"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே."
தான் விரும்புவனவற்றைத் தன் உடைமையாக்கிள் கொள்ள விழைவது மனிதனின் சுபாவம். அவ்வாறு உடைமை கொண்ட பொருள் யாதாயினும் அதனைப் பிறர் வசம் செல்ல அனுமதியாத மனப்பான்மை எல்லா மனிதருக்கும் உண்டு. இது மமகாரம் எனும் குணமாகும். தான் விரும்பும் பொருள் ஒரு பெண்ணாக இருக்கையில் ஒரு ஆணுக்கு இத்தகைய தனது எனும் உணர்ச்சி அனைத்திலும் மேலோங்கியிருப்பது இயல்பு.
தான் விரும்பும் பெண்ணை வேறொருவன் கண்களால் ஏறெடுத்துப் பார்க்கவும் பொறுக்காத குணம் ஆணுக்குண்டு. இது போன்ற மமகார உணர்வு மேலோங்குவதால் பல ஆண்கள் மன இறுக்கம் கொண்டு வருந்துவதும் உண்டு. இத்தகைய பலஹீனத்தைத் தவிர்த்து இயல்பான உணர்வு கொள்ளப் பழகுவோருக்குக் காதல் இனிமையானதாகும். தன் காதலியின் மேல் தான் கொண்ட அளவிடற்கரிய ஈடுபாட்டை அவளிடம் வெளிப்படுத்த இத்தகைய இயல்பு நிலை கொண்ட காதலன் கையாளும் யுக்தி கவிஞரின் கற்பனையில் அழகுற வெளிப்படுகிறது, காத்திருந்த கண்கள் படத்தில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் இடம்பெறும் காதல் காட்சியில்.
கண்படுமே பிறர் கண்படுமே
திரைப்படம்: காத்திருந்த கண்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1962
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?
புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா?
பூமியிலே தேவியைப் போல் ஊர்வலம் வரலாமா?
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?
ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
காரிருள் போலுன் கூந்தலைக் கொண்டு
கன்னி உன் முகத்தை மூடு - தமிழ்க்
காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே
மேகத்துக்குள்ளே ஓடு
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?
கண்ணாடி முன்னால் நில்லாதே - உன்
கண்ணாலும் உன்னைக் காணாதே
கண்ணாடி முன்னால் நில்லாதே - உன்
கண்ணாலும் உன்னைக் காணாதே
மங்கை உன் அழகை மாதர் கண்டாலும்
மயங்கிடுவார் கொஞ்ச நேரம் - இந்த
மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
தனியே வருவது பாவம்
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக