தொழில்முறையாகப் பல்வேறு பணிகளின் நிமித்தமாகப் பல ஊர்களுக்குக்குப் பயணம் மேற்கொண்டாலும், நாடு விட்டு நாடு சென்று திரைகடலோடி திரவியம் தேடும் பணியில் ஈடுபட்டாலும் நாம் மேற்கொண்ட பணி நிறைவேறியதும் நம் ஒவ்வொருவரின் மனமும் அடுத்துச் சேர விரும்புவது வீடு எனும் தன் இல்லத்தையே என்பது எல்லோரும் அறிவோம். அது போலவே பாடல்கள் எனும் பண்ணுலகில் பல்வேறு திசைகளில் பயணம் மேற்கொண்டு தத்துவ மழையிலும் இசை வெள்ளத்திலும் நனைந்த போதிலும் மீண்டும் மீண்டும் வந்து சேர்வது காதல் எனும் கான மழை பொழியும் பகுதிக்கே.. காதல் நம் அனைவரின் உயிரிலும் ஒன்றிக் கலந்து விளங்குவதாலேயே வாழ்க்கை எனும் ஓடம் தொடர்ந்து ஓடுகிறது.
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடிய பின் கருத்தொருமித்து உடல் இரண்டு உள்ளம் ஒன்று எனும் உயரிய நிலையை அடைவது உண்மைக் காதல். அந்நிலையை அடைந்த காதலனுக்குத் தன் காதலி கண்டு ரசிப்பதெல்லாம் தானும் ரசிக்க விருப்பம் ஏற்படுவதும் காதலிக்குத் தன் காதலன் கண்டு ரசிப்பதெல்லாம் தானும் ரசிக்க வேண்டுமெனும் ஆவல் உண்டாவதும் இயல்பு.
உனது விழியில் எனது பார்வை
உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது என் கவிதை வாழ்வது
உயிர் கொண்ட ஓவியம் ஒன்று
துணை வந்து சேர்ந்ததென்று
மனம் கொண்ட இன்பம் எல்லாம்
கடல் கொண்ட வெள்ளமோ?
கண் இமையாது பெண் இவள் நின்றாள்
காரணம் கூறுவதோ? - உனைக்
காண்பதென்ன சுகமோ - உனைக்
காண்பதென்ன சுகமோ?
உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது - உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது - என் கவிதை வாழ்வது
எனக்கென்று வாழ்வது கொஞ்சம்
உனக்கென்று வாழும் நெஞ்சம்
பனிகொண்ட பார்வை எங்கும்
படிக்காத காவியம்
எனக்கென்று வாழ்வது கொஞ்சம்
உனக்கென்று வாழும் நெஞ்சம்
பனிகொண்ட பார்வை எங்கும்
படிக்காத காவியம்
பொன்மனம் கொண்ட மன்னவன் அன்பில்
என்னுயிர் வாழ்கிறது - அது
என்றும் வாழும் உறவு - அது
என்றும் வாழும் உறவு
உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது - உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது ஆஆஆ கவிதை வாழ்வது
_________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக