்களுள் சிலர் தம் மனைவியரிடம் கொண்ட மயக்கத்தாலும் வேறு சிலர் பிற பெண்களிடம் கொண்ட மோகத்தினாலும் மதிகெட்டுப் பெற்றோரை அலட்சியம் செய்து தமது இன்பம் ஒன்றையே பெரிதென எண்ணி வாழ்வதும் உலகில் நடைமுறையாக உள்ளது. இவ்வாறு பெண்ணாசையால் மனம் தடுமாறிய நிலையிலுள்ளோரில் ஒரு சாரார் தம் அறிவை முற்றிலும் இழக்குமுன்னரே தம் சுயநினைவைப் பெற்று தமது பெற்றோரைப் பேணிக்காக்க வேண்டிய க்டமையை உணர்ந்து செயல்படுகின்றனர். வேறு சிலர் அவ்வாறன்றி தொடர்ந்து அலட்சிய மனோபாவத்துடனேயே வாழ்ந்து அதன் காரணமாகப் பெற்றோரை இழக்கும் நிலையை அடைந்து வருந்துவதும் உண்டு.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்கும் நோக்கத்துடனேயே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ மாணவியருக்குப் பலவிதமான கதைகள், கவிதைகள் கட்டுரைகள் வாயிலாகவும் இன்னும் பிற வகையிலும் பெற்றோரைக் காக்கும் கடமையை அவர்கள் உணரும் விதமாகக் கல்வி போதிக்கப் படுகிறது. அத்தகைய கல்வியைப் பயின்ற போதும் சிலர் அதனை உள்ளத்தில் கொள்ளாமல் கடமை மறந்து காலனிடம் பெற்றோரைப் பறிகொடுத்த பின் வருந்துவதும் உண்டு.

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

திரைப்படம்: குமாரராஜா
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

செவ்வாய், 25 மே, 2010

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

நண்பர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட அன்னையர் தினத்தன்று தாயின் பெருமையை நினைவு படுத்தும் வகையில் அமைந்த ஒரு பாடலைத் தினம் ஒரு பாடலில் தருமாறு வேண்டினார். எனது தற்போதைய பணிச் சுமையாலும் தினமும் வெயில் படுத்தும் பாடு மிகவும் அதிகமானதாலும் தினம் ஒரு பாடல் தினமும் தர இயலுவதில்லை. கூடிய விரைவில் தினமும் வழங்குவேன். தாயின் பெருமையை எண்ணிப்பார்க்க அன்னையர் தினம் ஒன்று போதாது. தாயின் நினைவு சதா சர்வ காலமும் தொடர்ந்து நம் உயிரில் ஒன்றி விளங்குவது அவசியம். இல்லாவிடில் உலகில் நாம் அடையும் துன்பங்களிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்.

உலகில் அனைத்து உயிர்களுக்கும் கண்கண்ட முதல் தெய்வம் தாய். தாயின் அணைப்பில் வளர்ந்த நாம் ஒவ்வொருவரும் இன்றும் என்றும் நாம் படும் துன்பங்களிலிருந்து விடுபடவும் ஆறுதல் பெறவும் நாடுவது பெரும்பாலும் தாயையே ஆகும். ஏதோ காரணத்தால் வலி உண்டாகையில் நம்மையறியாமல் நம் வாய் உதிர்க்கும் சொல் பெரும்பாலும் "அம்மா" என்பதேயாகும். சிலர் "அப்பா" என்றோ "ஆ, ஐயய்யோ" என்றோ சொல்வது சாத்தியமானாலும் அம்மா எனும் சொல்லே அனேகமாக அருமருந்தாக விளங்குகின்றது. நம் ஒவ்வொருவருடைய வளர்ச்சியிலும் பிற யாரைக் காட்டிலும் அதிகம் பெருமையடைபவள் தாயாவாள்.

இதனாலேயே திருவள்ளுவர்,

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்

என்று திருவாய் மலர்ந்தருளினார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தாய் இவ்வுலகை விட்டு மறைந்து பூத உடலை விட்டுப் புகழுடம்பு எய்துகையில் ஒவ்வொருவரும் படும் துயரத்துக்கு அளவே இல்லை. அநாதை எனும் சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஒவ்வொருவருக்கும் அத்தாய் இவ்வுலகை விட்டு விண்ணுலகம் செல்லும் நாளன்று தான் புரியும். அதன் பின்னர் அம்மா எனும் சொல் வாயில் தன்னையறியாமல் பல தருணங்களில் வெளிவருகையில் அந்த அம்மா என்பவள் இவ்வுலகில் தற்போது இல்லையெனும் உண்மையும் மனதில் தைத்து அவள் நினைவில் வாடும் மனம்.

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

திரைப்படம்: தாயின் மடியில்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

எத்தனை இன்பங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா
எனக்கது நீயாகுமா?

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை
வேறொரு தெய்வமில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை

பத்து மாதம் பொறுமை வளர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள்
பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை

அன்பில் மலரும் அற்புதமெல்லாம்
அன்னையின் விளையாட்டு
அலையும் மனதை அமைதியில் வைப்பது
அன்னையின் தாலாட்டு
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
கண்ணே கண்ணே கண்ணே என்று
கொஞ்சிய வார்த்தை காதில் கேட்டதில்லை
காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை

மண்ணில் இந்தக் காதலின்றி

நமஸ்தே வாயோ: த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி;
த்வமேவ பிரத்யக்ஷம் வதிஷ்யாமி

என்று காற்றுத்தேவனைத் துதி செய்கிறார் மஹாகவி பாரதியார். நாம் புலன்களால் உணரக்கூடிய கடவுள் காற்றேயாகும். காற்றிலுள்ள ஆக்சிஜன் என அறியப்படும் பிராணவாயு இல்லையேல் உலகில் உயிர்கள் வாழ முடியாது. நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் பிராணவாயு நாம் உண்ணும் உணவை உடலெங்கிலுமுள்ள பல கோடி செல்களில் எரியவைத்து சக்தியை உண்டாக்கி நம்மை இயங்க வைக்கிறது. காற்று இன்றி மழையில்லை, நீரில்லை, நெருப்பில்லை. காற்றிலுள்ள பிராணவாயுவும் ஹைட்ரஜன் வாயுவும் ஒன்றாய் இணைவதாலேயே நீர் உண்டாகின்றது. நீரில் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அது பிராணவாயுவாகவும், ஹைட்ரஜனாகவும் பிரிகிறது. இரண்டையும் சேர்த்து எரித்தால் மீண்டும் நீர் உண்டாகின்றது.

உலகைச் சுற்றி ஒரு போர்வையாக விளங்கும் ஓசோன் எனும் அடர் பிராணவாயு சூரியனின் புற ஊதாக் கதிர்களினின்றும் அளவிடற்கரிய வெப்பத் தாக்குதலினின்றும் பூமியைக் காக்கிறது. வீடுகள், உணவு விடுதிகள், ஆலைகள் முதலிய இடங்களிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருள்களைச் சுத்தம் செய்து அவற்றால் விளையும் சேதத்தைத் தடுக்க பிராணவாயு உதவுகிறது. இதனாலேயே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவு நீருடன் காற்றைக் கலந்து சுத்திகரிப்பு செய்கின்றனர்.

தவ முனிவர்கள் அளவிடற்கரிய ஆற்றலைப் பெற்று விளங்கியதன் காரணம் அவர்கள் தவத்துடன் பிராணாயாமம் செய்து பிராண வாயுவையும் அபான வாயுவையும் கட்டுப்படுத்தி அதிகப்படியான பிராணவாயுவை சுவாசித்து வாழ்ந்ததே ஆகும். பிராணாயாமம் செய்யத் தெரியாதவர்களும் பெரும்பாலும் சுவாசிக்கையில் ஆழ்ந்து சுவாசித்துப் பழகினால் உடலிலும் உள்ளத்திலும் சக்தி பெருகி நோயற்ற வாழ்வு வாழ ஏதுவாகும்.

பாடகர்களுக்கு இத்தகைய ஆழ்ந்த சுவாசப் பயிற்சி அவர்கள் பாடுகையிலேயே கிடைத்து விடுவதால் அவர்கள் இயற்கையாகவே நீண்ட ஆயுளைப் பெற்று விளங்குகின்றனர். இத்தகைய பாடகர்களுள் மூச்சினை அதிக நேரம் அடக்கிப் பாடி அதில் சாதனை புரிந்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆவார். அவர் பாடிய இப்பாடலை வேறு யாராலும் அதே லயத்துடன் பாட இயலாதென்பது பிரசித்தம்.

மண்ணில் இந்தக் காதலின்றி

திரைப்படம்: கேளடி கண்மணி
இயற்றியவர்: மு. மேத்தா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1990

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி?
சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகந்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி?
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகந்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா?

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

திங்கள், 24 மே, 2010

ஒரே பாடல் உன்னை அழைக்கும்

ஆண்டவன் நம் ஒவ்வொருவருக்கும் அளித்த செல்வங்களையும் வாழ்வின் பிற இன்பங்களையும் முறையாக அனுபவிக்க ஏற்றவாறு நம் நமது மனப்பான்மையை அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறன்றி நம்மிடம் இருப்பதை விட மற்றவரிடம் அதிகமாக இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி, பொறாமையினால் இயற்கையாகவே நமக்குக் கிடைக்கும் இன்பங்களை விட்டு, செயற்கையானதொரு துன்பப் பாதையிலே நம்மை நாமே இட்டுச் சென்று துயருறுவதைப் போல் மடமை வேறில்லை. இருப்பினும் மனிதர்களுள் பலர் இத்தகைய குணக்கேடர்களாக இருப்பது கண்கூடு. பிறரது
துன்பத்திலே இன்பம் காணும் இத்தகையோரை ஆங்கில மொழியில் sadists என்று குறிப்பிடுவது வழக்கம்.

நமது கதாநாயகன் ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்கிறான். அப்பெண்ணும் அவன் மேல் காதல் கொள்கிறாள். ஆனால் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இன்பமாய் வாழப் பொறாத பொறாமை குணமுள்ள செல்வந்தனான ஒருவன் தன் செல்வத்தின் பலம் கொண்டு இவர்களது காதலை நிறைவேறாமல் செய்து, அப்பெண்ணை அவளது விருப்பத்துக்கு மாறாகத் தானே மணந்து கொள்ளும் விதமான சூழ்நிலையை ஏற்படுத்தி, அதன் பின் தங்கள் தலை தீபாவளியைக் கொண்டாடும் நாளில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து அதற்கு நமது கதாநாயகனையும் வரவழைக்கிறான். அத்துடன் நில்லாமல் கதாநாயகனை விழாவில் பாடவும் சொல்கிறான்.

தன் காதலியை மனைவியாக அடைய முடியாத வருத்தத்துடன் அவள் தன் விருப்பத்துக்கு மாறாக வேறொருவனுக்கு மாலையிட்டு அதை விடவும் அதிகத் துயரில் ஆழ்ந்ததை எண்ணி, தன் உள்ளக் குமுறலைப் பாடலாக வெளிப்படுத்துகிறான்.

இப்பாடலைக் கேட்டுக்கொண்டே கதாநாயகி யாரும் எதிர்பாராத விதத்தில் வெடிக்கும் பட்டாசுகளிடையே சென்று தன்னைத் தீக்கிரையாக்கிக் கொண்டு அதே நிலையில் விருந்து நடக்கும் மேல்மாடியிலிருந்து கீழே பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். இதனால் மனம் மிகவும் பாதிக்கப்பட்ட கதாநாயகன் பைத்தியம் பிடித்துப் பல காலம் துன்புறுகிறான்.

இத்தகையதொரு வித்தியாசமான காட்சி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜெயலலிதா ஆகியோர் முதன்முதலில் இணைந்து நடித்த திரைப்படமான எங்கிருந்தோ வந்தாள் எனும் காவியத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒரே பாடல் உன்னை அழைக்கும்

திரைப்படம்: எங்கிருந்தோ வந்தாள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1970

ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்

ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்

ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்

மனிதர்கள் வாழ்க்கை நடத்த இன்றியமையாத அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுடன் போக்குவரத்து வசதியும் இடம் பெறுவது மிகவும் அவசியம். ஒரு ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செல்லப் பேருந்துகளும் ரயில் வண்டிகளும் உதவுவது போல ஒவ்வொரு ஊரிலும் உள்ள பல இடங்களுக்குச் சென்று வர ஆட்டோரிக்ஷாக்கள் பெரிதும் உதவுகின்றன. ஆனால் ஆட்டோரிக்ஷாக்களில் செல்வதற்கான கட்டணம் தற்போது மிக அதிகமாக உள்ளது. இக்கட்டண உயர்வுக்கு மக்கள் பெரும்பாலும் ஆட்டோக்காரர்களையே பொறுப்பாளியாக்குகின்றனர். வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களின் விலைவாசியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைவாசியும் உயர்கையில் ஆட்டோ கட்டணமும் உயர்வது இயற்கையே என்பதையும், ஆட்டோக்காரர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் குடும்பம் உண்டு அக்குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பும் உண்டு என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைமை பிற விலைவாசி உயர்வினால் ஏற்படுகையில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஆட்டோக்கார்கள் தங்களுக்குள் கலந்து பேசி தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும் பொதுமக்களையும் பெரிதும் பாத்க்காத வகையிலும் தகுந்த கட்டணத்தை முடிவு செய்கின்றனர். இவ்வாறு எடுக்கப் படும் முடிவுகளுக்குக் கட்டுப்படாமல் அடாவடியாகக் கட்டணத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி பயணிகளை வாட்டி வதைப்போரும் ஆட்டோக்காரர்களுள் உள்ளனர்.

சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் நல்லவர்களும் உளர், தீயோரும் உளர். அது போலவே ஆட்டோக்காரர்களிலும் இருப்பது இயல்பே. இதனை மனதில் கொண்டு ஒட்டுமொத்த ஆட்டோக்காரர்களையும் பழி சொல்வது முறையல்ல என்பதை நாம் அறிவோமாக. நாம் பிறரை நண்பராகக் கருதிப் பழகினால் அத்தகைய நட்பு உணர்வுக்கு உரிய மரியாதையைப் பிறர் தருவது நிச்சயம். அவ்வாறே ஆட்டோக்காரர்களையும் நண்பர்களாக பாவித்தோமெனில் அவர்களும் நமக்கு நட்புறவுடன் சேவை செய்வர் என்பது உறுதி.

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்

திரைப்படம்: பாட்ஷா
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: தேனிசைத் தென்றல் தேவா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1995

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அட அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்

ஓய்..ஓய் ஓய்..ஓய் ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
ஜும்குஜுக்கும் ஜும்கா ஓ ஜும்குஜுக்கும் ஜும்கா ஆ
ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
பஸ்ஸே எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபார்க்கும் நேரத்திலே
இருப்போம் சாலைகளின் ஓரத்திலே

அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க - ஹாங் அட
கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க
முந்தி வரும் பாரு இது மூணு சக்கரத் தேரு
நன்மை வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு

எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்

யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யயயய யயயய யயயயயய யயயய
யயயய யயயய யயயயயய யயயய
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா

ஆஆ அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
ஜும்குஜுக்கும் ஜும்கா ஓ ஜும்குஜுக்கும் ஜும்கா
அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்
அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சுந்தாரேம்மா
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சுந்தாரேம்மா
எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான்
அட்ரஸ் இல்லாத் தெருவும் - இந்த
ஆட்டோக்காரன் அறிவான்

எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அசக்கு இன்னா அசக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அட அசக்கு ஆ குமுக்கு
அசக்கு இன்னா அசக்கு தான்
அசக்கு குமுக்கு அசக்கு குமுக்கு ஹாங்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

வெள்ளி, 21 மே, 2010

நிலவே நீ சாட்சி

நம்மைப் படைத்து நாம் இன்புற்று வாழ இவ்வுஉலகினைப் படைத்த இறைவன் இவ்வுலகுக்கு ஒளியூட்டவென்றே செங்கதிரையும் தண்மதியையும் படைத்தானோ? உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாத அனைத்தையும் அளிக்கும் சூரியனைக் காட்டிலும் இரவில் மென்மையான ஒளியை வழங்கி மனங்குளிரச் செய்யும் நிலவையே மனிதன் பெரும்பாலும் போற்றித் துதித்து வருகிறான். அத்துடன் காதல் முதலாகத் தான் இவ்வுலக வாழ்வில் புரியும் அனைத்துச் செயல்களுக்கும் நிலவையே சாட்சியாக வைக்கிறான்.

மனித வாழ்வில் உண்டாகும் இன்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் துன்பங்களை மறந்து ஆறுதல் பெறவும் பெரும்பாலும் நிலவையே துணைக்கு அழைக்கிறான் மனிதன். நிலவுக்கு நிஜமாக அத்துணை சக்தியுண்டா? அல்லது இத்தகைய உணர்வுகள் யாவும் நிலவின் அழகைப் பார்த்து, அதன் மங்கிய ஒளியால் மயங்கி அதன்பால் ஈர்க்கப் பட்ட மனம் உணரும் மாயையா?

நிலவே நீ சாட்சி

திரைப்படம்: நிலவே நீ சாட்சி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1970

நிலவே நீ சாட்சி - மன
நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி
நிலவே நீ சாட்சி......
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

அலையும் முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன?
அலையும் முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன?

வலையில் விழுந்த மீன்களென - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன?

நிலவே நீ சாட்சி - மன
நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு - இது
இறைவன் நடத்தும் விளையாட்டு
இறைவன் நடத்தும் விளையாட்டு

நிலவே நீ சாட்சி

கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லை - இந்த
உலகில் இனிப்பும் கசப்புமில்லை

நிலவே நீ சாட்சி - மன
நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் எனத் திடடவட்டமாகப் பார்க்க வேண்டும். அதற்கு வாழ்க்கைத் தத்துவம், அல்லது நியதி என்ன என்று ஆராய வேண்டும். அதை ஞானிகள் சான்றிதழுடன் தந்தால்தான் அது நமக்கு ஏற்கக்கூடியதாக அமையும்.

அப்படிப் பார்க்கும்போது சிறு வயதிலேயே ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்திலேயே ஸன்யாஸியாகி, தனது 32 வருட வாழ்வுக்குள் மஹா ஞானியாகி அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டி, ஸர்வக்ஞ பீடத்தில் அமர்ந்து, ஸனாதன தர்மத்தை (HINDUISM) உலகிற்குத் தந்து, நான்கு காஞ்சி மடங்களை ஸ்தாபித்து, ஸனாதன தர்மத்தைக் காக்கும் பொறுப்பை அவர்களிடம் தந்து 32-வது வயதில் நிர்வாணமாகிய ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்கள் நமக்குத் தொகுத்தளித்த இந்த “பஜ கோவிந்தம்” என்ற திவ்ய காவ்யத்தைப்போல ரொம்பவும் சுலபமாகப் பின்பற்றக்கூடிய சான்றிதழ் வெறுண்டோ? ஆத்மபோதம், பகவத்கீதை போன்ற நூல்களில் தந்துள்ள வாழ்க்கையின் நியதியை, வாழ்க்கை முறையை, வாழ்வின் தத்துவத்தை மிகத் தெளிவாகவும், நளினமாகவும் இதில் தந்துள்ளார்.

நம் வாழ்வின் தவறான நோக்கம் நம்மை எங்கு கொண்டு செல்லும், சரியான நோக்கம் எப்படி அமைய வேண்டும், வாழ்க்கை என்பது என்ன, வாழும் முறை யாது, அதனால் நமக்கு நிகழும் பலன் ஏது, சரியான வாழ்க்கை முறை எங்ஙனம் அமைய வேண்டும் எனக்கூடிய தத்துவங்களைத் தெள்ளத் தெளிய ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த திவ்ய காவ்யத்தில் தந்துள்ளார். அதில் தந்துள்ள தத்துவங்களைச் சரிவர கிரஹித்து, அவைகளை அயராது சரிவர நாம் பின்பற்றினோமானால் நம் வாழ்க்கை முறை மிகச் சீரும் சிறப்பும் பெற்று, வளமுடனும், ஆற்றலுடனும், தார்மிகமாகவும், அமைதியுடனும் அமைந்து நம்மை ஜீவன்முக்தன் நிலைக்கு உயர்த்த ஹேதுவாகும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. அதில் தந்துள்ள ததுவங்கள் எவை எனப் பார்ப்போமா?

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

வாழ்க்கைத் தத்துவம்

பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி

ஆபகாய ஸ்வதர்மஸ்ய ஸர்வதர்ம ஸ்வரூபிணே
அவதார வருஷ்டாய ராமக்ருஷ்ணாய தே நம:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோSபின ப்ருச்சதி கேஹே
வார்த்தாம் கோSபின ப்ருச்சதி கேஹே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸர்வ பரிக்ரஹ போகத்யாக:
ஸர்வ பரிக்ரஹ போகத்யாக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

பகவத் கீதா கிஞ்சிததீதா
பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா
பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா
ஸக்ருதபியேன முராரி
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

புனரபி ஜனனம்
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே
க்ருபயா பாரே பாஹி முராரே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
புத்ராதபி தனபாஜாம் பீதி:
புத்ராதபி தனபாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராதSசிராத்பவ முக்த:
குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராதSசிராத்பவ முக்த:
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

ஞாயிறு, 9 மே, 2010

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்

பொதுவில் ஒரு மதத்தைச் சார்ந்தவர் அம்மதத்தினருள் சிறந்து விளங்கும் ஞானியரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அதிசயங்களப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசுதல் வழக்கம். ஒரு ஞானியாகவோ மஹானாகவோ ஒருவர் திகழ வேண்டுமெனில் அவர் குறிப்பிடத்தக்க அற்புதங்களை நிகழ்த்தியிருக்க வேண்டுமென்னும் கருத்து உலகெங்கிலுமுள்ள மாந்தரிடையே நிலவி வருகிறது. அதிசயமெனவும் அற்புதமெனவும் இவர்கள் கருதுவது பெரும்பாலும் இயற்கைக்கு மாறாக இயற்கை நியதியை மீறிச் செயல்படும் திறமையையே. நம் கண் முன்னே பரந்து விரிந்த இந்த உலகெங்கிலும் காணுமிடம் யாவும் நிரம்பிக் கிடக்கும் எண்ணற்ற அதிசயங்களை நாம் கண்டாலும் இவற்றை அதிசயங்கள் என ஒப்புக்கொள்ள நம் மனம் முன்வருவதில்லை. இதன் காரணம் அறியாமையயே ஆகும்.

நீ கண்ட அதிசயங்கள் யாவை என்று எவரேனும் என்னைக் கேட்டால் நான் கூறுவதாவது, தினம் தோறும் இணய வாழியே முன் பின் அறிமுகமில்லாத எண்ணற்ற அன்பர்கள் என்னிடம் மிகுந்த அன்பு கொண்டு நான் எழுதும் பிதற்றல்களையும் படித்து, அவைகுறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, எனது சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் நிலையே என்பேன்.

உலகின் எங்கோ ஒரு மூலையில் சக மனிதர் ஒருவர் துன்புறுவதை அறிகையில் நாமெல்லோரும் ஒருமித்த மனதோடு அவர் துன்பம் நீங்கி இன்புற வேண்டுமென மனமுருகப் பிரார்த்தனை செய்கின்றோம். நம்மில் அனேகர் அவ்வாறு துன்பப் படுவோர் துயர் துடைக்கத் தேவையான பொருளாதார உதவிகளையும் திரட்டித் தருகின்றனர். நாட்டு நிலை குறித்தும் இந்த உலகை எதிர்நோக்கியுள்ள அபாயங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டு உலகம் உய்யப் பாடுபடும் பாதையிலும் நாம் பயணம் மேற்கொண்டுள்ளோம். இவையாவும் குறிப்பிடத் தக்க அதிசயங்கேளேயன்றோ?

இது இவ்வாறிருக்க இளம் காதல் ஜோடி ஒன்று அதிசயம் பற்றி என்ன கூறுகிறது எனக் கேட்போமா?

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்

திரைப்படம்: ஜீன்ஸ்
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரெஹ்மான்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோஹன்
ஆண்டு: 1998

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓஓ

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்

ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ
ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் ஒரு
வாசமுள்ள பூவைப் பார் பூவாசம் அதிசயமே
அலை கடல் தந்த மேகத்தில் சிறு
துளி கூட உப்பில்லை
மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓஓ

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்

அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா

பெண்பாற் கொண்ட சிறு விரல்கள்
இரு கால் கொண்டு நடமாடும்
நீ தானென் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் ஒரு
வாய் பேசும் பூவே நீ எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெரிக்கும் கன்னங்கள்
வாய் துடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற க்ரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்

ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ
ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான்

இவ்வுலகில் நிலையாமை ஒன்றே நிலையானதென்னும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும் உண்மையை உணராமல் மனிதர்களாகிய நாம் என்றென்றும் பணம் சம்பாதிப்பதிலும், நம் உடலுக்கும், உடலின் உணர்வையே பெரும்பாலும் கொண்டு விளங்கும் மனதுக்கும் இன்பம் தரும் பொருட்களையும் வசதிகளையும் அடைவதிலும் நம் காலத்தைக் கழிக்கிறோம். இத்தகைய செயல்பாட்டினால் முன்னோர் அறிவுறுத்திய நல்ல கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுப் பாப காரியங்களையும் செய்யத் துணிகிறோம். பலருடன் கருத்து வேறுபாடுகளை வளர்த்து நல்லுறவை இழக்கிறோம். இதன் விளைவாக மனம் கெட்டு அதனால் உடல் தளர்ந்து தீராத நோய்களுக்காளாகி, பல விதத்தில் ஈட்டிய பணமும் வசதிகளும் தரவல்ல சுகங்களை அனுபவிக்க இயலாத நிலையையும் அடைகிறோம். இன்பம் தரும் என எண்ணி ஈட்டிய பொருள் பயனற்றதாகிவிட்ட நிலையிலும் எவ்வாறாகிலும் நம்மை வாட்டுகின்ற நோய்களிலிருந்து குணமடைந்து நாம் விரும்பிய சுகங்களை அடைய வேண்டும் எனும் எண்ணத்திலேயே மீதமுள்ள வாழ்நாளையும் இது நாள் வரையில் ஈட்டிய பொருளையும் வீணாக்கி என்றோ ஒரு நாள் எவ்விதப் பயனுமின்றி வருந்தி மடிகிறோம்.

உலக வாழ்வு நிலையற்றதெனும் உண்மையை உணர்ந்த ஞானிகள் இத்தகைய துன்மார்க்கத்தினின்றும் விலகி, பொருளின் மேல் பற்றை நீக்கி உலக நன்மைக்காகப் பாடுபடுவதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்கின்றனர். இத்தகைய ஞானிகள் தாங்கள் என்றும் நிலையான ஆத்மார்த்தமான இன்பத்தைப் பெறுவதுடன் தன்னை நாடி வருவோர்க்கும் தாம் பெற்ற இன்பத்தைப் பெற வழி காட்டுகின்றனர். இதனிடைய பலர் காவியுடையும் தெய்வீக சின்னங்களையும் தரித்து, எப்பொழுதும் ஞான மார்க்கம் தொடர்பானவற்றையே பிறருக்கு உபதேசம் செய்து, முற்றும் துறந்த முனிவர்களைப் போல் வேஷமிட்டு ஊரையும் உலகத்தையும் ஏமாற்றும் பல ஆஷாடபூதிகளையும் நாம் அவ்வப்போது அறிகிறோம். அத்தகைய வேடதாரிகளளைப் பற்றிய அறிவு நமக்கு உண்டாவதற்கு முன்னரே நம்மையும் அறியாமல் நம்மில் பலர் இத்தகைய வேடதாரிகளை மெய் ஞானிகள் என்று நம்பி ஏமாறுவதும் உண்டு.

ஞான மார்க்கத்துக்கான வழியைத் திருவள்ளுவர் முதலான ஞானியர் தெளிவாக வகுத்துத் தந்துள்ள நிலையில் நாம் வேறு யாரையும் இதற்காக நாட வேண்டுவதில்லை.

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான்

இரவும் பகலும்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: எஸ்.ஏ. அசோகன்

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி
இறந்தவனே - அப்படி

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

தாயாரின் வேதனையில் பிறக்குறான் - மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சு எறக்குறான்
தாயாரின் வேதனையில் பிறக்குறான் - மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சு எறக்குறான் - இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - அப்படி

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இன்பத்திலே சில நாள் துன்பத்திலே சில நாள்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
கண்ணீர் சிந்திடவே கடைசி வழி ஒரு நாள்
கடைசி வழி ஒரு நாள் அப்படி

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

சனி, 8 மே, 2010

கொஞ்சு மொழி சொல்லும் கிளியே

ஒரு பெண் தாயாகியதும் அவள் இவ்வுலகில் அனைத்திலும் அரிய உறவாகக் காண்பது தான் பெற்ற சேயையே. அப்பெண் ஏழையாக இருந்தாலும் தன் பிள்ளைக்கு வாழ்வின் வசதிகள் அனைத்தும் மிகவும் உயர்ந்தவையாகவே இருத்தல் வேண்டுமென விரும்புவாள். தன் வயிறு பசி பட்டினியால் வாடிக் கிடந்தாலும் தன் குழந்தைக்கு வயிறு வாடாமல் தக்க நேரத்தில் எவ்வாறாகிலும் உணவிடுவாள். தன் ரத்தத்தையே பாலாக்கிக் கொடுப்பதன்றோ தாய்மை. தன் சகோதரர்களிடம் ஒரு பெண் மிகவும் எதிர்பார்ப்பது தன் பிள்ளைக்குத் தன் சகோதர்கள் பொருளுதவி செய்தும் பரிசுகளை வழங்கியும் அவர்களை மகிழ்ச்சியிலாழ்த்த வேண்டும் என்பதுவே.

கல்யாணி எனும் பெண் விதிவசத்தால் இளம் வயதிலேயே கணவனை சாலை விபத்தில் பரிகொடுத்த நிலையில் கைக்குழந்தையுடன் மிகவும் துன்புற்று ஏழ்மை நிலையில் வாடுகையில், பொருளீட்ட வேண்டி வெளிநாட்டுக்குச் சென்றிருக்கும் தன் அண்ணன்மார்கள் திரும்பி வருவர், தன் பிள்ளைக்குத் தக்க உதவிகள் செய்து அப்பிள்ளைக்குக் கல்வி பயிற்றுவிக்க ஆவன செய்வர் எனும் நம்பிக்கையுடன் தான் ஏழ்மையில் வாடிய போதும் தன் பிள்ளையாகிலும் நல்வாழ்வு வாழவேண்டும் எனும் ஆசை மனம் முழுதும் நிரம்பியவளாய் தன் மனதில் தோன்றும் எண்ணங்களைத் தாலாட்டாகப் பாடிப் பிள்ளையைத் தொட்டிலிலிட்டுத் தூங்க வைக்கும் மனமுருக்கும் காட்சி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமான பராசக்தி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

கொஞ்சு மொழி சொல்லும் கிளியே

திரைப்படம்: பராசக்தி
இயற்றியவர்: கலைஞர் மு. கருணாநிதி
இசை: R. சுதர்சன்
பாடியவர்: T.S. பகவதி
ஆஅண்டு: 1952

கொஞ்சு மொழி சொல்லும் கிளியே - செழும்
கோமளத் தாமரைப் பூவே
கொஞ்சு மொழி சொல்லும் கிளியே - செழும்
கோமளத் தாமரைப் பூவே - ஒரு
வஞ்சமில்லா முழு மதியே - இன்ப
வானில் உதித்த நல்லமுதே

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

மாமன்மார் மூவர் தம்பி - நல்ல
வாழ்வளிக்க வருவார் - உனக்கு
மாமன்மார் மூவர் தம்பி - நல்ல
வாழ்வளிக்க வருவார் - உன்
மாம்பழக் கன்னத்திலே - முத்த
மாரி பொழிந்திட வருவார் - உன்
மாம்பழக் கன்னத்திலே - முத்த
மாரி பொழிந்திட வருவார்

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

மாணிக்கப் பாலாடை - பச்சை
மாமணித் தொட்டிலுடன்
மாணிக்கப் பாலாடை - பச்சை
மாமணித் தொட்டிலுடன் - வெள்ளை
யானையும் வாகனமாய் - மாமன்
தருவார் சீதனமாய் - உன்தன் மாமன்
தருவார் சீதனமாய்

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

வெள்ளியினால் செய்த ஏட்டில் - நல்ல
வைர எழுத்தாணி கொண்டு
வெள்ளியினால் செய்த ஏட்டில் - நல்ல
வைர எழுத்தாணி கொண்டு
தெள்ளு தமிழ்ப் பாடம் எழுத - உன்னைப்
பள்ளியில் சேர்த்திட வருவார் - மாமன்
அள்ளி அணைத்திட வருவார்

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்

உலகில் எத்தனையோ அழகிய பெண்கள் இருப்பினும் அவர்கள் அனவருள்ளும் தான் காதலிக்கும் பெண்ணே ஒரு காதலனுக்குச் சிறந்த அழகியாகத் தெரிவாள். அதே போல் அப்பெண்ணுக்கும் பிற ஆடவர் அனவருள்ளும் தன் காதலனே மிகவும் அதிக அழகுள்ளவனாகத் தெரிவான். இது இயற்கையின் நியதி. தன் காதலியை விடவும் வேறு ஒரு பெண் அதிக அழகாக இருப்பதாக ஒருவன் எண்ணுவானாகில் அவனது காதல் உண்மைக் காதலல்ல என்பது திண்ணம்.

காதல் தெய்வீகமானது. கண்கள் வழியே கருத்தினிற் கலந்து உயிருடன் ஒருமிப்பது உண்மைக் காதல். இத்தகைய காதல் கொண்ட ஆண்மகனது உள்ளம் தனது காதலியின் அழகை வர்ணிக்கையிலும் அதிலொரு தெய்வீகத் தன்மையை உணர்வது சிறப்பு.

ஒரு பெண் நாணம் காரணமாகத் தன் காதலைத் தன் காதலனிடமும் வாய்விட்டுத் தெரிவிக்க மாட்டாள். அதற்கு மாறாகத் தன் உள்ளத்திலுள்ள காதல் உணர்வுகள் அனைத்தையும் தனது கண்களாலேயே அவனுக்கு உணர்த்தி விடுவாள். அந்தக் கண்ஜாடை கண்ட ஆண் அதற்கு மேல் உறங்குவதேது.

உண்மைக் காதலின்றி ஆண்களை அலைக்கழிப்பதையே பொழுதுபோக்காகக் கொண்ட சில மாதர்களும் இருக்கிறார்கள். அவர்களது கண் ஜாடை உண்மைக் காதல் கொண்ட பெண்ணின் கண் ஜாடையை விட ஆயிரம் மடங்கு மேலான மயக்கத்தை ஆண்களுக்கு அளிக்கவல்லது. அத்தகைய ஒரு பெண்ணின் கண் பேசும் மொழியைக் காதல் என்று நம்பித் தூக்கமில்லாமல் அவள் பின்னே அலைந்து அவமானப் படும் ஆண்களும் நிறைய உளர்.

ஆதலால் இளைஞர்களே, ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் உள்ளங்களை உங்கள் உண்மைக் காதலிக்காக அல்லது மனைவிக்காகவென்று இருக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை!

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்

திரைப்படம்: அன்பே வா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

இடையோ இல்லை இருந்தால் முல்லைக்
கொடி போல் மெல்ல வளையும் சின்னக்
குடை போல் விரியும் இமையும் விழியும்
பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர்ப்
புன்னகை வருவதினாலே நிலவோ மலரோ எதுவோ

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ?
இந்தக் காதலி சுகம் பெறுவாளோ
கனவோ நனவோ எதுவோ?

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்

சனி, 1 மே, 2010

ஒரு நாளும் உனை மறவாத

வாழ்க்கைப் போராட்டத்திலே வலிமையுள்ளவன் செல்வச்சீமானாகவும் வலிமையற்றவன் அச்சீமானிடம் கைகட்டி சேவகம் புரிபவனாகவும் இருப்பது உலகெங்கிலும் தொன்றுதொட்டு நிலவி வரும் வாக்கை முறையாகும். இத்தகைய சீமான்களை முதலாளி என்றும், ஐயா என்றும் எஜமான் என்றும் பல விதமாக மற்றவர் மரியாதையுடன் அழைப்பதும் வழக்கில் இருந்து வருகிறது. இத்தகைய எஜமானர்கள் பொதுவில் ஒவ்வொரு கிராமத்திலும் பிறரை விடவும் மிகவும் அதிகப்படியான விளை நிலங்களுக்குச் சொந்தக்காரராகவும் ஊரிலேயே அனைவரிலும் செல்வம் நிறைந்தவராகவும் இருப்பார். சில எஜமானர்கள் சுயநலாவாதிகளாகவும் தன்னை அண்டிப் பிழைப்பவர்களையே சுரண்டுவதுடன் அவர்களுக்குப் பெரும்பாலும் இன்னல்களையே பரிசாகத் தருபவராகவும் இருப்பதுண்டு. இதற்கு மாறாகப் பலர் பரோபகாரிகளாகவும் தன்னை அண்டியிருப்பவரைக் காக்கும் தயாள சிந்தையுள்ளவர்களாவும் இருப்பதும் உண்டு.

சாமான்யர்களுள் ஒருவனாக விளங்கும் ஆண்மகனைக் காதலிக்கும் பெண்ணைவிட இத்தகைய எஜமானர்களைக் காதலிக்கும் பெண்கள் தனது காதலனின் மேல் மிக்க மரியாதையும் அன்பும் கொண்டவளாக இருத்தல் இயல்பு.

இத்தகையதொரு கிராமச் சூழலை மிகவும் சுவாரஸ்யமான விதத்தில் படமாக்கி நம்க்கு எஜமான் திரைப்படத்தின் வடிவில் வழங்கியுள்ளனர் தமிழ்த் திரியுலக சிற்பிகள்.

ஒரு நாளும் உனை மறவாத

திரைப்படம்: எஜமான்
இயற்றியவர்:
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
ஆண்டு: 1993

கங்கணகணவென கிண்கிணி ம்ணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கிறதே இது சுகம் தரும் சுயம்வரமே

ஆஆஆ ஆஆஆ.

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

தனனனனனா தனனனனனா தனனனனனா தனனனன னானானானானா

சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்
உன்னுதிரம் போல் நானே பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள்ளழகைத் தேடுவேன்
போதை கொண்டு நின்றாடும் செங்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்
அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு?

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக்கனி வேண்டுமே
உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா?
என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா

ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே
முத்தினம் வரும் முத்துதினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு

அத்தை மகனும் மாமன் மகளும், அல்லது அத்தை மகளும் மாமன் மகனும் ஒருவரை ஒருவர் காதலித்து அல்லது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் புரிந்து கொண்டு வாழும் வழக்கம் நமது நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. நெருங்கிய உறவினர்கள் இருவர் இவ்வாறு ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்துகையில் பிறக்கும் பிள்ளைகள் குறைபாட்டுடன் பிறக்கக்கூடும் எனும் ஒரு கருத்து மருத்துவர்களிடையே நிலவி வந்தாலும் இத்திருமண முறையைப் பெரும்பாலும் நமது சமூகத்திலுள்ள அனைவரும் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு ஒருவரையொருவர் தம் மனதிற்குள்ளேயே காதலிக்கும் அத்தை மகனும் மாமன் மகளும் அவர்களின் திருமண நாள் குறிக்கும் நாளில் அத்தை மகன் விளையாட்டாகத் தான் வேறொரு பெண்ணை மணக்கக்கூடும் எனும் பொருள்பட மாமன் மகளிடம் புதிராகப் பேசிவிட்டு, இறுதியில் தான் அவளையே மணக்கப்போவதாக அவள் உணரவைத்து அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரவேண்டுமென விரும்பி, அதன்படியே அவள் குழம்பிய மன நிலையில் தவிக்கையில் தங்கள் திருமணத்திற்கென மாலைகள் மற்றும் திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வந்து காணும் காட்சி அவனை நிலைகுலையச் செய்கிறது. அவன் விளையாட்டாகப் பேசிய பேச்சு அப்பெண் மனதில் பெரும் சோகத்தையும் அதனால் ஏமாற்றத்தையும் ஏற்படுத்த, தன் மனம் உடைந்து போன அப்பெண் விஷமருந்தி உயிர்நீக்கிறாள்.

தன்னுடைய தவறினால் தன் காதலி மாண்டதாலும் அவளை விரும்பிய மனதில் வேறு ஏதும் விரும்பாத கொள்கையாலும் ஆட்கொள்ளப்பட்ட அவன் அவள் நினைவாகவே தனது வாழ்நாளைக் கழிக்கையில், மனம் போனபடி தன் ஊரை விட்டு எங்கோ சென்றவன் வேறொரு ஊரில் உள்ள ஆலயம் ஒன்றில் தண்ணீர் சுமந்து தருவது போன்ற பணிகளைச் செய்து கொண்டு அங்கேயே தனியாக வாழத் தலைபடுகையில் அவ்வூரில் வசிக்கும் வேறொரு இளம் விதவைப் பெண்ணின் பெயர் இவனது காதலியின் பெயராக அமைந்து விடுவதால், இவன் தனது காதலியின் பெயரை அவ்வூரிலுள்ள சில சுவர்களில் எழுதியதால் சிறு குழப்பம் ஏற்படுகிறது. பின்னர் அக்குழப்பம் தெளிந்து அவ்விதவைப் பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்வானோ எனும் ஒரு எதிர்பார்ப்பைப் பிறர் மனதில் ஏற்படுத்துவது போன்றதொரு நிலையில் அவனும் அவ்விதவைப் பெண்ணும் ஒன்று சேர்ந்து அவ்வூரிலிருக்கு வேறொரு இளம் காதல் ஜோடியை ஒன்று சேர்க்கப் பாடுபட்டு வெற்றியும் காண்கின்றனர். இம்முயற்சியில் நம் கதாநாயகன் தன் உயிரையே விட்ட பின்னரும் அவனது பிணத்தின் கையில் ஒரு அரிவாளைக் கொடுத்து அவன் உயிருடன் நிற்பது போன்றதொரு தோற்றத்தினை ஏற்படுத்தி அவ்விதவைப் பெண், அவ்விளம் ஜோடியின் திருமணத்திற்குத் தடையாக நிற்கும் ஒருவரை ஏமாற்றி, தங்களது முயற்சியான காதலர்களை ஒன்று சேர்ப்பதில் வெற்றி காண்கிறாள்.

இக்கதை வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதையாகும். தன் தவறுதலால் மாண்ட தன் காதலியை மனதில் எண்ணீயபடி கதாநாயகன் பாடுவதாக அமைந்தது இவ்வினிய பாடல்.

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு

திரைப் படம்: வைதேகி காத்திருந்தாள்
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன் மானே ஒன்னே தேடுது

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நீதானம்மா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு?
நீ தானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன் மானே ஒன்னே தேடுது

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
அத்தை மகளோ மாமன் மகனோ?
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ?
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீ தான் இல்லாத நாளும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன் மானே ஒன்னே தேடுது

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

சொல்லுவது எல்லோர்க்கும் எளிது அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

என்ற வள்ளுவன் வாக்கு முக்காலத்துக்கு பொருந்தும் முற்றிலும் உண்மையான கூற்று என்பதற்கு முதல் ஆதாரம், தினம் ஒரு பாடல் என்ற பெயரில் நான் தினந்தோறும் ஒரு பாடலும், அதற்குப் பொருத்தமாக என் உள்ளத்தில் உள்ள கருத்துக்களும் ஒன்று சேர இணைய நண்பர்களுக்கு அளிக்கும் இச் சிறு முயற்சியிலேயே இடையிடையே பல முறை தவறுவதாகும். இவ்வாறிருக்க, கருப்புப் பணத்தையும், அடியாள் பலத்தையும், மேடைப் பேச்சையும், சுவரொட்டிகளையும், சாலை மறியல் முதலான போராட்டங்களையும் கையாண்டு மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சிக்கு வருபவர்கள் ஏழைகளை வாழ வைக்கிறோம் என்று சொல்வதும், வாழ வைத்து விட்டோம், மலிவு விலையில் அரிசி தருகிறோம், இலவசமாகப் பல பொருட்களைத் தருகிறோம் என மார்தட்டிக் கொள்வதும் எவ்வாறு உண்மையாக முடியும்.

இலவமாக எல்லோருக்கும் கிடைத்து வந்த கல்வியையும், மருத்துவ வசதிகளையும் ஏலம் போட்டுத் தனியாருக்கு விற்று அதன் மூலம் சாதாரணக் கல்விக்கும் இலட்சக்கணக்காக செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தையும், ஒரு சராசரி மனிதன் தன் ஆயுள் முழுவதும் உழைத்து ஈட்டிய பணம் அனைத்தும் சேர்ந்தாலும் அவன் வயதான காலத்திலோ இடையிலோ ஏதேனும் நோய்க்கு ஆளானால் அதற்குத் தகுந்த மருத்து சிகிச்சை பெறவும் போதாத நிலையையும் இன்று ஆள்வோர் உண்டாக்கியுள்ளனர். அத்துடன் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்ளிட்ட பலர் ஏதேனும் நோய்வாய்ப்பட்டு அதற்கேற்ற சிகிச்சை பெறப் பெருந்தோகை தேவை என்பதால் இணையக் குழுமங்கள் வாயிலாகவும் நண்பர்கள் வாயிலாகவும் உதவி பெற்றேயாக வேண்டுமெனும் இக்கட்டான சூழ்நிலை நாட்டில் நிலவுகிறது. இதில் வெட்கக்கேடு என்னவெனில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாக எங்கோ ஏதோ ஒருவருக்குக் கல்வியும் மருத்துவ உதவி முதலானவையும் யாரோ சிலரால் அளிக்கப்படுவதை மிகைப்படுத்திக் காட்டி நாட்டில் எங்கும் தருமம் தலைகாப்பது போன்றதொரு பிரமையை இத்தகைய அவல நிலையை உண்டாக்கியவர்களே ஏற்படுத்துவதும், கோடானு கோடி கொள்ளையடித்து விட்டு அவற்றில் சில கோடிகளை சிலருக்கு உதவியாக அளித்து அதன் மூலம் விளம்பரம் தேடுவதுமேயாகும்.

சாக்கடைகள் சுத்தம் செய்வதற்கும், குடி நீர் பெறுவதற்கும் மக்கள் போராடியும் நிறைவேறாமல் அல்லலுறுவது நாட்டு நடப்பாக இருக்கையில் இவ்வாறு ஏழைக்கு உதவுகிறோம் என்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்து அவர்களது நிழலில் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்ட போலித் தலைவர்களுக்கு மாபெரும் பாராட்டு விழாக்கள் நடத்தப்பெற்று, அவ்விழாவில் பல பிரமுகர்களும் வந்து அத்தலைவர்கள் செய்யாத சாதனைகளைச் செய்ததாகவும், அவர்களுக்கு இல்லாத தயாள குணங்கள் இருப்பதாகவும் ஊரறியப் பொய்யுரைத்து மக்களை முட்டாளாக்கும் நாடகங்களும் அரங்கேறுவது கண்டு சொல்லொணா வேதனை ஏற்படுகிறது.

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

படம்: எங்க வீட்டுப் பிள்ளை
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் - அவன்
தேவன் என்றாலும் விட மாட்டேன்
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் - அவன்
தேவன் என்றாலும் விட மாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் - அவர்
உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை - அவர்
எப்போதும் வால் பிடிப்பார்
எதிர் காலம் வரும் என் கடமை வரும் - இந்தக்
கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே - வரும்
நல்லோர் முகத்திலே விழிப்பேன் - வரும்
நல்லோர் முகத்திலே விழிப்பேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகல் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு - அதை
எப்போதும் காத்திருப்பேன்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் - இந்த
மானிடர் திருந்தப் பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை - அந்த
மேலோர் சொன்னதை மறந்தார் - அந்த
மேலோர் சொன்னதை மறந்தார்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஆஹாஹா ஆஹாஹா ஆஆஆஆஆஆஆ
ஆஹாஹா ஆஹாஹா ஆஆஆஆஆஆஆ

மதுரையில் பறந்த மீன் கொடியை

காதலிலே இரண்டு வகை உண்டு, சைவம் அசைவமல்ல, இது வேறு. அறிவுபூர்வமாகக் கொள்ளும் காதல் ஒன்று. அறிவு நிலையை மீறி உணர்வு பூர்வமாகக் கொள்ளும் காதல் மற்றது. இதில் அறிவுபூர்வமாக ஏற்படும் காதல் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் விருப்பத்தை நேசத்தினாலும் தூய அன்பாலும் மரியாதை குறையாவண்ணம் வெளிப்படுத்துவது. மற்றது உணர்ச்சி மேலீட்டால் தன் நிலை தடுமாறி மயங்குவது. முதலாவது வாழ்வை வளமாக்கும், இரண்டாவது வாழ்வை நரகமாக்கக் கூடும்.

அறிவுபூர்வமாக ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளும் காதலர் இருவர் ஒன்றாகப் பாடியாடி மகிழும் காட்சி ஒன்றில் அக்காதலனுக்குத் தனது காதலியின் முகத்திலுள்ள அங்கங்களும் அவளது பெண்மையும் தமிழ்நாட்டின் பெருமை மிக்க பல முக்கியத் தலங்களாகவும், அவள் இத்தலங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய மொத்தத் தமிழ் நாடுமாகவே தென்படுவதாக ஒரு அழகிய கற்பனை வளம் மிக்க இன்னிசையுடன் கூடிய பாடல் இது.

மதுரையில் பறந்த மீன் கொடியை

திரைப்படம்: பூவா தலையா?
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன்
பெண்மையில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன்
பெண்மையில் கண்டேனே - இவை
மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே உன்னை
தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே

காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான்
கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலை தான்
காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான்
சேயிழையே உன் செவ்விதழோ?
தூத்துக் குடியின் முத்துக் குவியல்
திருமகளே உன் புன்னகையோ?

மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே

பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ?
பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ?
புதுவை நகரில் புரட்சிக் கவிஞன்
குயிலோசை உன் வாய் மொழியோ?
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழைதான் உன் இடையழகோ?
குமரியில் காணும் கதிரவன் உதயம்
குலமகளே உன் வடிவழகோ?
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே உன்னை
தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு

இவ்வுலகில் நாமனைவரும் நம் வாழ்நாளில் பெரும்பகுதியைப் பொருளீட்டுவதிலும் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலுமே கழித்து வருகிறோம். நம் கன் முன்னரே நம்முடன் நெருங்கிப் பழகியவர்கள் உட்பட ஏனையோர் யாவரும் ஒருவர் பின் ஒருவராக யமலோகத்துக்குப் போய்க் கொண்டிருப்பதைக் கண்ணாரக் கண்டும், நமக்கும் ஒரு நாளுண்டு எனும் உண்மையை உணர மறு்த்து, சுயநலவாதிகளாகவே வாழ்நாளைக் கழிக்கிறோம். நமது சுயநலத்தினால் பொதுநலம் பாதிக்கப்படுவதையும் பொருட்படுத்தாமல் பிறரை அலட்சியப் படுத்தி, நமது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு சமுதாயத்துக்குப் பல வகைகளிலும் தீங்கிழைக்கிறோம்.

எத்துணை பணமிருந்தாலும் ஒருவருக்கு ஒரு ஜாண் வயிறு கொள்ளுமளவுக்கே உணவுண்ண முடியும். அதுவும் வயதாக ஆக உணவு உண்ணும் அளவும் குறைந்து, உடல் தளர்ந்து, பல வியாதிகளுக்கு இடமளிக்கையில் சுவையான உணவு உண்ணுவதும் இயலாமல் போய், கஞ்சி குடித்துக் காலம் கழிக்கும் சூழ்நிலையும் நம்மில் பலருக்கு ஏற்படுகிறது. என்ன நிலை வந்துற்றாலும் நம் பணத்தாசை மட்டும் குறைவதே இல்லை.

சுயநலமென்னும் இத்தகைய மனோ வியாதியிலிருந்து மீண்டு, நம் வாழ்நாளில் மீதமிருக்கும் காலத்தையாகிலும் பிறர் நலம் பேணுவதிலும், இயற்கை வளங்கள் அழிவதால் இவ்வுலகம் எதி்ர்கொண்டிருக்கும் பேரழிவிலிருந்து உலகினையும் நமது வருங்கால சந்ததியினரையும் காப்பதிலும் செலவிடுதல் நலம்.

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு

திரைப்படம்: முகராசி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
அஅண்டு: 1968

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு

தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன்
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான்
படித்தான் முடித்தான் ஹோய்
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன்
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான் - பிறர்
நோய் தீர்க்கும் வைத்தியன் தன் நோய் தீர்ர்க்க மாட்டாமல்
பாய் போட்டுத் தூங்குதப்பா - உயிரும்
பேயோடு சேர்ந்ததப்பா ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு

கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார் - நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும் நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ - கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான்
எடுத்தான் முடித்தான் ஹோய்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான் - அதில்
எட்டடக்கு மாடி வைத்துக் கட்டிடத்தைக் கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான் - மண்ணைக்
கொட்டியவன் வேலியெடுத்தான் ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?